Re: [MinTamil] அரம்பை - புலவுத் தாழை (Pandanus amaryllifolius = daun pandan)

131 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 15, 2015, 6:20:57 PM11/15/15
to மின்தமிழ், ksuba...@gmail.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, vallamai


On Sunday, November 15, 2015 at 9:39:50 AM UTC-8, Suba.T. wrote:

​இது முள்ளோடு இருப்பது போல இருக்கின்றதே. நாங்கள் மலேசிய மலாய் உணவில் போடுவது செண்டோல் எனப்படும் இலை. அது சிறு புதர் போல வளரும். இதில் படத்தில் இருப்பது போல மரமாக இருக்காதே. அதோடு இலையில் முள் இருப்பது போலும் இருக்காதே.
இரண்டும் ஒரே செடிகள் தானா?

ஆமாம். வனத்தில் நன்கு முற்றி வளரும் அளவுக்கு உள்ள அரம்பைத் தாழை படம் கொடுத்துள்ளேன். எடுத்தவர் மேத்தியு ஓல்ட்ஃஃபீல்டு.
இது தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவிலும் இயற்கையாக வளரும் தாழை இனம்.  

ஆனால், பயிர் செய்யும்போது வணிகத்திற்காக - புலவுச்சோறு போன்றவை செய்ய - இவ்வளவு முதிர விடமாட்டார்கள். சிறு தொட்டியில் கூட
அரம்பைத் தாழை வைக்கலாம், வளரும். ஆனால், காமனின் வாள் அரம் என்று சொல்லும் அளவுக்கு அதன் blade shaped leaves இரா.
பயிர் செய்யும் அரம்பைத்தாழை - இதுதான் சாதாரணமாகப் பார்க்கலாம் (not the wild, mature variety. Hence, the importance of Matt Oldfield's photo.)
இளமையான அரம்பைத் தாழை இங்கே,



நா.கணேசன்

அரம்பை இலை பயன்படும் சமையல்:

ஈழத் தீவின் மக்கள் பயன்படுத்தும் சமையலில் அரம்பைத் தாழை இலை நறுமணம் ஊட்ட வெகுவாகப் பயன்படுகிறது.
தமிழ்நாட்டு, கேரள கடற்கரை முஸ்லீம்களும் புலவுச்சோறு செய்யும்போது பயன்படுத்தும் மணப்பொருள் இந்தப் புலவுத்தாழை.
மலையாளத்தில் பிரியாணி-கைதை என்கின்றனர்.

அதன் பழந்தமிழ்ப் பெயரும், அப்பெயரில் தேவார ஸ்தலம் (அரம்பையங்கோடு) இருந்துள்ளதும், சம்பந்தர் காலத்திலேயே
சொன்முதல் அ- மறைந்து ரம்பையங்கோடு/லம்பயங்கோடு ஆனதும் விளக்கியுள்ளேன். இந்தியா முழுதும் இந்தப் புலவுத்தாழை
தமிழ்ப் பெயராலேயே இருப்பது இந்தியா முழுதும் த்ராவிட பாஷைகள் வழங்கியமைக்கு ஓர் சான்று, அரம்பைத் தாழை
பற்றி மேலும் சில செய்திகள் தரணும். இதனால், பழைய பாடல்கள் சிலவற்றின் அருத்தம் வெளிச்சமடைகின்றன.
தமிழின் பழைய சொல்லை ஆராயும் புத்தாய்வு இஃது.

ரம்பை இலை பற்றி கேட்டு எழுதுங்கள்:

பூசணிக்காய் கறியில் ரம்பை இலை தாளிதம்:

சிலோன் சிக்கன் பிரியாணியில் அரம்பைத் தாழை இலை:
(தமிழ்நாட்டில், ஆம்பூர் மட்டன் பிரியானி ரெசிப்பி பார்க்கவும்)

இந்தோனேசியன் புட்டு (ரம்பை இலை உண்டு):

கொழுக்கட்டைக் கூழ்: (அரம்பை இலையுடன்):


 

சுபா
 

naa.g...@gmail.com

unread,
Nov 15, 2015, 7:06:24 PM11/15/15
to houstontamil, tiruva...@googlegroups.com
அரம்பை - புலவுத் தாழை (Pandanus amaryllifolius = daun pandan)
----------------------------------------------------------------------------

எல்லோரும் அறிந்தது தாழை. பெரிய தாழை : 
https://en.wikipedia.org/wiki/Pandanus_odorifer  (ஏராளமான விஞ்ஞானப் பெயர்கள் இதற்கு).
இதற்குக் கைதை என்ற பெயருமுண்டு. கை (செய்) நீர்ப்பாங்கான சதுப்புநிலம். கை எனப்படும் நெய்தல் நிலங்களில் வளர்வது கைதை. வடமொழி -ஐ என்னும் எழுத்தால் தொடங்கும் சொற்களை -ஏ என்று மாற்றிவிடும். எனவே, தமிழின் கைதை கேதை, கேதகீ என வடசொல்லாலும் தாழை ஸ்தாவரங்கள் அழைக்கப்படுகின்றன. கை-அம் (கையம்) = கயம்; குளம் என்று பொருட்சொல் கயம்/கையம். பனை போலவே ஆண் பெண் பாகுபாடு தாழைக்குண்டு. குடிமல்லத்தில் இருக்கும் லிங்கம் தாழை மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது என்று காட்டியுள்ளனர். எனவே, நெய்தல் திணைப்புலக் கடவுள் வருணனுக்கான வடிவம் எனலாம். பின்னாளில், இருக்குவேத வருணனின் பண்புகள் சிவபிரானுக்கு ஆகின்றன. அப்போது, தாழை சிவனுக்கு ஆகாது என்ற கதைகள் எழுகின்றன. லிங்கம் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் உள்ளதை நோக்கும்போதும், அதற்கான வருணன் என்ற பெயரில் உள்ள மஹாமரத்தைப் பார்த்தாலும் குடிமல்லம் விடங்கர் வருணனின் வடிவம் என்றும், இந்தியாவின் லிங்க வழிபாட்டின் 4500 ஆண்டு வரலாற்றில் சரியான மையப்புள்ளியாக குடிமல்லம் லிங்கம் திகழ்வதும் அறியற்பாலது. சங்க கால மன்னர்கள் வழிபடுமரமாகவும், தலைநகரப் பெயராகவும் இருந்திருக்கிறது.

மின்னலின் தாழை பூக்கும். இதை 2000 ஆண்டாய் தமிழர் பாடுகின்றனர். ஆப்பிரிக்காவில் மின்னலின் போது தீப்பற்றி எரியும் தாழைகளும் உண்டு.
           காற்றில் ஒட்டிய முன்பனி நீ
           பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
           மேகம் கும்மிய மின்னல் நீ!
           மின்னல் தூவிய தாழை நான்!

          சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
          செய்யுள் சிந்திய சந்தம் நான்!
          வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
          வெப்பம் தணிகிற நுட்பம் நான்!

------------------------------------------------

இந்திய உபகண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் (தாய்லாந்து, மலாயா, பர்மா, இந்தோனேசியா, கம்போதியா, இலங்கை, தமிழ்நாடு, கேரளம்...) ஊன் உணவு சமைப்பில் பயன்படும் புலவுத்தாழை இலைகள்பற்றிப் பார்ப்போம். அதற்கான இந்திய மொழிகளில் வழங்கும் பழம்பெயரை ஆராய்வோம். 

அரம்பைத் தாழை (புலவுத்தாழை):
daun pandan - புலவுத் தாழை. பிரியாணி-கைதை என மலையாளத்திலும், பிரியாணி-தாழை என தமிழிலும் பெயர். புலாச்சோறு எனப்படும் ஊன்சோறு சிந்து சமவெளிக் காலத்தில் இருந்தே தமிழர்கள் கண்டுபிடித்துக் கொடுத்த உணவுவகை. இதனைச் சங்க இலக்கியம் தெளிவாகக் காட்டுகிறது. புலவு/புலை/புலால் என்னும் ஊன்கறியால் புலாச்சோறு (பிரியாணி) செய்யப்படுகிறது.
புலாவு, (pulao, pilaf, polo, ....) பற்பல சொற்களால் இன்று உலகமுழுதும் பரவியுள்ள தமிழர் உணவு. இது இப்பொழுதுதான் வெளிநாட்டவர்களுக்குப் புரிந்துவருகிறது, எழுத ஆரம்பித்துளர். https://en.wikipedia.org/wiki/Pilaf தென்கிழக்கு ஆசியாவிலும், இலங்கைத் தீவிலும், தென்னிந்திய நெய்தல் நில மக்களும் புலாச்சோறு செய்கையில் பயன்படுத்தும் இலை ஒருவகைத் தாழையினதாகும். எனவே, தூய தமிழில் அத்தாழையைப் புலவுத் தாழை என அழைக்கலாம். பார்க்க: DEDR 4552
Culinary use:
In India and Bangladesh it is called Rampe and ketaki respectively, along with the other variety of pandan there (Pandanus fascicularis), and is used to enhance the flavor of pulao, biryani and sweet coconut rice pudding, payesh if basmati rice is not used. It acts as a cheap substitute for basmati fragrance as one can use normal, non-fragrant rice and with the help of pandan the dish tastes and smells like basmati is used. It is called Ambemohor pat in Marathi; Ramba in Tamil, Biriyanikaitha in Malayalam, pandan wangi in Indonesian, hsun hmway (ဆွမ်းမွှေး) in Burmese, pandan in Tagalog, ใบเตย bai tooey in Thai, rampe in Sinhala, sleuk toi in Khmer, Daun Pandan in Nonya cooking,[3] Dứa thơm/ lá nếp in Vietnamese, 香兰 ("Xiāng lán") in Chinese and बासमतिया पौधा [bɑːsmət̪ɪjɑː pɑʊd̪ʱɑː] "fragrant plant" in Magahi and Bhojpuri due to its fragrance.

சொல்முதல் அ- எழுத்து மறைதல் பல சொற்களில் உண்டு. அரத்தம் - ரத்தம் என்கிறோம். சிவப்பு நிறத்தில் உள்ள மணி அரதனம் - ரதனம் (இருக்குவேத முதல் சுலோகம், ரத்னம், ரதன் டாட்டா). இரண்டு ஆறுகள் அரக்கி  உருவாக்குவது அரங்கம் - ரங்கம் (பெரியபெருமாள் பள்ளி கொண்டிருப்பதால் ஸ்ரீரங்கம்).

(CDIAL entry) - ர/ல திரிபு):
alakta 695 alakta m.n. ʻ a partic. red substance, prob. lac or lac dye ʼ R., °aka -- m.n. Kālid. [Forms with ā -- suggest poss. origin from or contamination with ārakta -- , cf. raktā -- f. ʻ lac ʼ Suśr. andlākṣāˊ -- which M. Mayrhofer ZDMG 105, 181 derives from *rakṣa -- < IE. *reg -- s -- in Pers. raxš ʻ bright ʼ]
Pa. alattaka -- , la° m. ʻ lac dye ʼ; Pk. alatta -- , °aya -- , ālattaya -- m. ʻ lac ʼ; K. olutu dat. alatis m. ʻ lac dye, lac ʼ; S. arto m. ʻ red dye from lac, yellow dye from safflower ʼ; P. altā m. ʻ red and yellow powder thrown at Holi time ʼ; A. ālatā ʻ lac dye ʼ; B. āltā ʻ lac ʼ; Or. aḷatā ʻ lac dye ʼ; OMth. alatā ʻ lac ʼ; H. altā, āl° m. ʻ lac dye ʼ, G. aḷtɔ m., M. aḷtā, aḷītā, āḷitā, alitā m.; Si. latu ʻ lac ʼ; -- Si.alatāva prob. lw.
Addenda: alakta -- : Si. alatu ʻ red dye ʼ DSL 691.

அர- என்னும் வினைச்சொல் தொல்தமிழ்/த்ராவிட மூலவேர்களில் அடிப்படையானது. வெட்டித் தேய்ப்பது அரம்.
‘அரம் போலும் கூர்மையரேனும்’ ‘அரம் பொருத பொன் போலத் தேயுமே’ என்கிறார் வள்ளுவப் பெருமான்.
அரம்புதல் என்று அர- வேர் விரியும். உதாரணம். அரம்பம் (தெலுங்கு, தமிழில் இன்று ரம்பமு, ரம்பம் ஆகியுள்ளது.
அரம்பணம் - பாக்கு நறுக்கும் அரம்பம். குறும்பால் வருத்தும் கண்ணனை அரம்பன் என்கின்றனர் ஆழ்வார்கள்.
காமநோய் உண்டாக்கி அரக்கும் பெண்களை அரம்பையர் என்கிறது செந்தமிழ். பழந்தமிழ் வேர் கொண்ட இந்த
அரம்பை வடமொழி கடன்பெறும்போது ரம்பா என்றாகியுள்ளது தெளிவு. தேவகன்னியரை வாழைக்கு ஒப்பிடும் 
மரபால் வாழைக்கும் அரம்பை என ஒரு பெயர் உண்டு. ர/ல மாறுபாட்டால் வருத்துவது
என்னும் பொருளில் அர- என்னும் முளை (மூலம் < முளை என்னும் தமிழ்) தருவது அரற்று/அலற்று-
அலற்று அலத்தல் என்னும் சங்கத் தமிழ்ச் சொல். ‘அலந்தேன் அம்மானே’ (caus. verb from அலத்தல்).
அலந்தல்: அலத்தல், அரங்குதல்:அரக்குதல் சோடி போல. அரங்கு என்னும் தமிழ்ச் சொல்லை
ரங்கம்:லங்கை என வடமொழி பெறுகிறது. அரங்கம் என்ற தமிழ்ச் சொல்லை சிங்கள மொழி உருவாக்கத்தில்
லங்கா என ஆகி உள்ளது அறிவோம்.

அரம், அரம்பம் (ரம்பம்) போன்ற கூரிய பற்களைக் கொண்ட தாழையை அரம்பை என அழைத்துள்ளனர். அதுவே, ரம்பை என இந்தியிலும், சிங்களத்திலும் மருவி அழைக்கப்படுகிறது. காமவேளின் வாட்படை - “மாரனுக்கு வாளாம் ஓலைப் பூவுமால்” என தாழை இலைகளை இலக்கியம் புகழ்கிறது.
“உரவுத் திரை பொருத பிணர்படு தடவுமுதல்
அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை” (நற்றிணை)

இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் 
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை (நற்றிணை)

”அரவெயிற்று அணிமுட் கைதை” (கல்லாடம்)

தாழை மலரை அன்னத்திற்கு (Himalayan bh & gl geese visiting South India and Lanka for 6 months of the year) ஒப்பிடுவர்:
”அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்” (சிறுபாணாற்றுப்படை)
“நெய்தற் குருகுதன் பிள்ளையென்றெண்ணி நெருங்கிச் சென்று
கைதை மடல்புல்கு தென்கழிப் பாலை” (தேவாரம்)

அரம்பைத் தாழையின் பூ - மிக அழகான ஃபோட்டோ (நன்றி:   Matthew Oldfield)
அரம்பம் போன்ற அரவெயிற்று வாளிலையும் காண்க. பெயர்க்காரணம் வெள்ளிடைமலை



அரம்பைத் தாழை - அழகிய படங்கள்:

Hindi रंपे Rampe
Sinhala රම්පා, රම්පේ, රම්පෙ Rampa, Rampeh, Rampe
Tamil ரம்பா Ramba


அரம்பையங்கோடு:
அரம்பைத் தாழை பெயரால் ஏற்பட்ட ஊர் ஆகலாம். இறைவன் பெயர் அரம்பேசுவரர்.
அரம்பை - ரம்பை > இரம்பை/இலம்பை என ஆகியுள்ளது (ஒப்பு: அரத்தம் - ரத்தம் > இலத்தம்). ஆனால், ஸ்வாமி பெயரில் தொன்மை இன்னமும் இருக்கிறது. அரம்பையங்கோட்டூர் பின்னர் இலம்பையங்கோட்டூர் ஆனது. கோடேந்துமுலையாள் அம்பிகை பெயர்.
நல்ல அகத்துறையில் அமைந்த பதிகம் - அரம்பேசுரர் மீது சம்பந்தர் பாடினார்:
அரம்பையங்கோடு - அரம்பைத்தாழை எக்கர் மணலில் விளையும் நீர்க்கரைகள் நிறைந்த ஊர்.























ரம்பை இலை, ரம்பா இலை, rampe leaf என உள்ளீடு செய்து பார்த்தால், ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஊன்சோறு செய்யும் ரெசிப்பிகள் கிட்டும். ரம்பெ என்னும் இந்தி வார்த்தை தமிழின் அரம்பைத் தாழையின் திரிபு. இத் தாழையால் பெயர்பெறும் அரம்பையங்கோடு - தேவாரத் தலம்.

தாழையில் பல வகைகள் உண்டு. ஆனால் எல்லாவற்றிலும் சிறந்தது சமையலுக்கு பயன்படும் அரம்பைத் தாழை தான். எனவே, எல்லா வகைத் தாழைகளையும் Pandanus என்று மலாய்/இந்தோனேசிய மொழிப் பெயரால் விஞ்ஞானம் அழைக்கிறது. தாழைகளில் ராணி அரம்பைத்தாழை. https://en.wikipedia.org/wiki/Pandanus
அரம்பைத் தாழை பெயரால் யாரோஸ்லாவ் வாசெக் செம்மொழி இலக்கியங்களில் உள்ள தாவரப் பெயர்களை ஆராயும் ஆய்வுநூல் வரிசையை வெளியிட்டு வருகிறார். இந்திய தாவரவியலுக்கு முக்கியமான வரிசை இது:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2015, 2:18:03 AM11/21/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com


இந்த திருப்புகழ்ப் பாடலைப் பாருங்கள்:
”சந்து அடர்ந்து எழுந்து சென்று அரும்பு மந்தரம் செழும் கரும்பு
கந்தரம்பை சேண் பதம் கொள் செந்தில் வாழ்வே”

இங்கே சொல்லப்படும் எல்லா தாவரங்களும் இயற்கையாக கடற்கரையில் வளர்வது.
கரும்பு - பேய்க்கரும்பு - பட்டினத்தார் வரலாறு. 

கடற்கரைக்கு இயற்கையானது தாழை. சுனாமியால் பரும் பாதகங்களை தடுக்கவல்லது என்பர்.
கந்த அரம்பை = கந்த (gandha) அரம்பை = வாசத் தாழை, நெய்தல் கரையிலே செழிப்பது.

 கடற்கரையிலே கந்த அரம்பை (=தாழை):

Pandanus trees and shrubs


Pandanus odoratissimus - Maakashikeyo

Pandanus odoratissimus L.f.

PANDANACEAE

Synonym: Pandanus leucanthus

Common names: Pandanus, screw pine

Dhivehi name: Maakashikeyo

Status: Abundant; found growing along the beaches of almost all the islands

Description: An erect, evergreen, coarsely branched tree that looks like a large branched candlestick or holder. It can grow to a height of 15 m. Branching is dichotomous (repeated branching into two equal parts) or trichotomous or irregular. Prop roots are numerous, thick and originate from the base of the trunk. Exposed stems are usually pale buff or grey brown, grossly ringed by leaf scars. Stems are hollow. Leaves are sword like, 1 to 2 m long and 4 to 7 cm wide, arranged spirally in three rows at the tips of the branches. In fully exposed leaves, the midrib is bent, and the upper third or so of the leaf hangs down, giving Pandanus plants their characteristic drooping appearance. Leaf apex is long and flagella like. Underside the leaves, especially at the base two clearly demarcated very pale dull green strips are present, one on either side of the midrib. Margin of the leaves and midrib are prickled. Prickles are white or with dark tip, 3 to 5 mm long, slender and slightly curved. Prickles of the midrib are forwardly directed in the distal half of the leaves and downwardly directed in the lower half. Male and female flowers are in separate trees. Male inflorescence is a raceme of spikes, and male flowers are tiny, white, and fragrant with large showy bracts. They last only for about a day, with the inflorescence decaying within three to four days. Female inflorescence is pineapple like, composed of free or joined carpels, ripening as drupes (phalanges). Fruits are variable in shape, ovoid, ellipsoid, sub-globose or globose with tightly bunched, wedge shaped fleshy drupes, which are also referred to as keys. Fruits are green when unripe, orange or red or vermilion when ripe. Each drupe or phalange is covered with a pericarp (outer layer) and the middle layer or mesocarp is divided into upper and lower mesocarp. Upper mesocarp comprises an elongated cavern with tissue containing air spaces and lower mesocarp is fleshy and fibrous and this is the portion of the fruit that is chewed and eaten. Endocarp that covers the seed is hard and stony.

Uses: It is an important component in the food security system of the Maldives and considered as the best source of food during famine and scarcity. Red portion of the ripe fruit is eaten raw. Juice, locally called as baipainkandhi, is extracted from the fruits by cutting them into small pieces, boiling them in water with sugar and then crushed and strained. Fruit is also used in various food preparations. It is cooked with rice and sugar to prepare a delicious traditional food called kashiko bondibaiy. A sweet soup, called kashiko baypeen, is prepared from the fruit. A sweet namely, kashiko foa is prepared by cooking pieces of fruits with sugar and wheat flour and sold in local market. Leaves, after thoroughly dried and prickles removed, are used to make a kind of soft mat called santhi. Prop root, locally called aloho, is used as a brush to paint boats. Hollow stems were once used to build houses but now are widely used to construct hargue, a place where boats are hauled for repair. Stems, which are fibrous and very soft, are widely used in making hulhuashi, a resting platform commonly found nearby the beach.


Pandanus tectorius - Boa kashikeyo

Pandanus tectorius Parkinson

PANDANACEAE

Synonyms: Pandanus laevis, Pandanus moschatus, Pandanus spurius

Common names: Pandanus, screw pine

Dhivehi name: Boa kashikeyo

Status: Abundant

Description: It is more or less similar to P. odoratissimus in appearance and morphological features. It also looks like a large branched candlestick or holder with numerous prop roots but is comparatively smaller in size than P. odoratissimus. In P. tectorius, prop roots sometimes emerge from the upper part of the trunk whereas in P. odoratissimus they emerge only from the base of the trunk. Leaf spines are larger and white or very pale in colour in P. odoratissimus whereas they are smaller and greenish in P. tectorius. Leaves of P. odoratissimus have two strips at the base, one on either side of the midrib. No such feature could be observed in P. tectoriusP. odoratissimus and P. tectorius are very close to each other taxonomically and they are thought to hybridize readily where they co-occur.

Uses: Fruits of P. tectorius is normally not consumed in the Maldives because it causes an itching sensation on the tongue. Unlike P. odoratissimus, stems of P. tectorius are not widely used. Both the Pandanus species help to bind sand and prevent wind erosion, when they are grown on the seaward slopes and crests of frontal sand dunes. They also function as wind break. Since both the species are tolerant to salt spray, sand blasting, exposure to strong winds and high levels of solar radiation they can be part of multispecies bioshield for coastal area protection.

Ecology, propagation and management: Pandanus spp. grow on a wide variety of coastal soils, including sandy and rocky beaches, raised coralline terraces and recent basalt (lava flows). They are adapted to shallow, saline, sodic, alkaline, and thin and nutrient poor soils over limestone and peaty swamps. They also grow well in soils with free or impeded drainage, including seasonally waterlogged soils. They are very tolerant of salt laden winds and salt spray and also of strong and steady winds. Pandanus spp. have a capacity to regenerate rapidly from seed in fallen fruit segment. It is not normally cultivated in the Maldives. However, it can be propagated by seed and branch cuttings. Seed can be collected from intact phalanges (keys) by keeping them in cool tap water for about five days, changing the water daily. Viable phalanges will float. They can be sown directly or propagated in a nursery. Seedlings 4 to 12 months old can be used for outplanting. Branch cuttings are made form shorter laterals including one or more aerial or prop roots and the length of the cuttings normally ranges from 20 to 40 cm. Leaf area of the branch cuttings is reduced by about 70% by cutting or trimming the leaves. Cuttings should be planted immediately after collection for high rate of establishment and growth.


Pandanus amaryllifolius - Raampa, raampe faiy

Pandanus amaryllifolius Roxb.

PANDANACEAE

Synonym: Pandanus odorus

Common names: Fragrant pandan, fragrant screwpine

Dhivehi names: Raampa, raampe faiy

Status: Occasional; grown in home gardens as a spice.

Description: A shrub that grows to 1 to 1.5 m height with spirally arranged sword-like leaves. Adult leaves are about 80 to 110 cm long and 6 to 8 cm wide with rather abruptly rounded or acute tip. Lateral pleats of leaves, well developed in other Pandanus species, are obsolete in Pandanus amaryllifolius. There is no spine in the midrib and margins of the leaves also lack any spine except at extreme apex where there may be a few minute prickles present. Male flowers are extremely rare and there is no scientific description of a female flower.

Uses: It is the only Pandanus species with fragrant leaves and the aroma is distinctly pleasant, somewhat nutty and reminiscent of fresh hay. Scent of the Pandanus leaves develops only on withering; the fresh, intact leaves have no odour. In the Maldives, leaves are often used as a flavouring agent along with curry leaves or alone while cooking various curries.

Ecology, propagation and management: Pandanus amaryllifolius is cultivated traditionally and it is not recorded in the wild. It is propagated by root suckers. Suckers 30 to 40 cm are carefully removed and planted in the kitchen garden. It requires regular but light watering for better performance. If there is no sufficient watering, leaves will become chloritic and aroma will not be strong.



food_04-13vanilla_of_asia.pdf
FAO_Trees and Shrubs Maldives 3.pdf

N. Ganesan

unread,
Nov 21, 2015, 4:21:45 AM11/21/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
இந்தியாவின் மிகப் பழைய இலிங்கம் குடிமல்லத்தில் - காளத்தி அருகே - உள்ளது. இது நெய்தல் 
திணைத் தெய்வம் வருணன் (தொல்காப்பியம்) என்றும், மகரவிடங்கர் மழுவாள் நெடியோனாய் 
நிற்றல் பற்றியும், விடங்கர் தலையலங்காரமாக அரம்பை (தாழை) மலரின் மகரந்த நார்கள் (Bracts) 
கொண்டு அலங்கரித்து இருப்பதும் குறிப்பிட்டேன். சங்க இலக்கியத்தில் இலிங்கம் என்ற சொல் 
உண்டு, வருணனுடன் தொடர்புடையது. 

அரம்பைஅங்கோடு (= இலம்பைஅங்கோடு)
அரம்பாபுரி என அழைக்கப்படும் இலம்பையங்கோட்டூர்த் தேவாரம் அகத்துறையில்
அமைந்த அழகியபதிகம். நெய்தல் திணையின் ஊர் ஆனதால், எல்லாப் பாடலிலும்
இயற்கை வளத்தைப் பேசி, இறுதியில் தன் சொந்த ஊர் சீகாழியின் நெய்தல் நிலவளத்தை
வர்ணித்து முடிக்கிறார். பாலூர் கண்ணப்பமுதலியார் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள்
அரம்பையங்கோடு என்பதுதான் இலம்பையங்கோடு என ஆனது என ஆய்ந்துள்ளனர்.
(i) அரத்தம் > ரத்தம் > இரத்தம், (ii) அரங்கேசர் > ரங்கேசர் > இரங்கேசர் (இரங்கேசர் 
வெண்பா என்ற நூலே உள்ளது!) (iii) அரதநம் > இரத்நம் ... போல அரம்பைஅங்கோடு > 
இரம்பைஅங்கோடு/இலம்பைஅங்கோடு. அரம்பேசுரர் மீது தேவார திருப்பதிகம்:
”எனது உரை தனது உரையாக” என்று ஒவ்வொரு பாட்டிலும் சொல்வது மிகச் சிறப்பு.
அரம்பேசுரர் திருகோயிலில் சின்முத்திரையை நெஞ்சில் வைத்திருக்கும்
தக்ஷிணாமூர்த்தி வடிவம் வேறெங்கும் வழிபடக் கிடைக்காதது.

கந்த நறுமணம் நிறைந்த கடல் என்று கடைசிப் பாடலில் கூறுகிறார்.
இது இராமேசுவரத் தேவாரத்தை நினைவூட்டுவது. சங்க இலக்கியத்திலும் பின்னரும் மீன், ஓங்கில், 
திமிங்கிலம், சுறா, கராம், ... இவற்றால் துர்நாற்றம் வீசும் கடலின் இயல்பை புலவு நாறும் கடல் 
என்பர். ஆனால் இராமேச்சுரத்தில் அரம்பை, தாழை போன்றவற்றால் கடம்
நறுமணம் வீசி மணக்கிறது என்கிறார். 

      உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
      வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய 
      விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து 
      அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!
புலவு நாறும் கடல் விரை மருவும், கந்தம் கமழும் கடலாக மாறக் காரணம்
அரம்பை என்னும் தாழை.

"கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில் 
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்" (தேவாரம்)

”வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.” (தேவாரம்)

திருப்புகழிலே கந்தரம்பை = கந்த (gandha) அரம்பை (pandan tree):

இந்த திருப்புகழ்ப் பாடலைப் பாருங்கள்:
சந்து அடர்ந்து எழுந்து சென்று அரும்பு மந்தரம் செழும் கரும்பு
கந்தரம்பை சேண் பதம் கொள் செந்தில் வாழ்வே
இங்கே சொல்லப்படும் எல்லா தாவரங்களும் இயற்கையாக கடற்கரையில் வளர்வது.
கரும்பு - பேய்க்கரும்பு - பட்டினத்தார் வரலாறு. 
கடற்கரைக்கு இயற்கையானது தாழை. சுனாமியால் வரும் பாதகங்களை தடுக்கவல்லது என்பர்.
கந்த அரம்பை = கந்த (gandha) அரம்பை = வாசத் தாழை, நெய்தல் கரையிலே செழிப்பது.
கடற்கரையிலே கந்த அரம்பை (=தாழை):

அரம்பை முலையின் இருந்தவே! - சீவக சிந்தாமணி

இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே.

ஈற்றடியின் பொருள் அறிய,
“மாமன்றல் கைதையங் கன்னிதன் மொக்குள் வனமுலை மேல்”
போன்ற பாடல்களை ஒப்பிடலாம்.

இளைய புன்னை மரங்கள் இட்டிடை மகளிர் மதுவைக்
கொப்புளிக்க பூக்கள் பூத்தன. அஞ்சிறை வண்டுகள் அதுகண்டு
செவ்வழிப் பண்கள் பாடின. மாடங்களின் மேலே தெரியும்
விண்மீன்கள் போல தாழை (= அரம்பை) பூக்கள் பூத்தன.
 இங்கே, அரம்பை = வாழை என்று கொள்ளல் பொருந்தாது.
மாடங்களின் மேலே தெரியும் விண்மீன்கள் வெண்ணிறமானவை.
ஆனால், வாழையின் பூவோ விண்மீன்கள் நிறமன்று.

சில நூற்றாண்டு சென்ற பின்னர், இந்தச் சிந்தாமணிப் பாடலின் 
கருத்தை உள்வாங்கி சேக்கிழார் நெய்தல் நிலத்தை
வர்ணிக்கிறார். திருத்தக்க தேவரும், சேக்கிழாரும் தாழை (அரம்பை)
மற்றும் புன்னையை பாடல்களில் ஆள்கின்றனர்.

கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய 
வழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை 
விழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக் 
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை

---------------------------------------------------------------------------------

அரம்பை தாழை என்று பொருள்படும் அழகிய சிந்தாமணிப்
பாடல் ஒன்று இன்று படித்தேன். அரம்பை தாழையிலை
வாளுக்கும் தலைவி நெற்றிக்கும் உவமையாகப் பாடியுள்ளார் தேவர்.
கம்பன் தேவரை முன்னோடியாகக் கொண்டதில் வியப்பில்லை.

    பாடு வண்டு இருந்த அன்ன பல்கலை அகலல்குல்
    வீடு பெற்றவரும் வீழும் வெம்முலை விமலையென்று
    ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள் நுதல்
    ஊடினும் பு ணர்ந்ததொத்து இனியவள் உளாளரோ.

உரை எழுதிய உரையாசிரியர்கள் அரம்பை என்பது என்ன
என விளக்காது விட்டுவிட்டனர். அரம்பை - வாழை என்றோ,
தேவகணிகை என்றோ நெற்றிக்கு உவமை ஆகும்
வாள் போன்ற தாழையிலையைச் சொல்லவியலாது.

பாடு வண்டு இருந்த அன்ன பல்கலை அகல் அல்குல் - முரலும் வண்டுகள் 
தங்கினாற்போலப் பல மணிகளையுடைய மேகலையையுடைய அகன்ற அல்குலையும்; 
வீடு பெற்றவரும் வீழும் வெம்முலை - துறந்தவரும் இல்லறம் புக விழையும் வெம்முலைகளையும்; 
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன - அரம்பைத் தாழையிலையின் இரு பக்கங்களிலும் சிறுமுட்கள்
(prickles) இருக்கும். அரம்பை காரணப்பெயர். இதனை வாள் அரம் என்பர். அதுபோல், நெற்றியின் இருபக்கங்களிலும் - மேலே தலைமயிரும், கீழே புருவங்களின் முடியினையும் ஆடுவதற்கு அணி செயப் பெற்ற வாள் போன்ற நெற்றியையும்;  - உடையவள் விமலை. விமலையின் வாள்நுதலை அரம்பைத் தாழையின் தழைக்கு ஒப்பிடுகிறார். ஆடுவான்: -வான் விகுதிபெற்ற வினையெச்சம். புருவத்துக்குக் கண்மை,
நெற்றி வகிடு எடுத்து தலைச்சுட்டி ஆபரணம் அணிதல், திலகமிடல் போன்ற செய்கைகளால் அணிசெய்யப்பெற்று
அரம்பைத் தாழையின் வாள் அரம் போன்ற விமலையின் நெற்றி சீர்பெற்றது.

அரம்பை வாள்.
இதனை விமலை என்பவளின் நெற்றிக்கு உவமையாக்குகிறார் சிந்தாமணி உடையார்.

அரம்பைத் தாழையின் பூ காமவேளின் அம்பு (வாளி):
”முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு 
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 
ஒருதனி செங்கோல் ஒருமகன் ஆணையின்” - சிலம்பு

     தொடையிலஞ்சி மஞ்சளிளஞ் சோலைபடை வீடு 
     படைமங் கையர்கமுகம் பாளை - யிடுகவரி
     காளாஞ்சி மல்லிகையாங் காரிகையீர் மாரனுக்கு 
     வாளாமோ லைப்பூவு மால்

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages