அதவம் (உதும்பரம்)

75 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 12, 2019, 7:05:43 AM12/12/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil, Pandiyaraja
> 'ஒத-' என்பதற்குரிய செந்தமிழ்ச் சொல் எது என்று இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. 
> இனி வரும் காலங்களில் தேடிப் பார்க்கிறேன். 
> சக 
---------------------------------------

சிறுகுறிப்புத் தருகிறேன். பொள்ளாச்சிக்குப் புறப்பட்டுக்கொண்டிருப்பதால் விரிவாக எழுதலை.

அத்திக்காயின் வண்ணத்தால் களா மரத்தின், இலந்தை மரத்தின் காய்கள் பெயர் பெறுகின்றன.

உடும்பு சுவரில், மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். உட்-/ஒட்- என்பது தாதுவேர்.
ரப்பிரத்தியம் பெற்று உடும்பரம் என்ற த்ராவிடப் பெயர் >> உதும்பரம் என அதவம்/அத்தி மரத்தின் பெயர்.
அண்மையில் உதும்பர மரத்தால் செய்த அத்திவரதருக்கு பக்திப் பிரவாகம் கண்டோம்.
நீங்களும் சென்று பார்த்தீர்கள். ஔதும்பரன் = எமன். 2014 மடலில் எழுதினேன்:

அத்தி/அதவம் வேதத்தில் உதும்பர எனப்படுகிறது. உடைபோல பழங்கள் உடுத்துள்ள மரம் உடும்பரம் (உடும்பரம் என்பது
உடும்பரம் > உதும்பர ஆகியுள்ளது. கடம்பு கதம்பு என்று வடமொழியில் ஆனதுபோல்.) சுவரிலோ, மரத்திலோ
உடுத்தாற்போல் உள்ள பிராணி உடும்பு. அத்தி தொத்திய கனி - மரபுத்தொடர்.

[5] "இந்த உதாரணங்கள் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவுக்கிடையில் உள்ள வேறுபாட்டை விளக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. உடும்பரம் {அத்திமரத்தின்} கனி பழுத்து உடையும்போது, உள்ளே காணப்படும் வெற்றிடத்தில் முழுமையாக வளர்ந்த கொசுக்கள் காணப்படுகின்றன. அக்கனியில் கொசுக்கள் வாழ்ந்தாலும் அவை அக்கனியல்ல, மீன் நீரில் வாழ்ந்தாலும், நீரதன் இல்லமாகாது. ஜீவனும் அதே போலவே பரமாத்மாவில் வாழ்ந்தாலும், அது பரமாத்மா ஆகாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அத்திப்பழமும் அதனுள்ளிருக்கும் கீடமும் போலவே இருபத்துநான்காவதற்கும் இருபத்தைந்தாவதற்கும் பேதம். மத்ஸ்யத்துக்கும் ஜலத்துக்கும் போலவே இவைகளுக்கும் பேதமானது அறியப்படுகிறது. இப்படிப்போலவே இவைகளுக்கு அனேகத்தன்மையும் ஏகத்தன்மையும் அறியத்தக்கன" என்றிருக்கிறது.  

புல்லி (wall lizard) >> பல்லி ஆகிவிட்டது. அதுபோல், உடும்பர/உதும்பர >> அதவம் (சங்கம்)/அத்தி மரம் என்று மாறிவிட்டது.
உதும்பர/அதவக் காய்: (அத்திக்காய்). தாவரவியலில் Ficus Racemosa (=Ficus Glomerata, synonym).
உதுவம் > அதவம் என்னும் அத்திக்காய் வண்ணத்தில் இருப்பதால் உதுக்காய் என்னும் செந்தமிழ்ச் சொல்
ஒதக்காய், ஒதப்பழம் எனப் பேச்சுத்தமிழில் வழங்குகிறது.
உதுக்காய் > ஒதக்காய். (அத்திக்காய் காய் காய் - கண்ணதாசனின் பாடல் நினைமின்).

 
ficus-seeds-buy-ficus-racemosa-gular-05-kg-seeds-online-at-nursery-live.jpg

அத்திப்பழத்தின் நிறம் உடையது ஆகையால் களாமரத்தின் Pre-ripened fruit ஒதப்பழம் என்கின்றனர்.

களங்கனி என்பது களாப்பழம், மிகுந்த கருமை நிறமுடையது. எனவே, ஆமான் (= பைஸன்) அல்லது எருமைக்
கொம்பால் செய்யும் கருங்கோட்டியாழ் (ஹார்ப்) வர்ணிக்கையில் அதன் கருமைக்காக களங்கனி
என 3 இடங்களில் சங்கப் புலவர் பாடியுள்ளனர். கருங்கோட்டியாழ் ஒதப்பழத்தின் (உதவம்/அதவம்) நிறம்
கொண்டதன்று.

ஹோமங்களில் இன்றியமையாதது உதும்பரத்தின் இலைகள்
It has been described in the story of Raja Harischandra of the Ikshvaku dynasty, that the crown was a branch of this udumbura tree, set in a circlet of gold. Additionally, the throne (simhasana) was constructed out of this wood and the royal personage would ascend it on his knee, chanting to the gods to ascend it with him, which they did so, albeit unseen. Its leaves are an indispensable part of many Hindu havans.

உதியன் : உதும்பரத்தின் இலைகளைத் தாங்கிய முடியணிந்தவன் என்ற பொருள் இருக்கலாம்.
ஓதிமலை திருப்புகழ் தலம். ஊதியூர் (< உதி?). 
ஒதி மரம் = Indian ash tree 
.... இன்னும் ஆராயணும்

~NG

On Wed, 11 Dec 2019 4:41 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:


On Wed, Dec 11, 2019 at 5:03 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இலந்தைப் பழங்களிலும் ஒதப்பழம் தான் ருசி. 
அரிசிக் குருணைக்குப் பண்டமாற்றாக ஒன்றுக்கு இரண்டு அல்லது ஒன்றுக்கு ஒன்றரை என்ற கணக்கில் இலந்தைப்பழம் வாங்குவோம். 
சக 

ஒதப்பழம், ஒதக்காய். ஒத- இதற்கான செந்தமிழ்ச் சொல் என்ன?
 

On Wed, 11 Dec 2019 4:08 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
> புளியம்பழத்தில் ஒதப்பழம் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரொம்ப ருசி!!

ஒதக்காய் பற்றிய நல்ல வர்ணிப்பு:

N. Ganesan

unread,
Dec 12, 2019, 8:19:17 PM12/12/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
அத (= அத்தி) (தொல். எழுத் 203, உரை.)
அத, அதா, அதம், அதவு, அதவம் == அத்தி (MTL).

உதும்பரம்/உடும்பரம் >> உதம் >> அதம் (= அத்தி. Cf. புல்லி > பல்லி, துளிர் > தளிர், குட்டை > கட்டை, ...)

களா(களவு), இலந்தை, புளி போன்றவற்றில் அத்திக்காய் போன்ற வர்ணத்தால், சுவையால் ஏற்படும் பெயர்.:
உதக்காய்/பழம். காய் முற்றி, பழமாகு முன் உள்ள நிலை.

தமிழ்நாட்டில் ஒதக்காய்/ஒதப்பழம் தூய தமிழில் ஈழத்தீவில் உதக்காய், உதப்பழம் எனப்படுகிறது.
“ உம்மா தந்த காசை தம்பியிடம் கொடுத்து உடுப்பையும் அவனுக்கு போட்டுவிட்டேன். தம்பியிடம் கடைக்குப்போய் உனக்குப் விருப்பமான “உதக்காய் விளாங்கா வாங்கிச் சாப்பிடுகிளி... நல்லபிள்ளலா... கொஞ்சநேரம் பெரியம்மா வீட்டபோய் விளையாடு நான் சுணங்கி வாறன் சரியா“ “

” எலந்த பழம், உதப்பழம், மாம்பழம் எல்லாம் மரமேறி அடிச்ச அனுபவங்களை எல்லாம் மறக்க முடியாது..”

உதப்பழம்/ஒதப்பழம், உதக்காய்/ஒதக்காய் << உதும்பரம் (வண்ணம், சுவையால்).
உதும்பரம் > அத, அதா, அதவு, அதவம், அத்தி என்று ஆகியுள்ளது.

கருங்கோட்டு யாழுக்கு மாமைக் (கறுத்த) களங்கனி உவமை.
உதக்காய்/பழம் மாமை நிறம் அல்ல. எனவே தான்
சங்கப் புலவர் யாரும் கருங்கோட்டியாழ் உதங்கனி/அதங்கனி (அதவக்கனி) என்றாரில்லை.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages