புல்வாய் - பொதுப்பெயர் (generic term for antelopes and deer) - தொல்காப்பியச் சூத்திர விளக்கம்

50 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 13, 2021, 4:57:14 PM6/13/21
to housto...@googlegroups.com, vallamai

மான் இனப்பெயர்கள்: 2 குறிப்புகள்
----------------------------------------------------------------

(1) கலை - கருமை நிறத்தால் வரும் பெயர். இது (i) மரை (=antelope. marai is due to fixity of horns. tiruku-marai 'screw'; 'avanukku marai kazanRupOccu' etc.,) இனத்தில் இரலைக்கு வரும். (ii) மான் (deer) இனத்தில் கடமானுக்கு வரும். கடமான் கலை நிறத்தில் (=கலங்கிய கரு நிறம்). சங்க இலக்கியத்தில் கலை என்ற சொல்லை ஆராய்ந்தால் நான் சொல்வது விளங்கும். 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). இரலை (Cf. இருள்) = Blackbuck [Ref. 1]. புல்வாய் = மரை (antelopes) + கலை (deer, esp. Sambur=kalaimAn); பொதுப்பெயர். புல்வாய் இப்போது நாம் மான் என்று உபயோகிக்கிறோமே, அதன் பழம்பெயர். pulvAy, an all encompassing term for deer and antelopes (Tolkaappiyar says so.)

உழை என்பது புள்ளிமானுக்குப் பெயர். உழுகிற உழவுக் காலத்தில் (before sunrise, until sun gets hot) மேயும் புல்வாய் இது. தொல்லியல் அகழாய்வுகளில் மான் கொம்புகள் கலப்பையின் கொழுவாகப் பயன்பட்டமை கிடைக்கிறது. கலூஉழ் என்பது கலூஷ (Th. Burrow), திருவிழாவை திருவிஷா எனல், சூரியன் ஒரு நட்சத்திரத்தில்/ராசியில் வீழ்வது விழு (>> விஷு , ஸம்ஸ்கிருதம், மலையாளம்), இதனால் விழவு/விழா எனப்பெயர்கள். இவற்றை எல்லாம் நோக்குங்கால், உழை “மான் மேயுங் காலம், உழவன் உழுங் காலம்” என்பது உஷத் காலம் என ஸம்ஸ்கிருதம். இக் கருதுகோளை உறுதிப் படுத்த ஆப்கானி, பாரசீக மொழிகளில் உஷத் காலம் இல்லையா எனப் பார்க்கணும்.

(2) நவ்வி = Chinkara நளினம் மிக்க மரை இனம் இது. வட நாட்டில் மெலிசாகத் தும்முவது என்ற பொருளில், சிங்காரா எனப் பெயர்.
https://en.wikipedia.org/wiki/Chinkara  இந்த மரையைச் “சிறுதலை நவ்வி” என்றார் சங்கப்புலவர். “நாறு உயிர் நவ்வி” என்பதும் சங்கம். நாறு உயிர் = தும்முவது போல மூச்சு விடல். இங்கே, உயிர் = மூச்சு. எதற்கும் அஞ்சித் தாவும். இந்த நவ்வி மரையைப் பெண்களுக்கு உவமை கூறுவர்.

*நவ்வி வீழ்ந்தென*, நாடக மயில் துயின்றென்ன,
கவ்வை கூர்தரச் சானகியாம் கடிகமழ் கமலத்து
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்தடைந்த
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை! - கவிச்சக்கிரவர்த்தி கம்பர்

திருக்கோவையாரில், நவ்வி எனும் மரையை வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=82120&padhi=12&startLimit=4&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
”எழிற் றொண்டைச் செவ் வாய்நவ்வி ” தொண்டைக் கனிபோலும் எழிலையுடைய செவ்விய வாயினையுமுடைய நவ்வி .
சிவப்பும், கருப்பும் கலந்துள்ள நவ்வியின் வாயின் வடிவைத் தொண்டைக் கனிக்கு உவமிக்கிறார் மணிமொழியார்:
https://growerjim.blogspot.com/2014/08/tindora-coccinia-grandis.html  தொண்டைக் கனி

இலங்கையில், வவுனியா பகுதியில் நவ்வி என்ற பிரதேசம் இருக்கிறது.
இது நவ்வி மரை (Chinkara antelope) காரணமாக வைத்த இடப் பெயர்.

நவ்வி (< நுவ்வி) :: பெயர் ஆய்வு
-----------------------------

நூ-/நோ- மெலிதலைக் குறிப்பது. நோ(ய்)தல்/நோலுதல்/நோற்றல் நோன்பு (பட்டினி-விரதம்) . நூ - எள்; நூநெய் நூனெ என்றால் எண்ணெய். எள் - நுண்ணிய விதை எனவே, நூ(வு) என்ற பெயர். நுவணை = எள்ளுண்டை, இடித்த மாவு.  நுண்ணியது என்ற பொருளில், ”நூஞாயம் பேசறாள்” என்பது நுணையாடல். -ல் விகுதி ஏற்று, நூல்  ‘thread' என்ற சொல் தோன்றுகிறது. சிலந்தி வாயில் நூல் பிறக்கும். நூல்- என்றாலே முன்பு குருமுகமாகக் கேட்டுப் பயில்வதுதான். குரு தன் நூலை நுவல்வார். நூல்- > நுவல்-தல்.

நூ = நுண்ணிய என்ற வேர். உ-ம்: நூ- : நூல்.
நூ = மிகச்சிறு கூலம். நூல் = எள் எனவுமுண்டு. நூலை/நோலை = எள்ளுருண்டை
“புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கெழுந்தாடி”           - (சிலம்பு: 5: 68 - 70)
நோலை < நூலை = எள்ளுருண்டை.

நோய்தல்.- பெருமாள் முருகனின் மேத் திங்கள், 2000-ஆம் ஆண்டு பிரசுரமான “கொங்கு வட்டாரரச் சொல்லகராதியில்” உள்ள வினைச்சொல் இதனைச் சற்று ஆராய்வோம். பக். 110, “நோய்(தல்) - வி. உராய்தல். ‘எதுக்கு இப்படி மேல வந்து நோயற?’ கொங்குநாட்டுப்புறத்தில் இந்த வினைச்சொல்லை சாதாரணமாகக் கேட்கலாம். இன்னொரு உதாரணம்: “கழுதை குட்டிச்செவுத்தில  நோஞ்சிட்டிருக்கு”. நோய்தல்/நோஞ்சுதல் = உரைசுதல்/உராய்தல்/உரோசுதல் என்னும் பொருளில் வழங்கும் தொன்மையான வினைச்சொல். நோப்பு- உரசுதல் - ரோஷம், கோபம், சினம்.

கொங்கு வட்டார நாவல்கள், சிறுகதைகளை ஆராயும் ஆய்வேட்டில், சில சொற்கள் உள்ளன.
நோப்பாளம் = ரோஷம்.
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/106531/13/13_appendix%201.pdf
MTL: நோப்பாளம் nōppāḷam , n. < நோ-. Irritation, anger, offence; கோபம். உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.
பெருமாள் முருகன் அகராதி: நோப்பாளம் - பெ. பிணக்கு. ‘என்ன சொல்லீட்டன், நோப்பாளம் வந்திருச்சு.’

நூப்பு nūppu , n. perh. நூக்கு-. Reduction, subduing, abatement; தணிப்பு. (யாழ். அக.)
நூதல் nūtal, n. cf. நுது-. Being extinguished; அவிகை. (யாழ். அக)
நூபுரம் ‘சிலம்பு, பாதசரம்’:
நூபுரம் nūpuram, n. < nūpura. 1. Anklets formed of little bells; பாதகிண்கிணி. (திவா.) 2. Tinkling anklets; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56).
நூ- என்னும் தாதுவுக்கு தாழ்ந்த, மெல்லிதான என்ற பொருளை, ஒலிக்கு ஏற்றி “நூபுரம்” என்ற சொல் தோன்றியுள்ளது. நூப்புரம்/நூபுரம்: தூம்பு தூபு என்றே சோழர் கல்வெட்டுகளில் காண்கிறோம்.

சிறிய/நுண்ணிய தலை, வாய் உடைய மரை, நூவு- > நுவ்வி எனப் பெயர் அமைந்திருக்கும். புல்லி > பல்லி ஆவது போல, நுவ்வி > நவ்வி ஆகிறது. இதற்கோர் காரணம் உண்டு. நுவ்வை = நும் + அவ்வை (தமக்கை) என்ற உறவுப்பெயர் வழங்கிய காலம்.
”நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே”
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai172.html#.YMZmukxOnVI

நுவ்வை, நுவ்வி இரண்டும் பொருள்மயக்கம் உண்டாக்கும். எனவே, அப்போதே அருகி வந்த நுவ்வி மரையை, நவ்வி மரை என அழைக்கலாயினர் எனக் கருதவேண்டி உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 14, 2021, 8:04:07 AM6/14/21
to Santhavasantham, housto...@googlegroups.com, sivamani K, George Hart
On Sun, Jun 13, 2021 at 3:57 PM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
அருமையான கட்டுரை திரு கணேசன்


நன்றி, கவிஞரே.

---------
On Monday, June 14, 2021 at 2:40:25 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
'மரை' விளக்கம் 👌

நன்றி. மரை என்பதன் etymology யாரும் எனக்கு முன் எழுதியதாகத் தெரியவில்லை.
தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல் மரை = antelope. மரையா/மரையான்,
கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள் என்றும் தெரிந்தேன். ஆக, antelope என்பதற்கு
மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.
 
'நவ்வி' விளக்கம் 🤔
'உழை' விளக்கம் அருமை. 

"மென்தினை நுவணை"  இலக்கியத்தில் உண்டு. 
நுண்ணிடி நுவணை = ? (மலைபடுகடாம்)

தினைமா உருண்டையா?
எள் உருண்டையா?

உரையாசிரியர் தினைமா உருண்டை என்று சொல்லி இருப்பதாக நினைவு. 

நாவு/நவ்வு என்பதன் பொருளில் இருந்து நவ்வி என்ற சிறிய (நுண்ணிய), மடம்பொருந்திய, எழில் மரைக்கான பெயர் தோன்றியிராது.
நூவு/நுவ்வு (Cf. கோவை/கொவ்வை கனி, மோது-/மொத்து- ...) என்றால் எள், தினை எனும் நுண்கூலங்கள் என அறிவோம்.

எனவே தான் மரையா/ன் (= Nilgai, மாடு போன்றது), இரலை (Blackbuck [Ref. 1] போன்ற மரைகளை விட,
அளவில் சிறுத்ததும், அழகுடையதுமான மரைக்கு நுவ்வி என்ற பெயர் ஏற்பட்டு, சங்க காலத்தில் நவ்வி
என மாறிற்று என்ற கருதுகோளை முன்வைக்கிறேன். விவசாயம், மக்கட்டொகை பெருக்கத்தால்,
நுவ்வி/நவ்வி மரையினம் தென்னிந்தியாவில் முற்றாக அழிந்துவிட்டது. யா என்னும் (ராஜ)சாலம், அகில்
போன்ற மரங்கள் இன்று தென்னிந்தியாவில் இல்லை. அதுபோன்றதுதான். முதலைகளில் மூன்று
இனங்கள் என்பார் பேராசிரியர் உரையில்:  “மூன்று சாதிகள்”. இன்று அவை தமிழ்நாட்டில் இல்லை:
முதலை, இடங்கர், கராம். மகர இனங்கள். விடங்கர்/இடங்கர் இல்லை, கராம் “உவர்நீர் முதலை” கடற்கரையில் இல்லை.
அதுபோல் தான் நுவ்வி/நவ்வி மரையும். புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி.

NG
Ref. 1: இரலை ரோஹிணீ நக்ஷத்ரத்தின் சின்னமாக 4700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய வானியலில்
இருந்தமை பற்றி ஆராய்ந்து அறிவித்துள்ளேன். This Blackbuck as the mount/symbol of KoRRavai (< kol-), later Durgaa,

 

சக 


 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUeU63Zi%2B%2Bkv6%3DWOeoady1%2BeSA1PaMJySpYvTQ-1nw24Ag%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hgsOWiVs4iOFbSS0zm548zsvR2fY6kDQ4NccgSmT0qmiA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jun 14, 2021, 8:12:04 AM6/14/21
to Santhavasantham, housto...@googlegroups.com, sivamani K, George Hart
For representative, typical species in zoology, we see the scientific names repeated twice:
Axis Axis deer (puLLi mAn), ...
https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals
அதுபோன்ற நூற்பா இது: தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து,
புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய'  (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே.

பின்னர், இருபாலுக்கும் பொதுவான பெயர் கொண்ட நவ்வி (chinkara), உழை (spotted deer) இரண்டுமே புல்வாய்
என்பதாகவும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். அதாவது, இங்கே முன்னர் சொன்ன ராஜமரை (representative antelope) ஆகிய இரலை, ராஜமான் (representative deer) ஆகிய கடமான் இரண்டையும் விட்டுவிட்டு நவ்வி மரை + புள்ளிமான் இரண்டும் புல்வாய் என்கிறார். இது பேராசிரியர் உரையால் தெரிகிறது.
”தொல்காப்பிய மரபியலில்,
   “யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
       ஓடும் புல்வாய் உளப்பட மறியே”
என்று வரும் சூத்திரத்திற்கு (தொல்-மரபு-12) உரை கூறும் பேராசிரியர் ’நவ்வியும் உழையும் புல்வாயும் அடங்குமன்றே. அவற்றை மூன்றாக ஓதியதேன்’ என்று தாமே கேள்வி கேட்டு விடை கூறுவது போலப் புல்வாயில் மடனுடைய நவ்வி யெனவும், இடைநிகரன உழை எனவும் கொள்க என்று எழுதுகிறார்.” (பி. எல். சாமி).

இரண்டு சூத்திரங்களாலும் புல்வாய் என்பது பொதுப்பெயர் எனத் தெரிகிறது. சில இடங்களில் சிறப்புப் பெயராக இரலைக்கும் வரும். கலை என்பது கருமை நிறம்பற்றின பெயர். இது கடமானுக்கும், இரலைக்கும் வரும். மரை என்பது Antelopes, this name is due to fixity of horns screwed in to the skull for Life, a defining feature of antelopes. ஆனால், உள்துளை உள்ள "அறுகோடு" (deer's antlers) ஆண்டுதோறும் விழுந்து முளைப்பவை. கவைகள் (branches) கொண்டவை. கலைமான் என்னும் கடமானுக்கும், புள்ளி மானுக்கும் உள்ள கவைக்கொம்பு அறுகோடு (வினைத்தொகை)  ஒப்புமையால், கலை என்னும் கடமாவின் பெயர் புள்ளிமானுக்கும் வரும். சங்க நூல்களில் கலைக்கு முன்னே புகர் (அ) புள்ளி என இருந்தால் Axis deer (புள்ளிமான்). புள்ளிமா கருமை இல்லையே, ஏன் கலை என்றனர் என்ற கேள்வி எழலாம்: எண்ணெய் (எள் தானிய நெய்) மற்றவற்றிற்கும் எண்ணெய் (Oil) ஆவது போல. கலை கருமையால் இரலைக்கும், கடமாவிற்கும் முதலில் உருவாகி, புள்ளிக்கலை என்று பொருள்விரிந்தது. அராகம் என்று மனத்தைப் பண்படுத்தும் பண் சிவப்பு நிறத்தால் ஏற்பட்டு, மற்ற எல்லா நிறங்களுக்கான பண்களுக்கு பொதுப்பெயர் ஆக இசையில் ராகம் என்று ஆனாற்போல எனக் கொள்க (Cf. Raagamaala paintings).

சுந்தரர் தேவாரம்:
----------------------
தமிழிலே மூன்று அன்றில் பறவைச் சாதிகளுக்கும் உள்ள பெயரை விளக்கினேன்:
https://groups.google.com/g/houstontamil/c/_4FfKRzq0ww/m/Lrp1CwW-AQAJ
அப்போது (WA group), சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் இரண்டைக் குறிப்பிட்டேன்,

சுந்தரர்: (clearly, distinction between deer "maa/maan" vs. antelopes "marai" is made)

மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே

மற்ற அடிகளின் எதுகையை நோக்கினால், முதல் அடி “மாவும்” எனத் தொடங்க வேண்டும் எனத் தெரிகிறது.
ஆ/ஆன், மா/மான் என்பதாக மாவும் = மான்களும் என்ற பொருளில் இருந்த பாட்டில், காலப்போக்கில்
ஏடுபெயர்த்தோர் மாவும் என்பதை “மானும்” எனத் திருத்திவிட்டார்கள். கவரிமா (குறள்) கவரிமான் ஆகிறது.

'கடமா தொலைச்சிய கானுறை வேங்கை' - சங்கம். கடமா = கடமான், Sambur deer.
கீழ்வரும் அதே பதிகப் பாடலில் “மானும் மரை இனமும்” வருகிறது. எதுகை சரியாக இருக்கிறது.
ஆனால், மேலே கொடுத்துள்ள பாடல் "மாவும் மரை இனமும்" எனத் தொடங்க வேண்டும்.
மாவும் = மானும் எனப் பொருள். எனவே, மாவும் என்பதை மானும் என்று திருத்தத் தேவையே இல்லை.

ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே

NG

N. Ganesan

unread,
Jun 14, 2021, 8:13:54 AM6/14/21
to Santhavasantham, housto...@googlegroups.com, sivamani K, George Hart
Dr. Ashraf wrote:
'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்).

இதன் நேரடிப்பொருள் இரலை கலை என்ற பெயர்களும் புல்வாய்க்கு உரியவை என்று வரவேண்டும். ஆனால், தொல்காப்பியத்தில் இதற்கு முன்னும் பின்னும் வரும் சூத்திரங்களைப் பார்த்தால், இவை இரண்டும் புல்வாயின் ஆண் வர்க்கத்திற்கானவை என்று தெரிகிறது.

Translator Murugan renders this as "Iralai and Kalai are the masculine forms of the antelope".

In fact all the preceding and succeeding sutras only talk about males of sharks, males of cow, buffalo, males of aquatic animals, males of deer, males of langur etc.

The very next sutra says 'kalai' is also the name for the male deer (உழை), so also that of the langur (முசு).

So, it is all over the place. Total confusion. Just like the word போத்து which is used for the males of many species, including peackock and vulture.

N. Ganesan

unread,
Jun 15, 2021, 10:18:32 AM6/15/21
to Santhavasantham, housto...@googlegroups.com, sivamani K, George Hart, Ashraf N.V.K., V Murugan
பல விலங்குகளில் - சுறாமீன் உட்பட - கலை என்னும் ஆண்விலங்கு பற்றிய பதிவு,
http://nganesan.blogspot.com/2011/10/akananuru-241.html
எழுதிய என் பெயரே இல்லாமல், யாரோ ஒருவர் இங்கே காப்பி போட்டுள்ளார்:
http://araathuhistory.blogspot.com/2011/12/blog-post.html

இதேபோல, என் கட்டுரைகள் பல பிஎச்டி தீஸிஸ்களில் கூட தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ளன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 16, 2021, 8:52:13 PM6/16/21
to vallamai, housto...@googlegroups.com
SK wrote:> 'நவ்வி' விளக்கம் 🤔
நானும் முதலில் நாவுதல் என்ற வினையில் இருந்துதான் நவ்வி எனும் பெயர் தோன்றுவதாகக் கருதினேன். But time to revise that idea. நவ்வி என்ற சொல் வரும் சங்க நூல்களின் வருணனைகளும், இந்தியாவில் உள்ள புல்வாய் இனங்களையும் பார்த்தால், பி. எல். சாமி குறிப்பிடுவது போல, நவ்வி = chinkara antelope என்ற தெளிவு கிடைக்கிறது. அப்பொழுது, நூவு- >> நுவ்வி >> நவ்வி என்பது பொருத்தம்.

நேமு-/நேம்பு- >> நாவு- >> நவ்வி என்ற விளக்கத்தை கைவிட்டு விடலாம். http://mymintamil.blogspot.com/2017/10/Etymology-of-the-word-NEMI-by-N-Ganesan.html

நா. கணேசன்


சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com
.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd4sNfsWqpJ5DAPt%3Dp4Y3EgS2M1niQPVT2HUSTcpfpoeg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/8wtqfTSFN0U/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/240d27f6-4702-4ad9-a39d-a28c74104a6an%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages