Fwd: [MinTamil] பாண்டிச்சேரி 'புதுச்சேரி' என மாறியது (அக்.1- 2006)*

50 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 1, 2017, 10:53:49 AM10/1/17
to housto...@googlegroups.com, vallamai, panb...@googlegroups.com

On Sunday, October 1, 2017 at 12:34:45 AM UTC-7, singanenjan wrote:
u எனும் எழுத்து , எழுதும வேகத்தில்  n  என எழுதப் பட்டதால் புதுச்சேரி , பாண்டிச்சேரி யாக மாறியதாக நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.


ஆமாம். ou என்று உகரத்தை பிரெஞ்சு மொழியில் எழுதுகின்றனர். கிறிஸ்தவ மிஷனரிகள் புதுச்சேரி பகுதியில் மக்கள் வழக்காக,
உங்கள் பாஷையின் பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். மக்கள் “தமுள்” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே, இன்றளவும்
பிரெஞ்சு பாஷையில் தமிழின் பெயராக உள்ளது.

ரோமானிய லிபியில் தமுள் = Tamoul என்று எழுதுகிறார்கள். https://fr.wikipedia.org/wiki/Tamoul  (ப்ரெஞ்சு விக்கி).
அதுபோலத்தான், புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் Pouducherry ஆக்கிவிட்டனர்.
குழப்பமாக இருந்ததால் இந்த ஸ்பெல்லிங்கில் u-வை n-என மாற்றி பாண்டிச்சேரி ஆக்கினர் தமுளர்.

நா. கணேசன்
 

2017-10-01 11:40 GMT+05:30 Lakshmanan Krishnan <p...@giasmd01.vsnl.net.in>:
பிரஞ்சுக்காரர்களால் சரியாக பலுக்கமுடியவில்லை என்பது சரியில்லை. அதன் பழைய பிரஞ்சு எழுத்துக்கூட்டு pouduceri. இதில் மூன்றாவது எழுத்து, கையெழுத்து வேகத்தில்  n ஆகத்திரிந்தது. Ponduceri-Pondiceri-Pondichery ஆனது

ஆக ஓரெழுத்து மாற்றம் இப்படியானது.

இராம.கி

Sent from my iPhone
💢 *இந்த நாளில் அன்று* 💢

*பாண்டிச்சேரி 'புதுச்சேரி' என மாறியது (அக்.1- 2006)*

புதுச்சேரி சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், மத்திய அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது. முன்பு இந்த நகரம் பிரெஞ்சு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. 

புதுச்சேரி, ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

அதனால் இங்குள்ள அடித்தட்டு மக்களும் பிரெஞ்சுச் சொற்களை, மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகின்றனர். 

ஆந்திர மாநிலத்தின், காக்கி நாடாவுக்கு அருகாமையில் உள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகில் உள்ள மாஹே நகரும், இந்த மாநிலத்தின் ஆட்சிப் பகுதிகளாக விளங்குகின்றன. 

ஆகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையினராக இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

பாண்டிச்சேரிக்கு முன்பு புதுச்சேரி என்றுதான் பெயர் இருந்தது. பிரெஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியை தங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்து 130 வருடங்கள் ஆண்டனர். 

பிரெஞ்சு மொழியில் புதுச்சேரி என்பதை அவர்களால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. எனவே அவர்கள் பாண்டிச்சேரி என்று மாற்றி உச்சரித்தனர். 

பின்னர் அது பாண்டிச்சேரி என்றே முழுமையாக மாறி விட்டது. அலுவல் நடைமுறையிலும் பாண்டிச்சேரி என்றாகி விட்டது.

பாண்டிச்சேரியை புதுச்சேரி என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ் அமைப்புகள் போராடி வந்தன. சட்டசபையிலும் கூட தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மெட்ராஸ் சென்னை எனவும், பம்பாய் மும்பை எனவும், கல்கத்தா கொல்கத்தா எனவும் சமீபத்தில் பெங்களூர் பெங்களூரு எனவும் பெயர் மாற்றப்பட்டன. 

இந்த பெயர் மாற்றத்தை அந்தந்த மாநில அரசுகளே சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வந்து மாற்றி கொண்டன. 

ஆனால் பாண்டிச்சேரி மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள னினியன் பிரதேசம் என்பதால் சட்டசபையில் மசோதா கொண்டு வந்து பெயர் மாற்ற முடியாது. 

இதற்கு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது.

பாராளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டு பாண்டிச்சேரி புதுச்சேரி என மாற்றப்பட்டது.

News24

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

R. Radhakrishnan

unread,
Oct 1, 2017, 8:50:30 PM10/1/17
to housto...@googlegroups.com
மாநிலத்தின் பெயரையும் மத்தியர் ஏற்றாலே மாற்ற முடியும்.

You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.

N. Ganesan

unread,
Oct 2, 2017, 9:45:10 PM10/2/17
to housto...@googlegroups.com
2017-09-30 22:17 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
💢 *இந்த நாளில் அன்று* 💢

*பாண்டிச்சேரி 'புதுச்சேரி' என மாறியது (அக்.1- 2006)*



THE PONDICHERRY (ALTERATION OF NAME) ACT, 2006 ACT NO. 44 OF 2006 [13th September, 2006.] An Act to alter the name of the Union territory of Pondicherry.

NG
Reply all
Reply to author
Forward
0 new messages