இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:
ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.
சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).
Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).
Thanking you.--With best regards,
Yuvaraj A,Mob. No.: +91 9786 07 17 27.
On Tuesday, April 19, 2016 at 12:46:24 AM UTC-7, Yuvaraj Amirthapandian wrote:இரட்டைக் கயல் பாண்டிய நாணயம்:
ஒரு குழுமத்தில் ஒருவர் பகிர்ந்திருந்த பாண்டிய இலச்சினையான இரட்டை கயல் பொறிக்கப்பட்டுள்ள
நாணயம். இரட்டை கெண்டை, கெளுத்தி மீன்கள் இருப்பது வழக்கு. ஆனால், இந்த கயல்கள் டால்பின் மீனினம் போலுள்ளதே!டால்பின் போல் கூரிய மூக்கு, புடைத்த நெற்றி, நீள் உடல், துடுப்பு மட்டும் மாறாக இரு இணைகள் உள்ளன.
சற்று விளக்குக: Rajasubramanian Sundaram Muthiah (தென்காசி சுப்பிரமணியன்).
Ref: Sivagnanam Balasubramani (Orissa Balu).
அன்பின் யுவராஜ்நீங்கள் கொடுத்துள்ள காசில் இணைகயல் என்பதை விட இணைமகரம் என்பது மேலும் பொருந்தும். சங்க இலக்கியத்தில்மகரம் என்பதற்கு உரைகாரர்கள் சுறா மீனைச் சொல்வர் (உ-ம்: கலித்தொகை).

அன்பின் யுவராஜ், தென்காசி சுப்பிரமணியன்
நீங்கள் கொடுத்திருக்கும் காசு மங்களூரை ஆண்ட ஆளுப (ஆளுவர்) அரசர்களது காசாகும். https://en.wikipedia.org/wiki/Alupa_dynasty
ஆளுபர்கள் பாண்டியர் அம்சம் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். கி.பி. 550லிருந்து 1400 வரை துளுநாட்டில் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள்.
எல்லா மன்னர்கள் (dynasty) அச்சிட்ட காசுகளிலும் ‘மகரம்’ என்னும் முதலை உண்டு. மகரம் என்பது கடியால் முதலை என்னும் செய்தி மறைய, மறைய சுறாமீனாகவும் மகரத்தை வடிக்கலாயினர். பல நூற்றாண்டாகக், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மகரம் இந்தியாவின் மேற்குக் கடற்கரை, பாகிஸ்தானம் எல்லாவற்றிலும் அழிந்துவிட்டது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Saltwater_crocodile
எனவே, மகரத்தை சுறாமீனாக வடிக்கலாயினர். மகரம் என்பதற்கு சுறாமீன் என சங்கப் பாடல்களின் உரையாசிரியர் (உ-ம்: நச்சினார்க்கினியர், 14-ஆம் நூற்.) எழுதத் தொடங்கினர்.
கொங்குச் சேரன் வீரகேரளன் வெளியிட்ட காசில் ‘வீர கேரளஸ்ய’ என்னும் எழுத்துகளுக்கு நடுவில் முதலை (=மகரம்) வடிக்கப்பட்டுள்ளது (நாணயவியல், சென்னை ம்யூஸியம்). மௌரியரின் கார்ஷபணங்களில் மகரம் இருக்கிறது. தெலுங்கு சாசனங்களில் மன்னன் கையெழுத்திய்ய பின்னர் ‘வ்ராலு’ என இருக்கும். கையெழுத்து = ’வ்ராலு’. அதற்குப் பின்னர் மகரம்:
(சி. சிவராமமூர்த்தி, Indian Epigraphy and South Indian Scripts.)
சிங்கநாயனிவ்ராலு எனக் கையெழுத்து, தொடர்ந்து மகரம்.

திருமணங்களில் ஓதப்படும் மந்திரம் மன்னர்களின் பட்டாபிஷேகத்தின் போது ஓதப்படும் மந்திரம் தான்.
சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்
http://www.vallamai.com/?p=49442
ஆளுபர்கள் (ஆளுவர்கள்) வமிச அரசர்கள் காசுகளில் சுறாமீனாக வெளியிட்ட காசு. ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜெயம்” என எழுதியிருக்கிறது. தாமரை மலரின் மேல் இணைமகரம் (சுறாமீன்). ஒருபுறம் குத்துவிளக்கும், இன்னொருபுறம் செண்டு என்னும் பாண்டியர் சின்னம், இது தெரியாமல், இரண்டு குத்துவிளக்குகள் எனப் பலரும் இந்தக் காசைப் பற்றி எழுதியிருப்பர்: http://coinsoftheworld-mckalra.blogspot.com/2012_09_01_archive.html

இங்கே, இணைமகரம் (Compare the depiction with Sharks in the seas)

http://tulu-research.blogspot.com/
The Alupas: Coinage and History by Govindraya Prabhu S and Nithyananda Pai, M. (2006). Published by Govindraya Prabhu, Sanoor, Karkala, Udupi District. http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=942
ஆளுவராசா கல்வெட்டு – 650 AD
பாண்டியர் சின்னம் இணைகயல் மீன்கள் தாம். கயல் = Carp fish.
உத்தம சோழன் காசு: பாண்டியனின் இணைகயல் பொறிக்கப்பட்டுளது

ஆளுவ ராசா காசுகள்: இணைமகரம் (சுறாமீன் = Rhincodon typus)
யுவராஜ் கேட்ட கேள்விக்கு இந்த இணை மகரம் துளுவநாட்டு ஆளுவராசாக்கள் (பாண்டியர்
வழியினர்) என்ன என ஆராயலாம். ’ஸ்ரீ பாண்டிய தனஞ்ஜயம்’ என்று குறிப்பிடும் ஆளுபர்கள்
இணை மகரம் எனக் கடலில்
உள்ள மிகப் பெரிய சுறா மீனைத் தங்கள் காசுகளில் பொறித்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த
5 -15ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா ஒரு மிகப் பெரிய கடல் வாணிக சக்தியாக விளங்கியது
என்பது வரலாறு.
https://en.wikipedia.org/wiki/Whale_shark
http://www.treehugger.com/clean-technology/scientists-use-laser-rulers-measure-whale-sharks.html

உடலில் புள்ளிகளையும், வரிகளையும் கொண்ட பெருஞ்சுறா (Whale Shark)

பாண்டியர்கள் மீன் (கயல்), சுறா (மகரம்), கடியால் (மகரம்) – மூன்று கடலுயிரிகளையும் தங்கள் குலச் சின்னமாக சங்க காலத்தில் இருந்து கடைசியாய் தென்காசி வரை பயன்படுத்தி உள்ளனர்.
ALUPPAS-DY-SRIPANDIYA-DHANANJAYA-KULASEKARA-III-COPPER-COIN-10.64g
இணை மகரம் (Pair of Whale Sharks - Alupa coin)
https://en.wikipedia.org/wiki/Whale_shark
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.