On Sunday, October 26, 2014 11:15:40 PM UTC-7, தேமொழி wrote:
///
சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு.
///
கைதை என்பதற்கும் கேதகி என்பதற்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தோன்றுகிறது...
ஆம். கைதை என்பது அடிப்படையில் நீர்ப்பாங்கான சதுப்பு நிலம், வயல் (பிங்கலந்தை).
மணல் மேட்டுகளில் இன்னும் ஏராளமாக வளர்வது. பாலன், பாலகன் என்று
கப்பிரத்யம் பெறுவது போல, கைதை (சதுப்புநிலம்) வளரும் தாழை கைதகை என்று
அழைக்கப்படுகிறது. கைதை என்றால் சதுப்பில் வளரும் ஒரு மரத்துக்கும் பேருண்டு.
கைதகைக்கு என்ன மூலம் என்று பார்த்து கேதகை என்றும் ஒரு பெயர் ஏற்பட்டுள்ளது.
கேதகைமுனிவார் வெங்கைவாணர் (வெங்கைக் கோ. 319). தாழம்பூ
பற்றி லிங்கோற்பவ புராணத்தில் சைவக்கதை ஒன்றுண்டு. அதனால் தாழை மலர்
சிவனுக்கு ஆகாது என்ப. முதலில் - தேவார காலத்தில் - ஆத்தி சிவன் திருமேனியில்
இல்லை (தீர்த்தங்கரருக்கு மலர் அது), பின்னால் சோழன் குலப்பூ ஆனதால் ஏறியிருக்கிறது
என ஓம்சக்தி 2014 தீபாவளி மலர், ஜெர்மனி ஹம்நகர தமிழ்மாநாடு கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன் -
அதுபோல, இன்றும் தாழை சிவனுக்கு இல்லை. இனி மாறலாம்.
நீண்ட கால நண்பர் சிங்கை கிருஷ்ணன் ஐயா இவ்விழையை வளர்த்தெடுக்க முன்வந்திருப்பது
மக்ழிச்சி. முன்பொருமுறை ஆண் பனை (ஏற்றை), பெண் பனை (பெண்ணை) பற்றி
எழுதியபோது பாரிஸ் தமிழறிஞர் ஃழான் தாழையிலும் பால்பாகுபாடு இருப்பது பற்றியும்,
அதைப் பற்றி எழுதுக என்றும் இங்கே கூறினார். அப்போதே எழுத நினைத்தேன். இன்னும் செய்யலை.
எப்போதும் பார்ப்பது: அனந்தராமையரின் அருமையான கலித்தொகைப் பதிப்பு.
தாழை பற்றி அங்கே பார்க்கவும். டிவிஏ-வில் உண்டு. யாராகிலும் தரலாம்.
தாழை இருக்கா-னு அரிசோனன் கேட்கிறார். நிறை இருக்கு.
ஹுட்ஹுட் பறவை தமிழில் (1) கொண்டைலாத்தி (2) எழுத்தாணிக்குருவி என்றும்,
க்ரௌஞ்சம் (1) < கரிஞசம் (2) அன்றில் என்றும் அதன் வண்ணத்தால் இரு பெயர்கள்
பெற்று தமிழில் வழங்குவது போல,
ஸ்க்ருபைன் (1) தாழை (2) கைதை (> கேதகை) என்னும் பெயர்களால் தமிழில்
வழங்கிவருகிறது.
சிங்கை கிருஷ்ணன் ஐயா சொன்ன நாடோடிமன்னன் பாட்டு மாத்திரம் தனியாக
யுட்யூபில் இருக்கிறதா? எந்த மணி, நிமிஷம் முழுப்பட யுட்யூபில் வருகிறது? - என சொல்லமுடியுமா?
மலையாளிகளுக்கு தாழை இன்றும் கைதை தான்.
பிற பின்!
நா. கணேசன்
.............................................................................
கைதைப் பூ.இந்தப் பூ வைத் தாழம் பூ என்றும் அழைப்பர் .
தாழை மலர் தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று தாழந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.
கைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.
சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை , கைதை ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன. ............................................................................................
..... தேமொழி
On Sunday, October 26, 2014 10:45:41 PM UTC-7, tsparu2001 wrote:
மின்னல் கண்டு தாழை மலர்வதாகச் சொல்வதை கவிமரபு, என்று சொல்வதும் உண்டு. வைரமுத்து, 'மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்' (பாடல்: வெள்ளி மலரே..படம்:ஜோடி), என்றும், விவேகா "மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட" (பாடல்: இப்பவே இப்பவே..படம்: ராமன் தேடிய சீதை (சேரன் நடித்தது) என்றும் எழுதியிருக்கிறார்கள்.
திருத்தொண்டர் திருவந்தாதியில், நம்பியாண்டார் நம்பி, " கொண்டல் கொண்டேறிய மின்னுக்குக் கோல மடல்கடொறும் கண்டல்வெண் சோறளிக்குங்கடற் காழி" என்று சீர்காழியைக் குறிக்கிறார். கவி காளிதாசனும் இந்த உவமையை மேகதூதத்தில் கையாண்டிருக்கிறார்.
சம்ஸ்கிருதத்தில் கேதகி என்பர் இதை. கேது என்பது மின்னலையும் குறிப்பதாகச் சொல்வதாலேயே தாழைக்கு இந்தப் பெயர் வந்தது என்னும் கூற்று உண்டு. மதுரை ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் பிரசித்தி பெற்றது. அர்ச்சனைக்கு இதை உபயோகப்படுத்துவது வழக்கம்.
வரலக்ஷ்மி விரத பூஜையில் தாழை மலர் கண்டிப்பாக இடம் பெறும். பூஜை நிறைந்த பின், மறு நாள் மாலை, பூஜையில் வைத்த தாழை மலரைக் கொண்டு எங்களுக்கு ஜடை பின்னுவார்கள். பொட்டி ஜடை (தாழை மடல்களை உட்புறமாக மடக்கி வைத்து ஜடையில் தைப்பது), கத்தி ஜடை (மடல்கள் வெளிப்புறமாக நீட்டிக் கொண்டிருக்குமாறு வைத்துத் தைப்பது) என்று ஜடையில் இருவகைகள் உண்டு. அம்மன் அலங்காரத்தின் போதும் இம்மாதிரி சவுரி முடியில் தைத்து கலசத்தின் பின்புறம் வைத்து அலங்கரிப்பது வழக்கம்.
இந்தப் படத்தில் செயற்கை பூக்களால் செய்யப்பட்டிருப்பதைப் போல், தாழம்பூ ஜடையாலும் செய்யலாம்.
படம் உபயம் கூகுளார்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.