வாழ்த்துக்கள் எனும் சொல்லை கள்ளுடன் நீங்கள் இணைப்பது வியப்பளிக்கிறது. இது சரியா என தமிழறிஞர்கள் விளக்கவேண்டும்.
அற்புதமான கவித்தலைப்பில் விவேக் பின்னி விட்டார். அடேயப்பா!எவ்வளவு கருத்துக்கள் உள்ளே பொதிந்திருந்தன!.. வாழ்த்துக்கள் விவேக்!
வாழ்த்துக்கள் எனும் சொல்லை கள்ளுடன் நீங்கள் இணைப்பது வியப்பளிக்கிறது. இது சரியா என தமிழறிஞர்கள் விளக்கவேண்டும்.

| ‘கல்வி கரை இல, கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல’ |
--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.
For more options, visit https://groups.google.com/d/optout.
நண்பர்களே,வாழ்த்துக்கள்? வாழ்த்துகள்? எது சரி.. இது பற்றி தேடிப் பெற்ற தகவலுடன் எனது தாழ்மையான கருத்தும்."வாழ்த்து" என்பதே போதும்.பால்பகா அஃறிணைப் பெயர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். 'வாழ்த்து'ம் அதில் சேரும். கீழ்க்கண்ட எடுத்துக்காட்டைப் பாருங்கள். (நன்றி: http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02114l1.htm)
‘கல்வி கரை இல, கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல’என்ற இச்செய்யுளில் கல்வி, நாள், பிணி என்னும் சொற்கள் ஒன்றன் பாலாக இருக்கின்றன. இவை முறையே இல, சில, பல என்னும் பன்மைப் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளன. இவை வழுவோ (குற்றமோ) என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இவை வழுவல்ல.அஃறிணைப் பெயர்களில் அது, பெரியது என்பன போல இறுதி எழுத்து ஒன்றன் பாலைக் குறிக்கவும். அவை, பெரியவை என்பன போல இறுதி எழுத்துப் பலவின்பாலைக் குறிக்கவும் அமைந்தது போல, கல்வி, நாள், பிணி என்னும் சொற்களில் அமையவில்லை. ஆகவே, இவற்றைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்று கூறுவர்.மாடு, காடு, மரம், செடி, கடல், மலை, பறவை போன்றன எல்லாம் பால்பகா அஃறிணைப் பெயர்களே ஆகும்.மேலும் விவரங்களுக்கு: https://ta.wikipedia.org/s/2jeyஎனவே, பிறந்தநாள் வாழ்த்து என்பதே சிறப்பு.மேற்கண்ட உதாரணத்தின்படி, நாள் என்ற சொல், ஒருமை, பன்மை இரண்டையும் குறிக்கும். அதனால், நாட்கள், நாள்கள் எது சரி என்ற வாதம் தேவையில்லை என்பது என் கருத்து.அனைவருக்கும் வாழ்த்து ☺ பல..நடராஜ கிருஷ்ணன்
1970-களின் நடுவில்; PUC முடித்துவிட்டு பொறியியல் முதலாம் ஆண்டு; ராஜகோபாலன் எனும் அய்யங்கார் நண்பன்; அதுவரையில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பற்றி அறிவேன் - ஆனால் இசையுடன் கேட்டதும் மயங்கியதும் இல்லை; (வேறொருவிதழில் இதைத் தொட்டுள்ளேன்)
நண்பனின் அப்பாவுக்கு cataract அறுவைசிகிச்சை; ஒரு பாட்டைச்சொல்லி எழுதித்தரச்சொன்னார்! “ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர்ப் பணைமுலை துணையா(ய்) பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்”
நான் புத்திசாலியல்லவா! நாட்கள் என எழுதி படித்துக்காட்டினேன்! குட்டும் வாங்கினேன்! (உண்மையில்! ஓங்கி ஒரு குட்டு வைத்தார்!) கள் எனும் விகுதிக்கும் கள் எனும் பெயர்ச்சொல்லுக்கும் வேற்றுமை புரிந்தது!
|
regards
rnkantan
On Monday, April 10, 2017 at 7:31:58 PM UTC+5:30, N. Ganesan wrote:
மகாவீர ஜெயந்தி வாழ்த்துகள் என எழுதுதல் வேண்டும்.மகாவீரர் ஆகிய திருமூர்த்தி ஆழ்வாரும், அவரைத் தொழுத திருவள்ளுவர், திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள், கொங்குவேளிர், பவணந்தி முனிவர், தோலாமொழித்தேவர், .... போன்றோருக்கு
வாழ்த்துகள் தெரிவிக்கலாம், வாழ்த்துக்கள் அக் கடவுளர்கள் விரும்பமாட்டார்கள் அல்லவா?
ஊற்றும்போது பொங்கலிடும் வாழ்த்துக்கள் - Champagne pyramid