தமிழே தோற்றுவாய் மொழி. தமிழே மொழிகளின் தாய் !

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
May 29, 2025, 6:25:49 AMMay 29
to vallamai
Linguistics மிகப் பழைய அறிவியல் துறை. திருப்பூர்க்காரர் கவிஞர்
மகுடேசுவரன் எழுதியவாறா பண்ணு (> ஹண்ணு) எனக் கன்னடத்தில் ஆனது?

நா. கணேசன்

----------------
தமிழே தோற்றுவாய் மொழி. தமிழே மொழிகளின் தாய் !
- கவிஞர் மகுடேசுவரன்

ஊடக நண்பர்களின் அழைப்புகள் சில வந்திருந்தன. நான் வெளியே இருந்தமையால்
எடுக்கவில்லை. என்னவாக இருக்கும் என்று பார்த்தால் தமிழிலிருந்துதான்
கன்னடம் தோன்றியது என்று கமல்ஹாசன் கூறியதற்கு எழுந்த எதிர்ப்புகட்கு என்
தரப்பினைப் பெற முயன்றிருப்பார்கள் என விளங்கியது.
மொழியியலில் தொன்மையை நோக்கிச் செல்கையில்தான் தமிழின் அருமையும்
பழைமையும் விளங்கும். தமிழிலிருந்துதான் தென்மொழிகள் யாவும் தோன்றின.
தமிழும் வடமொழியும், தமிழும் இணைப்புறாத வட்டார வழக்கும் என இணைந்து
இணைந்து தோன்றியவைதாம் பிற.
ஒரு நிலத்தில் வழங்கும் மொழிகளில் ஒன்றிலிருந்துதான் இன்னொன்று தோன்றுமே
தவிர, ஒன்றின் திரிபும் மருவலும்தான் இன்னொன்றாக நிலைக்குமே தவிர,
ஒவ்வொன்றும் தனித்தனி மொழியாகத் தோன்றாது. அனைத்திற்கும் தோற்றுவாயாக
விளங்கிய அம்மொழி முன்னைப் பழையதாக இருக்கும். அதுதான் தமிழ் !
மொழியிலிருந்து மொழி தோன்றியதற்கு நம் கண்முன்னே இருக்கும் தெளிவான
எடுத்துக்காட்டு மலையாளம்.
மொழியியலில் கருத்துகளை உருவாக்கிய கடந்த நூற்றாண்டு மொழியியலாளர்கள்
பொத்தாம் பொதுவாகக் கோடிழுத்திருக்கிறார்கள். அவர்கள் ஒப்பிட்ட
எம்மொழியையும் இலக்கணச் செம்மையோடு கற்றிருக்கவில்லை. மேலைநாட்டு
மொழியியல் பார்வைக் கூறுகளை அப்படியே இறக்குமதி செய்து ஆளாளுக்கு ஒரு
கோட்பாடு என்று வரையறுத்திருக்கிறார்கள்.
ஒப்பிடும் மொழிகளின் ஒவ்வொரு சொல் சொல்லாக அகழ்ந்து போகும்போதுதான் ஒரு
மொழியின் பழைமை விளங்கும். உலகப்பெருமொழிகளின் பட்டியலில் தலைமைப் பழையது
என்று கொள்ளத்தக்கது தமிழ். அதிலிருந்து மொழிகள் கிளைக்காமல்
வேறெதிலிருந்து கிளைக்குமாம் ? வரலாற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு மொழிதான்
வரையறைக்கும் அப்பாற்பட்ட சொல்வளம் கொண்டிருக்கும். பிற்கால மொழிகள்
என்று அறியப்படுபவை எப்படித் தாமாகத் தோன்றிய தனிமொழிகளாகும் ?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றின் தொன்மையான பத்தாயிரம்
சொற்களை எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு சொல்லும் இந்நான்கு மொழிகளில்
எத்தகைய வழக்காறுகளைக் கொண்டுள்ளது என்று ஆராயவேண்டும். இந்நான்கு
மொழிகளின் பலசொற்கள் சேர்ந்த சொற்றொடர் அமைப்புகளை ஆராயவேண்டும்.
உணர்ச்சிகட்கேற்ப இம்மொழிகளின் ஒலிப்புகள் எவ்வாறு இசையேற்கின்றன என்று
ஒப்பிடவேண்டும். அது நடக்கவேயில்லையே.
பழம் என்று ஒரு சொல்லை எடுத்துக்கொள்வோம்.
தமிழில் அது பழம்.
மலையாளத்திலும் பழம்.
கன்னடத்தில் ஹண்ணு
தெலுங்கில் பண்டு.
(கூகுள் உதவியோடு சொல் சொல்லாக இட்டு ஒலித்துப் பெற்றது.)
இச்சொல் நால்வகை வழக்கிற்கு எப்படி மாறுகிறது ?
தமிழில் பழம், அது அப்படியே மலையாளத்தில் பழம்.
பழம் என்னும் இந்தப் பழைய சொல் எவ்வாறு திரிபடையும் ? அதற்குத் தமிழ்
இலக்கணம் காட்டும் வழி எது ?
பழம் => பழம்மு => பழமு => பழநு => பழ்நு =>பண்ணு
பழம் என்பதை வழக்காற்றில் பழம்மு எனலாம். ஆனால் ம் நிற்காது. அது பழமு ஆகும்.
மெல்லினங்கள் தமக்குள் இனவொலிப்புக்கு ஆட்படும். மகரம் நகரம் ஆகும். பழமு => பழநு
வழக்காற்றில் பழநு => பழ்நு ஆக வழுக்கும்.
குறிலை அடுத்து ஒரு சொல்லின் இரண்டாம் எழுத்தாக ழ் தோன்றாது.
பழ்நு => பண்ணு ஆகும்.
(தமிழ்நாடு தமிணாடு ஆவது இம்முறையால்தான். ழ்+நா = ணா)
ழ்+நு = ணு
பழ்நு = பண்ணு ஆகிறது. அந்தப் பண்ணு ப=> ஹ பெற்று ஹண்ணு ஆகிறது.
கன்னடத்தில் தமிழ்ப் ப => ஹ ஆகிறது (பள்ளி-ஹள்ளி)
ண => ட ஆகிய இரண்டும் வல்லின மெல்லின இனத்து இணைகள்.
பண்ணு => தெலுங்கில் பண்டு ஆகிறது.
ஒரேயொரு சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கையில் தமிழ்
மொழியிலிருந்துதான் இன்னொரு மொழி தோன்றியது என்பது தெளிவாகிறது. இவ்வாறு
இம்மொழிகளின் பத்தாயிரம் சொற்களுக்குள்ளான ஒற்றுமைகளை என்னால் விளக்க
இயலும். இந்தப் பத்தாயிரம் சொற்களின் தோற்றுவாய்களைப் புறந்தள்ள முடியுமா
? தமிழுக்கு எதிரான தொன்மொழிக் கருத்துகளைப் பரப்பிய மொழியியலாளர்களின்
தமிழ் இலக்கணப் பேரறிவு மிகவும் இரங்கத்தக்க நிலையில் இருந்திருக்கிறது.
அப்படி இருந்தால்தான் அவரவர் மொழிக்கு ஏற்றவாறு சொல்லமுடியும். தமிழே
தோற்றுவாய் மொழி. தமிழே மொழிகளின் தாய் !
- கவிஞர் மகுடேசுவரன்
Reply all
Reply to author
Forward
0 new messages