///மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி./// Dr.Ganesan wrote 2days ago.
லி < > ளி free variation என்பதில் ஐயம் இல்லை.
ஆனால் பெரிய +எலி = பெருச்சாளி ஆக முடியாது.
பேச்சு வழக்கில் ' பெருசு ' என்ற சொல் வழக்கு உண்டு .
பெருசு + எலி = பெருச்சாளி ஆகாது.
என்னுடைய ஐயம்:
பேச்சு வழக்கில் பெரிதும் வழங்கும் ; பாட்டாளி, சீக்காளி , உழைப்பாளி, செலவாளி போன்ற சொல்லாக்கங்களை அடியொட்டி மக்கள் தம்மையறியாது ஆக்கிக் கொண்ட சொல் தான் ' பெருச்சாளி ' என்றாகியதோ?! என்பதே.
சக
பெருசு + எலி = பெருச்செலி >> பெருச்சாலி >> (due to free variation) பெருச்சாளி.
நீங்கள் கூறுவதுபோல, ஆள் என்று மனிதனைக் குறிப்பிடும் -ஆளி விகுதிகொண்ட
சொற்களுக்கு ஏற்ப, பேச்சுவழக்கில் பெருச்சாளி ஆகியிருக்கும்.
I agree with your suggestion that worlds like paaTTaaLi, ciikkaaLi, celavaaLi served as
a catalyst for the free-variation observed betwwen Malayalam and Tamil langauges.
------------------
யுஜ்- என்ற தாதுவேரைக் கொண்ட யோஜநா என்னும் சம்ஸ்கிருத வார்த்தையை
யோஜனை ( > யோசனை/ஓசனை) என்றாக்கிய தமிழ் இரண்டு விதமான
வினைச்சொற்களை உருவாக்குகிறது. (1) யோசித்தல்(/ஓசித்தல்) 'to think' மற்றும்
(2) யோசனித்தல்/ஓசனித்தல் 'to flap wings at the biginning of takeoff by birds".
Birds like Annam (BH geese) starting stretching the neck
and stiffening and flapping the wings to do a liftoff from water or grond. Once the
annam birds achieve steady state, the wings do not flap much at all and aerodynamic
eddy currents help Annam superbirds forming v-formation in the sky.
சீவக சிந்தாமணிப் பாடல் இல்லாமல் ஓசனித்தல் என்னும் வினையின்
அடிப்படைப் பொருளும், தாதுவேரும் விளங்குவதில்லை அல்லவா?
ஹம்மிங் சிட்டுகள் செய்வதே வேறு. ஓசனித்தல் (< யோஜநா) ஆரம்பத்தில்
மட்டுமே. அதைத்தான் சிந்தாமணி, சிலம்பு விளக்குகின்றன.
10+ ஆண்டுகளுக்கு முன் விளக்கியதை மீண்டும் எடுத்துத் தரவேண்டும்.
ஹம்மிங் என்ற சொல்லைத் தமிழில் அம் என்னும் ஒலிக்குறிப்பு எனப்
பிங்கலந்தை தருகிறது. அரவ/அலவ :: இலவு, அரத்தம் :: இரத்தம்,
அரங்கம் :: இலங்கை, ... என்றெல்லாம் ஆவது போல, ஹம்மிங் என்பதன்
அம் எனல் ஒலிக்குறிப்பு இம் எனல் என்றும் வரும். அம் இருந்திருக்கிறது
என்று காட்டும் தொடர்: அஞ்சிறை வண்டு/சுரும்பு, அஞ்சிறைப் பறவை.
இச் சங்க இலக்கியத் தொடரில் அம் என்றால் அழகிய என்று உரை
சொல்லி விடுவார்கள். ஆனால், பொருள் அதுவன்று என்று
இயற்கையை உன்னிப்பாக நோக்கினால் விளங்கிவிடும்.
அம் சிறை = ஹம்மிங் இறகு எனப் பொருள் கொள்ள வேண்டியதாகிறது.
ஹம்மிங் சிட்டுகள் எப்போதும் பறக்கையிலும், காற்றில் ஓரிடத்தில்
ஹோவர் செய்கையிலும் இறக்கைகளை வேகமாக ஹம்மிங்
செய்துகொண்டே இருக்கும். அதனால், பறவைகளுக்கும், வண்டினத்துக்கும்
இடைப்பட்டது ஹம்மிங் சிட்டுகள் என்பர் பறவையியலார்.
எனவே, அம் என எப்பொழுதும் இமிரும் (< சிமிர்தல்) சிட்டுகள் ஹம்மிங் பர்ட்ஸ் ஆதலின்
அஞ்சிறைச்சிட்டு அல்லது
அம்முச்சிட்டு என அழைப்பது
ஹம்மிங்பறவையின் ஹம்மிங்கின் முக்கியத்துவத்தை தமிழ்ப்பெயரில் தரும்.
விநாடிக்கு 80 முறை (அதாவது, நிமிடத்திற்கு (< நிமைத்தல்) 4800 தடவை)
அஞ்சிறைச்சிட்டின் றெக்கைகள் துடிக்கும். இச் சிறிய சிட்டு அதற்காகவே
ஹோவர் ஆகிப் பூக்களின் மதுவை அடிக்கடி உண்ணும்.
மேலும் எழுதுகிறேன், உங்கள் வினாவிற்கு:
மலையாளத்தில் பெரிச்சாலி என்றுள்ளது தமிழில் பெருச்சாளி ஆகிறது.
ஹம்மிங் என்பதற்கும், ஓசனித்தல் என்பதற்கும் சீவக சிந்தாமணியும்,
சிலப்பதிகாரமும் ஒப்பீடு தேவை இருக்கிறது. ஒப்பீடுகள் இல்லாமல்
சங்க கால சமய, சமூக வரலாற்றை அறிய முடியாது. தொல்லியல்
ஒப்பீட்டால் உலக இலக்கியங்களை - கிரேக்கம், சீனம், எகிப்திய,
வடமொழி, சங்க காலப் படைப்புகளை - நாம் புரிந்துகொள்ள இயலாது.
சங்க இலக்கியத்தில் ஜாதி பற்றி அறிய சம கால இந்திய இலக்கியங்கள்
வெகுதுணை செய்ய வல்லவை. தமிழ்ப் பேராசிரியர்கள் செய்கின்றனர்.
வடக்கே இருந்து வரும் வேளிர் நா கரிகம் பற்றி மரபணு ஆராய்ச்சிகள்
புதிய அறிவியலை வெளிக்கொண்டு வருகிறது.
ஓசனித்தல் என்ற இளங்கோ அடிகள் பிரயோகம் பற்றி அறிய
திருத்தக்க தேவர் உதவுகிறார். மரபணு விஞ்ஞானத்திற்கு
வேத இலக்கியம், சங்க இலக்கியம் மிக உதவுகிறது.
“மழுவாள் நெடியோன்” ஆராய்ச்சி அவ்வகையின்பாற்படும்.
NG
On Monday, September 9, 2019 at 11:26:14 PM UTC-5, kanmanitamilskc wrote:
' பெருச்சாலி ' என்ற பெயர்த் தோற்ற முறை ?
பெருசு + எலி ???
சக
I wrote some days ago:
மலையாளத்தில் பெரிச்சாலி எனப் பெருக்கானைப் பறைவர்.
பெரிச்ச + எலி >>> பெரிச்சாலி. எனவே பெருச்சாளி, நீங்கள் குறிப்பிடும
free variation எனலாகும்: பெரிச்சாலி >>> பெருச்சாளி.
Thanks for the links and photos. Note that shrew is not a muridae family member but a soricidae member.
rnk