புள்ளாங்குழல்

44 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 14, 2018, 2:49:50 AM9/14/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

2018-09-13 10:16 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
> தமிழ் மொழியியல்பின்படி 'ல்ல்' >>>'ள்ள் ' என்ற மாற்றம் கட்டற்றது (free variation)
> சான்று :மெல்ல <<<>>>மெள்ள 
> அதனால் புல்லாங்குழல் <<<>>>புள்ளாங்குழல் என்ற மாற்றம் கட்டற்று நிகழ வாய்ப்புண்டு.
> கண்மணி   

இது பற்றிப் பல காலம் யோசித்திருக்கிறேன். புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.

மாட்டுக்கு மருந்து ஊற்றும் குழல் கூட மூங்கிலில் செய்வதுதான்.  
துளையில்லாத இதுவும் புல்லாங்குழல் தான். புல் என்பது மூங்கில் என எத்தனைபேர் அறிவார்?
துளையே இல்லாமல் இருந்தால் அது கொம்பு வாத்தியம்.

மேலும், புள்ளாங்குழலில் உள்ள துளைகள் தானே அதன் இனிய இசைக்கு அடிப்படைக்காரணம்.

பாரதி புள்ளாங்குழல் என்றே எழுதுகிறார்:
இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி. ”

வை. மு. கோ: வில்லிபாரத உரையில்,
வேய்ங்குழல் : புள்ளாங்குழல்

மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, தனிப்பாடற்றிரட்டு உரை, 1914
புள்ளாங்குழல் என்றே எழுதிச் செல்கிறார்.

திருமந்திரம், மாவை விசுவநாதபிள்ளை, 1912.
புள்ளாங்குழல் தான். 

(1) புள்ளாங்குழல்/புல்லாங்குழல், (2) தெள்ளவாரி/தெல்லவாரி (கம்பன்
பயன்படுத்தும் வார்த்தை. கன்னடத்தில் உள்ளதை வை.மு.கோ. காட்டியிருப்பதை ஹரிகிருஷ்ணன்
சொன்னார்), (3) அள்ளைக்கை/அல்லக்கை .... ஆவதுபோல்,

அள்ளைக்கை > அல்லக்கை. கொங்குநாட்டில் அள்ளைக்கை. இப்போது சினிமாவில் அல்லக்கை.
புள்ளாங்குழல் > புல்லாங்குழல். புள்ளி, புள்ளு (புட்டு/பொட்டு. புள்-பொள்- வினை) பொருந்துகிறது.

பொள்ளாமணி > பொல்லாமணி (திருவாசகம்) ஆதற்போல்,
புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.

ஸ்ரீவெளி என்பது சீவேளி. வெளியுலா யானை மீது ஆரோகணித்துத் திடம்பு தந்திரிகள் எடுத்து
அம்பலத்தைச் சுற்றிவருதல். கேரளா குருவாயூர், திருச்செந்தூர்: சீவேளி > சீவேலி.

அள்ளை அயல் > அள்ளசல் > அல்லசல்.

-ள்- > -ல்- போல, -ண்- > -ன்- ஆதலும் உண்டு:
முணகு- > முனகு-;  அணங்கு-/அணுங்கு- > அனங்கு-/அனுங்கு- (கம்பன்).
இந்த spontaneous loss of retroflexiion தான் அனங்கன் (அணக்குபவன் - வருத்துவோன்)
என்ற காமவேளின் பெயர்க்காரணம் என்பார் டாக்டர் ஜி. யு. போப்.

நா. கணேசன்

புள்ளாங்குழல் ஆதியிசைக் கருவி. கோவலருக்கும் முல்லைத்திணைக் கண்ணனுக்கும் உகப்பானது.
புல்லாங்குழல் இசைப்புலவன் இரமணிக்கோர் கவிதாஞ்சலி.

வாழ்க புலவர்!

2018-09-12 7:06 GMT-07:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
தொடுவதில் சுகந்தம்! தொட்டு 
    முகர்வதில்  வசந்தம்! மெட்டு 
படுத்துடன்  எழுந்தே  எட்டுப் 
    பக்கமும் வளைத்துப் போட்டு 
மடுத்தவாய்  முத்தம் பட்டு
   மயங்கியே  துளைகள் எட்டும்  
 விடுத்தநல் இசையைக் கேட்டு 
    விளைந்ததென்  னுளத்தின் பாட்டு!

அவர்விடும்  ஊதற்   காற்றின் 
    அவசத்தின்   முனகல்  கீதம்!
தவறிலா விரல்கள் தொட்ட 
     தளிர்ப்புப்புல்  லரிப்பே   நாதம்!
சுவரெலாம் எதிரொ  லிக்க
       சுழல்விரல்  பரதம்  போதம்!
அவரைஇன்   றிழந்த   வையம் 
        அழுகுரல்  சுருதி  பேதம்!

ரமணியா  போனார்? ஓசை 
     நடந்துடன்   போயிற்  றன்றோ?
நமதுளத்  தொலிய டங்கி 
       நள்ளென்ற இருளில்  ஏங்கி 
நமனுல  கதனில்  சேர்ந்து 
        நரகத்தில்  வீழ்ந்த தன்றோ?
இமயமாய்ப்  பதிவுக்  கோவை 
       இருப்பதால்  பிழைக்கின்   றோமே!

கலக்கத்துடன் , புலவர் இராமமூர்த்தி. 

On Wed, Sep 12, 2018 at 11:26 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
புல்லாங்குழல் மாலி:

On Friday, October 9, 2015 at 10:01:32 AM UTC-7, DEV RAJ wrote:
இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கர்நாடக இசையுலகில் கோல்லோச்சிய புல்லாங்குழல்
ரமணி அவர்கள் காலமானார்; இவர் அமரர் மாலி அவர்களின் சீடர் .  தமக்கு அடுத்த இரு 
தலைமுறையினருக்கும் நன்கு புல்லாங்குழல் கற்பித்துள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

புள்ளாங்குழலிசை - மாலி:

அள்ளையசல் ’அல்லசல்’ ஆவதுபோல, புள்ளாங்குழல் புல்லாங்குழல் ஆகிறது.
புள்ளல்/பொள்ளல் - துளைத்தல். துளைக்கும் அலகுகொண்ட பறவை = புள்.

நா. கணேசன்
 
Image result for flute ramani

N. Ganesan

unread,
Sep 14, 2018, 2:56:19 AM9/14/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

2018-09-13 10:16 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
> தமிழ் மொழியியல்பின்படி 'ல்ல்' >>>'ள்ள் ' என்ற மாற்றம் கட்டற்றது (free variation)
> சான்று :மெல்ல <<<>>>மெள்ள 
> அதனால் புல்லாங்குழல் <<<>>>புள்ளாங்குழல் என்ற மாற்றம் கட்டற்று நிகழ வாய்ப்புண்டு.
> கண்மணி   

இது பற்றிப் பல காலம் யோசித்திருக்கிறேன். புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.

மாட்டுக்கு மருந்து ஊற்றும் குழல் கூட மூங்கிலில் செய்வதுதான்.  
துளையில்லாத இதுவும் புல்லாங்குழல் தான். புல் என்பது மூங்கில் என எத்தனைபேர் அறிவார்?
துளையே இல்லாமல் இருந்தால் அது கொம்பு வாத்தியம்.

மேலும், புள்ளாங்குழலில் உள்ள துளைகள் தானே அதன் இனிய இசைக்கு அடிப்படைக்காரணம்.

பாரதி புள்ளாங்குழல் என்றே எழுதுகிறார்:
இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி. ”

வை. மு. கோ: வில்லிபாரத உரையில்,
வேய்ங்குழல் : புள்ளாங்குழல்

மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, தனிப்பாடற்றிரட்டு உரை, 1914
புள்ளாங்குழல் என்றே எழுதிச் செல்கிறார்.

திருமந்திரம், மாவை விசுவநாதபிள்ளை, 1912.
புள்ளாங்குழல் தான். 

இயற்கையைப் பார்த்துத் தமிழர்கள் படைத்தது புள்ளாங்குழல். காடுகளிலே வளரும் மூங்கில் தூருகளில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்று வீசும்பொழுது இனிய ஓசை எழும். அதைக் கேட்டே புள்ளாங்குழலை வடிவமைத்தனர். இதனை அகநானூறு சொல்கிறது:

" ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத்
தோடலின் முழவின் துதைகுர லாக"

கிட்டிப்புள் என்று சிறுவர்கள் விளையாட்டிலும் புள் என்ற சொல் உண்டு. அது போல, புள்ளாங்குழல். இது புல்லாங்குழல் எனத் திரிந்தது.
-ள்ள- > -ல்ல- பல உதாரணங்கள் கொடுக்கலாம். 

N. Ganesan

unread,
Sep 15, 2018, 4:47:54 AM9/15/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil
Loss of Retroflexion: -LLa- > -lla- in Tamil:

பொள்ளாமணி > பொல்லாமணி (திருவாசகம்)
பொள்ளாப்பிள்ளையார் (சுயம்புவான விநாயகர்) > பொல்லாப்பிள்ளையார்
அள்ளை அயல் > அல்லசல்
அள்ளைக்கை > அல்லக்கை
சீவெளி/சீவேளி > சீவேலி (கேரளா கோவில்களில்)

கிட்டிப்புள் விளையாட்டு
சிறுகட்டை - புள் போலப் பறப்பதால் பெற்ற பெயர்.

வளைநா ஒலிகள் (systemic retroflexes) இந்திய மொழிகளில் எவ்வாறு வந்தன என 100 ஆண்டுகளாய் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
-ள்-/-ண்-/-ட்- : என்னும் மூன்று தொடர்புடைய ஒலிகொண்ட எழுத்துக்கள் இரண்டாவதாக அமையும்
சொற்றொகுதிகள் பல. தொடர்புகொண்ட பொருள்களால் அமையும் சொற்கள் உடையது திராவிட மொழிகள்.
தமிழ்ச் சொற்களில் இதை அழகாகப் பார்க்கலாம். This deep structural phenomenon is integral to Dravidian, and cannot be a 
borrowal from any other language family. In other words, retroflexion originates in Dravidian, and it influences the genesis of retroflexes on Munda (if any) and Indo-Aryan.
Some examples of -L-/-N-/-T- in second syllable in Tamil:
உஷ்ணம் (சுஷ்ணம்) வடசொல்:

இதற்கு நல்ல உதாரணம்:
கிள்- (கிள்ளு) : கிண்டு- : கிட்டு.  (மண்ணைக் கிண்டுகிற குச்சி: கிட்டு/கிட்டி. கிட்டுப்புள் விளையாட்டில்).
 கிள்ள வெழுகின்ற புனல் (கம்பரா. வரைக். 23)  : கிள்ளுதல் = தோண்டுதல்

கிள்-/கெள்- எனவும் வரும். கெள்ளு- : கெண்டு- :கெடி (தோண்டிச் செய்யும் கோட்டை, 
கெடிலம்- நிலத்தை தோண்டிச் செல்லும் ஆறு. cf. பெண்ணை - நிலத்தைப் பிளந்து செல்லும் ஆறு.)
கெட்ட நாற்றம்: மூக்கைத் துளைக்கும்/தோண்டும் வாசனை.  கெடுதல் (கேடு) - இதனின்று பிறந்ததாகலாம்.

மலையைக் கெள்ளி எலியைப் பிடித்தல் =
மலையைக் கெல்லி எலியைப் பிடித்தல்.
கெள்ளு-/கெண்டு-/கெட்டு- : இங்கே கெல்லி என்றாகிவிடுகிறது.

கெல்லுதல் > கல்லுதல் ‘'தோண்டுதல்” : schwa phenomenon.
In Proto-Dravidian, *keLLu- "to dig" > kellu-/kallu- in Tamil.
(obviously, quite distinct from kal 'stone').

சால உறு தவ நனி கூர் கழி மிகல் - நன்னூல்
 Schwa phenomenon between "kazi" and "kezu", both meaning "to be full, to fill/increase"  https://en.wikipedia.org/wiki/Schwa
 In other words,  kəzh-  (with schwa)  the root for kezhu & kazhi.

         கவலை கெண்டிய கல்வாய் (குறுந். 233)
          வண்டு கெண்டி மருவும் பொழில் (தேவா. 626, 10)
கெண்டி மூக்கு உள்ள பாத்திரம் - தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தமிழ்ச்சொல்.

புள்ளாங்குழலில் உள்ள துளைகள் இனிய இசைக்கு அடிப்படை. புள்ளாங்குழல் > புல்லாங்குழல்.
புள்ளுதல் - குத்துதல், துளைத்தல். புள்ளு (புள்), புள்ளி என்பதன் வேர் புள்- வினைச்சொல்.

புல்லாங்குழல் மாட்டுக்கு மருந்து ஊற்றும் கொட்டத்துக்கும் பொருந்தும். புல் = மூங்கில்.

பாரதி புள்ளாங்குழல் என்றே எழுதுகிறார்:
இங்ஙனம் சுற்றும்போது ஒவ்வொரு சுழற்சியிலும் இவ்விரண்டு சந்தி ஸ்தானங்கள் ஏற்படுமல்லவா? அப்போது அவர்கள் முத்தமிடுவதுபோல இதழ்த்தொனி செய்வது, இடையில் நிற்பவள் வாசிக்கும் புள்ளாங்குழல் கீதங்களுக்குத் தாளமாகும். இப்படி ஆயிரம் சேர்ந்து ஒரு பெரிய வளையம்! அரைநாழிகை கழிந்தவுடனே, இந்தப் பாணி கழிந்து மற்றோர் பாணி. ”

வை. மு. கோ: வில்லிபாரத உரையில்,
வேய்ங்குழல் : புள்ளாங்குழல்

மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, தனிப்பாடற்றிரட்டு உரை, 1914
புள்ளாங்குழல் என்றே எழுதிச் செல்கிறார்.

திருமந்திரம், மாவை விசுவநாதபிள்ளை, 1912.
புள்ளாங்குழல் தான். 

இயற்கையைப் பார்த்துத் தமிழர்கள் படைத்தது புள்ளாங்குழல். காடுகளிலே வளரும் மூங்கில் தூருகளில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே காற்று வீசும்பொழுது இனிய ஓசை எழும். அதைக் கேட்டே புள்ளாங்குழலை வடிவமைத்தனர். இதனை அகநானூறு சொல்கிறது:

" ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் னருவிப் பனிநீ ரின்னிசைத்
தோடலின் முழவின் துதைகுர லாக"

கிட்டிப்புள் என்று சிறுவர்கள் விளையாட்டிலும் புள் என்ற சொல் உண்டு. அது போல, புள்ளாங்குழல். இது புல்லாங்குழல் எனத் திரிந்தது.
-ள்ள- > -ல்ல- பல உதாரணங்கள் கொடுக்கலாம். 
-ள்- > -ல்- போல, -ண்- > -ன்- ஆதலும் உண்டு:
முணகு- > முனகு-;  அணங்கு-/அணுங்கு- > அனங்கு-/அனுங்கு- (கம்பன்).
இந்த spontaneous loss of retroflexiion தான் அனங்கன் (அணக்குபவன் - வருத்துவோன்)
என்ற காமவேளின் பெயர்க்காரணம் என்பார் டாக்டர் ஜி. யு. போப்.

N. Ganesan

unread,
Sep 18, 2018, 9:45:59 AM9/18/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil

Loss of Retroflexion: -LLa- > -lla- in Tamil:

பொள்ளாமணி > பொல்லாமணி (திருவாசகம்)
பொள்ளாப்பிள்ளையார் (சுயம்புவான விநாயகர்) > பொல்லாப்பிள்ளையார்
அள்ளை அயல் > அல்லசல்
அள்ளைக்கை > அல்லக்கை
சீவெளி/சீவேளி > சீவேலி (கேரளா கோவில்களில்)

இன்னுஞ் சில உதாஹரணங்கள் தருகிறேன்:
Loss of Retroflexion: -LLa- > -lla- in Tamil: (just like புள்ளாங்குழல் > புல்லாங்குழல்)

(I) தள்ளை > தல்லி/தல்லை.  பிள்ளை பிறக்கும்போது முக்கித் தள்ளுதலான்.
தில்லிக்கு பாட்சா என்றாலும் தல்லிக்குப் பிள்ளை தானே (பழமொழி)

தள்ளுதல் என்ற வினைச்சொல் தா என்று ஏவல்வினை. -ள- > -ர- ஆதலால், தா தரு என்று வருகிறது.
இதே போல, வளை என்ற வினைச்சொல் வா என்ற ஏவல்வினை. 
(வாகு “வளைதல், அழகு”. வாக்கு/வாங்கு : வளைத்தல். சோறாக்கும் கலத்தை வாக்கி என சங்க இலக்கியத்தில் உண்டு.)
வங்கு (< வாங்கு) = (எலி) வளை. வங்கு ரிக்வேதத்தில் உண்டு. 
வளை- என்னும் பொருள் கொண்ட வா வரு என்றாகிறது (-ள்- > -ர- மாற்றம்).

(II) நள்- செறிதல். நள்- நட்டல், நண்பன், நட்பு.
மழை நீரால் *நளைதல் (செறிதல்) > நலைதல். குழந்தையை “ஏண்டா மழையில் நலைந்து விளையாடுகிறாய்?” என்கிறோம்.
நலைதல் > நனைதல் பெருவழக்கு. ( நிலைதல் > நினைத்தல்,  நில் - நினைவு ‘memory')...

(iii) நெள்-/ஞெள்- : “இருள், கருமை). > நள்- . நாளணன் > நாரணன். நள்ளமலை > நல்லமலை ரேஞ். இங்கிருந்து கரும்பெண்ணை நதி.
கரும்பெண்ணை > க்ருஷ்ணவேணி, இப்போது கிருஷ்ணா நதி.

நள்- ‘இரவு’ > நல் > அல்.  அலவன் - இருளில் திரியும் நண்டு. 

(iv) உளர்த்து/உணர்த்து > உலர்த்து,

உலர்த்து- தமிழிலும் மலையாளத்திலும் உள்ளது. பட்டனார் எழுதிய பகவத்கீதைக்கு ஏற்பட்ட உரையில் ஆன்மாவை உலர்த்துதல் பற்றி உள்ளது.
MTL  entry gives an example:
உலர்த்து-தல் ularttu-   5 v. tr. caus. ofஉலர்-. [M. ularttu.] To dry, air, desiccate;உலரச்செய்தல். நனைந்த வான்றுகி லுலர்த்திய (சேதுபு. கந்த. 41).  

------------

உளர்தல் என்னும் சொல் கலித்தொகையில் காண்கிறோம். உளர்த்து/உணர்த்து (உணக்கு/உணங்கு-)
உளர்தல் To spread out and drag the fingers through, as in drying wet hair; தலை மயிர் ஆற்றுதல். கூந்தல் உளர (கலித். 105).
உணத்து-தல் uṇattu-, 5 v. tr. corr. of. உலர்த்து-. 1. To cause to dry; காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul. 2. To emaciate, the body; to attenuate; வற்றுவித்தல். மெய்யுணத் தலும் (தைலவ. தைல. 110).

சங்கத் தமிழ் ஆகிய உளர்தல் இக்காலத்தில் உலர்தல் என வழங்குகிறது. அள்ளைக்கை/அல்லக்கை, புள்ளாங்குழல்/ புல்லாங்குழல் (புள் = துளை), ... போல உளர்தல்/உலர்தல்.
விள்- விண்ணு/விண்டு/விஷ்ணு போல, உள்- (< சுள்-/சுடு-) உண்ணம்/உஷ்ணம் 

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages