மொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு
கல்வெட்டு அறிஞர் மா. கணேசனார்
அவிநாசியைச் சேர்ந்த மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா.கணேசன் அவர்கள் 1980களில் கோவை மாவட்டக் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாகப் பதிப்பித்தவர். அவரது ஆய்வுகளில், சேவூருக்கருகில் அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் இருக்கும் மொக்கணீசுவரர் கோயிலும் ஒன்று. அக்கோயிலில், வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டினை அவர் கண்டறிந்தார். ஆனால், அக்கல்வெட்டு நீண்டகாலமாகப் படிக்கப்படாமலேயே இருந்தது. இக்கட்டுரை ஆசிரியரிடம் இக்கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
2014-ஆம் ஆண்டில் வட்டெழுத்துக்கல்வெட்டு ஆய்வு
2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கல்வெட்டு, கட்டுரையாசிரியரால் ஆய்வு செய்யப்பட்டுக் கல்வெட்டின் பாடமும் பெருமளவு படிக்கப்பட்டது. முழுமையாகப் படித்தபின்பே சரியான செய்தி வெளிப்படும் என்னும் காரணத்தால், மீண்டும் கல்வெட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அண்மையில், 2016 மே மாதம் 8-ஆம் தேதி, தஞ்சை-தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோது, நானும் (இக்கட்டுரை ஆசிரியர்) அவரும் இணைந்து இகல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்துவிடவேண்டும் என்னும் முனைப்போடு செயலில் இறங்கினோம். (கட்டுரை ஆசிரியரும் தஞ்சை-தொல்லியல் கழக உறுப்பினரே.) வீரராகவன் அவர்கள் ஓர் அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். முறைப்படி கல்வெட்டுகளையும் புடைப்புச் சிற்பங்களையும் வெள்ளைத்தாளில் படியெடுத்து கல்வெட்டுகளின் வடிவங்களையும், புடைப்புச் சிற்பங்களின் வடிவங்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாக ஆக்கித்தருவதில் வல்லவர். அவிநாசியைச் சேர்ந்த வரலாறு மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர் ஜெயசங்கரும் எங்களுடன் இணைந்துகொண்டார். வீரராகவன் அவர்களது பணி வாயிலாகக் கல்வெட்டு முழுமையாகப் படியெடுக்கப்பட்டு அதன் பாடம் படிக்கப்பட்டது. கல்வெட்டின்மேல் ஒட்டிய வெள்ளைத்தாளுடன் எடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பார்த்தாலே, படியெடுத்ததன் நேர்த்தி புலப்படும்.
கோயிலின் தோற்றம்
மொக்கணிசுவரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோயிலாக இருந்துள்ளது. கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துடன் தற்போது கோயில் தோற்றமளித்தாலும் பழமையான் கட்டுமானத்தின் எச்சங்கள் தற்போதும் கோயிலில் உள்ளன. சேவூர்ப்பகுதியில் ஒரு வணிக வழி இருந்துள்ளதாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வணிகர் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் இங்கு இளைப்பாறி உணவு உண்ணுமுன் சிவ பூசை செய்ய முனைந்தார். உதவிக்கு வந்தவர், தாம் எப்போதும் கொண்டுவரும் சிவலிங்கத்திருமேனியைக் காணாது, குதிரைக்கு உணவான கொள்ளுப்பயறு நிரம்பிய பையை லிங்க வடிவில் திரட்டி மண்ணில் பதித்து விட்டதாகவும், வணிகர் சிவபூசையை முடித்தெழுந்தபோது, உதவியாளர் மீண்டும் கொள்ளுப்பையை எடுக்க முனைந்ததில், கொள்ளுப்பை சிவலிங்கமாக உருவெடுத்திருந்ததைக் கண்டு வியப்பெய்தி வணிகரிடம் சொல்ல, அங்கு ஒரு சிவன் கோயில் எழுப்பப்பட்டதாகவும் செவி வழி வரலாறு ஒன்று இக்கோயிலைப்பற்றி நிலவிவருகிறது.. இச்செவிவழிச் செய்திக்கு வேறு மாற்று வடிவங்கள் முன்வைக்கப்படலாம். எனினும், அடிபடைக்கருத்து மொக்கணி சிவலிங்கமாக வழிபடப்பட்டது என்பதேயாகும். கொள்ளுப்பை, மொக்கணி என்னும் பெயரால் வழங்கப்பட்டதன் காரணமாக இறைவன் பெயர் மொக்கணீசுவரர் என்றாயிற்று.
கோயிலின் தோற்றம்
12-13 -ஆம் நூற்றாண்டு எச்சங்கள்
வட்டெழுத்துக் கல்வெட்டு - மூலத்தோற்றம்
கல்வெட்டு படித்தல் - முதல் முயற்சியின்போது
கல்வெட்டின் பழமை ஆயிரம் ஆண்டுகள்
கோயிலின் திருச்சுற்றுப்பாதையில் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பலகைக்கருங்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்து என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழி (அல்லது தமிழ் பிராமி) என்னும் தமிழ்த் தொல்லெழுத்திலிருந்து தோன்றிய எழுத்து வடிவமாகும். தமிழி எழுத்திலிருந்து தோன்றிய மற்றொரு எழுத்து வடிவம் தமிழ் எழுத்து. இரண்டு எழுத்துகளும் ஒன்றாகத் தோன்றி வளர்ச்சியுற்றாலும், சோழர் ஆட்சியின்போது தமிழகம் முழுதும் தமிழ் எழுத்துக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால், காலப்போக்கில் வட்டெழுத்தின் பயன்பாடு மறைந்தது. இருப்பினும், வட்டெழுத்து, மக்கள் எழுத்தாக நீண்ட காலம்வரை அதாவது கி.பி. 12-ஆம் நூற்றாண்டுவரை கொங்குநாட்டில் வழக்கில் இருந்துள்ளது. கொங்குநாட்டை ஆட்சி செய்த கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரன் காலத்திலும் (கி.பி. 1207-1256) கொங்கு நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது. பிரமியத்தில் இவன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு இருக்கிறது.
கல்வெட்டு படியெடுத்தல்
மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் இருபது வரிகள் காணப்படுகின்றன. எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் முதல் வரி, “ (ர பதி) மூர்க்கஸ்ரீ பராக்கிரம சோழ தேவர்க்குத் திருவெழுத்திட்டு” என்று தொடங்குகிறது. முதல் ஒன்பது வரிகளில் இவ்வரசனுடைய மெய்க்கீர்த்தி கூறப்படுகிறது. பதினோராவது வரியில் இந்த அரசனது ஆட்சியாண்டு “அஞ்சாவது” என்று குறிப்பிடப்படுகிறது. கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் கொங்குச்சோழ அரசர்களில், மூர்க்க பராக்கிரம சோழன் பெயர் காணப்படாமையாலும், அதேபோழ்து, கலிமூர்க்க விக்கிரம சோழன் என்னும் அரசன் கி.பி. 1004 முதல் கி.பி. 1047 வரை ஆட்சியில் இருந்துள்ளதாகக் குறிப்புள்ளதாலும் அவனைப்பற்றிய குறிப்புகளைத்தேடியபோது, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலில், தாராபுரம் வட்டம் பிரமியம் என்னும் ஊரின் வலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் “கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன்” என்னும் அரசனின் கல்வெட்டில் மேற்படி மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டில் வருகின்ற அதே மெய்க்கிர்த்தி வரிகள் காணப்ப்டுவதைப் பார்த்தேன். அரசனின் பெயர் மாறினாலும் மெய்க்கீர்த்தி ஒன்றே. அரசன்பெயரைத் தெளிந்துகொள்ள தொல்லியல்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் அர.பூங்குன்றன் அவர்களைத் தொடர்புகொண்டபோது, கலிமூர்க்க விக்கிரமச்சோழனுக்கு “பராக்கிரமச் சோழன்” என்று வேறொரு பெயரும் இருந்ததாகவும், அன்னூர்க்கோயிலில் ஒரு வரி மட்டும் உள்ள வட்டெழுத்துக்கல்வெட்டொன்றில் பராக்கிரம சோழன் பெயர் வருவதாகவும், ஆனால் இக்கல்வெட்டு நூலில் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார். எனவே, கல்வெட்டு, கலிமூர்க்க விக்கிரமச்சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாயிற்று. ஆட்சியாண்டு ஐந்து என்பதால் இக்கல்வெட்டு கி.பி. 1009-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது என்று உறுதியாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது என்பது கல்வெட்டின் சிறப்பு.
வழக்கமாக அரசர்களின் மெய்க்கீர்த்திகளில், அரசனது போர் வெற்றியும் புகழும் இடம்பெறும். ஆனால், இவ்வரசனின் மெய்க்கீர்த்தியில், இவன், குடிமக்களிடம் ஆறில் ஒன்றை வரியாகக் கொண்டான் என்றும், அல்லவை கடிந்து குடிபுறம் காத்தான் என்றும், பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய் போல் குடிமக்களைக் காத்து நாடு வளம் பெருக்கினான் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இக்கல்வெட்டில் காணப்படும் சிறப்பாகும். கொங்குநாட்டை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட அரசர் இருவரில் இவன் ஒருவன். இன்னொருவன் வீரராசேந்திரன் ஆவான்.
கல்வெட்டின் செய்தி
கல்வெட்டில், இக்கோயில் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. கொங்கு நாட்டில் பழங்காலத்து இருந்த இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் வடபரிசார நாடும் ஒன்று. இந்த் நாட்டுப்பிரிவில், பேரூர், அவிநாசி, சேவூர் போன்ற ஊர்கள் அடங்கும். வடபரிசார நாட்டில் இருந்த குடவோடான இராசவிச்சாதிர நல்லூரில் வாழும், முள்ளிகள் என்னும் வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த கோவன் விச்சாதிரன் என்பானின் மனைக்கிழத்தி எறுளங்கோதை என்னும் பெண்மணி இக்கோயிலை எடுப்பித்தாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இதனால், மொக்கணீசுவரர் கோயில் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து மாற்றம் பெறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டது என அறிகிறோம். வெள்ளாளர் குலப்பெண் ஒருத்தி கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10, 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்டிரின் சமூக நிலை இக்கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. அவர்களுக்கு இருந்த பொருளாதார உரிமை, கோயில் கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் உரிமை ஆகியன தெளிவாகின்றன. கொங்குப்பகுதியில் பழங்காலத்தில் எழுப்பப்பட்ட சிறு கோயில்கள் (கற்களால் கட்டப்பெற்றவை) எளிமையான வடிவில் கட்டப்பட்டன என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கருவறையும் அதனை அடுத்து அர்த்தமண்டபமும் மட்டும் எழுப்பப்பட்டன. பெரும்பாலும், கருவறையின்மேல் பகுதியில் விமானம் கட்டப்படவில்லை. வெள்ளாளர் குலப்பெண் கோயில் கட்டும்போது, அதுபோலவே எளிமையாகக் கட்டப்பெற்றுப் பின்னர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் சற்றே விரிவாகக் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், கோயிலில், கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் எவையுமில்லை. இருப்பினும், கோயில் வளாகத்தில் கி.பி. 12-13 நூற்றாண்டைச் சேர்ந்தன எனக் கருதத்தக்க சில சிற்பங்களூம், உடைந்த தூண்களும், பழமையான ஒரு மண்டபப் பகுதியும் காணப்படுவது இக்கருத்தை ஏற்கத் துணைசெய்கிறது. இக்கோயில் வளாகத்தில் விசயநகர அரசர் காலத்தைச் சேர்ந்த ஒரு பலகைக்கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தது. மொக்கணீசுவரர் கோயிலுக்குச் சேவூரில் இருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்க்ப்பட்ட செய்தியைச் சொல்லும் இக்கல்வெட்டில், கோயில் அமைந்திருக்கும் குட்டகம் ஊரானது குடக்கோட்டூர் என்று குறிப்பிடப்படுகிறது.
படியெடுத்தல் - பாதிப்பணியில்
படியெடுத்தல் - முழுமை பெற்றபின்
குடவோடு என்னும் இராசவிச்சாதிர நல்லூர்
மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில், குட்டகம் ஊரானது, குடவோடான இராசவிச்சாதிர நல்லூர் என்று குறிப்பிடப்பெறுகிறது. எனவே, இவ்வூர் குடவோடு என்னும் பெயரிலிருந்து குடக்கோடு (குடக்கோட்டூர்), குட்டகம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்மாற்றம் பெற்றுள்ளதை அறிகிறோம். இராசவிச்சாதிரன் என்பான் கலிமூர்க்க பராக்கிரம சோழனின் கீழ் இப்பகுதியில் ஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு தலைவனாய் இருந்திருக்கலாம்; அரசன், குடவோடு ஊருக்கு இந்த இராசவிச்சாதிரன் பெயரில் சிறப்புப் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. முள்ளிகள் என்னும் வெள்ளாளர் குலப்பிரிவு இருந்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
எறுளங்கோதை
கோயில் எடுப்பித்த வெள்ளாளர்குலப் பெண்ணின் பெயர் அழகிய தமிழ்ப்பெயராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எறுளம் என்பது ஒரு மரத்தையும், அதன்வழி ஒரு மலரையும் குறிப்பதாகத் தமிழ் அறிஞரும் மொழி ஆய்வாளருமான நா.கணேசன் அவர்கள் கூறுவது எறுளங்கோதை என்னும் தமிழ்ப்பெயரும், மனைக்கிழத்தி என்னும் அழகான தூய தமிழ்ச் சொல்லும், பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ் வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கின்றன.
மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டு – பாடம்
- (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)
- வர்க்குத் திருவெழுத்திட்டுச் செ
- ங்கோலோச்சி வெள்ளிவெண்குடை மி
- ளிரவேன்தி ஆறில் ஒன்று கொ
- ண்டல்லவை கடின்து நாடு வள
- ம் படுத்து நை குடியோம்
- பிக் கோவீற்றிருன்து குடி
- புறங்காத்துப் பெற்றகுழ
- விக்குற்ற நற்றாய்போல் செ
- ல்லாநின்ற திருநாள் யாண்டு
- அஞ்சாவதில் இத்திருக்கோ
- யில்லெடுப்பிச்சேந் வட
- பரிசாரத்தில் குடவோ
- டாந இராசவிச்சாதிர நல்
- லூரிருன்து வாழும் வெள்
- ளாளந் முள்ளிகளில் கோ
- வன் விச்சாதிரந் மநை
- க்கிழத்தி எறுளங்கோ
- தையேன் என் நி
- ............ ந் தாந்
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.
முடிவுரை
வரலாற்றுச் சிறப்பும், ஆயிரம் ஆண்டுப் பழமைப்பின்னணியும் உள்ள குட்டகம் ஊரும், அதன் கோயிலும், வட்டெழுத்துக் கல்வெட்டும் நம் செல்வங்கள் என்னும் பெருமையுடன் இவ்வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம்.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html
கொங்குநாட்டின் குடவோடு மொக்கணீச்சுர வட்டெழுத்துக் கல்வெட்டு அருமை. மொக்கணீச்சரம் மாணிக்கவாசகரால் புகழப்பெற்றது. பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே இந்தச் சேவூரில் இரண்டு போர்கள் நடந்தன.
வட்டெழுத்துக் கல்வெட்டு:
{சத்(ர பதி) கலி} மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழதேவர்க்குத்
திருவெழுத்திட்டுச்
செங்கோலோச்சி
வெள்ளி வெண்குடை மிளிரவேந்தி
ஆறில் ஒன்று கொண்டு
அல்லவை கடிந்து நாடு வளம் படுத்து
நை குடியோம்பிக் கோவீற்றிருந்து
குடிபுறங்காத்துப்
பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய்போல
செல்லாநின்ற திருநாள் யாண்டு அஞ்சாவதில்
இத்திருக்கோயில் லெடுப்பிச்சேந்
வடபரிசாரத்தில் குடவோடான
இராசவிச்சாதிர நல்லூரிருந்து வாழும்
வெள்ளாளன் முள்ளிகளில்
கோவன் விச்சாதிரன்
மனைக்கிழத்தி எறுளங்கோதையேன்
என் நி
............ ந் தாந்
From http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html
(Dorai Sundaram, Coimbatore read this Vattezutthu inscription)
எறுழம் எந்த மரத்தின் மலரைக் குறிக்கும்? இந்தப் பிரதேசத்திற்குத் தொடர்புடைய தாவரமா? எறுழங்கோதை என்ற பெண்ணின் அழகிய பெயரின் சிறப்பு - இவற்றைப் பார்ப்போம்.
எறுழங்கோதை:
கோதை என்றால் மாலை. சங்கப் பாடலில் பலமுறை பயிலும் சொல்.
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
http://www.tamilvu.org/slet/l1260/l1260son.jsp?a=12
கோதை என்ற பெயரிலே முடியும் பெயர்கள் தமிழில் மிகுதி. தாமரைக்கோதை என்று திருமகளைச் சீவகசிந்தாமணி குறிக்கிறது. பூங்கோதை – காளத்தியில். முருகுவளர்கோதை – கண்ணார்கோயிலில். திருவைகல் மாடக்கோயிலில் செண்பகாரண்யேசுவரர் – கொம்பியல்கோதை.
கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே
அணிகொண்ட கோதை – தென் திருமுல்லைவாயிலில். அல்லியங்கோதை திருவாருரில் அம்பாள் பெயர்.
வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான்
வாய்த்த
நல்லிய
னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
அல்லியங்
கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய
புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. (தேவாரம்)
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெண்பெயராக அல்லியங்கோதை:
மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே!
மணம் கமழும் மாலை அணிந்த நப்பின்னை = வம்பவிழ்கோதை
வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?
சம்பந்தர் – சீகாழித் தேவாரம்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.
பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே
எறுழம் – என்ன மரம்?
செங்கை பொதுவன் எறுழம் என்பது எருக்கு என்று எழுதியுள்ளார்.
http://vaiyan.blogspot.com/2015/09/erulam-kurinjipattu.html
ஆனால், எறுழம் தீயைப் போல இருக்கும் என்று கபிலரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவதால் எருக்கு அல்ல. வைரம் குறிஞ்சிப்பாட்டு மலர்களுக்கு ஒளிப்படங்கள் தந்த கட்டுரையில் calycopteris floribunda எனக் குறிப்பிடுகிறார்.
https://en.wikipedia.org/wiki/Calycopteris_floribunda
இதில் ‘மின்னற்கொடி’ என்று இத்தாவரத்தைத் தமிழர்கள் அழைப்பதாகக் கூறுகின்றனர். காரணம், calycopteris floribunda தாவரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெண்மையாக இருப்பதால் போலும். ஒருசில பூக்கள் salmon red என்னும் இளஞ்சிவப்பு நிறம். என்றாலும், பெரும்பான்மை, வெண்மை நிறத்திலே இதன் பூக்கள் இருப்பதால், எறுழம் calycopteris floribunda அல்ல என்று கருதுகிறேன்.
இதன் பூக்களைப் பாருங்கள், கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போல இல்லையே.
பி. எல். சாமி (The Plant Names in Kurinchippattu, JTS, 1972) கட்டுரையில் அவ்வாறு கருத்தை முதன்முதல் வெளியிட்டார். அதை வைரம் தம் ‘கற்கநிற்க’ வலைப்பதிவில் பயன்படுத்தியுள்ளார் . ஆனால், வெண்ணிறப்பூக்களைப் பெரும்பாலும் கொண்ட calycopteris floribunda எறுழம் என தாவரவியல் பேரா. கு. சீனிவாசன், சங்க இலக்கிய தாவரங்கள் நூலில் கருதவில்லை.
எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).
சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
எறுழம் - Rhododendron Nilagiricum -
http://www.flowersofindia.net/catalog/slides/Nilgiri%20Rhododendron.html
http://www.rufford.org/files/Current%20Science,%20Vol.%2094,%20No.%2012,%2025%20June%202008.pdf
http://www.biotik.org/india/species/r/rhodarni/rhodarni_13_en.html
http://www.indiamike.com/india-images/pictures/nilgiri-red-rhododendron-pongal-pooh
https://www.flickr.com/photos/nilgiriswildflora/4225168300
http://www.flickriver.com/photos/tags/nilgirirhododendron/interesting/
http://www.kew.org/mng/gallery/217.html
மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. தெறு- என்பது தீச் சூடு. தீப்போல சிவந்த மண்காடுகள் தெற்றிக் காடு/தேரிக்காடு. காட்டுத் தீயாலும் அழியாத வலிமைபெற்ற மரங்கள் எறுழம் (< தெறுழ்-) என்றும் கொள்ளலாம். இவை வெளிநாட்டு மரங்கள் யூகலிப்டஸ், டீ, காப்பி போன்ற தாவரங்களால் அழிந்துவருகின்றன.
நெருப்பு நெருங்காத மரம்:
http://periyarpinju.com/2010/august/page14.php
ஆனைமலை, பழனிமலை, நீலகிரி என்னும் கொங்குநாட்டு மலைகளில் வளரும் காட்டுப்பூவரசு என்னும் மரத்தின் பூக்கள் எரியும் தீப் போல இருப்பதாலும், காட்டுத் தீயிலிருந்து காத்து பறவை, விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையாலும் எறுழம் என்ற பெயர் பண்டைத் தமிழர் வழங்கினர் எனலாம். அந்த அழகிய நெருப்புப்போன்ற மலர்மாலையை அணிந்த பெண்ணுக்கு ‘எறுழங்கோதை’ என்ற பெயரும் சேவூர் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டில் இருப்பதான செய்தி அம் மரங்கள் தமிழ்நாட்டில் வளரும் மலைகளுக்கு அருகே மக்கள் அப்பூவை மிகக் கொண்டாடினர் எனக் காட்டுகிறது.
எறுழம் - Rhododendron Nilagiricum (as identified by botanist prof. K. Srinivasan)
நா. கணேசன்
கோதை என்று ஆண் பெயரும் உண்டே ... 'வில்லவன் கோதை'3. கால்கோள் காதைவில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்தபல்வேற் றானைப் படைபல ஏவிப்பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.உரை:வில்லவன் கோதையொடு வென்று வினைமுடித்த பல் வேல் தானைப்படை பல ஏவி - வில்லவன் கோதை யென்னும் அமைச்சனுடன் போரினை வென்று முடித்த பல வேற்படைகளை யுடைய சேனை பலவற்றை ஏவி, பொற்கோட்டு இமயத்து - பொன்னாலாய சிமையத்தினையுடைய இமய மலையின்கண், பொருவறு பத்தினிக் கல்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் - ஒப்பற்ற பத்தினிக்கடவுட்குக் கற்செய்தலை அடிக்கொண் டான் அரசன் என்க.வில்லவன் கோதை - படைத் தலைவனுமாம். கால்கொண்ட னன் - தொடங்கினான் ; கடவுள் வடிவெழுதத் தொடங்கினான் என்றபடி , குட்டுவனாகிய காவலன் காமினெனச் சொல்லி ஏவி இமயத்துக் கல் கால் கொண்டனனென்க.சிலப்பதிகாரம் - மூலமும் உரையும்நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்
3440 Ta. teṟu (teṟuv-, teṟṟ-) to burn, scorch, be angry, sting (as wasp), punish, destroy; teṟal anger, heat, affliction; tēṟu sting (as of a wasp). Nk. (Ch.) tirup sun's ray. Pa. ted- (tett-), (NE.) ṭeḍ- (ṭeṭṭ-) to be fierce (of sun's heat). Go. (A. Y.) ter- to be fierce (heat of the sun); (Tr.) tarītānā to be hot (of sun); tarīstānā to heat bread over a flame after it has been cooked on the iron; (Ph.) tarrānā, (Ma.) tar̥-, (Ko.) tar- to be fierce (of sun); (Mu.) tars-/taris- to heat (Voc. 1778); (Ma.) ter̥k- to warm oneself by fire, (?) recover from illness (Voc. 1783). Konḍa (BB) teṟ- to be fierce (heat of sun); teṟvel sunshine; (K.; Sova dial.) teṟveli id. / Cf. Mar. tirīp gleam of sunshine, hot blaze. DED(S, N) 2832
எறுவை (dark red) எருவை என்றாகியுள்ளது:
DEDR 817 Ta. eruvai
817 Ta. eruvai blood, (?) copper. Ka. ere a dark-red or dark-brown colour, a dark or dusky colour; (Badaga) erande sp. fruit, red in colour. Te. rēcu, rēcu-kukka a sort of ounce or lynx said to climb trees and to destroy tigers; (B.) a hound or wild dog. Kol. resn a·te wild dog (i.e. *res na·te; see 3650). Pa. iric netta id. Ga. (S.3) rēs nete hunting dog, hound. Go. (Ma.) erm ney, (D.) erom nay, (Mu.) arm/aṛm nay wild dog (Voc. 353); (M.) rac nāī, (Ko.) rasi ney id. (Voc. 3010). For 'wild dog', cf. 1931 Ta. ce- red, esp. the items for 'red dog, wild dog'. DED 417, DED(N) 700.
865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟana n. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355).Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700.
இராசகேசரிப்பெருவழி
( The Rajakesari Highway)
அடுத்து, பெரிய பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் தேடும் படலம் தொடங்கியது. நாங்கள் நின்றிருந்த பகுதிக்கு எதிரே ஓடைப்பள்ளத்தின் மறுபுற மலைச்சரிவின் ஏற்றப்பகுதியில் கல்வெட்டுப்பாறை புலப்பட்டிருக்கவேண்டும். ஆனால், எவ்வளவு தேடியும் பாறை புலப்படவில்லை. மழையால் முளைத்த பசுமை பாறையின் தோற்றத்தை மூடிவிட்டதுதான் காரணம். வெயிலும், நடைச்சோர்வும், பசியும் அனைவரையும் தளரவைத்த நிலையில் பகல் பொழுதும் கடந்துகொண்டே போனதால் திரும்பிப்போகும் முடிவெடுக்கப்பட்டது. பூங்குன்றன் அவர்கள் பெருவழியைப்பற்றியும், பெருவழிக்கல்வெட்டைப்பற்றியும் பல செய்திகளை எடுத்துக்கூறினார்.
கொங்குப்பகுதியில் பல பெருவழிகள் இருந்துள்ளன எனப்பார்த்தோம். அசுரர் மலைப்பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, பிடாரிகோயில் பெருவழி, வீர நாராயணப்பெருவழி முதலிய பெருவழிகள் அவற்றில் சில. கொழுமத்திலிருந்து பழநி வரை சென்றது அசுரர் மலைப்பெருவழி. சோழமாதேவிப்பெருவழி கொழுமத்திலிருந்து சோழமாதேவி வரை சென்றது. வீரநாராயணப்பெருவழி ஆனைமலையிலிருந்து கொழுமம் வரை சென்றது. கருவூரிலிருந்து புகார் வரை சென்ற பெருவழி கொங்கப்பெருவழியாகும். இப்பெருவழியின் தொடர்ச்சியாக இராசகேசரிப்பெருவழி அமைந்திருக்கக்கூடும். பேரூரிலிருந்து பாலக்காட்டுக்கணவாய் வழியே மேற்குக்கடற்கரை வரை இப்பெருவழி சென்றதாகக் கொள்ளலாம். கருநாடகப்பகுதியில் கஜ்ஜல் ஹட்டிக் கணவாய் வழியே தாளவாடி என்னும் ஊரிலிருந்து தணாயக்கன் கோட்டை (தற்போதைய பவானிசாகர்) வரை ஒரு பெருவழி இருந்துள்ளது. பெருவழிகளில் எறிவீரர் என்னும் படைப்பிரிவினர் இருந்துள்ளனர். அவர்களுடைய பாதுகாப்பில் வணிகர்களும் மக்களும் சென்றுவந்தனர்.
இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார். இவரோடு பயணம் சென்றவர் கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு ஆவார். புலவர் அவர்கள் அந்நாளில் தமிழாசிரியர். கோவை, சுண்டக்காமுத்தூரில் பட்டிமன்றம் ஒன்றில் கல்ந்துகொள்ள வந்த அவரிடம் அவ்வூரைச்சேர்ந்த இராமசாமி என்பவரும் அவரது உறவினர் கலைச்செல்வன் என்பவரும் புலவரைச்சந்தித்து கல்வெட்டு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். புலவர் தொல்லியல் துறையில் இருந்த பூங்குன்றன் அவர்களை அழைத்துச் சென்று காட்டியுள்ளார். நாட்டிலேயே பழமை வாய்ந்த ஒரு பெருவழி பற்றிய கல்வெட்டினை அடையாளம் காட்டிய பெருமை இவர்களைச்சாரும். பெருவழியும் கல்வெட்டும் அமைந்த பகுதி சொரிமலை, அட்டமலை, திமில்மலை ஆகிய மூன்று மலைகளுக்கிடையே உள்ளது. கல்வெட்டு இருக்கும் இடம் தெக்கன் திட்டு எனவும் காற்றாடும் பாறை எனவும் வழங்கப்படுகிறது. இனி கல்வெட்டின் பாடத்தையும் அது வெளிப்படுத்தும் வரலாற்றுச் செய்திகளையும் காண்போம். கல்வெட்டின் ஒளிப்படத்தையும் பார்க்க.
கல்வெட்டுப்பாடம்:
திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப
ஒரு நிழல் வெண்டிங்கள் போலோங்கி – ஒரு நிழல்போல்
வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன்
கோழியர் கோக்கண்டன் குலவு.
திருநிழலு மன்னு யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல்வெண் டிங்கள்போல் ஓங்கி – ஒருநிழல்போல்
வாழியர்கோச் சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர்கோக் கண்டன் குலவு
காவிரி நீரை கர்நாடக மலையிலிருந்து வருவதை யார் தடுத்தாலும் விடாது செய்தவர்கள் சோழர்கள். இதனைக் குறிக்கும் பாடல்களிலும் கண்டன் என்ற சொல்லை ஒட்டக்கூத்தர் மூவர் உலாவில் பயன்படுத்துகிறார். மூன்று சோழ சக்கிரவர்த்திகளின் அரசவையில் இருந்த கவிச்சக்கிரவர்த்தி. கல்வெட்டுப் புலவர்கள் ர. பூங்குன்றனும், செ. ராசுவும் கண்டறிந்த பாலைக்காட்டுச்சேரி - கோயம்புத்தூரை இணைக்கும் கணவாய்க் கல்வெட்டு மிக அரிது. முசிறிப் பட்டினத்திலிருந்து வணிகம் இவ்வழியாக தமிழ்நாட்டுக்கு 3000 ஆண்டுகளாக நடக்கிறது. ’திருநிழல்’ என்பது கேரளாக் கல்வெட்டுகளில் வரும் 'Shadow Army' எனலாம். அதனைச் சோழர்கள் சிறப்பாக இப் பெருவழியில் அமைத்து வணிகத்தைக் காத்தமை “சிறந்து அமைப்ப” என்னும் தொடரால் தெரிகிறது. ”ஒருநிழல் வெண்டிங்கள்” - தனக்கொப்பிலாத தஞ்சம் அளித்துத் தண்ணருள் வீசும் வெண் திங்கள் குடை சோழனுடையதாம். எப்போதும் அச் சோழன் குலம் மக்களுக்கு ஒரு நிழல் போல் இருந்து செழித்து வாழ்க என வாழ்த்துகிறது இவ்வெண்பா.
’சொல்’ என்றால் வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்துகிறோம். அதுபோலே, குலவு என்று இங்கே பெயர்ச்சொல்லாகப் பயன்படுகிறது. குலவு = குலம். புகழ் எனினும் அமையும்.
குலத்தல் = கலத்தல் (cf. துளிர்/தளிர், குட்டை/கட்டை, ...). குலவுதல் = கூடுதல், எனவே, குலவு = கூட்டம் = குலம்.
நா. கணேசன்
கல்வெட்டு இயற்கையாக அமைந்த ஒரு பெரிய பாறையின் மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் எழுத்துகள் நன்கு புலப்பட்டதாகவும் காலப்போக்கில் எழுத்துகள் தேய்வுற்றதாகவும் காண்கிறோம். கல்வெட்டு இரண்டு பிரிவாகப்பிரிக்கப்பட்டு முதல் பிரிவில் பாடல் வடிவில் நான்கு வரிகளும் அடுத்த பிரிவில் ”இராசகேசரிப்பெருவழி” என்னும் ஒற்றைச் சொல்லும் பொறிக்கப்பெற்றுள்ளன. வரிகள் யாவும் கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளன. பாடல் வரிகள் வட்டெழுத்திலும் “இராசகேசரிப்பெருவழி” என்னும் ஒற்றைச்சொல் தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டில், பாண்டிய நாட்டைப்போன்றே பொதுப்பயன்பாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்துள்ளது. சோழ அரசின் ஆட்சியெழுத்தாகத் தமிழ் எழுத்து வழக்கில் இருந்தது. எனவே இரு எழுத்துகளும் ஒரு கல்வெட்டில் இடம்பெற்றன. ஒரு இராசகேசரி அரசன் ஏற்கெனவே இருந்த பெருவழியைப்புதுப்பித்துத் தன்புகழ் நிலைக்கவேண்டி “இராசகேசரிப்பெருவழி” என்று தன் பெயரை இட்டுத் தன்னைப்பற்றிய பாடலையும் பொறித்து வைத்துள்ளான். இந்த இராசகேசரிச் சோழன் யார் என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது கண்டராதித்தன், முதலாம் இராசராசன் என இரு பெயர்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், கோக்கண்டன் என்னும் அடைமொழிச் சொல்லைக்கொண்டு சோழ அரசன் முதலாம் ஆதித்தன் என நிறுவப்பட்டுள்ளது. முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907 ஆகும். எனவே, கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியலாம். 1976-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைப்படித்த பூங்குன்றன் அவர்கள் இறுதி வரியில் இறுதிச்சொல்லை “கோ” எனப்படித்தார். பின்னர் 1998-ஆம் ஆண்டில் மீளாய்வு செய்து “குலவு” எனப்படித்தார். “குலவு” என்பது “புகழ்” என்று பொருள்தரும் சொல்லாகும். “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
2002-ஆம் ஆண்டில் முனைவர் கருணானந்தம் (கோவைத் தொல்லியல் துறை அலுவலர்) கோவையிலிருந்து வெளிவந்த “கலைக்கதிர்” இதழில் இராசகேசரிப் பெருவழியைப்பற்றிய எழிலார்ந்த கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார். வாய்ப்புக் கிடைத்தால் அக்கட்டுரையைப் படித்து மகிழலாம்.
இராசகேசரிப்பயணத்தின் இறுதிக்கட்டதில் உள்ளோம். பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் வனப்பாதையில் பயணம், ஊரை நோக்கி. இத்தொல்லியல் பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாவிடினும், பெருவழிக்கருகுவரை சென்றதும், வனச்சூழலினூடே பயணம் செய்ததும் மறக்கவொண்ணா நிகழ்வு. நிறைவும் கூட. இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டுப் பயணம் தொடரும், கல்வெட்டைக்காணும் வரை.
பின்குறிப்பு: பயணத்தின்போது, கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒரு காட்டுப்பூச்சியும், குன்றிமணிச்செடியும், சிவப்பு வண்ணத்தில் ஒரு காட்டுப்பழமும், பச்சை நிறத்தில் கடுக்காய்கள், மஞ்சள் நிறத்தில் ஒரு காட்டுப்பூங்கொத்து, முள்ளம்பன்றியின் உடலிலிருந்து விழுந்த ஒரு முள்ளும் காணக்கிடைத்தன. அவற்றின் ஒளிப்படங்களையும் இணைத்துள்ளேன்.
நன்றி : முனைவர் பூங்குன்றன்
வாணவராயர் அறக்கட்டளையினர்
துணை வந்த வனத்துறை அலுவலர் ஆகியோருக்கு.
துணை நின்ற நூல் மற்றும் கட்டுரை :
கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)
ஒளிப்படங்கள்:

M. Soundariya Preetha
Centuries-old rock inscription reveals an old trade route
Coimbatore: For those attuned to reading NH-45 or NH-4 or whatever number as they drive on the national highways, this may sound as a different sign board or indication altogether. Have you heard of a ‘Peruvazhi?’ Archaeologists explain that it is the ancient nomenclature for highways. Located at Aiyyasamy Hills, almost 20 km from Coimbatore, in a forest area is an inscription on a rock, dating back to 10 A.D. It speaks of the “Rajakesari Peruvazhi”,also known as “Kongu Peruvazhi.”
The inscription identifies the path as the “peruvazhi,” which connected the west and the east coasts, and passed through the Palghat Pass , Perur, Vellalur and Sulur . It was once even used by the Romans who came to these places for trade.
Though familiar to the local people and those interested in the subject, the rock is still not known to many.
Inspite of surviving for centuries, this rock has only the wooded canopy to protect it from sun and rain.
Discovered nearly two decades ago, the rock earlier had inscriptions in Tamil and Vattezhuthu. Now only the words in Vattezhuthu remain clear. It has a four-line (“venbha”) verse on the Chola King Adhitan, who is said to have strengthened the highways around 10 A.D.
Protecting the rock alone does not need a huge budget, yet the work will involve the Departments of Archaeology and Forest, says an official of the Archaeology Department. “We can ensure that there is no further damage to the inscription due to the vagaries of nature,” he adds.The District Forest Officer, I.Anwardeen, says that even now access to the site is regulated since visitors can enter the forest only with permission from the department. There will be no problem in protecting the rock. The fencing work can be taken up immediately, he says.
1977-ஆம் ஆண்டிலேயே சென்னியப்பனார் அவர்கள் கல்வெட்டைப்பார்த்ததோடல்லாமல், கல்வெட்டைப் பாதுகாக்கவேண்டியது அரசின்பொறுப்பு என்று கூறுகிறார். அரசும் தொல்லியல் துறையும் சேர்ந்துசெய்யவேண்டியவை நிறைய உள்ளன. “மேலோங்கி” , “பெருநிழல்”ஆகிய இரு இடங்களில் பாடபேதம் உள்ளது.சுந்தரம்.
திருநிழலு மன்னு யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல்வெண் டிங்கள்போல் ஓங்கி – ஒருநிழல்போல்
வாழியர்கோச் சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர்கோக் கண்டன் குலவு
காவிரி நீரை கர்நாடக மலையிலிருந்து வருவதை யார் தடுத்தாலும் விடாது செய்தவர்கள் சோழர்கள். இதனைக் குறிக்கும் பாடல்களிலும் கண்டன் என்ற சொல்லை ஒட்டக்கூத்தர் மூவர் உலாவில் பயன்படுத்துகிறார். மூன்று சோழ சக்கிரவர்த்திகளின் அரசவையில் இருந்த கவிச்சக்கிரவர்த்தி. கல்வெட்டுப் புலவர்கள் ர. பூங்குன்றனும், செ. ராசுவும் கண்டறிந்த பாலைக்காட்டுச்சேரி - கோயம்புத்தூரை இணைக்கும் கணவாய்க் கல்வெட்டு மிக அரிது. முசிறிப் பட்டினத்திலிருந்து வணிகம் இவ்வழியாக தமிழ்நாட்டுக்கு 3000 ஆண்டுகளாக நடக்கிறது. ’திருநிழல்’ என்பது கேரளாக் கல்வெட்டுகளில் வரும் 'Shadow Army' எனலாம். அதனைச் சோழர்கள் சிறப்பாக இப் பெருவழியில் அமைத்து வணிகத்தைக் காத்தமை “சிறந்து அமைப்ப” என்னும் தொடரால் தெரிகிறது. ”ஒருநிழல் வெண்டிங்கள்” - தனக்கொப்பிலாத தஞ்சம் அளித்துத் தண்ணருள் வீசும் வெண் திங்கள் குடை சோழனுடையதாம். எப்போதும் அச் சோழன் குலம் மக்களுக்கு ஒரு நிழல் போல் இருந்து செழித்து வாழ்க என வாழ்த்துகிறது இவ்வெண்பா.
’சொல்’ என்றால் வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்துகிறோம். அதுபோலே, குலவு என்று இங்கே பெயர்ச்சொல்லாகப் பயன்படுகிறது. குலவு = குலம். புகழ் எனினும் அமையும்.
குலத்தல் = கலத்தல் (cf. துளிர்/தளிர், குட்டை/கட்டை, ...). குலவுதல் = கூடுதல், எனவே, குலவு = கூட்டம் = குலம். கொங்கில் பங்காளிகள் அடித்துக்கொண்டால், ‘ஒருகுலைக் காய் நீங்கள். ஏண்டா அடிச்சுக்கறீங்க?’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். நிலா/நிலவு போல, குலாவுதல் - குலவு என வந்துள்ளது. சோழர் குல வம்சம் தழைக்க என வாழ்த்தும் கொங்குப்புலவன் பாட்டு. முதலில் வரும் ‘ஒருநிழல்’ = Unique & cool shelter of the parasol of the Chozha emperor which is like the cool full moon. இரண்டாவது ‘ஒருநிழல்’ = Chozha and his royal family line in the succeeding years provide a shadow (protection) for the citizens.
’திருநிழல்’ - Royal shadow army - like CBI, FBI of today protecting trade across Palghat gap. குலம் என்பது குலவு என இக் கல்வெட்டு குறிப்பிடுதல் போல, இந்த ‘நிழல்’ ‘shadow police' நிகல் என்றும் கேரளச் செப்பேடுகளில் வரையப்பட்டுள்ளது. ’நிகலில் நில்லு’, ‘நெகிலில் நில்லப்பா’ என்று நாம் அன்றாடம் பேசும் சொல், நிகல் (நெகில்/நெகுலு) மலையாளத்திலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே பதிவாகியுள்ளது அருமை.

On Tuesday, May 31, 2016 at 12:21:17 AM UTC-7, dorai sundaram wrote:1977-ஆம் ஆண்டிலேயே சென்னியப்பனார் அவர்கள் கல்வெட்டைப்பார்த்ததோடல்லாமல், கல்வெட்டைப் பாதுகாக்கவேண்டியது அரசின்பொறுப்பு என்று கூறுகிறார். அரசும் தொல்லியல் துறையும் சேர்ந்துசெய்யவேண்டியவை நிறைய உள்ளன. “மேலோங்கி” , “பெருநிழல்”ஆகிய இரு இடங்களில் பாடபேதம் உள்ளது.சுந்தரம்.தினமலர், 19-3-2012-ல் ‘கொங்குப் பெருவழி’ பற்றி வெளியியிட்ட சேதியின் வருடலை 'scan' இணைத்துள்ளேன்.நீங்களும் புலவர் செ. இராசுவும் கூறினாற்போல் 2 இடங்களில் எழுத்து பிழைபடச் சொல்லியுள்ளார் ந. ரா. சென்னியப்பன் அவர்கள்.கல்வெட்டில் உள்ளபடி நேரிசை வெண்பா இதுதான்: சீர் பிரித்து எழுதியுள்ளேன்.திருநிழலு மன்னு யிருஞ்சிறந்த மைப்ப
ஒருநிழல்வெண் டிங்கள்போல் ஓங்கி – ஒருநிழல்போல்
வாழியர்கோச் சோழன் வளங்கா விரிநாடன்
கோழியர்கோக் கண்டன் குலவு
காவிரி நீரை கர்நாடக மலையிலிருந்து வருவதை யார் தடுத்தாலும் விடாது செய்தவர்கள் சோழர்கள். இதனைக் குறிக்கும் பாடல்களிலும் கண்டன் என்ற சொல்லை ஒட்டக்கூத்தர் மூவர் உலாவில் பயன்படுத்துகிறார். மூன்று சோழ சக்கிரவர்த்திகளின் அரசவையில் இருந்த கவிச்சக்கிரவர்த்தி. கல்வெட்டுப் புலவர்கள் ர. பூங்குன்றனும், செ. ராசுவும் கண்டறிந்த பாலைக்காட்டுச்சேரி - கோயம்புத்தூரை இணைக்கும் கணவாய்க் கல்வெட்டு மிக அரிது. முசிறிப் பட்டினத்திலிருந்து வணிகம் இவ்வழியாக தமிழ்நாட்டுக்கு 3000 ஆண்டுகளாக நடக்கிறது. ’திருநிழல்’ என்பது கேரளாக் கல்வெட்டுகளில் வரும் 'Shadow Army' எனலாம். அதனைச் சோழர்கள் சிறப்பாக இப் பெருவழியில் அமைத்து வணிகத்தைக் காத்தமை “சிறந்து அமைப்ப” என்னும் தொடரால் தெரிகிறது. ”ஒருநிழல் வெண்டிங்கள்” - தனக்கொப்பிலாத தஞ்சம் அளித்துத் தண்ணருள் வீசும் வெண் திங்கள் குடை சோழனுடையதாம். எப்போதும் அச் சோழன் குலம் மக்களுக்கு ஒரு நிழல் போல் இருந்து செழித்து வாழ்க என வாழ்த்துகிறது இவ்வெண்பா.
’சொல்’ என்றால் வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்துகிறோம். அதுபோலே, குலவு என்று இங்கே பெயர்ச்சொல்லாகப் பயன்படுகிறது. குலவு = குலம். புகழ் எனினும் அமையும்.
குலத்தல் = கலத்தல் (cf. துளிர்/தளிர், குட்டை/கட்டை, ...). குலவுதல் = கூடுதல், எனவே, குலவு = கூட்டம் = குலம். கொங்கில் பங்காளிகள் அடித்துக்கொண்டால், ‘ஒருகுலைக் காய் நீங்கள். ஏண்டா அடிச்சுக்கறீங்க?’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். நிலா/நிலவு போல, குலாவுதல் - குலவு என வந்துள்ளது. சோழர் குல வம்சம் தழைக்க என வாழ்த்தும் கொங்குப்புலவன் பாட்டு. முதலில் வரும் ‘ஒருநிழல்’ = Unique & cool shelter of the parasol of the Chozha emperor which is like the cool full moon. இரண்டாவது ‘ஒருநிழல்’ = Chozha and his royal family line in the succeeding years provide a shadow (protection) for the citizens.
’திருநிழல்’ - Royal shadow army - like CBI, FBI of today protecting trade across Palghat gap. குலம் என்பது குலவு என இக் கல்வெட்டு குறிப்பிடுதல் போல, இந்த ‘நிழல்’ ‘shadow police' நிகல் என்றும் கேரளச் செப்பேடுகளில் வரையப்பட்டுள்ளது. ’நிகலில் நில்லு’, ‘நெகிலில் நில்லப்பா’ என்று நாம் அன்றாடம் பேசும் சொல், நிகல் (நெகில்/நெகுலு) மலையாளத்திலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே பதிவாகியுள்ளது அருமை.