அன்பின் வினைதீர்த்தான் அவர்களுக்கு,
படு-,பெறு-,உறு-, உண்- போன்ற துணைவினைகள் இல்லாமலே செயப்பாட்டுப்பொருளை உணர்த்தும் பெயர்கள் பல தமிழில் உள. காட்டாக, Moderator = மட்டாளர், மட்டுநர், Invitee = அழைப்பாளர், Worker = உழைப்பாளர், Secretary = செயலாளர், … திருக்குறளில் ‘என்பான்’ என வரும் இடங்களைப் பாருங்கள்: ’எனப்படுபவன்’ என்ற பொருளில் என்பான் எனப் பாவிக்கிறார் திருவள்ளுவர். முகநூலர் இ.எம்.ஜேசப்புக்கு தெரிவிக்கவும்.
இதற்கு நல்ல உதாரணம் சங்க இலக்கியத்தில் கண்டேன். அதற்கு 2000 ஆண்டுகளாய் இலக்கணப்புலவோர் விளக்கமும் கற்க இனிது.
கலித்தொகை (இடையாற்றுமங்கலம் வை. அனந்தராமையர் பதிப்பு. ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் புகழ்கொண்ட கலித்தொகைக்கு ஏற்ற பதிப்பு. குரு உவேசாவை விஞ்சிய சீடர். ஞாழல் என்றால் என்ன மரம் என விளக்கியவர்.)
பக். 79:
|
(12). |
(2)இடுமு ணெடுவேலி போலக் (3) கொலைவர் |
கட்டுமுள்ளால் இடும் நெடியவேலிபோலக் கொலைத் தொழிலையுடைய வேடர் வில்லாலே கொல்லப்பட்டவருடைய உடலம் மறையவிட்ட இலைக்குவை நிரைத்துக் கிடக்கின்ற கடியகுற்றம் நிறைந்த வழியில் நீர் அறுங்கடுஞ்சுனையைச் சூழ்ந்து தண்ணீருண்டலை விரும்பிய உடம்பு வருந்தின யானைகள் தாஞ் சேரப்பதிந்து அவ்விடத்துக் கைகள் சுடப்பட்டு ஒழுங்குபட்ட திரள்கள் வெவ்வேறாம்படி மலைச்சாரல் தோறும் ஓடுகையினாலே பழைய வழிகள் மயங்கப்பட்ட தொலையாத நீண்ட காட்டைப்,
(நச்சினார்க்கினியர் பாலைத்திணைச் செய்யுளின் உரை).
கொலைவர் கொடுமரந் தேய்த்தார்" என்பதனை (தொல். வேற். சூ. 9) `வினைப்பெயராய்ச் செயப்படு பொருட்கண் காலங்காட்டி நின்றது’ என்று கல்லாடரும், `செயப்படு பொருட்கட் காலங்காட்டி நின்ற தொழிற்பெயரெ’ன்று நச்சினார்க்கினியரும், `காலங் காட்டிப் படுத்த லோசையாற் செயப்படு பொருண் மேனின்ற வினைப்பெயர்’ (இ - வி. சூ. 176) என்று இலக்கணவிளக்க நூலாரும் கூறுவர். (இ.வை.அ. குறிப்பு)
தேவார முதலியவற்றில்:
(1)
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவ மார மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த அன்போ
டேத்தவனை யிறுவரையில் தேனை ஏனோர்க்
கின்னமுத மளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
ஏத்தவன் - ஏத்தப்படுதல் உடையவன்; இதன்கண், `ஏத்து` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் செயப்பாட்டு வினையாய் நின்றது.
(2)
தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
ஓதியை ` என்றது செயப்பாட்டு வினைப் பெயர். `
(3)
திருமந்திரம்:
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.
`ஆட்கொண்டவர்`` என்றது, `ஆட்கொள்ளப் பட்டவர்`` எனச் செயப்பாட்டு வினைப்பொருள் தந்து நின்றது. ``
(4)
அழைத்தேபே ரோசை கேளா
அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவ ருளரே லின்னும்
பெருவலித் தடக்கை வாளின்
இழைத்தவ ராகின் றாரென்
றியற்பகை யார்வந் தெய்தக்
குழைப்பொலி காதி னானும்
மறைந்தனன் கோலங் கொள்வான்
இழைத்தவர் - வாளினால் இழைக்கப் பெற்றவர்; அஃதாவது வெட்டப்பெற்றவர். செய்வினை, செயப்பாட்டு வினை யாய் நின்றது.
(5)
பெரிய புராணம்:
சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
வழிபட்டது - வழிபடப்பட்டது. செய்வினை செயப்பாட்டு
வினைப்பொருளில் வந்தது.
(6)
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்றி துணை.
'என்பான்' என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது.
(7)
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை.
என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.
மக(-ள்/ன்) : மக்கள் போன்ற திராவிடமொழிச் சொல்லின் -கள் விகுதி, ஆங்கிலம் தொடர்பு நமக்கெல்லாம் ஏற்பட்டபின் மிகவிரிந்தது.
”கள்” பெற்ற பெருவாழ்வு - என்றே ஒரு கட்டுரை மு.வ. எழுதினார்.
அதுபோலத் தான், இந்த செயப்பாட்டுவினையும். ஏதோ ஓரிரு இடத்தில் தான் தேவாரம் போன்றவற்றில் இருக்கும்.
ஆங்கிலத்தின் தாக்கத்தால் செயப்பாட்டுவினை அதிகமாகிவிட்டது. செயப்பாட்டுவினை அதிகமானால் தமிழின்
அழகு கெடும்.
செயப்பாட்டுவினை செய்வினை அமைப்பிலே உள்ள பெயர்கள் தேவாரம் போன்றவற்றில் பார்க்கலாம்.
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1997-April/054863.html
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1997-April/007889.html
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1997-April/054881.html
I am reminded of this striking paragraph in P.T.Srinivasa
Iyengar's "History of the Tamils: from the earliest times to 600 A.D."
(Madras, C. Coomarasawmy <sic> Naidu, 1929)...
செயப்பாட்டுவினைப் பயன்பாட்டைத் தமிழ்ப்புலவர்கள் 2000 ஆண்டு முன்னர் சம்ஸ்கிருதப் பழக்கத்தால்
தமிழில் அறிமுகப்படுத்தியதை பி.டி. ஸ்ரீநிவாச ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார். இன்றும் செயப்பாட்டுவினைப்
பயன்பாடு தமிழோடு ஒட்டுவதில்லை.
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1997-April/007889.html
_________________
As he imported the seven cases of Sanskrit into Tamil, Agattiyanar is also
responsible for importing the passive voice from Sanskrit. The passive is
a definite inflection which all verbs, transitive or intransitive, undergo
in Sanskrit. When transitive verbs become passive, it serves the purpose of
making the object of the action the subject of the sentence, as when in
English we say, "the lion was killed". This way of speaking is useful, when
the subject of the action is not known or is not intended to be mentioned or
when the object has to be emphasized. When intransitive verbs were given
the passive inflection no such rational use can be found for it, but yet in
Sanskrit the use of the passive intransitive is more idiomatic than that of
the active, though no special meaning can be attached to the passive use; thus,
"saH bhavati" is the same as "tena bhUyate", only the latter cannot be
translated into any other language, for "he is been" is absurd even in English,
though it is allied to Sanskrit. Agattiyanar imposed the passive construction
on Tamil; even he could not transfer the passive intransitive into Tamil,
though he could translate "tADyate" into "aDikkapaTTAn", agglutinating the
verb paDu, to the past participle of aDi. aDikkapaDu, if analysed into
aDikka [while (another man) beats], and paDu [let (you) suffer] is seen to
be opposed to the genius of Tamil, for compounding two verbs into one and
assuming different persons to be the subjects of the two elements of the
compound verb is violating both logic and grammar which is based on logic
at least as far as Tamil is concerned. The true Tamil idiom for "undergoing
beating" is aDipaDu or aDiyu_n, where the first part of the compound is an
abstract noun. AgattiyanAr invented this passive, because it is necessary
for translating the Sanskrit passive verbs into Tamil and it proved so useful
for men who think in Sanskrit and write in Tamil that AgattiyanAr's disciple,
TolkAppiyanAr, begins his grammar with a pseudo-passive "ezhuttenapaDupa".
This pseudo-passive which no Tamil man ever uses in natural Tamil speech, but
which was invented to enable Sanskritists to translate easily from Sanskrit
into Tamil, has, in our days, become very fashionable in written Tamil, because
we have learnt to think in English (which revels in passive forms) and write
in Tamil. This barbarous form in "paDu" mars every page of the Tamil
translation of the Bible, and unfortunately the Tamil composition of Pandits."
____________________________
Bishop R. C. Caldwell wrote:
"None of the Dravidian
dialects possesses any passive particle or suffix, or any means of expressing
passivity by direct inflectional change; the signification of the passive
voice is nevertheless, capable of being expressed in a variety of ways."
"The Dravidian languages, indeed, are destitute of passive properly so
called, and therefore, resist every effort to bring paD-u into general use.
Such efforts are constantly being made by foreigners, who are accustomed to
passives in their own tongues, and fancy that they cannot get on without
them; but nothing sounds more barbarous to the Dravidian ear than the
unnecessary use of paTu as a passive auxiliary. It is only when combined with
nouns its use is thoroughly allowable."
உண்-, பெறு-, படு- போன்றவை செயப்பாட்டுவினைப் பொருளில் பயன்படுவதை
முனைவர் வி. எஸ். ராஜம் அவர்களின் நூலில் (The Passive Stem, (A Grammar of Classical Tamil Poetry,
pg. 534-540 ) பார்க்கலாம். முழுநூலும் பிடிஎப் தரவிறக்கிக்கொள்ள (Google books):
https://books.google.com/books?id=n6VhXLdmdKkC&
நா. கணேசன்
என்னுடைய நண்பர் திரு இ.எம்.ஜோசப் முகநூலில் எழுப்பியுள்ள ஐயத்தை நண்பர்கள் கருத்து வேண்டி இணைத்துள்ளேன்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழில் எனக்கொரு ஐயப்பாடு. SPECIAL INVITEE என்பதை சிறப்பு அழைப்பாளர் எனக் குறிப்பிடுவது சரியா? அழைப்பவர் தானே அழைப்பாளர்? அழைக்கப் படுபவர் எப்படி அழைப்பாளர் ஆக முடியும்? இது எனது மனதில் நிற்கும் நீண்ட காலக் கேள்வி.
கரந்தையில் தமிழ் கற்ற எனது உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் மொழியாக்கம் பற்றிப் பேசும் போது, ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது, நாம் தமிழர்கள் என்பதால், சில நெருடல்கள் இருக்கத்தான் செய்யும். எடுத்துக்காட்டாக Radio-வை வானொலி என்று கூறுகிறோம். வானத்தில் எத்தனையோ ஒலிகள் இருக்கும் போது, Radio-வை மட்டும் வானொலி என எப்படி அழைப்பது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு அவரே பதிலையும் கூறினார். மொழியாக்கம் என்று வரும் போது சில சமரசங்கள் தேவைப்படும். அதை தொடர் சர்ச்சையாக மாற்றிக் கொண்டே சென்றோம் என்றால் அது முடிவில்லாமல் போய் விடும் ஒரு குறிப்பிட்ட வேற்று மொழிச் சொல்லுக்கு இது தான் தமிழ்ச் சொல் என்று அனைவரும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால், அது நமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும் எனக் கூறி முடித்தார். எனவே, நானும் அவரது அறிவுரையினை மனதில் ஏற்று Invitee-ஐ அழைப்பாளர் என்றே எழுதி வருகிறேன். இருப்பினும் அந்த சொல் குறித்த நெருடல் மட்டும் மனதில் தொடர்ந்து கொண்டே வருகிறது. “அழைப்புப் பெறுநர்” என்றோ அல்லது அதை விட வேறு சிறந்த சொல் ஒன்றையோ விரைவில் கண்டு பிடித்தால் நல்லது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன்.
மூல மொழியில் சொல்லப்பட்ட செய்தியின் பொருளும், உணர்வும் சிதையாமல், அதை வேறு மொழிக்கு மாற்றம் செய்வது என்பது, மொழியாக்கத்தில் மிகவும் முக்கியமானது. அதற்கு மூல மொழிச் சொல்லின் பொருள் மட்டும் தெரிந்து பயனில்லை. அந்த மொழியில் அது என்ன உணர்வில் சொல்லப் பட்டிருக்கிறது என்பதும் முக்கியம். எந்த மொழிக்கு மாற்றம் செய்கிறோமோ அந்த மொழியில் சொல்லாட்சித் திறனும் பெரிய தேவையாகும்.
சொல்லுக்கு சொல் பொருள் மட்டுமே என்றால், கணிப்பொறிகள் கூட அதை ஒரளவு செய்து விட முடியும். ஆனால், உணர்வு சிதையாமல் செய்வது என்றால், அது மனித மூளையால் மட்டுமே முடியும். மனித மூளை மட்டுமே பொருளை மட்டும் அல்லாது, உணர்வினையும் உள்வாங்கி அதனைச் சரியாகச் செய்யமுடியும். கணிப்பொறி ஒன்றின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போமா? ( நான் 1960 களில் “ரீடர்ஸ் டைஜஸ்ட்” ஆங்கில மாத இதழில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கிலிருந்து இதைச் சொல்லியிருக்கிறேன்.)
“Out of Sight, Out of Mind”. இது ஒரு ஆங்கிலப் பழமொழி. “பார்வையில் படாதது, மனதில் தங்காது” என்பது இதன் பொருள். இது ரஷ்ய மொழிக்கு கணிப்பொறி மூலம் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அது சரிதானா என்று தெரிந்து கொள்வதற்கு ரஷ்ய மொழி தெரிந்தவர் யாரும் இல்லை. எனவே, ரஷ்ய மொழியில் செய்யப்பட்ட மொழிமற்றத்தை, ஆங்கில மொழிக்கு மறுமாற்றம் செய்தால் அதைத் தெரிந்து கொள்ளலாமே என முடிவு செய்து, மறுமாற்றம் செய்தனர்.
அந்த மறுமாற்றம் என்ன தெரியுமா? “Invisible Idiot” சரி தானே? Out of Sight என்றால் Invisible. அதே போன்று Out of Mind என்றால் Idiot. சொல்லுக்குச் சொல் சரியாப் போச்சு. ஆனால், பொருளும் உணர்வும் காணாமப் போச்சு!
நாம் நம்மை அறியாமல் இது போன்று எத்தனை மொழிமாற்றங்களைப் படித்துத் தொலைத்து இருக்கிறோமோ, யார் கண்டது?
--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்