திரு + இடம் = திருவிடம் > திராவிடம் என்பது; எல்லாமே தமிழில் இருந்து தோன்றியது எனச் சொல்வது போன்ற வாதம்.அதை ஒத்த பிற சில மாற்றங்களேனும் கிடைக்காத வரை அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.இக்கருத்து தோன்றிய காலம் மொழியியல் பெரிதும் தமிழகத்துள்பயிலாத காலம் எனத் தோன்றுகிறது.சக
On Fri, 20 Aug 2021, 6:06 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:On Fri, Aug 20, 2021 at 1:58 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> தமிழ், திராவிடம் இரண்டும் வேறு வேறு எப்படி?
>
> தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர்ச் சொல். பின்னர், குஜராத்தின் மொழி குஜராத்தி, சிந்தின் மொழி சிந்தி, பஞ்சாபின் மொழி பஞ்சாபி, அசாமின் மொழி அசாமி, வங்கத்தின் மொழி வங்காளி என்பது போல திராவிட என்ற இடத்தில் வழங்கும் மொழியும் இடப்பெயரை ஒட்டியே திராவிடம் எனக் குறிக்கப்பட்டது. ஆந்த்ரதிராவிட பாஷா, திராவிடாந்த்ரா தமிழில் இருந்து வேறுபடுத்திக் காட்ட அவ்வாறு குறிக்கப்பட்டது. அத்தோடு நில்லாமல் இன்று திராவிடம் என்ற சொல் பொதுவாக தெலுங்கர், கன்னடர், மலையாளியரையும் குறிப்பதாக அமைந்துவிட்டதால் தமிழை மட்டுமே குறிப்பதாகாது. இப்படி திராவிடத்திற்கு மூன்று வெவ்வேறு பொருள் இருக்க தமிழ் என்ற சொல்லுக்கு இப்படி மூன்று வெவ்வேறு பொருள் இல்லை. எனவே, திராவிடம் என்றால் தமிழ், தமிழ் என்றால் திராவிடம் என்று பொருள் உரைப்பது தமிழரை ஏமாற்றும் உத்தியாகும>" தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர்ச்சொல். ஆனால் திராவிடம் என்றால் தென்னகத்தை குறிக்கும் சமஸ்கிருத இடப்பெயர்ச் சொல். "- இரண்டுந்தான். த்ராவிடம் என்ற ஸம்ஸ்கிருதச் சொல் அடிப்படையில் தமிழ் என்ற பாஷைப் பெயரின் திரிபு ஆகும். விந்திய மலைகளுக்குஅப்பால் வழங்கும் ஆர்ய பாஷைகள் பேசும் தேசங்களுக்கு, கௌட தேசம் என்பதன் பெயரால் பஞ்ச-கௌடம் என்ற பெயர் அமைந்தது.அதே போல, சிந்தி-கூர்ச்சுரம் (> கூர்ச்சரம் > குச்சரம் , குஜராட்), மஹாராஷ்ட்ரம், ஆந்திரம் (இப்போது தெலுங்கு கானம் = தெலுங்கானம் தனி மாகாணம்), கருநாடகம், திராவிட தேசம் ஐந்தும் முதன்மையான த்ராவிடத்தின் பெயரால் பஞ்ச-த்ராவிட தேசம் என ஸம்ஸ்கிருத நூல்களிலே அழைக்கப்பட்டன. அதைக் கண்டுதான், ஏறத்தாழ 25+ பாஷைகள் திராவிட பாஷைகள் என அழைக்கப்படுகின்றன. த்ராவிட < தமிழ். பஞ்ச த்ராவிடம் என்பது தொல்-தமிழ் (Proto-Dravidian) பரவலாக, அன்றும் இன்றும் வழங்கும் நாடுகள்.ஆரியன் X திராவிடன் என்ற இனவாதத்தைப் பெரியார் கட்டமைக்க ஆரம்பித்தார். அதனாலேயே, த்ராவிட கக்ஷிகள் ஸம்ஸ்கிருதப் பெயரைக் கொண்டாடுகின்றன. இப்பொழுது, தமிழ்நாடு மட்டுந்தானே இதில் இருக்கிறது. எனவே, தமிழர் என்ற பேரையே பயனபடுத்தலாமே என்ற கோஷங்கள் எழுகின்றன. த்ராவிட கக்ஷிகள் என்ன காலப்போக்கில் செய்யும் எனப் பார்க்கவேண்டும்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெரியார் ஈவேரா பற்றி 1994-ல் ஆற்றிய சொற்பொழிவு:வல்லம் பெரியார் கல்லூரியில் பேசின பேச்சு. https://youtu.be/BOMIIYcQJsQ சிஎஸ் போன்றோர் இந்திரா காந்தியிடம் வழங்கிய ஆலோசனை அதிமுக வேரூன்ற உதவிற்று. இனி, தில்லி தர்பார், பாஜக, அதிமுகவுடன் இணையுமா? அதிமுக காலப்போக்கில் இருக்குமா? எனப்தெல்லாம் விடையறியா வினாக்கள். ஈவேராவிடம் விலகி, அண்ணாதுரை தம்பிகட்கு வாழ வழி செய்து கொடுத்தார். அண்ணாயிஸம் பற்றிக் கம்யூனிஸ்ட்கள் கருத்துரை.இப்பொழுது கோவில்களில் எல்லா ஜாதிகளும் அர்ச்சகர் என அமல்படுத்தத் தொடங்கியுளது தமிழ்நாட்டு அரசாங்கள். எத்தனை பர்செண்டேஜ் ஆண்டுதோறும் எனப் பார்க்கவேண்டும். வெறும் கண்துடைப்பா?தொல்லியல் முதுமுனைவர் இரா. நாகசாமி அவர்கள், சங்க இலக்கியத்தின் முக்கியப்பாடல்களில் ஒன்றாகிய ‘கலந்தொடா மகளிர்’ முருகின் கோட்டத்தில் மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரை அனுப்பினார். எங்கள் உறவினர் சுவாமி சித்பவானந்தர், அவருடன் படித்த ஈழத்துச் சுவாமி விபுலானந்தர் எல்லாம் முறையாக கல்கத்தாவில் இராமகிருஷ்ணர் மடத்தில் ஸம்ஸ்கிருதம் பயின்று பரப்பினோர் ஆவர். எல்லோரும் அர்ச்சகர் ஆனால், இந்தியாவின் இரு செம்மொழிகளிலும் பயிற்சி, புலமை அவசியம். நடக்கிறதா எனப் பார்ப்போம்.> அகல் விளக்கு இருளை விரட்டத்தான் ஏற்றப்படுகிறது ஆனாலும் அது தன் அடியில் இருளை அப்படியே வைத்துள்ளது. இது வேடிக்கையானது, முரணனானது, நகைப்பிற்கு உரியது. அது போலத்தான் சமசுகிருதத்தை ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இயக்கத்திற்கு சமசுகிருத்திலேயே "திராவிடம் " என்று பெயர் சூட்டியது ஒரு நகைமுரண் ஆகும். அதிலும் வெள்ளைத்தோல் ஆரியர்களான நாயுடு, ரெட்டி, ராஜு உள்ளிட்ட தெலுங்கர், கன்னடரை , இதாவது தமது மொழியில் 80% சமசுகிருத சொல் கொண்டவரை உடன் வைத்துக்கொண்டு சமசுகிருதத்தை ஒழிக்கிறேன், ஆரியத்தை ஒழிக்கிறேன் என்று தமிழர் புறப்பட்டது ஒரு நகைமுரண் அன்றோ? இதனால் மொத்த தமிழரையும் தவறாக வழிநடத்தி ஈவேராவின் வாயால் தமிழரை அவமானப்படச் செய்தனரே.NG
------
--> ----
> You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPS6yTghMbu3eAbnysVMJ%3DwspLmWR%3D_19%3D1yqeMwqb-qtQ%40mail.gmail.com.
Virus-free. www.avg.com
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeywS%3DDNJbybx6mGhzBeYxQH_HgH%3D03VN9sJwcSjdkDbA%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsq-sEuHdxER%2BHJXL8bsGF%2BMTQr0x_Tj0dkTkL%2BqWK%3Dpw%40mail.gmail.com.