மோகம்

265 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 19, 2018, 10:13:54 AM7/19/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
மோகம் (moham - word history)

பெண் என்ற சொல்லில் இருந்து பேணுதல். அதுபோல, கழி (= Bayou) என்ற சொல் இடப்பெயராக ஆகும்போது காழி என்றாகும். சீகு : சீந்துமர இலைகளைப் போன்றது சீகம்புல். சீ(கு)+காழி = சீகாழி. கோத்தல்:கோர்த்தல், மோத்தல்:முகர்த்தல், .. போல, சீகாழி > சீர்காழி. கழிகளை உடைய வேளாண்மை சிறந்த (நன்னீர்) ஊர் சீகாழி. விழுதலை உடைய வீழிப் புதைகள் சிறந்த ஊர் வீழி (வீழி மிழலை). காழிபாதி வீழிபாதி - தமிழ்ப் பழமொழி. சம்பந்தர் தேவாரம் பற்றினது. கழி என்பது கடலும், கடலை ஒட்டி உள்நாடாக - ஒரு 15, 20 கி.மீ. கடற்கரைக்கு உள்ளே உள்ள நிலம். இவற்றை நெய்தல் திணை எனலாம். சீகாழியிலோ, சிதம்பரத்திலோ இன்று போலவே, 1200 ஆண்டு முன்னரும் கடல்கரை இல்லை. ஆனால், பல ஆறுகள் Bayou (கழி) அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இத கழி முக நில அமைப்பை (Bayous) லூயிஸியானா, டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் நன்கு காணலாம். புறநானூற்றில் கழிபற்றிய பாடல் ”நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர் ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டு” (29). திருச்சியைச் சேர்ந்த புலவர் சோழன் நலங்கிள்ளியைப் பாடும் பாடல் இது. இதில் எந்த தலைநகரமாக விளங்கிய மாநகரமும் குறிக்கப்படவில்லை. தில்லை மரம், கழி மீன்கள் என்று பாடும் சங்கப் பாடல்களின் விளக்கம் போல அமைவது புறம் 29. சோழநாட்டின் சிதம்பரம், சீர்காழி, திருவிடைக்கழி, ... போன்ற கழிமுகப் பகுதிகளைத் திருச்சிப் புலவர் பாடுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். 

கழி போல இன்னொரு சொல்லின் பொருளும் ஆழமானது: துருத்தி. இளங்கோ அடிகள் பாடிய நாடுகாண் காதை, வடகொங்கில், ஸஹ்யாத்ரியில் உற்பத்தி ஆகும் காவிரிநாட்டு வளத்தைப் பாடிய செய்தியை அறிந்துகொள்ளும் தமிழ்ப்பதங்கள் அரங்கம், துருத்தி என விளக்கியுள்ளேன். இளங்கோ அடிகள் காலத்தில் முழுத் தீவாக (அரங்கம்) திருவரங்கம் திருச்சியில் ஆகவில்லை. அடிகள் காலத்தின் பின்னர் ஆண்ட மன்னர்கள் துருத்தியை (land projection) செயற்கையான முறையில் கால்வாய் வெட்டி அரங்கம் ஆக்கியுள்ளனர் என்பது சிலப்பதிகாரம் நாடுகாண் காதையை ஆராய்ந்து கண்டேன். ஜைந ஆகமங்களிலே ஸ்ரீரங்கம் என்பது கங்கராஜ்ஜியத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் தான். ஜைந ஆகமங்கள் எழுதப்பெற்ற பழங்காலத்தில் திருச்சியில் அரங்கம் இல்லை, துருத்தி தான். பெருவெள்ளம் வரும்போது சில சமயங்களில் ஆறு மாலையாக ஓடியிருக்கும். எப்போதும் அப்படிச் செய்தால் சோழ நாடு வளநாடு ஆகும் என்று கால்வாய்கள் வெட்டத் தொடங்கியுள்ளனர். காவேரியின் இந்த வரலாற்றைத் தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் காவேரி அருகே வஞ்சி மாநகர் அரண்மனையில் வாழ்ந்த இளங்கோ அடிகள் (வஞ்சி = சங்கச் சேரர் தலைநகர். இன்று கரூர்).

அரங்கமும், துருத்தியும் - சிலம்பு நாடுகாண் காதையில் - http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html

சீகாழி > சீர்காழி, கோத்தல் > கோர்த்தல், மோத்தல் > முகர்தல், ...
செல்வா அவர்கள் நோற்பேன், கோர்ப்பேன், .. என்பது போல மோப்பேன் என்று மக்கள் வழக்கில் ஏன் இல்லை எனக் கேள்வி கேட்டார். மூக்கு/மூச்சு- மயங்குதல் என்றால் மூர்ச்சை என்கிறோம். இதுவே, மோகம் என்பதன் முதற்பொருள் என்கின்றன தமிழ் நிகண்டுகள். கோப்பு > கோர்ப்பு ஆதல் போல, மூக்கு/மூச்சு > மூச்சை ர் சேர்ந்து மூர்ச்சை ஆகிறது.
மோகம் என்ற சொல் ஈரானிய சொற்களுடன் பொருத்துவது சம்ஸ்கிருத அறிஞர்களின் வழக்கம். 
“மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு”

N. Ganesan

unread,
Jul 19, 2018, 10:26:39 AM7/19/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
மோஹம், மோஹினி பற்றி இவ்விழையில் வருங்காலத்தில் விரிவாகச் சொல்கிறேன். ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்றார் வள்ளுவர். ஆனால், மோப்பேன் என்ற சொல் வழக்கில் இல்லாததற்கு மோஹம் என்ற சொல்லில் உள்ளில் உள்ள காம மயக்கம் ஒரு முக்கியக்காரணம். மகள் > மஹில (ஆந்திர மஹில சபை, சென்னை), மெலுஹ - (த)மிழக : சிந்து நாட்டின் பெயர் சுமேரிய ஆவணங்களில். அதுபோல, மோ- மோக்கல் (சங்க இலக்கிய வினைச்சொல்) - மோகம் பழைய தமிழ்ப் பலுக்கலில் மோஹம் என்றாகியுள்ளது. மூக்கு/மூச்சு : மூச்சை/மூர்ச்சை. மோ- : மோகம். மோப்பு, மோப்பி - அடிப்படையான சொற்கள் ஆதலால், மோப்பேன் என்றால் கிராமங்களில் பொருள் வேறுபட்டுவிடும். எனவேதான் வழக்கில் இல்லை.

N. Ganesan

unread,
Jul 20, 2018, 8:10:24 AM7/20/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, R Cheran

மோஹம், மோஹினி பற்றி இவ்விழையில் வருங்காலத்தில் விரிவாகச் சொல்கிறேன். ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்றார் வள்ளுவர். ஆனால், மோப்பேன் என்ற சொல் வழக்கில் இல்லாததற்கு மோஹம் என்ற சொல்லில் உள்ளில் உள்ள காம மயக்கம் ஒரு முக்கியக்காரணம். மகள் > மஹில (ஆந்திர மஹில சபை, சென்னை), மெலுஹ - (த)மிழக : சிந்து நாட்டின் பெயர் சுமேரிய ஆவணங்களில். அதுபோல, மோ- மோக்கல் (சங்க இலக்கிய வினைச்சொல்) - மோகம் பழைய தமிழ்ப் பலுக்கலில் மோஹம் என்றாகியுள்ளது. மூக்கு/மூச்சு : மூச்சை/மூர்ச்சை. மோ- : மோகம். மோப்பு, மோப்பி - அடிப்படையான சொற்கள் ஆதலால், மோப்பேன் என்றால் கிராமங்களில் பொருள் வேறுபட்டுவிடும். எனவேதான் வழக்கில் இல்லை.

திருமாலின் மோஹினி அவதாரம் கடல்கடைந்தபோது (சமுத்திர மந்தனம்) நடந்தது. மந்தனம் என்பதற்கு அடிப்படையான பொருள் உண்டு. கடைதல் - சிந்தாமணியில் காண்க,  சிந்தாமணிப் பாட்டுக்கு இயைய ஈழக்கவிஞர் சு. வில்வரத்தினம், வீழ்ச்சி என்ற கவிதையுண்டு: http://kavithai.com/index.php/kavithaiblog/41-veezhchi

மோப்பேன் என்று தமிழர்கள் சாதாரணமாகச் சொல்வதில்லை. நோற்பேன், நீப்பேன், காப்பேன், சேர்ப்பேன், பார்ப்பேன், வேர்ப்பேன்,  ... எல்லாம் இருக்கிறது. காரணம்: மோப்பு, மோப்பி என்ற சொல்களால் விளங்கும். 
மோப்பு = desire, amour;  From this, in Dravidian languages, மோப்பி² mōppi, n. [T. mōpi, K. mōpu.] Widow, used disrespectfully; கைம்பெண். Loc.

              இதனை விளக்கிடும் விவேக சிந்தாமணி:
உணங்கி ஒருகால் முடமாகி ஒருகண் இன்றிச் செவி இழந்து
வணங்கு நெடுவால் அறுப்புண்டு மன்னு முதுகில் வயிறுஒட்டி
அணங்கு நலியமூப்பெய்தி அகல்வாயொடு கழுத்தேந்திச்
சுணங்கன் முடுவல் பின்சென்றால் யாரைக் காமன் துயர்செய்யான்?
                      
”வீட்டில் தனியாக இருக்கிற ஒரு பொம்பளை ஜாக்கிரதையா இருக்கத் தெரிஞ்சு வெச்சிருக்கணும் இந்தக் காலத்திலே! அதுவும் சென்னை மாதிரி சிட்டியில் நிறையவே சோதனைகள் வரும். தனியா ஒருத்தி - கல்யாணம் ஆகாதவளோ, ஹவுஸ் வொய்ஃபோ - எப்போ... எங்கே தனியா இருப்பாள்னு சில நாய் களுக்கு நல்லாவே மோப்பம் பிடிக்கத் தெரியும். ”

To know more, on dogs using sense of scents during heat, read the section on Jacobson's organ,

மோகம்  < மோக்கல் மோகம். 

மோகம்¹ mōkam

, n. < mōha. 1. Loss of consciousness; fainting; மூர்ச்சை. (சூடா.) 2. Delusion of mind which prevents one from discerning the truth; மாயையால் நிகழும் மயக்க வுணர்ச்சி. (சி. போ. பா. 2, 2). 3. Confusion, distraction; திகைப்பு. மோகமெங்கு முளவாக (கம்ப ரா. நாகபாச. 84). 4. Fascination due to love; infatuation; காமமயக்கம். 5. Love, affection; ஆசை. 

J.P.Fabricius Tamil and English Dictionary

மோகம்

mōkam   s. lust, lasciviousness, sensuality, காமம்; 2. desire, affection, ஆசை; 3. confusion of mind, bewilderment, உன்மத்தம்; 4. (in comb.) barrenness.
In sum, mOha has to do with mO-, "to breathe, the sense of scent as in dogs in heat" etc., and so has come to signify "lust, amour, desire, confusion of mind" etc., All these can be seen in words like mOppu, mOppi, ... From Dravidian verb, mO- whch has foems mOkkal seen in Sangam texts, we have mOha- from the ancient fricative sound, seen in mahila < makaL, Meluhha, IVC name in Sumeria etc.,

NG

மோகம், தாபம், விரகம், போகம், காமம் இந்த வார்த்தைகள் எல்லாமே அடிப்படையில் ஆசை சார்ந்த சொற்கள். 'மோகம்’ என்றால் சித்தம் கலங்குவது. 'யாரைப் பார்த்து?’ என்பதெல்லாம் அதற்கு அவசியம் இல்லை! 'தாபம்’ என்றால், காதல் தாகத்தால் துன்புறுவது-அதன் காரணமாக உடலில் வெப்பம் அதிகரிப்பது! விரகம் - பிரிவினால் ஏற்படும் (காதல்) துன்பம்! போகம்-சிற்றின்பங்களை அனுபவிப்பது. காமம்-உடற்கூறு சம்பந்தப்பட்டது-Physical. ஆனந்தவிகடன், 8 டிச 2010
 
“மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு” என்றார் பாரதி

N. Ganesan

unread,
Jul 20, 2018, 9:10:31 AM7/20/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, R Cheran, Srinivasakrishnan ln

முயங்குதல்: சொல்லாய்வு
-------------------

கிவாஜ, விடையவன் விடைகள், பக். 32
'முகர்தல்' என்று மூக்கின் செயலைச் சொல்கிறார்களே. அது சரியா ?

மோத்தல் என்பதுதான் சரியான சொல். ’மோப்பக் குழையும் அனிச்சம்’ என்பது குறள். மோந்து பார்ப்பதை ’மோப்பம் பிடித்தல்’ என்று வழங்குவதனாலும் இதை அறியலாம். ’மூக்கே நீ முரலாய்’ என்று முரலுதல் என்ற சொல்லை அப்பர் இந்தப் பொருளில் வழங்கியிருக்கிறார்..

பா- என்பது வெண்மை. பால் ‘milk', பா- > பகல்; 
பகன்றில் - கழி நிலங்களில் வாழும் வெள்ளை நிற அன்றில்: Indian White Ibis
மா- “கருமையை நெருங்கும் நிறம்” : மாநிறம், மகம்பூ - பிரியாணிக்கு இடும் star anise seed (மணப்பொருள்).
(மா நிறத்தை இவ் அன்றிலால் அறியலாகும்.)

இவை போல, 
மோ-க்கல் > முக(ர்)தல். மோஹம் என்னும் வடசொல் இத் திராவிட வினைச்சொல்லில் பிறப்பது. இதற்கு எப்படி ஈரானிய பாஷை பொருந்தும் என வினவியிருந்தேன். மோஹம் - காம மயக்கம். 
மோ- என்னும் தாதுவேர் தருவது: மோ- > முகக்கல் > முசக்கல் > முயக்கு/முயங்குதல். மோஹம் என்னு சொல்லின் பொருள்களொடு காண்க.
உகிரு- > உசிரு > உயிர் ... போல.

முயங்கு என்ற சொல்லொடு தொடர்புடையது மூய் (< மோ- வினை). மூடுதல் என்பது பொருள். பெண்ணாட்டுக்கு இன்றும் மூடு எனப் பெயர்.  தொல்காப்பியரும் இதனைக் கூறியுள்ளார்.
பொலிகாளை (Steer bulls are used to cover cows) என்பர். 32 அறங்களில் ஒன்று. DEDR  4915 Ta. muccu (mucci-) to cover; mūy (-v- -nt-; mūyi-) to cover, fill, surround closely; n. a cover; moy (-pp-, -tt-) to cover, enclose; ? muyaṅku (muyaṅki-) to embrace, copulate; muyakkam embrace, copulation. Ko. muc- (muc-) to cover;  etc.,

மோ- என்னும் தாதுவேரினின்றும் உருவாகும் முயங்கு- என்னும் சொல் வள்ளுவருக்குப் பிடித்தமானது. அ எனத் தொடங்கி ன் என முடிகிறார் தம் நூலை. இறுதிக்குறளில் தமிழின் அகமரபை அரதனச்சுருக்கமாகச் சொல்லும்போதும் மோ- > முயங்கு- என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார்:

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்க பெறின் - குறள் 133:10

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று - குறள் 92:3

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாய மகளிர் முயக்கு - குறள் 92:8

தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு - குறள் 111:7

வீழும் இருவர்க்கு இனிதே வளி-இடை
போழ படாஅ முயக்கு - குறள் 111:8

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் - குறள் 124:9

முயங்கிய கைகளை ஊக்க பசந்தது
பைம் தொடி பேதை நுதல் - குறள் 124:8
(நன்றி: பாண்டியராஜா தளம்)

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages