ஆறகழூர்க் கல்வெட்டு காட்டும் யோசனை தூரம்

39 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 16, 2017, 11:36:42 AM4/16/17
to சந்தவசந்தம், Aragalur pon. venkatesan, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, Dr. Krishnaswamy Nachimuthu, vedacha...@yahoo.co.in

சேலம் மாவட்டம் மகதை மண்டலம் ஆறகளூரில் புகழ்மிக்க வாண அரசர்கள் ஆண்டனர்.  எல்லா சமயங்களையும், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆதரித்த மன்னர் பரம்பரையினர். மாவலிவாணனாகப் பிறந்த வரலாறு அப்பர் தேவாரத்தில் பாடுகிறார். எலி ஒன்று வீலக்கைத் தூண்டினமையால் மறுபிறப்பிலே மாவலி வாணனாகப் பிறந்ததாம். இந்த மகதை வாணர்கள் அப் புராணத்தைக் குறிக்க எலியை தங்கள் கல்வெட்டிலே பொதிந்துள்ளனர்.

நண்பர் ஆறகழூர் பொன். வெங்கடேசன் மகதை மண்டிலத்தின் அரிய தொல்லியல் சான்றுகளையும், கல்வெட்டுகளையும் கண்டு உலகிற்கு அளிக்கிறார். அவ்வகையில் 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டை சென்ற ஆண்டில் கண்டறிந்து மின் தமிழ் குழுவில் சில வினாக்கள் கேட்டிருந்தார். அவ்விழையில் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்கமைந்தது.

கல்வெட்டை சு. இராசகோபால் படித்துள்ளார். பொன். வெங்கடேசன் கொடுத்த படி இது:
.1.ஸ்வஸ்திஸ்ரீ களப்

2.பாளராயனும் புரவ

3.ரியாருக்கு செய்யும்படி

4.வடக்கில் வாயிலில் உலக

5.ங்காத்த சோளீச்0வரமு

6.டைய னாயனார்கு வா

7.ணியர்கு முந்பு நம் ஒன்

8.பதாவது தை மாதம் மு

9.தல்  நாயனார்கு  பூ

10.ஜைக்குந் திருப்பணி

11.க்குமுடலாகக் குடுத்

12.தோம் என்று திருவெழு

13.த்துச் சாத்தின திருமுகப்

14.படிக்கு கல்வெட்டு

15. இது தன்ம தாவ

16.ளந் தந்மம்

இக் கல்வெட்டு பற்றிய செய்தி இப்பொழுது தினமணியில் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகளூரில் 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே ராமனின் விளைநிலத்தில் வரப்பின் மீது அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது, அது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.
இந்தக் கல்வெட்டில் உள்ள 16 வரிகள் குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-
 "ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு' என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர்.
அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
இந்தக் குழிகள் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரத்துக்கு உள்ள தொலைவை குறிக்கிறது. இந்த மைல்கல் இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. வணிக கல்வெட்டில் தன்மதாவளம் என்று வருவது போல் தருமபுரி அதியமான் பெருவழியில் நாவற்தாவளம் என்ற சொல் வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சேலம் மல்லூர் அருகே வேம்படி தாவளம் என்ற ஊரும் உள்ளது.
ஆறகழூரில் உள்ள இந்தக் கல்வெட்டின் அருகே உள்ள வயலில் சென்ற ஆண்டு ஒரு சமண கோயிலும், சமணப்பெரும்பள்ளியும் இருந்ததற்கான வணிகக்குழு கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது.
15-ஆம் நூற்றாண்டின் வணிகக் கரண்டியும் கண்டுபிடிப்பு: இதையடுத்து, தொடர் ஆய்வின் மூலம் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலை ஒட்டி உள்ள வளையல்காரர் தெருவில் தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும், இவர்களுக்கு சொந்தமான மடத்தில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் ஒரு வணிகக் குழு கரண்டி இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் வழக்குகளை விசாரிக்கும்போது, இந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்து தீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்துள்ளது. திருவிழாக்கள் நடக்கும்போது இந்தக் கரண்டியை எடுத்துச் சென்று நன்கொடை வசூலித்துள்ளார்கள்.
மணி ஒன்றுடன் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள கரண்டியின் முனையில் வட்டவடிவமான குழி காணப்படுகிறது, அதை அடுத்து லிங்கமும், விநாயகரும் சிறிய அளவில் உள்ளது. சூரிய கடவுள் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளது. இரு கரங்களிலும் அமிர்த கலசம் உள்ளது. கைப்பிடி உள்ள பகுதியில் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வணிகக் குழு சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன.
இந்தச் சான்றுகள் மூலம் ஆறகழூர் ஒரு வணிக நகரமாக இருந்தது உறுதியாகிறது. 12-ஆம் நூற்றாண்டில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆட்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என்றார்.
 
ஆறகழூர் தன்ம தாவளக் கல்வெட்டில் வாணியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ’வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க ...’ என்று தொடங்கும் காளமேகப் புலவரின் விருத்தம் சிவபிரான் புகழையும், அக்கால தமிழ் சமூகங்களையும் சிலேடையாகப் பாடுவது படித்திருப்பீர்கள். திண்டுக்கல் அருகே சித்தரேவு மலையில் வாணியர் (செக்காரச் செட்டிகள்) எண்னெய் தருமம் பற்றிய அழகான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள சமணர் வாழ்ந்த 8 குன்றங்களைப் பற்றிய வெண்பாவில் வரும் பள்ளி என்ப்து திருக்காட்டாம் பள்ளி (குறண்டி என்னும் ஊரில்) அதுவும் இந்த செக்குக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளனர். பெருந்தொகையில் காணும் அருங்குன்றம், பேராந்தை, பப்பாரம் (பப்பரம்/பம்பரம் என்னும் சொல். தமிழிலே பப்பரத்தி அல்லது பம்பரத்தி என சில பெண்களைச் சொல்வர் (Tamil Lexicon). பம்பரம் போன்றிருப்பது பப்பர/பப்பார வெற்பு என்று சமணர்கள் அழைத்திருப்பதைக் காட்டியுள்ளேன். இனி அருங்குன்றம், பேராந்தை மலைகள் எவை என்பதைச் சொல்லலாம்.

சாணக்கியரின் கௌடலீயத்தில் இருந்து பிற்காலம் வரை உள்ள யோஜனை என்னும் தூர அளவைக்குச் சான்றாக ஆறகழூர் வணிகக் கல்வெட்டு அமைந்துள்ளது. யோசனை = 9 மைல். இதனை ஆறகழூர் - காஞ்சிபுரம் தூரமாக 16 யோசனை என்று குறிக்க ஒரே அளவிலான குழிகளை அமைத்துள்ளனர். 16 X 9 மைல் : காஞ்சி - ஆறகழூர் தொலைவு என்பது காட்டும் அரிய கல்வெட்டு. 

ஆறகழூர்க் கல்வெட்டில் குறிப்பிடும் யோஜனை தூரம் - செம்மொழிகளின் இலக்கிய ஆதாரங்கள்:

பொதுவாக “இக்‌ஷு” என்ற சொல் இருப்பதே அறியாமல்தான் பல ஸங்கீதவாணர்கள் பாடுவதை ஹரிகி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றில் இக்‌ஷு தண்டம் என்பது கரும்புவில். தண்டம் வெறும் கம்பு (rod) என்று கொள்வதில் சிறப்பில்லை. சில சான்றுகள் இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் இருந்து காட்டலாகும்.
தண்டம் என்பது ஒரு வில், ஒரு ஆளின் உயரம். நீற்றுத் தண்டத்தர் = ஒரு வில்லின் அளவு உயரம் உடைய திருநீறு பூசிய உடலுடைய மனிதர்கள்.

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்,
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி!
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே. - அப்பர் தேவாரம்.

தண்டம் = Pole, as a linear measure = the height of a man = 4 cubits = 2 taṉu; ஆளொன்றின் உயரமாய் நான்கு முழங்கொண்ட ஒரு நீட்டலளவை. தனுவிரண்டதுவோர் தண்டம் (கந்தபு. அண்டகோ. 6). 8. Body; உடம்பு. நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு (தேவா. 1107, 3). (MTL).

இதனை பல வடமொழி நூல்களில் காண்கிறோம். முக்கியமாக, நீட்டலளவை பற்றி எழுதியபோது பார்த்தவை. 

கௌடல்யரின் அர்த்தசாத்திரத்தை பல சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்தவர் பேரா. காங்லே. அவரைப்பற்றி அறிமுகம்: http://www.payer.de/kautilya/kautilya02a.htm
முதல் பதிப்பு மைசூர் அரண்மனைச் சுவடி, சாமா சாஸ்திரி பதிப்பில் அதில் இருந்த பல ஐயங்கள், பிழைகள் பேரா. காங்லே செம்பதிப்பால் நீங்கின.

Kautiliya Arthasastra (Three volumes)
edited and translated by Prof. R. P. Kangle
Motilal Banarsidass Publ., N. Delhi 1986 (Reprint).
Volume 2, page 189:

------------

சென்னைப் பேரகராதி, பாரதியார் போன்றோர் ஒரு காதம் = ஒரு யோஜனை = 10 மைல் என்றெடுத்துள்ளனர். இதற்கான காரணம் கௌடல்யர், பிரமாண்டபுராணம், மகாவீரர், பாஸ்கரர், ... என்னும் எண்ணற்ற ஆச்சாரியர்களின் கணிதம் ஆகும். தமிழிலே, ஒரு யோசனை இரட்டியாய் விளங்குகிறது: 9.1 X 2 miles = 1 yojana. அதனை கச்சியப்பர், மாதவச் சிவஞான யோகிகள் போன்றோர் விளக்கியுள்ளனர்.

4500 ஆண்டு காலமாக 1 அங்குலம் = 17.3 மில்லிமீட்டர் என இந்தியாவில் பயிலுகிறது. 
Charles E. Gover, Indian Weights and Measures, their condition and remedy.
Male Orphan Asylum, Madras, 1859. முக்கியமான நூல், இணையத்தில் பிடிஎப் ஆகவேண்டிய நூல்.

தமிழில் மூலம் என்றும், தெலுங்கில் மூரம்(= మూర) என்றும் ஹஸ்தம் (ஹாத்)/கரம் ஒரு கையின் அளவை பல்லாயிரம் ஆண்டுகளாய் வழங்கிவந்துள்ளது: 50 செமீ = ஒரு மூலம்/ஹஸ்தம்/கரம்.

"From studies which have been carried out by the 18th and 19th century British scholars and administrators one fact emerges clearly: the most common hasta unit (called moolam in Tamil and Malayalam, moora in Telugu, and mola in Kannada) had an average length of about 19.7 inches or 50.04 cm.

British Studies
  
    Gover [39] who carried out in 1865 remarkable studies of weights and measures in India, is of the opinion that the common 'hauth' all over India was 19.55 inches i.e., 49.91 cm.

    Brown (40) (1899) states:
"Moolum (translated covid or cubit) used for cloth, from 18 - 21 inches (0.4572-0.5334 m). Average about 19.5 in. or 19.66 in. i.e. 0.4953 or 0.4995 m. Subdivided into 24 unglums or figer-breadths."
(pg. 13, Development of Length and Area Measures in South India - Part 3. by L. Raju and V. B. Mainkar, Metric Measures, Jl. of Weights and Measures, Volume 7, 1964, has 5 parts)

மகாவீரர் என்னும் சமணக் கணியர் கி.பி. 877-ல் கௌடலீயத்தில் உள்ள யோஜனை தூரத்தை தொடர்கிறார். அதன் பின்னர் பாஸ்கராச்சார்யர் கி.பி. 1180-ல் லீலாவதி என்னும் கணித சாஸ்திரத்திலும் இதே அளவை தருகிறார். இந்த அடிப்படை அளவையை, சென்னைப் பேரகராதியும், பாரதியாரும் பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய விஞ்ஞானம் தொலைநோக்கிக் கருவிகளால் (Telescope) கண்ட ஒளிவேகம் சாயணர் உரையில் இடைச்செருகலாக சம்ஸ்கிருதத்தை 18-ஆம் நூற்றாண்டு இறுதி (அ) 19-ஆம் நூற்றாண்டில் வந்தடைகிறது. அதனை ’திசைகள்’ கவிதையில் தமிழாக்கித் தருகிறார் பாரதியார்:
தமிழிலே யோஜனை தூரம் இதற்கு இரட்டியாகவும் பயன்படுத்தியுள்ளமை அடுத்த மடலில்.

இதில் பாருங்கள். அப்பர் அடிகள் போலவே மகாவீரர், பாஸ்கரர் போன்ற கணியர்களும் தண்டம் என்றால் வில்/தனு/தனுசு என்னும் பொருளிலே தான் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இக்‌ஷு தண்டம் = கரும்பு வில். அம்பிகை கரத்தில் கருப்புவில் என்பதை வடமொழியின் கௌடலீயம் தொட்டு மஹாவீரர், பாஸ்கராச்சார்யர், ... வழங்கும் மரபிலே கர்நாடக சங்கீதக் கிருதிகள் இயற்றப்பட்டுள்ளன என்பதில் ஐயமில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 29, 2017, 11:04:29 PM4/29/17
to மின்தமிழ், naa.g...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, tamiz...@gmail.com, vedacha...@yahoo.co.in
On Monday, April 17, 2017 at 1:40:50 AM UTC-7, ponvenkatesan64 wrote:
ஆறகழூர் மைல்கல் மற்றும் வாணியர் பற்றிய விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி அய்யா 

ஆறகழூரில் கிடைத்த மைல்கல் அனுப்பிவைத்தமைக்கு நன்றி. சேலம் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது:

இந்தக் கல்வெட்டில் உள்ள 16 வரிகள் குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-
 "ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு' என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர்.
அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இதில் வரும் தூர அளவை யோஜனை தூரம். ஆறகழூருக்கும் காஞ்சிக்கும் சரியாக 16 யோசனை தூரம் தான்.

On Sunday, February 5, 2017 at 2:10:17 AM UTC-8, Ramesh Appadurai wrote:

A Yojana (Sanskrit: योजन) is a Vedic measure of distance that was used in ancient India. A Yojana is about 15 km. 

தமிழ் நீள அளவுகள் பின்வருமாறு உள்ளாது
சாண் 2 கொண்டது = முழம் 
முழம் 2 கொண்டது = சிறுகோல் 
சிறுகோல் 4 கொண்டது = பெருங்கோல்
அக்கோல் 500 கொண்டது = கூப்பிடு 
கூப்பிடு 4 கொண்டது = காதம் 
காதம் 4 கொண்டது = யோசனை 

இதில் முழம் என்பது 46.6 செமீ மெட்ரிக் முறையில் 
2 முழம் = 1 சிறுகோல் அல்லது கஜம் (yard)மெட்ரிக் முறையில்
46.6*2=93.2 செமீ 
சிறுகோல் 2=93.2*2=186.4செமீ= பெருங்கோல்
பெருங்கோல் 500=500*186.4=0.932கிமீ= கூப்பிடு
கூப்பிடு 4 = 4*0.932=3.728கிமீ=காதம்
காதம் 4 =4*3.728=14.9கிமீ= யோசனை

இதுவே வேறுமுறையில்
2முழம்=1கிஷ்கு
2கிஷ்கு=1தண்டம்
2000தண்டம்=1கோசம்
4கோசம்=1யோசனை
 2*2*2000*4*46.6செமீ=14.9கிமீ எனவும் வருகிறது.
அதாவது வேத , தமிழ் முறைகளின் அடிப்படையில் யோசனை என்பது 15கிமீ ஆகிறது.

--------------------------------

தமிழ்ச் சமணர்கள் இந்த யோஜனை அளவையை நன்கு எழுதியுள்ளனர். உ-ம்: காஞ்சி ஸ்ரீ அனந்தநாதநயினார், திருக்குறள் ஜைன ஆராய்ச்சி உரை, 1930

யாப்பருங்கல விருத்தி இவ் வடமொழிச் சொற்களை தமிழாக்குகிறது:
12   விரல்     1 சாண்          
2    சாண்     1 முழம்
4    முழம்    1 கோல்
500  கோல்    1 கூப்பிடு
4    கூப்பிடு   1 காதம்

இங்கே, கோல் என்பது தண்டம்/வில்லு. கற்பனையாக, அடியார்க்குநல்லார் சொல்கிறார்:பரிதிமாற் கலைஞர்  (1903), தனது “தமிழ் மொழியின் வரலாறு” எனும்  நூலில், ஒரு காதம் என்பது பத்து மைல் , எழுநூறு காதம் என்பது ஏழாயிரம் மைல்; எனவே குமரி நாடு இன்றைய குமரி முனைக்குத் தெற்கே கெர்கியிலன் தீவு வரை இருந்திருக்கலாம்! குமரிக்கும் கங்கைக்கும் எழுநூறு காதம் (7000 மைல்!) என்பதும் கற்பனையே.

Length of Yojana

16 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:06 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Apr 30, 2017, 1:16:03 AM4/30/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Saturday, April 29, 2017 at 10:01:39 PM UTC-7, Hari wrote:

2017-04-30 8:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்ச் சமணர்கள் இந்த யோஜனை அளவையை நன்கு எழுதியுள்ளனர். உ-ம்: காஞ்சி ஸ்ரீ அனந்தநாதநயினார், திருக்குறள் ஜைன ஆராய்ச்சி உரை, 1930

யாப்பருங்கல விருத்தி இவ் வடமொழிச் சொற்களை தமிழாக்குகிறது:
12   விரல்     1 சாண்          
2    சாண்     1 முழம்
4    முழம்    1 கோல்
500  கோல்    1 கூப்பிடு
4    கூப்பிடு   1 காதம்

யாப்பருங்கல விருத்தியில் 1 கோல் = 1 தண்டம் (ஒரு ஆளுயரம்) என்றும்,
குரோசம் (கோசம்) என்பதை கூப்பிடு என்றும் , ஹஸ்தம் முழமென்றும்,
யோஜனையை காதம் என்றும் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

இங்கே 1 காதம் என்பது 1 யோசனை தான்.

இவ்விழையின் முதல் மடலில் இருந்து:
மகாவீரர் என்னும் சமணக் கணியர் கி.பி. 877-ல் கௌடலீயத்தில் உள்ள யோஜனை தூரத்தை தொடர்கிறார். அதன் பின்னர் பாஸ்கராச்சார்யர் கி.பி. 1180-ல் லீலாவதி என்னும் கணித சாஸ்திரத்திலும் இதே அளவை தருகிறார். இந்த அடிப்படை அளவையை, சென்னைப் பேரகராதியும், பாரதியாரும் பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய விஞ்ஞானம் தொலைநோக்கிக் கருவிகளால் (Telescope) கண்ட ஒளிவேகம் சாயணர் உரையில் இடைச்செருகலாக சம்ஸ்கிருதத்தை 18-ஆம் நூற்றாண்டு இறுதி (அ) 19-ஆம் நூற்றாண்டில் வந்தடைகிறது. அதனை ’திசைகள்’ கவிதையில் தமிழாக்கித் தருகிறார் பாரதியார்:
தமிழிலே யோஜனை தூரம் இதற்கு இரட்டியாகவும் பயன்படுத்தியுள்ளமை அடுத்த மடலில்.

இதில் பாருங்கள். அப்பர் அடிகள் போலவே மகாவீரர், பாஸ்கரர் போன்ற கணியர்களும் தண்டம் என்றால் வில்/தனு/தனுசு என்னும் பொருளிலே தான் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இக்‌ஷு தண்டம் = கரும்பு வில். அம்பிகை கரத்தில் கருப்புவில் என்பதை வடமொழியின் கௌடலீயம் தொட்டு மஹாவீரர், பாஸ்கராச்சார்யர், ... வழங்கும் மரபிலே கர்நாடக சங்கீதக் கிருதிகள் இயற்றப்பட்டுள்ளன என்பதில் ஐயமில்லை.

ஒரு கோலென்பது இரண்டடி நீளமுள்ளது.   சிலம்ங்கேபின் அரங்கேற்று  காதையில் கோலின் அளவு பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது:

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு

புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்

கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு

நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்

கோலள விருபத்து நால்விர லாக

எழுகோ லகலத் தெண்கோல் நீளத்

தொருகோல் உயரத் துறுப்பின் தாகி

உத்தரப் பலகையோ டரங்கின் பலகை

வைத்த இடைநிலம் நாற்கோ லாக

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்

பூதரை யெழுதி மேனிலை வைத்துத்

தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு

ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்

கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி

விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்

95 உரை 113

அரங்கின் அமைதி]

(எண்ணிய......அரங்கத்து) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர்கொண்டு - எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத் திலே நிலம் வகுத்துக்கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு - பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின்

- நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில் - செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல்நிலை வைத்து - நால் வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு - தூண்களின் நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு - இடத்தூண் நிலை யிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டுவலத் தூணிடத்தும் உருவு திரைவாகப் பொருமுக வெழினியும் மேற் கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து - சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாம முமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக் கிடந்த அருந்தொழில்

ஒரு பெருவிரல் என்பது ஓர் அங்குலம்.  அப்படியானால் ஒரு கோலின் நீளம் இரண்டடி.

விரல் என்று குறிப்பிடும் இடங்களிலெல்லாம் எந்த விரல் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.  இது எல்லா இடங்களுக்கும் பொதுவாக பெருவிரலாகத்தான் கொள்ளப்பட்டிருக்கிறது.  தற்போதைய அங்குலமும் இங்கிலாந்தின் ஒரு பழைய மன்னருடைய பெருவிரலின் நீளமே.  

ஆகவே ஒரு சாண் என்பது 12 விரல்கள் என்றால் எந்த விரல், அது நீளவாட்டில் வைத்து அளக்கப்பட்டதா அல்லது பக்கவாட்டில் வைத்து அளக்கப்பட்டதா என்பதும் சிந்திக்கற்பாலது.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Apr 30, 2017, 1:22:55 AM4/30/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

On Saturday, April 29, 2017 at 10:16:02 PM UTC-7, N. Ganesan wrote:

On Saturday, April 29, 2017 at 10:01:39 PM UTC-7, Hari wrote:

2017-04-30 8:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்ச் சமணர்கள் இந்த யோஜனை அளவையை நன்கு எழுதியுள்ளனர். உ-ம்: காஞ்சி ஸ்ரீ அனந்தநாதநயினார், திருக்குறள் ஜைன ஆராய்ச்சி உரை, 1930

யாப்பருங்கல விருத்தி இவ் வடமொழிச் சொற்களை தமிழாக்குகிறது:
12   விரல்     1 சாண்          
2    சாண்     1 முழம்
4    முழம்    1 கோல்
500  கோல்    1 கூப்பிடு
4    கூப்பிடு   1 காதம்

யாப்பருங்கல விருத்தியில் 1 கோல் = 1 தண்டம் (ஒரு ஆளுயரம்) என்றும்,
குரோசம் (கோசம்) என்பதை கூப்பிடு என்றும் , ஹஸ்தம் முழமென்றும்,
யோஜனையை காதம் என்றும் மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.

4 கோல் = 1 தண்டம் 
 
- நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு <span lan

N. Ganesan

unread,
Apr 30, 2017, 10:09:53 AM4/30/17
to சந்தவசந்தம், ponvenk...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஆறகழூரில் கிடைத்த மைல்கல் அனுப்பிவைத்தமைக்கு ஆறகழூர் வெங்கடேசனுக்கு  நன்றி பல. சேலம் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

காத அளவைக் கணக்கிட நல்லதோர் சான்று. 16 குழிகள் ஆறகழூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் 16 காதம்/யோஜனை என தெளிவாகக் குறிப்பிடும்
அரிய கல்வெட்டு. 

A Dictionary Of The Tamil And English Languages, Volume 4

Vepery Mission Press, 1841

(ராட்லர் அகராதியில் 1 காதம் = 1 யோசனை என்பதற்கு 13 மைல் என்கிறார். இது கர்நாடக கல்வெட்டறிஞர் கூறும் அளவு. சென்னையிலும் இருந்ததாம்.
உ-ம்: ஊர்ப்பெயர்களுக்கு இடையில் காதம் அளவை குறிப்பிடுவதைக் கணித்தால் 20 கிமீ என வருவது இது. இதனைக்கொண்டே
கோவல கண்ணகியர் சந்திக்கும் கவுந்தி அடிகள் தவப் பள்ளி மதுரைக்கு வடக்கே ~360 மைல் (=30 காதம்) சையமலையில் என எழுதியுள்ளேன்.
சிலம்பு நாடுகாண்காதை உரையில் அக்காதையில் உள்ள இடங்கள் எவை என விளக்கும்போது.)

ஆறகழூர்க் கல்வெட்டில் 1 யோசனை = ~10 மைல் என்பது வாணாதிராசர்கள் கைக்கொண்ட கணக்கு.

வணிகத்தை எல்லாவகையிலும் பேணிய ஆறை வாணர்களின் சமயப் பொறை உலகறிந்தது, ஸ்ரீ மகதேசன் பெருவழி
என்று ‘ஹைவேய்ஸ்’  காஞ்சிக்கு தடையறாமல் இருக்க - உ-ம்: வழிப்பறிக் கொள்ளை போன்றன நிகழாவண்ணம் பார்த்துள்ளனர்.
கோவை பாலக்காட்டுக்கு இடையே கிடைத்த பெருவழிக் கல்வெட்டு வெண்பா (வட்டெழுத்து) துரை. சுந்தரம் அரிய கட்டுரை எழுதியுள்ளார்.

பெர்சீவல் அகராதியில் 1 காதம் = 10 மைல்.

A Dictionary: English and Tamil

P. Percival

Madras School Book and Literature Society, 1900 - English language - 595 pages

--------------------

கைவல்யநவநீதம் பதிப்பில் சார்லஸ் க்ரால் என்னும் ஜெர்மானியர் 1 காதம் = 10 மைல் என பதிவு செய்கிறார்:

Kaivaljanavanita, a Vedanta poem. The Tamil text with a translation, a glossary, and grammatical notes to which is added an outline of Tamil grammar with specimens of Tamil structure and comparative tables of the flexional system in other Dravida languages. By Charles Graul, Volume 2

இந்தக் கல்வெட்டில் உள்ள 16 வரிகள் குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-
 "ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு' என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர்.
அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இதில் வரும் தூர அளவை யோஜனை/காத தூரம். ஆறகழூருக்கும் காஞ்சிக்கும் சரியாக 16 யோசனை/காத தூரம் தான்.

1 காதம் என்பது 10 மைல். பல நூல்களும், அகராதிகளும், ஆறகளூர்க் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளும் காட்டும் செய்தி.
1 காதம் என்பது 4 குரோசம்.

 குரோசம் வேறு. காதம் வேறு. 
இந்த ஸம்ஸ்கிருதச் சொற்களின் பொருள் முற்றிலும் வேறானவை.

1 காதம் = 1 யோசனை = 4 குரோசம் = 10 மைல்

ஜைந நூல் வழக்கில் யோஜனை = 40 மைல் என எடுப்பர்.
Yojana distance of Jains as determined from the Science of Acoustics

Summary:
காதம் = ~10 மைல், ஓசனை (< யோஜனை) = ~ 40 மைல் என்பது சிரமண சமயங்கள். 
இக் கணக்கை Acoustic Science கொண்டு உணரலாகும்.

OTOH,
கௌடலீயரின் யோசனை 9 மைல் வட்டகை என்று எடுத்து, காதம் என்பது 2.25 மைல் (அதாவது, குரோசம்)
வட்டகை என்று கொண்டால், ஓசனை மற்றும் காதத்தின் ஆரம் (ரேடியஸ்) மிகக் குறுகிவிடும்.
இடி முழக்கம் எவ்வள்வு தூரம் கேட்கும் என்னும் Acoustic ஸயன்ஸுக்கும் பொருந்தாக் கூற்றாகிவிடும். 

எனவே தான், தமிழ்ச் சமணர் கணக்கில்,
யோசனை = ~40 மைல், காதம் = ~10 மைல்.

2000 தண்டம்/வில்லு = 1 யோஜனை/காவதம். கற்பனையாக, அடியார்க்குநல்லார் சொல்கிறார்:பரிதிமாற் கலைஞர்  (1903), தனது “தமிழ் மொழியின் வரலாறு” எனும்  நூலில், ஒரு காதம் என்பது பத்து மைல் , எழுநூறு காதம் என்பது ஏழாயிரம் மைல்; எனவே குமரி நாடு இன்றைய குமரி முனைக்குத் தெற்கே கெர்கியிலன் தீவு வரை இருந்திருக்கலாம்.” குமரிக்கும் கங்கைக்கும் எழுநூறு காதம் (7000 மைல்!) என்பதும் கற்பனையே.

N. Ganesan

unread,
Apr 30, 2017, 7:50:23 PM4/30/17
to மின்தமிழ், santhav...@googlegroups.com, ponvenk...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

ஆறகழூரில் கிடைத்த மைல்கல் அனுப்பிவைத்தமைக்கு ஆறகழூர் வெங்கடேசனுக்கு  நன்றி பல. சேலம் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

காத அளவைக் கணக்கிட நல்லதோர் சான்று. 16 குழிகள் ஆறகழூருக்கும் காஞ்சிபுரத்திற்கும் 16 காதம்/யோஜனை என தெளிவாகக் குறிப்பிடும்
அரிய கல்வெட்டு. 

A Dictionary Of The Tamil And English Languages, Volume 4

Vepery Mission Press, 1841

(ராட்லர் அகராதியில் 1 காதம் = 1 யோசனை என்பதற்கு 13 மைல் என்கிறார். இது கர்நாடக கல்வெட்டறிஞர் கூறும் அளவு. சென்னையிலும் இருந்ததாம்.
உ-ம்: ஊர்ப்பெயர்களுக்கு இடையில் காதம் அளவை குறிப்பிடுவதைக் கணித்தால் 20 கிமீ என வருவது இது. இதனைக்கொண்டே
கோவல கண்ணகியர் சந்திக்கும் கவுந்தி அடிகள் தவப் பள்ளி மதுரைக்கு வடக்கே ~360 மைல் (=30 காதம்) சையமலையில் என எழுதியுள்ளேன்.
சிலம்பு நாடுகாண்காதை உரையில் அக்காதையில் உள்ள இடங்கள் எவை என விளக்கும்போது.)

ஆறகழூர்க் கல்வெட்டில் 1 யோசனை = ~10 மைல் என்பது வாணாதிராசர்கள் கைக்கொண்ட கணக்கு.

இப்பொழுது பலரும் மறந்துவிட்ட இடைக்கால இலக்கியங்கள் பிடிஎப் வடிவில் உலகில் எங்கிருந்தாலும் கிடைத்துவரும் நிலை ஏற்பட்டுவருவது மகிழ்ச்சி.
பாரத எண்ம நூலகத்தில் ஐயாயிரத்திச் சொச்சம் நூற்றலைப்புகளைப் பார்வையிட்டேன். சுமார் 30 பழைய தலபுராணங்கள் கண்டேன்.
சொல்வளம், அப்போதிருந்த வழக்கங்கள், சமையநிலை, .... எனப் பல செய்திகள் கொண்டிலங்குபவை. தலபுராணம், பிரபந்தம் போன்ற அரிய, 
அழியும் தறுவாயில் உள்ள நூல்கள் வலைக்கண் எல்லோரும் பகிர்ந்தால் படிப்பார் மிகக் குறைவாக
உள்ள நூல்களை ஆர்வமுடையோர் பயில வாய்ப்பு:

நூற்றுக்கணக்கான இலக்கியங்களிலும், டிக்ஷனரிகளிலும் 1 காதம் (= 1 யோஜனை) = 10 மைல் என்றுள்ளது. இது நான்கு குரோசம். ராட்லெர் அகராதியில்
10 நாழிகை மாடுகள் வண்டிபூட்டி ஓட்டும் போது செல்லும் தொலைவைக் கொடுத்துள்ளார். இது ~13 மைல். 7.5 நாழிகை தூரம் மாடுகள் பயணிப்பதை
வைத்து (13 * 3/4 =) 9.75 மைல் என யோஜனை (க்ஷுல்லக யோஜனை என்பர் சமணர்கள்) தூரத்துடன் இயைப்பதும் உண்டு.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் நூல்களைப் படித்துக்கொண்டுள்ளேன். அவரும் ஆறகழூர்க் கல்வெட்டு காட்டும் 1 காதம் (= 4 குரோசம்) 
என்பதை ~10 மைல் என்றே எழுதிச்செல்கிறார். திரு. காளைராசன் கொடுத்துள்ள காளையார்கோயில் தலபுராணத் தகவல்:

”யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?
இதற்குச் சரியாக விடை சொல்லும் வகையில் காளையார்கோயில் புராணப் பாடல்கள் அமைந்துள்ளன.
நைமிசப் படலத்தின் காளையார்கோயிலின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் 26 மற்றும் 27ஆவது கீழ்க்கண்ட பாடல்களில் யோசனை என்ற அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

"உத்தரகாளிபுரமெனவொன்றாங்குளதுகோதாவிரிதீரத்
தத்தலத்தினுமிக்குயர்ந்ததாய்நினைக்கினருங்கதிச்சித்தியுஞ்சுத்த
புத்தியுமீயுந்தக்கணகாளிபுரமதுகுணகடற்குடக்கி
னத்தியமூன்றுயோசனைவையைநதிக்கொருயோசனையுதக்கில்

கூடலம்பதிக்குயோசனைநான்குகுலவுமீசானவாசையிற்றே
னேடவிழ்கமலசீதளிப்புத்தூர்க்கிரண்டரையோசனைதெற்கி
னாடுமொன்றரையோசனைகொள்வித்தாரநண்ணியேபாண்டிநாட்டுளது
பீடுறுமந்தத்தலத்து நாமங்கள் பேசிடிலநந்தமாமவை தாம்"

இப்பாடல்களில் உள்ள தொலைவைக் கூகுள் மேப்ஸ் தொலைவுடன் ஒப்பு நோக்கிப் பார்ப்போம் .

1)
கூடலம்பதிக்குயோசனைநான்கு = மதுரைக்கு நான்கு யோசனை தூரம்
எனவே 1 யோசனை = 15.5 கி.மீ.

2)
னேடவிழ்கமலசீதளிப்புத்தூர்க்கிரண்டரையோசனை  =  திருப்புத்தூருக்கு  இரண்டரையோசனை தூரத்தில் 
அதாவது 2.5 யோசனை = 38 கி.மீ.
எனவே 1 யோசனை = 15.2 கி.மீ.

ஆளுக்கொரு அளவாகச் சொன்னாலும், காளையார்கோயில் புராணத்தில் உள்ள கணக்குப்படி ஒரு யோசனை தூரம் என்பது சற்றொப்ப 15 கி.மீ. தூரம் எனலாம் அல்லது சுமார் 9 மைல் என்று கருதலாம்.”

இதில் வரும் தூர அளவை யோஜனை/காத தூரம். ஆறகழூருக்கும் காஞ்சிக்கும் சரியாக 16 யோசனை/காத தூரம் தான்.

1 காதம் என்பது 10 மைல். பல நூல்களும், அகராதிகளும், ஆறகளூர்க் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளும் காட்டும் செய்தி.
1 காதம் என்பது 4 குரோசம்.

 குரோசம் வேறு. காதம் வேறு. 
இந்த ஸம்ஸ்கிருதச் சொற்களின் பொருள் முற்றிலும் வேறானவை.

1 காதம் = 1 யோசனை = 4 குரோசம் = 10 மைல்

ஜைந நூல் வழக்கில் யோஜனை = 40 மைல் என எடுப்பர்.
Yojana distance of Jains as determined from the Science of Acoustics

NG 

N. Ganesan

unread,
May 1, 2017, 8:10:31 AM5/1/17
to மின்தமிழ், ponvenk...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, dorai sundaram
இந்த மடலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆறகழூர் பொன். வெங்கடேசன் தினமணி செய்தியில் குறிப்பிட்டிருக்கும் வாசகம்:
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.”

இங்கே, குழி என்பது பல்லாங் குழி, பாண்டி விளையாடுவதற்கு பாறையில் (அ) பலகையில் செதுக்கும் குழி போன்றது. ஏரியா பரப்பளவு எல்லாம் இல்லை.
1 காதம் = 1 யோசனை = 4 குரோசம் = 10 மைல் என்பது காட்டும் அரிய கல்வெட்டு. தெரிந்த ஊர்கள் இரண்டைக் குறிப்பிட்டு (ஆறையும் கச்சியும்)
16 காதம் எனக் காட்ட 16 குழிகள் கொண்ட கல்வெட்டு. 100 உதாரணங்களாவது காதம்/யோஜனை தூரம் ~10 மைல் என்பதற்கு இருக்கின்றன இலக்கியங்களில்.
எனவே தான் 1 காதம் = 4 க்ரோஶம் (~2.5 மைல்). இந்த யோஜனை தூரம் க்ஷுல்லக யோஜனை என்று சமண இலக்கியங்கள் கூறுவது.
மஹா யோஜனை = 500 க்ஷுல்லக யோஜனை. பெரு யோஜனை (~40 மைல்) = 4 X யோஜனை என்பது நாலடியார் தரும் செய்தி.
<p class="MsoNormal" style="margin-top:1em;margin-bottom:1em;line-height:no

N. Ganesan

unread,
May 3, 2017, 9:02:31 AM5/3/17
to மின்தமிழ், ponvenk...@gmail.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, sirpi balasubramaniam
தமிழ்நாட்டில் மூன்று பெருவழிகள் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. (1) கொங்கப்பெருவழி - பாலக்காட்டுக் கணவாயில் உள்ள சோழர்களின் வட்டெழுத்துக்கல்வெட்டு
(2) மகதேசன் பெருவழி - ஆறகழூரில் இருந்து காஞ்சிபுரம் 16 யோஜனை/காதம் எனக் குறிப்பிட 16 குழிகள் கொண்ட கல்வெட்டு (ஆறை வாணாதிராசர்கள் காலம்)
(3) அதியமான் பெருவழி - தருமபுரி மாவட்டம். திசையாயிரத்து ஐநூற்றுவர் கேரளம், கர்நாடகம் என்று தமிழகத்தை வணிகத்தால் இணைத்த பெருவழிகள்.
எனவே, ’வடபெருங்கோட்டு தண்பொழில்’ என்கிறார் இளங்கோ அடிகள். வடபெருங்கோடு = சைய மலை. பொழில் - வணிகர்கள் வணங்குவது ஐம்பொழில்
பரமேசுவரி. சையத்தில் பொழில் என்ற ஊர்ப்பெயர்கள் மிகுதி: 
(1) திசையாயிரத்து ஐநூற்றுவர் வணங்கும் ஐம்பொழில் பரமேசுவரி. - ஐஹொளெ என்னும் கர்நாடகா ஊர். ஐ-பொளெ ஐஹொளெ என்கின்றனர். தமிழில் ஐம்பொழில்
என்பன கல்வெட்டுகள். (2) பொழில்வாய்ச்சி (கல்வெட்டு) - பொள்ளாச்சி. இவ்வூர் பற்றிக் கவிஞர் சிற்பி (விகடன்): http://nganesan.blogspot.com/2011/04/en-uur-by-kavignar-sirpi.html
பொழில்வாய்ச்சியில் கிடைத்த ‘குட்டுவன் கோதை’ ஆர். பூங்குன்றன் கண்டுபிடித்தார். அப்போது ஓர் அழகான கவிதை எழுதினார் சிற்பி.

நூற்றுக்கணக்கான இலக்கியங்களிலும், டிக்ஷனரிகளிலும் 1 காதம் (= 1 யோஜனை) = 10 மைல் என்றுள்ளது. இது நான்கு குரோசம். ராட்லெர் அகராதியில்
10 நாழிகை மாடுகள் வண்டிபூட்டி ஓட்டும் போது செல்லும் தொலைவைக் கொடுத்துள்ளார். இது ~13 மைல். 7.5 நாழிகை தூரம் மாடுகள் பயணிப்பதை
வைத்து (13 * 3/4 =) 9.75 மைல் என யோஜனை (க்ஷுல்லக யோஜனை என்பர் சமணர்கள்) தூரத்துடன் இயைப்பதும் உண்டு. ஆறகழூர் - காஞ்சிபுரம் தூரம்
1 யோஜனை/காதம் = ~10 மைல் எனக் காட்டுகிறது.

பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்ததாகக் கதைமாந்தரை இளங்கோ அடிகள் படைத்துள்ளார். சமணம் கற்பிக்க அவரது காப்பியத்திலே தான் கவுந்தி
அடிகள் என்ற குரத்தியார் பாத்திரம் உள்ளது. நாட்டுப்புறக் கண்ணகி கதைகளில் கவுந்தி அடிகள் வருவதில்லை. அவரைச் சந்திக்க ’வடபெரும்’ என்னும்
ஸ்டாக் ஃப்ரேஸ் உள்ள ஸஹ்யாத்திரி மலை (வடபெருங்கோடு) மனைவியுடன் சென்று சந்த்தித்து ஆசிபெற்று, கவுந்தி அடிகளும் கூடவே வர
தெற்கே மதுரை பயணிக்கின்றனர். இது ~ 360 மைல் மதுரைக்கு வடக்கே என இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். காவிரி உற்பத்தி ஆகும் சையமலைப்
பகுதி. பின்னர் மறையோர் இருக்கை, வேளாண் வளம் எல்லாம் பாடி, மலைநாட்டு ஊர்களில் உள்ள இயற்கை வளங்கள் *உ-ம்: அரிய பறவைகள்,
குறிப்பிட்டு, இயற்கையான அரங்கம் ஆகிய சீரங்க பட்டினம் வந்து ஜைந சமய சம்போதனை அந்தசாரணரிடம் கேட்கின்றனர். இவையெல்லாம்
இளங்கோ காலத்திலும், அதற்கு முன்னும் வடகொங்கு என அறியப்பட்ட சையமலையில். பின்னர் வம்பப் பரத்தை, வருமொழியாளனிடம்
தம் மக்கள் என்று கதாநாயக தம்பதியரை கவுந்தி அடிகள் அறிவிக்கிறார். இது சேரநாடு ஆகிய ஈரோடு, கருவூர் பகுதிகள் (தென்கொங்கு) எனலாம்.
அங்கே சாபம் இட்டு, கோவலகண்ணகியர் வேண்ட சாப விமோசனம் அளித்து நரியாய் எந்த எல்லை வரை என வரையறுக்கிறார்.
இதற்குக் காரணம் ஜைந சமயத்தில் நடைமுறை. கவுந்தி அடிகளுக்கு கோவலன், கண்ணகிக்கு நடக்கப் போவது தெரியும். ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்
என்பது காப்பியத்தில் காட்டவேண்டும் என்பது இளங்கோ அடிகள் நோக்கம். அதனை நாடுகாண் காதைப் பிரயாணத்தில் போதிக்கிறார் கவுந்தி
அடிகள்.

சையம் - காவிரி தோன்றுமிடம் என சீகாழி அருணாசலக் கவிராயர் பாடல் பார்த்தோம்:

”சைய்யகிரி - கொங்குநாட்டிலுள்ள ஒரு மலை. காவிரி நதிக்குப் பிறப்பிடம்”
(பக்கம் 746, அபிதான சிந்தாமணி).

பெருங்கோடு (கோபி வட்டம்). சையமலையில் மேட்டுப்பாங்கான இடத்தில் வண்டன் என்பவனைச் சோழன் போரிட்டது சங்க இலக்கியம் சொல்லும் ஒரு வரலாறு.
அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா . அகப்பா - உள்கோட்டை. 

சோழர்கள் கல்லும், பாறையும் இல்லாத காவேரி டெல்டாவில் வேளாண்மை நடக்க காவேரி தடையின்றி வரவேண்டும் என ஆர்வத்துடன் ஆட்சி செலுத்தியுள்ளனர்.
தூர்ந்து போவதால் காவேரி மேடாகி, கொள்ளிடம் மட்டும் இருக்கும் என்பதால் கரைகட்டி இருக்கிறார்கள். காவேரியில் கல்லணை கட்டிய 19-ஆம் நூற்றாண்டு
பிரிட்டிஷ் எஞ்சினீயர்கள் குறிப்புகள் கல்லணையின் தோற்றம் 1600 ஆண்டுகள் முன்னர் எனக் குறிப்பிட்டுள்ளனர். திருவரங்கத்தை துருத்தி என்று இளங்கோ
அடிகள் பாடுவதும் சிந்திக்கத் தக்கது. மணல்மேடிட்டு சிலகாலம் துருத்தியாக இருப்பதை பிற்கால சோழர்கள் காவேரியை ஆழப்படுத்தி அணையும் கட்டினர் எனலாம்.
19-ஆம் நூற்றாண்டு காவேரியில் திருச்சி மாவட்டத்தில் பாசன மேலாண்மை பற்றிய அரிய செய்திகள் உள்ள ஆவணங்கள் ஆராயப்பட வேண்டும். நூற்றுக்கணக்கான
ரிப்போர்ட்ஸ் உள்ளன.

NG
Reply all
Reply to author
Forward
0 new messages