யா மரத்தின் பட்டை விசேடமானது. நீர்ப்பசை மிக்கது.
எனவே, பாலை நில அமைப்பிலும், அல்லது வேசை காலத்திலும்
காடுகளில் யானைகள் உரித்து விரும்பி உண்ணும் காட்சி
இன்றும் காணலாம். இப் பட்டையால் மரத்துக்கு
வந்த பெயர் யா. பாலையின் தெய்வம் கொற்றவை
ஆ மலரை (= யாவின் பூவை) விரும்பி அணிபவள்
என்கிறது தேவாரம். ஆச்சா மரம் என்பர் தற்காலத்தில்
(நச்சினார்க்கினியர்). ஆச்சா (யா) மரம் தான் தமிழரின்
மங்கள இசைக்கருவியான நாகஸ்வரம்
செய்யப் பயன்படும் முதன்மை மரம்
அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம்மன் - கலித்தொகை
“அங்ஙனங் கூறின அளவிலே ஞாயிறு படுகின்றமையைக் கண்டு பிரிந்தார்க்கு வருத்தந்தகும்படியாக மாந்தளிர்போலும் நிறத்தைக்கொண்ட மாலைக்குமுன்னாகிய இக்காலத்தே இவ்வூரின் மகளிர் தாம் தளிர்விரவின மாலைகளைச் சூடி ஆடவர்மேல் தாம் வைத்த நலத்தைப் பாடி இன்புறுவர்கள்; அவர்களைப்போல ஆச்சாமரந் தளிர்க்குங் காட்டிடைச்சென்றவர் மீண்டுவரின் யாம் மனமகிழுவேம்; அதனாற் பெற்றதென்? அவர்வரக் கண்டிலேம் என்றுங் கூறினாள்;” நச்சினார்க்கினியர்
மலைபடுகடாம் 429:
உம்பல் அகைத்த ஒள் முறி யாவும் - யானைமுறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய யாம் பூவும்,
(பி-ம்.) ' ஆச்சாவிற் பூவும் '
குறுந்தொகை 37.
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழியவர் சென்ற வாறே.
இக் குறுந்தொகைப்பாடலைத் தொல்காப்பிய உரையில் குறிப்பிட்டு,
யாஅம் = யா மரத்தை ஆச்சா மரம் என்கிறார் நச்சர்:
” (மேற்கோளாட்சி) மு. “இதனுள் முன்பே நெஞ்சகத்து அன்புடையார் அதன் மேலே களிறு தன்பிடியின் பெரும்பசி களைதற்கு மென்றோலையுடைய ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப் பொளித்து ஊட்டும் அன்பினையுடைய, அவர் சென்ற ஆறு, அதனைக் காண்பர்காணென்று அன்புறு தகுந கூறிப்பிரிவாற்றாதவளை வற்புறுத்தவாறு காண்க. நம்மேல் இயற்கையாக அன்பிலனென்று ஆற்றாளாவளென்று கருதாது இவளை ஆற்றுவித்தற் பொருட்டு இவ்வாறு கூறலின் வழுவாயமைந்தது” (தொல். பொருளியல், 37, ந.).”
ஆவும் ஆரம் ஓங்கின எங்கணும் - சிலம்பு 12, 2-2.
Being the Goddess of Paalai landscape - Umaa/KoRRavai
enjoys wearing the "yaa" tree flowers:
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் - அப்பர்
(பரிதியஞ் செல்வனும் திகிரியஞ் செல்வியும் பாலைக்குத் தெய்வமென்பர், அடியார்க்கு நல்லார். சிலப். ப. 18.
‘அந்நிலத்துக்குப் பரமேசுவரியைத் தவிர ஆதித்தனும்
தெய்வமென்று சொல்லுவர்’ (தக்க. 55 உரை.) )
கொற்றவைக்காகப் போலும் ஈசனும் ஆ மலர் சூடுகிறான்:
முறை ஆர் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்
திறைஆர் ஒளிசேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணம்
அறைஆர் புனலும் ஆமலரும் ஆடுஅரவும் சடைமேல்
குறைஆர் மதியும் சூடி மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம் - தேவாரம்
ஆ < யா மரம்.
கல்லாடம்:
குரவஞ் சுமந்த குழல்விரித் திருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே
யொட்டுவிட் டுலறிய பராரைநெட் டாக்கோட்
டுதிர்பறை யொருவை யுணவூன் றட்டி
நெட்டா = நெடிய ஆ மரம் = நெடிதுயர்ந்த சால மரங்கள்.
”நறைக்காய் என்பதற்கு ‘நறு நாற்றத்தை உடைய காய்; அது சாதிக்காய்’
என்றும் (முருகு-190), யாமரம்-ஆச்சாமரம் என்றும் (மலைபடு. 429) நச்சினார்க்கினியர்
கூறுவது இன்றும் நாம் அவற்றை அறிந்து கொள்ளத் துணை செய்கின்றது.”
(மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், பக். 308).
யா மரம் ஆச்சா எனப்படுதல் ஏன்? ஒரு சொல்லாய்வு.
பூரித்தல்/பூலித்தல் - மயிர் சிலிர்த்து, உடல் வளைந்து நிற்கும் பூனை.
எனவே, பூனை (< பூல்-/பூர்-), அதுவே பூசை, பூச்சா (மலையாளம் (அ)
குழந்தையர்) என்போம்.
பினைதல் - பிசைதல் - இழையில் பேசினோம்.
பூனை < பூல்- ஒப்பு: யானை < யால்- .
பூனையை பூச்சா என்பதுபோல, த்ராவிட மொழிகளில் பட்டை யாத்தல் உடைய
யா/ஆ மரம் ஆச்சா ஆயிற்று.
I will take yaa tree described in many places in CT
as the aaccaa tree given by Naccin2aarkkin2iyar's ID.
yA/yAam (= A/Aam) tree is aaccaa tree (Shorea Robusta).
MTL clearly says:
ஆச்சா āccā
, n. cf. ஆ;. Sál, 1. tr., Shorea robusta; சாலமரம்.
ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை)
மரா, சுள்ளி, ஆச்சா - இவையெல்லாம் யா மர வகைகள் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்.
Dipterocarpaceae = தமிழில் யா மரங்களின் தாவரவியல் குடும்பம் என அழைத்தல் பொருந்தும்.
யா மரங்கள் மிகுந்துள்ள தீவுகள் யாவகம் என்று கடலாடிய தமிழர்கள் அழைத்தனர்.
நா. கணேசன்
On Tuesday, August 1, 2017 at 8:53:35 PM UTC-7, N. Ganesan wrote:
india
யா மரங்களில் தற்போது தென்னிந்தியாவில் உள்ளனவும் அழியலாம்.
Dipterocarpus indicus Bedd.
Dipterocarpaceae
Endangered
Hopea wightiana Wall.
Dipterocarpaceae
Endangered
Shorea tumbuggiana Roxb.
Dipterocarpaceae
Data deficient
Shorea roxburghii G.Don
Dipterocarpaceae
Endangered
Hopea parviflora Bedd.
Dipterocarpaceae
Endangered
Hopea canarensis Hole
Dipterocarpaceae
Data deficient
Hopea erosa (Bedd.) van Sloot
Dipterocarpaceae
Critically Endangered
Hopea jacobi Fischer
Dipterocarpaceae
Critically Endangered
Vateria macrocarpa Gupta*
Dipterocarpaceae
Critically Endangered
Vatica chinensis L.
Dipterocarpaceae
Critically Endangered
Hopea glabra W. & A.
Dipterocarpaceae
Endangered
Hopea ponga (Dennst.) Mabb.*
Dipterocarpaceae
Endangered
Hopea racophloea Dyer*
Dipterocarpaceae
Endangered
Hopea utilis (Bedd.) Bole
Dipterocarpaceae
Endangered
2017-08-01 20:04 GMT-07:00 N. Ganesan
<naa.g...@gmail.com>:
யா மரம் என்று சங்க இலக்கியம் வழங்கும் மரம். ஆ மரம் என்பது பக்தி கால இலக்கியங்கள். ஆ மரம் ஆச்சா மரம் என்கிறார் நச்சினார்க்கினியர். பாலைத் திணைப் பாடல்களில் யா மரங்களின் பட்டையை யானை உறிஞ்சி தன் பிடிக்கு ஊட்டும்.
This is an old thread.
இப்பொழுது யா மரத்தில் இருந்து எடுக்கும் எண்ணெய் காச நோயைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்:
இந்தோனேசியா, மலேசியா, பர்மா, இந்தியாவில் சுமார் 500 வகை யா மரங்கள் உள்ளன. யாவகம் (> சாவகம்) என ஜாவா தீவுக்கு தமிழ்ப்
பெயர் எவ்வளவு பொருத்தம் எனப் பார்த்து வியக்கலாம்.
உலகின் மிக உயர்ந்த மரங்கள் யா (சால) மரங்களே. யாவக தீவு அருகே உள்ள போர்னியோ தீவில் உள்ளன.
மிகப் பயன்படும் கடின மான இந்த சால மரங்கள் (தமிழில் யா > ஆ (ஆச்சா) ) 500 இனங்கள் உள்ளன.
அவை எல்லாவற்றுக்கும் பெயர் ஷோரியா. இப்பெயர் பெயர் ஸர் ஜான் ஷோர் என்பவர் பெயரால் அமைந்தது.
டாக்டர் ராக்ஸ்பர்க் கொடுத்த பெயர் இது. வங்காள கவர்னராகவும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகவும்
விளங்கிய பிரிடிஷ் காரர் ஜான் ஷோர்.
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.