நூபுரம், நோப்பாளம் (நூ-/நோ- சொற்கள்)

144 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 21, 2017, 11:21:06 AM10/21/17
to Santhavasantham
நூபுரம், நோப்பாளம் (நூ-/நோ- சொற்கள்)
---------------------

சூடு என்று கண்ணின் இமையைச் சொல்லும் கொங்குநாட்டு வழக்கத்தைக் காட்டப் பெருமாள்முருகனின் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’ பார்த்துக்கொண்டிருந்தேன். சூட்டடுப்பு என்பது கொண்டையடுப்பு. இது ‘கோடு உயர் அடுப்பு’, கோட்டடுப்பு எனச் சங்கத் தமிழில் வருகிறது. சூடு - சேவலின் கொண்டைச்சூடு போல, அடுப்பில் உள்ள குமிழ் (Knobs) தான் சூடு. குமரகுருபர சாமிகள் மீனாட்சி பிள்ளைத்தமிழில் சூட்டடுப்பை அழகாகப் பாடியுள்ளார்கள். கண்ணுச்சூடு ‘eyelid' போன்ற சொற்கள் மறந்தும் மறைந்தும் வருகின்றன. ஆத்திசூடி என்னும் பள்ளிக்கல்வியின் ஆதிநூலில் பார்சுவநாதரைக் குறிக்கும் என்பதை விரிவாக எழுதியுள்ளேன். ஆத்தி சூழ்ந்த தேவர் அவர். கண்ணைச் சூழ்ந்த நிமை (> இமை) சூடு என அழைக்கப்படுகிறது. நிமிஷ/நிமேஷ ‘blinking of the eye' என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லின் மூலத் தமிழ்ச்சொல் இஃது.

நோய்தல்.- பெருமாள் முருகனின் மேத் திங்கள், 2000-ஆம் ஆண்டு பிரசுரமான “கொங்கு வட்டாரரச் சொல்லகராதியில்” உள்ள வினைச்சொல் இதனைச் சற்று ஆராய்வோம். பக். 110, “நோய்(தல்) - வி. உராய்தல். ‘எதுக்கு இப்படி மேல வந்து நோயற?’ கொங்குநாட்டுப்புறத்தில் இந்த வினைச்சொல்லை சாதாரணமாகக் கேட்கலாம். இன்னொரு உதாரணம்: “கழுதை குட்டிச்செவுத்தில  நோஞ்சிட்டிருக்கு”. நோய்தல்/நோஞ்சுதல் = உரைசுதல்/உராய்தல்/உரோசுதல் என்னும் பொருளில் வழங்கும் தொன்மையான வினைச்சொல்.

தெலுங்கிலே, நூ- என்றால் எள். நூல் = எள்,  தமிழிலும் உண்டு (சூடாமணி நிகண்டு). நுண்ணியது என்ற பொருளில், ”நூஞாயம் பேசறாள்” என்பது நுணையாடல். -ல் விகுதி ஏற்று, நூல்  ‘thread' என்ற சொல் தோன்றுகிறது. சிலந்தி வாயில் நூல் பிறக்கும். நூல்- என்றாலே முன்பு குருமுகமாகக் கேட்டுப் பயில்வதுதான். குரு தன் நூலை நுவல்வார். நூல்- > நுவல்-தல். தெலுங்கிலே, நூநெய் (=எள்நெய், எண்ணெய்). நூநெ, நூணெ என்கின்றனர். சி. பி. பிரவுன் அகராதி:
నూనె (p. 673) nūne or నూనియ nūṇe. [Tel. నూవు+నెయ్యి.] n. Oil. మంచినూనె sesamum oil, or gingelly oil, తైలము. నెమలినూనె the melted fat of peacocks used in medicine. నూనె కట్లపాము nūne-kaṭla-pāmu. n. A small venomous snake "barred with black." నూనెబుడ్డి nūne-buḍḍi. n. An oil bottle. నూనె బుడ్డిగాడు nūne-buḍḍi-gāḍu. n. The Indian Redstart, Ruticilla rufiventris (F.B.I.) నూనెమడి nūne-muḍi. n. A joint. కీలుగంటు. నూనెఅగిసె the black linseed plant. 

நுங்குலுவில் -லு தெலுங்குப் பன்மையீறு. நுங்கு/நுக்கு/நுவ்வு < நூ “sesame". நூ நூவு > நுவ்வு ஆகிறது. நுவணை = எள்ளுண்டை, இடித்த மாவு. (Cf. கோவை:கொவ்வை). நூ நூகு 

> நுங்கு (nungu/nuggu).
DEDR 3720 Ta. nū, nūvu sesamum; nōlai a sesame ball, a preparation of sesame seed. Te. nū˘vu, nuvvu gingily seed; nūne,  nūniya oil; nū̃-biṇḍi flour of gingili seeds; (VPK) nūgulu = nuvvulu. Kol. (SR.) nuvvū sesamum, til; (W.) nu·ne oil. Nk. nuvv (pl. nuvvuḷ) sesamum; nūne oil. Nk. (Ch.) ū sesamum. Pa. nuvul (pl.) sesamum; nū ney sesamum oil. Ga. (S.3) nuvul  (pl.) Sesamum indicum. Go. (most dialects) nūŋ(g), (Tr. A.) nuŋg sesamum (Voc. 2018); (ASu.) nuṅ, (Koya Su.) nūṅku (pl.) id. Konḍa (BB 1972) nū id. DED(S) 3081.

நூ = எள். -ல் விகுதி ஏற்று நோல்- = எள் ஆகும். நோலை = எள்ளுண்டை.
நோலை nōlai, n. 1. Sesame ball; எள்ளுருண்டை. புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68, அரும்.). 2. A preparation of sesame seed; எட்கசிவு. அணங்குடை  நோலை (பு. வெ. 3, 5). 
நூல்+து = நூறு = பொடி செய்தல்

எள்ளளவும், எட்டுணையும் = நூவளவும், நூத்துணையும் என்றும் சொல்லலாம். நூநுட்பம் = மைக்ரோ டெக், நேனோ டெக் இவற்றில் ஒன்றுக்குப் பயன்படுத்தலாம். நூ-/நு- = நுசுப்பு.  நுசிப்பிடை = மாதர் நுண்ணிடை.  நூ என்னும் அடிப்படையான வேரில் நூகு (நுங்கு), நூவு (நுவ்வு, நுவணை) தோன்றுதல் போல மா “flour" என்னும் சொல்லில் இருந்து மாவு, மாகு (மகிட்டு) உருவாதலுண்டு.

சக்கிமுக்கிக் கற்களை நெரிக்கும்போதோ, அரணிமரத்தை கடையும்போதோ நெருப்பு உண்டாகும். நெரித்தல் வினைதருவது நெருப்பு. அதேபோல, இருபொருள்களைத் தேய்த்தலால் உண்டாவது தீய். தீய்ந்துவிட்டது என்றால் தீயினால் கருகிவிட்டது. தேய்-த்தல் > தீ(ய்). அதேபோல, நோ- : நூ- எனத் தொடங்கும் சொற்கள் மிகத் தொடர்புடையன. நோலுதல்/நோ(ய்)தல் - மெலிதல், வருந்துதல், உரசுதல். நோன்பு < நோல்-. நோல்தல் - உரசுதல் (’ஏண்டா நோயறெ?’ - கொங்குவழக்கு). உராய்வினால் ஏற்படும் பெண்ணுறுப்புப் பெயர் நோனி. சென்னைப் பேரகராதி காண்க. அத்தொகுப்பாளருக்கு, நோல்தல் என்னும் வினைச்சொல் நோனி என்பதன் தாது எனத் தெரியவில்லை.

கோபம், ரோஷம் - மனிதர் மனங்கள் உராசுதலால் தோன்றும் மெய்ப்பாடு. இருபொருள்கள் உரோஞ்சு உண்டாகும் தீயுடன் கோபத்தை ஒப்பிடல் உலக மொழிகள் எல்லாவற்றிலும் உண்டு.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும் (குறள்). ஆங்கிலத்திலும் சினத்திற்கான சொல் உரசலினால் தான்.
(from PIE root *angh- "tight, painfully constricted, painful").
புத்தரின் மகாவாக்கியமும் சினத்துக்கும் நெருப்புக்கும் ஒப்புமை காட்டும்:
An angry person is ugly & sleeps poorly. Gaining a profit, he turns it into a loss, having done damage with word &  deed. A person overwhelmed with anger destroys his wealth. Maddened with anger, he destroys his status. Relatives, friends, & colleagues avoid him. Anger brings loss. Anger inflames the mind. He doesn't realize that his danger is born from within. An angry person doesn't know his own benefit. An angry person doesn't see the Dharma. A man conquered by anger is in a mass of darkness. He takes pleasure in bad deeds as if they were good, but later, when his anger is gone, he suffers as if burned with fire. He is spoiled, blotted out, like fire enveloped in smoke. When anger spreads, when a man becomes angry, he has no shame, no fear of evil, is not respectful in speech. For a person overcome with anger, nothing gives light. - Gotama Buddha

நோப்பு- உரசுதல் - ரோஷம், கோபம், சினம்.

கொங்கு வட்டார நாவல்கள், சிறுகதைகளை ஆராயும் ஆய்வேட்டில், சில சொற்கள் உள்ளன.
நோப்பாளம் = ரோஷம்.
MTL: நோப்பாளம் nōppāḷam , n. < நோ-. Irritation, anger, offence; கோபம். உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.
பெருமாள் முருகன் அகராதி: நோப்பாளம் - பெ. பிணக்கு. ‘என்ன சொல்லீட்டன், நோப்பாளம் வந்திருச்சு.’

உள்ளம் ஓடி உருகலல்லால் 
      உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் 
கள்ள மாதவா கேசவா உன் 
      முகத்தன கண்கள் அல்லவே - நாச்சியார் திருமொழி.

உரைசு-/உராய்-/உரோசு-/உரோஞ்சு- என்னும் தமிழ் வினைச்சொல் ரோசம் > ரோஷம் என்று வடமொழியிலே புழங்குகிறது. தங்கத்தை உரசிப் பார்க்கும் கல் உரைகல்,. செய்யுளின் பொருளை உரசி(பொருத்தி)ப் பார்த்துச் சொல்வது உரை ‘commentary'. ஆண்டாள் (பெரியாழ்வார் புனைபெயர்?) உரோஷத்தை வடமொழியில் இருந்துபெற்று உரோடம் என்கிறாள்.  நோதல்/நோற்றல் உரோய்தல் என்ற பழமையான பொருளில் நோப்பு/நோப்பாளம் = ரோஷம், சினம் என்று தமிழில், கொங்குநாட்டில் பரவலாக வழங்கிவருகிறது.

நூபுரம் ‘சிலம்பு, பாதசரம்’:

நூ- என்னும் தாதுவுக்கு தாழ்ந்த, மெல்லிதான என்ற பொருளை, ஒலிக்கு ஏற்றி “நூபுரம்” என்ற சொல் தோன்றியுள்ளது. நூப்புரம்/நூபுரம்: தூம்பு தூபு என்றே சோழர் கல்வெட்டுகளில் காண்கிறோம். மேலும், தமிழ் ஒரு Phonemic lipi, ஆனல், வடமொழிகள் எல்லாம் Phonetic scripts. எனவே, கார்த்திகை வடலிபியில் கார்திகை. அரத்தம் = சிவப்பு. அரத்தநம் ‘ruby' > அரதநம் (ரத்நம்), நகர் என்றால் விடங்கர்/இடங்கர் ‘gharial' முதலை. ஆற்றங்கரை மணலில் நகர்ந்து செல்வதால் நகர் என்பது காரணப்பெயர். இதனை, நக்கன் என்று தேவார காலத்தில் சிவன் பெயராக தமிழ் ஆக்குகின்றனர். திருநள்ளாற்றில் விடங்கர் லிங்கத்திற்கு நகவிடங்கர் என்று பெயர். நகர்/நக்கர். சோழர் காலத்தில் தேவதாசிகளுக்கு ‘நக்கன்’ என்று பட்டப்பெயர். சிவன் கோயில் தாசிகள் என்பதால். கார்த்திகை/கார்திகை, அரதனம்/ரத்னம், நக்கர்/நகர், .... போல, இந்தியாவின் இரு செம்மொழிகளின் ஊடாடலால், நூப்பு- என்னும் வினை (தாழ்ந்த மெல்லிய ஓசை) தருவது நூபுரம் (< நூப்பு-) = பாதசரம்.

நூப்பு nūppu , n. perh. நூக்கு-. Reduction, subduing, abatement; தணிப்பு. (யாழ். அக.)
நூதல் nūtal, n. cf. நுது-. Being extinguished; அவிகை. (யாழ். அக
நூபரம் nūpuram, n. < nūpura. 1. Anklets formed of little bells; பாதகிண்கிணி. (திவா.) 2. Tinkling anklets; சிலம்பு. (சூடா.) ஆடுவார் பொருவி னூபுரத்தை (கம்பரா. நகர. 56).
நூர்²-த்தல் nūr- , 11 v. tr. Caus. of நூர்¹-. (J.) 1. To put out, quench; அவித்தல். விளக்கை நூர்த்துப்போடு. 2. To appease or suppress, as hunger, anger; ஆற்றுதல்.

தெலுங்கிலே,

1) నూరు (p. 673) nūru nūru. [Tel.] v. a. To grind or sharpen. పదునుచేయు. To reduce to powder, పిండిచేయు. వాని కెంత నూరిపోసినా రాలేదే, నేనేమిచేతును I cannot beat learning into him, what shall I do? నూరురాయి nūru-rāyi. n. A whetstone, a grindstone. సన్నికల్లు, మంగలకత్తి నూరురాయి. నూరు nuru. n. A hundred. నూటపది one hundred and ten. నూరారు nūr-āru. adj. Numberless, unnumbered (lit. a hundred and six) నూరంచులకయిదువు nūr-anṭsula-kayi duvu. n. The hundred-edged (or many edged) thunderbolt of Indra, వజ్రాయుధము. 
2) నూయి (p. 673) nūyi Same as నుయ్యి. నూతివాయికట్టు the parapet around a well. పశ్వాదులు పడకుండా నూతి చుట్టును కట్టినగోడ. 
3) నూపురము (p. 673) nūpuramu nūpuramu. [Skt.] n. An anklet with bells. అందె. 
4) నూనె (p. 673) nūne or నూనియ nūṇe. [Tel. నూవు+నెయ్యి.] n. Oil. మంచినూనె sesamum oil, or gingelly oil, తైలము. నెమలినూనె the melted fat of peacocks used in medicine. నూనె కట్లపాము nūne-kaṭla-pāmu. n. A small venomous snake "barred with black." నూనెబుడ్డి nūne-buḍḍi. n. An oil bottle. నూనె బుడ్డిగాడు nūne-buḍḍi-gāḍu. n. The Indian Redstart, Ruticilla rufiventris (F.B.I.) నూనెమడి nūne-muḍi. n. A joint. కీలుగంటు. నూనెఅగిసె the black linseed plant. 
5) నూతనము (p. 673) nūtanamu or నూత్నము nūtanamu. [Skt.] adj. New, fresh. కొత్త. 
6) నూచ (p. 673) nūca or నూచము nūṭsa. [Tel.] n. Powder, పొడి. నుగ్గునూచము very fine powder, మిక్కిలి పొడి. 
7) నూగు (p. 673) nūgu nūgu. [Tel.] n. Soft down, downiness or hairiness, whether on plants or animals. పరాగము. Efflorescence of salt. The nap on cloth. Bloom, tenderness, లేతదనము. adj. Downy, tender, లేత. నూగు మీసములు downy moustaches. Hairy, rough. నూగువరహాలు or కరుకువరహాలు coins that are rough to the touch. నూగుదోస or నూదోస the woolly cucumber plant, కూతురుబుడమచెట్టు. నూగుబెండ a species of బెమడ (q. v.) నూగుడు nūguḍu. n. Dust, వడ్లులోనగువాని రేణువు. నూగారు. nūg-āru. n. A line of hair up from the navel to the breast. రోమరేఖ, రోమరాజి. నూనూగు nū-nūgu. n. Sprouting down, callow fledge, as of a young beard. "నూనూగు మీసకట్టును." Radha. i. 34. 

மேலும் பேசுவோம்,
நா. கணேசன்



N. Ganesan

unread,
Oct 21, 2017, 7:43:52 PM10/21/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Sat, Oct 21, 2017 at 1:21 PM, Rajja Rajagopalan <raj...@gmail.com> wrote:
பயனும் அறிவும் தரும் விளக்கம்.
நன்றி ஐயா.

மீ. ரா

நன்றி, கவிஞர் மீரா.

கீதையிலே கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்:
பிறவி எப்படி உண்டாகிறது? விடை வருகிறது :

3. மம யோநிர்மஹத்ப்ரஹ்ம தஸ்மிந்கர்பம் ததாம்யஹம் 
ஸம்பவ: ஸர்வபூதாநாம் ததோ பவதி பாரத   

பாரத-பாரதா, மம மஹத்ப்ரஹ்ம யோநி-பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம், அஹம் தஸ்மிந் கர்பம் ததாமி-அதில் நான் கருத்தரிக்கிறேன், தத: ஸர்வபூதாநாம் ஸம்பவ: பவதி - எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
யோனிபேதம் என்றெல்லாம் திருமுறைகளிலே வரும். இவ் வடசொல்லின் தாதுவேரும், தமிழ்ச்சொல்லின் தாதுவேரும் வெவ்வேறு. அதைச் சென்னைப் பேரகராதி உணரவில்லை. தமிழ்ச்சொல் நோலுதல்/நோன்றல் என்ற வினைச்சொல் அடியாகப் பிறப்பது.

--------------------------

-ழ் என்ற எழுத்து -ஷ் என்றும் வடக்கே மாறிவிடும். உ-ம்: கலூழ்- கலூஷ- என்றாதலை வடமொழி நிபுணர்கள் காட்டிவிட்டனர். ஒரு பொருள்/நிகழ்வு புணர்தல்/பொருந்தும் ‘ஸப்ஜெக்ட்-மேட்டர்’ விழைச்சு/விழைவு (தமிழ் நிகண்டுகள்), இந்த விழையம்/விழயம் > விஷயம் ஆகிறது. நெடி எழுத்தின் பின்னர் -ழ் விகுதியேற்பது வாடிக்கை. கொங்கில் துடைப்பத்தை சீமாறு என்போம். சீ (> ஈ- = ஈந்து/ஈஞ்சு/ஈங்கு மரம், ‘date palm',
இந்த சீந்து தான் சிந்து நதி/நாட்டின் பெயர். கூர்மம் ப்ராகிருதத்திலே கும்மம் ஆதற்போல, சீந்து சிந்து என்றாகியது. சீ- ழ் பெறும்போது சீழ் > ஈழம் ‘கள், இலங்கை த்வீப நாமம்’. ஈழவர் ... மா- கறுப்பு. லக்ஷ்மிக்கு அப்படியும் பேருண்டு. மாலோலன் = கரியமாணிக்கம் ஆன பெருமாள். மாழ்- கறுத்தல். எனவே இரும்புக்கும், உழுந்துக்கும் > மாஷ (மாஷ அபூப = மாஷாபூபம்)....

உரோசுதல் உரோசம் > உரோஷம் என்றோ, -ழ் விகுதி ஏற்று உரோழ்- உரோஷம் > ரோஷம் ‘சினம், பிணக்கு’ என்றானதோ என ஆராயலாம். ரிக்வேதத்திலே, உலோக (> லோக = உலகம்) என்ற வார்த்தை தான் பரவலாக உள்ளது. இது தமிழ் என்றதை மேக்ஸ்முல்லர் மறுத்து எழுதினார். அதற்கு ஸ்ரீ அரவிந்தர் நல்ல மறுமொழி கொடுத்தார், அறிவீர்கள்.

அன்புடன்
நா. கணேசன்

 

Sent from my iPhone


> On 21 Oct 2017, at 16:20, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>
> தெரியவில்லை

--
Reply all
Reply to author
Forward
0 new messages