கவிஞர் இமயவரம்பன் எழுதினார்:
> சமண சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்
>பல அரிய செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் மிகச் சிறப்பு.
>வஞ்சியான் வெண்பாவும் மிக அருமை! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, திரு. கணேசன்.
நன்றி, கவிஞரே. இப்பொழுதுதான், நீங்கள் பாரதி மீது பாடிய சந்தவிருத்தம் வாசித்தேன். அருமை.
பேரா. கனக. அஜிததாஸ் (ஆசிரியர், முக்குடை)>> 🙏🙏🙏☝👍👌🌹குழுக்களில் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது. மிக்க நன்றிங்க.
தென்னன் மெய்ம்மன் (மாமல்லபுரம் சிற்பம் ஓவியக் கல்லூரி)>> மிகச் சிறப்பு, ஐயா. பாராட்ட வார்த்தைகள் இல்லை.
--------
GTS ஸர்வே ரிப்போர்ட்டிலே தெளிவாகச் சொல்லியுள்ளனர். மதுரையைச் சுற்றியுள்ள 3 மலைகளில் சமணர்கள் ~1000 ஆண்டு முன் செய்த விளக்குத் தூண்கள் இவை. இத் தூண்கள் சர்வே செய்ய பிரிட்டிஷ் எஞ்சினீர்கள் எழுப்பவும் இல்லை, பயன்படுத்தவும் இல்லை (Ref. GTS reports of the British colonial era). The Deepa Stambha tradition comes from Karnataka.
https://x.com/naa_ganesan/status/1997109694532669685The first Tamil scholar to record these are Deepa Thoon-s is Mayilai. Seeni Venkatasamy (1954 CE). There is a 2022 BBC report in which Stalin Rajangam talks about the 3 Madurai Deepa stambha-s of Tamil Samanar. See Ko. Senguttuvan, Vizhuppuram's posts,
https://x.com/vpmsenguttuvan/status/1996946581086781488 I have given photographs of Jaina presence in Tirupparankunram (200 BC - 1300 AD).
https://x.com/naa_ganesan/status/1998625836463780350Kartikai Deepam festival is an ancient heritage from Indus Astronomy. Due to syncretism between Jainism and Shaivism, this tradition is carried on by both religions. Tamils in India preserve many ancient traditions from these two syncretic traditions: (1) Brahmi script from North brought via Karnataka, then Kongunad (2) JyeSThaa devi worship. Nowhere in India, so many Jyeshta sculptures now abandoned as in TN etc., (3) In the Palitana Jain temples, Kartik Poornima is celebrated by 1000s of devotees. There are hints about Kartikai Deepam on mountain tops in Sangam literature itself. Kartikai Deepam celebrations
வெ. வேதாசலம், எண்பெருங்குன்றம்; ஐராவதத்தின் தமிழ் பிராமி க்ளாஸிக், ... போன்ற நூல்களை மக்கள் வாசிக்கவேண்டும். அரிட்டாபட்டி, குயில்குடி, பரங்குன்று - மூன்றிலும் சமணர் விளக்குத் தூண்கள் பற்றிப் பேசுகையில், இன்னொரு சமண ஆசான் எழுதிய பாடல் நினைவுக்கு வரும்.
வஞ்சி மாநகர் அரண்மனையில் வாழ்ந்த இளங்கோ அடிகள் போல, அரச வங்கிசத்தினராக வாழ்ந்தவர் முன்றுறை அரையனார். இவர் சமணர். இயற்பெயர் தெரியவில்லை. நான்காம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தார். அப்போது வழக்கில் இருந்த பல ஆயிரம் பழமொழிகளில் சிறந்தன 400-ஐத் தெரிந்தெடுத்து "பழமொழி நானூறு" அரிய நூலைச் செய்தார். நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் எனத் தெளிவாகிறது. வையை ஆற்றங்கரையில் இருந்த "திருமருத முன்றுறை" என்னும் மருத மரம் சூழ்ந்த ஊரினர் ஆகலாம்.
"பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை." - (பழமொழி நானூறு - தற்சிறப்பு பாயிரம்
அசோக மரத்து நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.
https://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=45&auth_pub_id=49&pno=1எழுத்தாளர் சு. தி. பாஸ்கரன் 60 ஆண்டுகளாய் மலைகள், பாறைகளில் களப்பயணம் செய்பவர். அவர் கூறுவது, தீபம் ஏற்றப்படும் மலைகளில் எல்லாம் தீர்த்தங்கரர் பாதங்கள் இருக்கின்றன. உ-ம்: அண்ணாமலை, பகவதிமலை (வேலூர்). இதுபற்றிய குறிப்புகள் சங்க நூல்களில் உண்டு. முன்றுறை அரையனாரும், கார்த்திகை தீப விழா குன்றுகளின் உச்சியில் கொண்டாடப்படுவதைக் கூறும் பழமொழியைப் பயன்படுத்தி உள்ளார்.
கன்றி முதிர்ந்த கழியப்பல் நாள்செயினும்
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படும்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. - பழமொழி நானூறு (204)
குற்றங்கள் பலவற்றைக் கனிந்து முதிர்ந்த நிலையில் பலவாகப் பல நாள் செய்தாலும், சிறியார் செய்தவை என்றும் தெரியாது; அது அவர் இயல்பு என விட்டுவிடுவர். ஆனால் உயர்ந்தவர் செய்யும் குற்றம் ஒன்றே ஆனாலும் அது குன்றின் மேல் வைத்த விளக்குப் போல எல்லாருக்கும் தெரியும்.
பிற பின்!
நா. கணேசன்