இரட்டைப்புலவர் வெண்பா - சோறு கண்ட மூளி யார்?

2,189 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 3, 2017, 1:47:46 PM1/3/17
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai
நல்ல விளக்கம் - இரட்டைப் புலவர் வெண்பாக்களுக்கு. ~NG

----------------------

சோறு கண்ட மூளி யார்?

POSTED BY பால கணேஷ்
’சேர்ந்தே இருப்பது?’ என்று சி(வன்)வாஜி கேட்க, தருமி நாகேஷ் ‘வறுமையும், புலமையும்’ என்று பளிச் பதிலளிக்கும் திருவிளையாடல் காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சங்க காலத்தில் புலவர்களோடு வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் இருந்திருக்கிறது. அரசனையோ, பணக்கார வள்ளல்களையோ பாடிப் பரிசில் பெற்றுத்தான் காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருந்திருக்கிறார்கள். அப்படி நான் படித்த சங்ககாலப் புலவர்கள் இருவரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கி.பி. பதிநான்காம் நூற்றாண்டு. சோழ நாட்டில் ஒரு வேளாளர் தம்பதி வாழ்ந்து வந்தனர். சிவபெருமானை வணங்கி வேண்டிய அவர்களுக்கு ஈசன் திருவருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்... ஒரு குழந்தைக்குப் பார்வை கிடையாது. மற்றொரு குழந்தையால் நடக்க இயலாது. இத்தம்பதியர் இது கண்டு மனமுடைந்து வருந்தியபோது, ஒரு பெரியவர், “இவர்கள் ஊனத்தை வென்று, ஞானம் அடைந்து, ஞாயிறு (சூரியன்) போல் உலா வருவார்கள்” என வாழ்த்தினாராம். ஆகவே முதலில் பிறந்தவருக்கு முது சூரியர் என்றும், அடுத்தவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர். (இருவரும் ஒன்றாகப் பிறந்தவர்கள் அல்ல, ஒன்றாக வாழ்ந்ததாலேயே இரட்டையர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.)

அந்தப் பெரியவர் வாழ்த்தியது போலவே இருவரும் தமிழ் ஞானம் பெற்று பாடல்கள் இயற்றும் புலமை பெற்றனர். சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டு பல பாடல்களை இயற்றிய இவர்களை ‘இரட்டைப் புலவர்கள்’ என்று மக்கள் குறிப்பிட்டனர். நடக்க இயலாதவரை, பார்வையற்றவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ள, அவரது வழிகாட்டலின் பேரில் பார்வையற்றவர் நடந்து செல்ல, தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தும், தமிழ்ப் பற்று மிக்க வள்ளல்களைப் பாடி பரிசு பெற்றும் இருக்கிறார்கள். இவ்விதம் தங்களின் ஊனத்தை வென்றிருக்கிறார்கள். இந்த இரட்டைப் புலவர்கள் வெண்பாப் பாடல்களை நிறையப் பாடி இருக்கிறார்கள். பாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடிகளை மற்றவர் பாடுவார். இதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.



ருமுறை நெடுந்தொலைவு நடந்து வந்ததால் பசி மிகுந்திருக்க, இவர்கள் ஒரு ஊரை அடைந்து அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அது பூஜை நேரம் என்பதால் பூஜைக்குரிய மணி ஓசைகள் கேட்கத் துவங்க, இருவரும் பூஜை முடிந்ததும் நைவேத்யப் பிரசாதம் கிடைக்கும் என்று மகிழ்வோடு அங்கே அமர்கின்றனர். அது பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும், கோயிலுக்கு முறையான வருமானம் இல்லாததால் ஷீணித்திருந்த ஆலயம். அதன் அர்ச்சகர் ஒரு வினோதமான காரியம் செய்தார்.
அடுப்பிலே சாதத்திற்குப் பதிலாக ஒரு செங்கல்லைச் சுட வைத்து, அதனை ஒரு தட்டில் எடுத்து அதன் மீது ஈரத் துணியைப் போர்த்த, அதிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பொங்கலை தட்டில் வைத்து மூடியது போலக் காட்சியளித்தது அந்தச் செங்கல். அதை சிவனுக்குக் காட்டி, மணிகள், சங்கு ஆகியவை முழங்க பூஜை செய்தார் அர்ச்சகர். இதை நடக்க இயலாதவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வையிழந்த புலவர்,

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா, நாங்கள் பசித்திருக்க நியாயமா? 

-என்று பாட, நடக்க இயலாத புலவர்,

போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறு கண்ட மூளி யார் சொல்?

-என்று பாடி முடித்தாராம். பாடலை முழுமையான வடிவத்தில் இப்போது படிக்கலாம்: 

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!

-இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.

-புலவர்களுடன் வறுமையும், அத்துடன் நகைச்சுவை உணர்வும் சேர்ந்தே இருந்திருக்கிறது.

-தமிழ் மொழியின் மேல் ஆர்வம் கொண்ட வள்ளல்களும், மன்னர்களும் பலர் இருந்திருக்கிறார்கள்.


மற்றொரு சம்பவம்:

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பொற்றாமரைக்குளத்தில், பார்வை இழந்தவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க இயலாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத் 
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்). அதற்கு பார்வையற்றவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

(அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்). ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'

(கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப் படுத்தலாமே?) இதற்கு இப்படிப் பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்: 

'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.  இங்கேயும் பக்தியுடன் சேர்ந்து அவர்கள் பெற்றிருந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகிறது.

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேகூட மற்றவர் இறந் திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது. http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_05.html

N. Ganesan

unread,
Jan 5, 2017, 9:33:31 AM1/5/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.

சமணத்தின் அடிப்படை வேறு. அது துறவறத்தை மேன்மையாகக் கொண்டிருப்பது. தமிழுக்கு இலக்கணம் அளித்த தொல்காப்பியர், இலக்கியம் அளித்த திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போன்றோர் சோம்பேறிகளா? - என நீங்கள் சொல்லவேண்டும். மிகப் பரவிவந்த வடநாட்டு ஆரியமொழிகள் இலக்கணத்தில் இருந்து தமிழ், திராவிட மொழிகளுக்கு (உ-ம்: கன்னடம்) இலக்கண இலக்கியங்கள் அமைத்து கல்வெட்டுகள் பொறிக்கச் செய்தவர்கள் சமண துறவிகள் ஆவர். 

“சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.”

சமணம் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறீர்கள். மதுரைக்கு சுனாமி வந்தது என எழுதும் உங்கள் விஞ்ஞானப் பார்வை விஞ்ஞானிகளை வியக்கவைப்பது. சமணர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்வதில்லை. 

----------------

இரட்டைப் புலவர் வெண்பாவின் பொருளை ஶைலஜா பெங்களூரில் (வெங்காலூர் - பழைய தமிழ்ப்பெயர்) இருந்து 2007-ல் எழுதியுள்ளார்.
ஊர்மக்கள் கோயிலில் நடப்பதைப் பின்னர் சரிசெய்தார்கள் என்பர்.
ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,

'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'

என்றுபாடவும் குருடர்,

                                                                       '- போங்காணும்!
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்.'

என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.

அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.”

நா. கணேசன்

ஆங்கூர் என்ற ஊரில்லை. 
நாங்கூர் என்றும், வல்லாளியப்பா என்றும் பாடம்.

N. Ganesan

unread,
Jan 5, 2017, 10:23:07 AM1/5/17
to சந்தவசந்தம், housto...@googlegroups.com


On Tuesday, January 3, 2017 at 2:29:26 PM UTC-8, yogiyaar wrote:
ஆம்.. உண்மை யானும் இந்த இரட்டைப்புலவர்கள் பற்றி 9, 10 வகுப்புகளிலேயே
 யான் படித்து வியந்துள்ளேன், என் எண்ணக்கடலைக் கடைந்ததற்கு நன்றி.
 யோகியார்


கோவில்களில் ஹரிஜன பிரவேசம் என்ற இயக்கத்தை ஹிந்து சமயத்தைக் காப்பதற்காக
காந்தியடிகள் தொடங்கினார். அதன் விளைவு இந்தியாவின் குக்கிராமங்களில் எல்லாம்
எதிரொலிக்க ஆரம்பித்தது. இரட்டைப்புலவர் வெண்பாவில் தொடங்கி சிறுகதை
1934-ல் புதுமைப்பித்தன் ‘கடவுளின் பிரதிநிதி’ என்ற சிறுகதை எழுதினார்:
கதையை இங்கே படிக்கலாம்,

இரட்டைப் புலவர் வெண்பாவின் பொருளை ஶைலஜா பெங்களூரில் (வெங்காலூர் - பழைய தமிழ்ப்பெயர்) இருந்து 2007-ல் எழுதியுள்ளார்.
ஊர்மக்கள் கோயிலில் நடப்பதைப் பின்னர் சரிசெய்தார்கள் என்பர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 5, 2017, 10:25:22 AM1/5/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.


கோவில்களில் ஹரிஜன பிரவேசம் என்ற இயக்கத்தை ஹிந்து சமயத்தைக் காப்பதற்காக
காந்தியடிகள் தொடங்கினார். அதன் விளைவு இந்தியாவின் குக்கிராமங்களில் எல்லாம்
எதிரொலிக்க ஆரம்பித்தது. இரட்டைப்புலவர் வெண்பாவில் தொடங்கி சிறுகதை
1934-ல் புதுமைப்பித்தன் ‘கடவுளின் பிரதிநிதி’ என்ற சிறுகதை எழுதினார்:
கதையை இங்கே படிக்கலாம்,

கடவுளின் பிரதிநிதி

Puthumaippiththan - புதுமைப்பித்தன்


சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.

அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.

அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.

கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்
சோறுகண்ட மூளி யார் சொல்.

சிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.

ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.

இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.

இரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.

சேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.

ஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.

ஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.

ஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.

கோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.

கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.

ஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.

அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.

திரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.

ஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.

அவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

அன்று சாயங்காலம்.

மேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.

துவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

முதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.

பிறகு-

ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

கோவிலுக்குள்ளா?

"அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?" என்றார்.

"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.

திரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.

சுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா? பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ? இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்? கலக்கம், சந்தேகம், குழப்பம்.

உள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.

"பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.

உடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.

துவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.

இப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது? நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.

ஊர் அன்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது.

இந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா?

திரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.

தூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.

இதை எதிர்பார்க்கவில்லை.

திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.



3
சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.

அதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே?

வெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.

ஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவர் இல்லை.

கோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.

அங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார். 

திரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை. 

அவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.

திரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை. 

அவ்வளவு தலைவலி. 

உணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.

அன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.

நடுநிசி!

சாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.

"இதுவரை நடந்துவந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா?"

இந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம்! என்ன சோகம்! என்ன நம்பிக்கை!

சங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.

"ஏ! தெய்வமே, நீயும் உண்மைதானா?"

இதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.

மணிக்கொடி, 25.11.1934 
 

 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 5, 2017, 1:07:43 PM1/5/17
to housto...@googlegroups.com, mintamil, vallamai, shylaja
ஶைலஜா?

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2017-01-05 20:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



Reply all
Reply to author
Forward
0 new messages