Re: [வல்லமை] Re: ஆழி மழைக்கண்ணா!

65 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 21, 2013, 8:46:42 AM12/21/13
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com


On Friday, December 20, 2013 7:41:47 PM UTC-8, shylaja wrote:

மிக நன்றி, ஸ்ரீமதி ஶைலஜா

ஆழிமழைக் கண்ணன் வருணன் என்பது பற்றி விரிவாக புஸ்தகம் 2014-ல் வெளிவரும்.
ஜனவரி 10 அன்று பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழைத்திசையியல்
ஆய்வு நிலையத்திலும், சென்னையில் ஜனவரி 17 அன்று சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப்
ஆசியன் ஸ்டடீஸ் நிறுவனத்திலும் உரையாற்ற உள்ளேன். முடிந்தால் வாருங்கள்.

அழகிய சிங்கர் ஸ்வாமி கண்ணன் என்றால் கிருஷ்ணன் என்பது பொருந்தாது.
கண்ணன் என்றால் இங்கே வருணன் தான். சங்க இலக்கிய காலத்தில்
பல மக்களுக்கும் பெயர் கண்ணன். கண்ணந்தை என்ற கோத்திரமும் உள்ளது.
தொல்காப்பியத்தில் இச் சொல் அமையும் விதியுண்டு: கண்ணன் + தந்தை  = கண்ணந்தை.
கல்வெட்டுக்களில் ஏராளமாக வரும். சங்க காலத்தில் சிவன் பெரிதாகத் தோன்றாக் காலம்.
கௌரி (< கோடு. வேடஹ்த்தில் கௌரி/கௌடீ என்றால் ஆமான் பசு. எனவே, bos gaurus என
அக் காட்டெருமைக்கு விலங்கியற்பேர் இன்றும் உண்டு. (gaurus < gaurii) < Tamil kODu) இதைக் கன்றில் யானைகளைப்
பிடிப்பதுபோல் பிடித்து வளர்ப்பதுண்டு. வண்டி பூட்ட உதவும் - விளையாட்டுக்கு பெருவேளிர்
பூமிகளில். இன்றும் வடக்கே இவ்வழக்கம் உண்டு. மித்துன் என்பர் இக்காளைகளை.)
கண்ணன்-வருணனின் மனைவியாக இருந்த காலமஃது. பின்னர் தேவார காலம் போன்றவற்றில்
சிவன் அணக்கு வருணனின் பல பண்புகளைப் பெற்று மகாதேவன் ஆகிறார்.

பிற பின்னர்!
நா. கணேசன்


2013/12/21 N. Ganesan <naa.g...@gmail.com>
On Thursday, December 19, 2013 6:19:37 PM UTC-8, shylaja wrote:



2013/12/19 தேமொழி <them...@yahoo.com>

ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால் ,,,>>> ஆமாம் தே மொழி    இந்தப்பாடலுக்கு மட்டும்  கடலைப்போல ஆழமான அர்த்தம்...ஆனால் பொதுக்கருத்து என்ன வெந்றால் மழை வேண்டும் இறைவனின் அருள் மழை! அருட்கடலிலிருந்துதான் அருள் மழை  தோன்றுகிறது 

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக்  கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))<<<<  ஆதிமனிதனைமுதலில் தோ ற்றுவித்ததால் அண்ணல் மேனி கருத்திருக்குமோ?:)

அறிவியல் கருத்துக்கள் இப்பாடலில் சற்று அதிகம் அதனைஇந்த வரிகள் சொல்கின்றன அவள்  அளிக்கும்

்நீர்ச் சுழற்சி ஓவியத்தைக் கொஞ்சம் பாருங்கள்!அவள் எந்த வகுப்பறையில் போய் Hydro Cycle எல்லாம் படித்தாள்?

ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)

 

ஆழிமழைக் கண்ணா என ஆண்டாள் சொல்வது வருணன் என்று பழைய உரைகாரர்கள் குறிப்பிடுவது
சரியாக இருக்கலாம். அணங்கு என்னும் நெய்தற் தெய்வமாக வருணன் சுருங்கிவிட்டார். 
ஆனால் மிகப் பழைய காலத்தில் வருணன் மகரமாக, கௌரியின் புருஷனாக காட்டப்படுகிறார்,
அவரது நிறம் கருமை. அதனால் தான் திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணா என்கிறார் கோதை.
மகரமுதலையாக வருணன் காட்டப்படுவது 4500 ஆண்டுகளாய் இந்தியாவின் சமய வரலாறு.
வருணபகவானின் ஆகாயத்தில் ஆற்றலை ரிக்வேதக் கடைசி அத்தியாயம் காட்டுகிறது.
அண்மையில் கிட்டியுள்ள திருப்பரங்குன்றத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டும் குறிக்கிறது.

நீங்கள் சொல்லும் 
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து (Infiltration & Run-off)
முகந்து கொடு = அள்ளிக் கொண்டு (Capillary Action)
ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி (Evaporation)
- மூன்று செயல்களுக்கும் அதிபதி மகரம் தான்.
கடல் நீரிலும், நிலத்திலும் வந்து செல்வதால் அதன் தெய்வத்தன்மை தொல்காலத்தில் மிக
பெருமையாக இருந்திருக்கிறது. உதாரணம்: சீனர்களின் டிராகன். அது முதலில்
மகரம் என்பதற்கான சான்று இன்றும் முதலையின் நான்கு கால்கள்
முதலை பாம்பாக டிராகன் ஆகிவிட்டபின்னரும் (பௌத்தத்தின் சீனநாட்டுத் தாக்கம்)
தெரிகின்றன. செம்பூழிக் காலத்தில் முதலை ஒரு liminal being traversing between sky and earth.
அதுவே பின்னர் வருணன், வருணனின் வண்ணத்தால் ஆண்டாள் கண்ணன் என்கிறாள்.
திரௌபதியை கிருஷ்ணா என்று கருமையால் அழைப்பதுபோல. இதுபற்றி
சிற்பசாத்திரம் விஷ்ணுதர்மோத்தரம் நிறையச் செய்திகள் தருகின்றன.
2007-லிருந்து வருணன் வழிபாட்டின் அடிப்படைகளை ஆராய்ந்தபோது ‘ஆழிமழைக் கண்ணன்’
என்றால் வருணன் எனப் புரிகிறது.

நானே முதலில் ஆழிமழைக்கு அண்ணன் பர்ஜன்யன் என்று படித்ததை நம்பி எழுதியிருக்கிறேன்.
ஆனால், ஆழிமழைக் கண்ணன் = வருணன் எனல் சரி எனத் தெரிகிறது.>>>>

வருணன் என  பல உரையாசிரியர்கள் கூறுகின்றனர்   உண்மைதான்...ஆண்டாள் சிறுமி மழைத்தெய்வம் பெயர் அறியாதவள் ஆகவே  கண்ணா என பொதுவாக சொல்வதாகவும், சங்கு சக்கரம் தரித்து  (வைணவச்சின்னங்கள் )    நீர் கொடு என்று சொல்வதாகவும் ஒரு பக்கம் கருத்து உள்ளது.   திருப்பாவை 30பாடல்களையும் முழுக்கப்படித்தால்  அதன் பெருமையை பிறகுவந்த ஆச்சார்ய பெருமான்களும்  சிறப்பு செய்வதைக்கண்டால்  கோதை ஒன்றும் அறியாச்சிறுமி அல்ல என்றே தோன்றுகிறது. அவள்   எதிலும் கண்ணனைக்காண்கிறவள்  உனக்கே நாம் ஆட் செய்வோம் உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது என்றெல்லாம் றெல்லாம்    அடித்துப்பேசுகிறவள்  மழைவேண்டி பர தெய்வத்தை  வேண்டுவாளா என சிந்திக்கவும் வைக்கிறது.

இதர விஷயங்கள் நீங்கள் இங்கு பதிவு செய்தவை  சிறப்பாக உள்ளன நன்றி

பேரா. Francois Gros இந்தப் பழைய உரைகாரகள் கூற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
12 வருடங்கள் முன்னர் கவிஞர் பேரா. அனந்த் மடலைப் பாருங்கள்.
இன்று பிரெஞ்சு தெரியாதவும் ஆறாந்திணைத் ட்தெய்வம் கூகுளாண்டவர் தயவால்
ஆங்கிலம் ஆக்கிப் புரிந்துகொள்ளலாம். பேரா. குரோ தரும் செய்தியை
தட்டச்சு செய்து தருகிறேன். 

நா. கணேசன்
 

தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.>>>>   சற்று வித்யாசமாய் எழுத நினைத்ததின் விளைவு மற்றபடி  இருப்பதை எடுத்து அளிப்பதை தவிர   கற்பனைக்கு அதிகம் வேலை இல்லை:)



..... தேமொழி






On Wednesday, December 18, 2013 9:03:49 PM UTC-8, shylaja wrote:

பெரியாழ்வார்  இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டார் உண்மையில் அவர் தூங்கவே இல்லை ..மகளுக்கு முன்பாய்  எழுந்து அவளிடம் தான் எழுதிய ஒருபாடலைக்காட்டவேண்டும் என்னும் பரபரப்பு.அதிலும் தமிழுக்கே  அழகுதரும் ‘ழ’ என்ற எழுத்தை வைத்து  தான் எழுதிய பாசுரத்தை  வாசித்துக்காட்டும் ஆவலில்  இருந்தவரை  கோதை நோக்கினாள்.
 
 
“என்ன அப்பா  இன்று தங்கள்முகத்தில்  இத்தனை  சுறுசுறுப்பு! கண்கள் அலைபாய்கின்றன வாய் ஏதோ சொல்லத்துடிக்கின்றன?”
 
மகள் கேட்கக்காத்திருந்தவர்போல  ஆழ்வார் பெருமான்    சொல்ல ஆரம்பிக்கிறார்.
 
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             
 
”ழகரத்தை  பத்து முறை  பயன்படுத்தி எழுதினேன் அம்மா! ”என்றார் பரவசமாக
 
“அப்படியா  அப்பா! நீங்கள் எட்டடிபாய்ந்தால் நான் பதினாறடி பாயமாட்டேனா என்ன?!  கேளுங்கள் இன்றைய பாசுரத்தை” என்று குறும்புதவழ  சொன்னாள்  கோதை. புன்னகை மாறாமல்  ஆழ்வாரை ஏறிட்டுவிட்டு பாசுரத்தை வாசித்தாள்.

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
 
 
 
 
“ஆஹா!  கோதை!! என் பாட்டினில் ‘ழ’ பத்துமுறைதான் வருகிறது உன் பாட்டிலோ 11 முறை வருகிறது! பூமகளை  பூமனிதன்  வெல்லமுடியுமா  ? அருமை அம்மா!”
 
”அப்படியில்லை அப்பா...  உங்களிடம் நான் கற்ற பயிற்சியின் தேர்ச்சியே இது! அப்பா! நான்  அண்ணலை கண்ணா என்று  செல்லமாய் அழைக்கலாம் தானே?’
 
“கூடாது என்றால் நீ  அழைக்காமலா போய்விடுவாய் கோதை?”
 
“போங்கள் அப்பா...சின்னக்கண்ணனைக்கொஞ்சி்கொஞ்சி உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.
பக்தியும் ஞானமும்  பிரேமையாக வரவேண்டும். சிருங்காரம் சேரும்போது  அந்நியோன்னியம் அதிகரிக்கும் அன்பு ததும்பும்   பக்தி என்றால் காதல்.  பெருமானிடம் நாம் கொள்ளும் காதல். கண்ணனுக்கே ஆமது காமம்..அதனால்தானே ஆழ்வார்பெருமான்கள் சிலர் நாயகிபாவத்தில்  அண்ணலை தன் வசமாக்குகிறார்கள்.? நானோ நிஜத்தில் பெண்.நான் எப்படி  பிரேமையின்றி  பாடல் எழுத முடியும்? ஆனால் பிரேமையே  எல்லா  பாடல்களிலும் ஆக்கிரமிக்காது அப்பா. வேத சாரத்தைப்பிழிந்துதர நினைக்கிறேன்...சரி  பாடலை நான் விளக்குவதைவிட  என்பாடலைக்கேட்ட  ஒரு  பக்தையின்  விமர்சனமாக  இனி கேளுங்கள் அப்பா...”
 
“உத்தரவு தாயே!”
********************************************************
 
ஆயர்பாடித்திருநகரில் மார்கழி பிறந்துவிட்டது  பனி இல்லாத மார்கழியா?பனிக்காலம் வந்தால் மழை இருக்காது அடுத்து கோடைவந்தால் மழைக்கே இடமில்லை. மழை இல்லாவிட்டால்  மாடு கன்று மக்களின் கதி என்ன? முதல்பாட்டிலேயே  பாவையரை நீராட வரச்சொல்லி அழைத்தாயிற்று  யமுனையோ வற்றிக்கிடக்கிறது  மழை பெய்தால் நீர்நிலை நிறையும் நாட்காலே நீராடலாம். பரமனடி பாடலாம். நெய் உண்ணாமல் பால் உண்ணாமல் மை எழுதாமல் பூச்சூடாமல் வம்பு பேசாமல் புலன்களைக்கட்டிவைத்து புருஷோத்தமனை வழிபடலாம்.  எல்லாவற்றிர்க்கும் மழை பிரதானம் அல்லவா? தோழிகள்  கேட்பார்களே”ஏனடி  கோதை நீராட அழைக்கிறாயே  யமுனையில் மண்ணில்தான் புரளவேண்டும்.”என்று பரிகாசம் செய்வார்களே!
 
மழைதெய்வத்தை வேண்டிக்கொள்வோம் என முடிவெடுக்கிறாள் கோதை
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
 
.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!இதில் வரும் ஆழி-மழை-கண்ணா யாராக இருக்கும்?


கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! அதிலும் பெண்களுக்கு  மனதுக்குப்பிடித்தவர்களை  இப்படி அழைக்க மிகவும் பிடிக்கும்!

 மழைக்கண்ணனாமே அப்படியானால் நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)

* இந்திரனா? அவனைத்தான் அன்று  தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தூக்கி குன்றுக் குடையாய் எடுத்தாய் குணம் போற்றியாகிவிட்டதே.. கண்ணனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவனைப் போய் கூப்பிடுவாளா? :)

* வருணனா? அவனோ  அன்று  கடலில் அலையே இல்லாமல் பண்ணியபோது  ராமனிடம் சரணடைந்தவன் ஆயிற்றே ! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! மனத்துக்கு இனியான் இராமன்! ! அந்த  இராமனின் எதிரி  வருணன் அவள் எதிரியும் தானே?   பிறகு  கோதை,  வருணனைக் கூப்பிடுவாளா? :)


எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! சாதாரணப்பெண்ணா கோதை  அறிவால் வாழ்பவள் அல்லவா?எனவே கண்ணனையே மழைக் கடவுளாக  அழைக்கிறாள்!
 
கண்ணனின் கண்களில்  கருணை மழை எப்போதும் உண்டே! உண்மையான பக்தர்களைக்காணும்போது அவன் கண்களில் ஆனந்த மழையென  நீர் பொழியுமாம். எப்படி என்கிறீர்களா?
 
குசேலர் அன்று கிருஷ்னனின் திருமாளிகைக்கு வருகிறார்.தன் நண்பனும் பக்தனுமான  குசேலன் வருவதை அறிந்த  கிருஷ்ணன் அதிவேகமாய்   எழுந்து நடக்கிறான்.  எதிர்கொண்டு அழைத்து பக்தனை  இறுக அணைக்கிறான்.
ப்ரீதோவ்ய முஞ்சத் அபீந்தூன் நேத்ராப்யாம் புஷ்கரேக்ஷண:
பரமபக்தனானான். செந்தாமரைமலர்கள் போன்ற இருகண்களாலும் ஆனந்தக்கண்னீரை வர்ஷித்தான். குசேலருக்கு வரப்போகிற பெரிய ராஜ்ஜியத்திற்கு பட்டாபிஷேகம் செய்தது போலிருந்தது என்கிறார்  சுகப்பிரம்மம்  .அவரது  வாக்கினால் வந்த விஷயம் இது ! ஆழிமழைக்கண்ணா என் ஆண்டாள் விளித்தது சரிதானே!
 
.ஆழி என்பதற்கு  அநேக அர்த்தங்கள்
 
 பொய்கைபெருமான்  அருள்வாரே முதல்பாடலிலேயே
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக்கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
 
என்கிறார்
 
இதில் முதல் ஆழி  சக்கரம் இரண்டாம் ஆழி கடல்.
ஆழி எனும் சக்கரம் பெருமானின் பஞ்ச ஆயுதங்களில் தலைமையானது.சக்ராயுதம்  தான் சக்கரத்தாழ்வார் என்றும்  போற்றப்படுகிறார். சுதர்சன சக்கரம் வலிமையானது துன்பம் போக்கக்கூடியது.  சக்கர பிம்பத்தில் அதைச்சுற்றி ஒருவளையமும் தீக்கொழுந்துகளும்   இருக்கும். சூர்யகோடி ஸம்ப்ரபம்  என்பார்கள் . அத்தகைய  ஒளியும்  வலிமையும் கொண்டது.
 
 

 
 
ஆழிமழைக்கண்ணா என்னும் ஆரம்ப வார்த்தைக்கு கடல்போன்ற கம்பீரமான  தோற்றத்தை உடைய மழைக்குத்தலைவனான  கண்ணனே!
ஒன்றும் நீ கைகரவேல்... நீ ஒன்றையும் ஒளிக்கக்கூடாது
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து முகந்து கொடு = அள்ளிக் கொண்டு
 ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி
ஆர்த்தல் = ஒலி எழுப்பல் எனக் கொள்ளலாம்!

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து....காளமேகப்பெருமான்.
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! மல்லாண்ட திண் தோள் என்கிறார் ஆண்டாளின் அப்பாவும். தோள் கண்டார் தோளே கண்டார் என்கிறார் பின்வந்த கம்பரும். ஆணுக்கு அழகு தோள்.

பற்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! நாபிக்கமலத்தையுடையவன்..

ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னி,,,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடித்து(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ  என்பாள்  பிறகு ஒருபாட்டினில்.. சங்குக்கு அழகு முழங்குவது)

முதலில் மின்னல்! அப்புறம் இடி- என  விஞ்ஞானம்  கற்பிக்கிறாள் கோதை! 
ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!
 
தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துகிறது மழை!
 
 வாழ உலகினில் பெய்திடாய்! =  அம்புச்சரமாய் மழை மட்டும் வரட்டும் அது அழிவாகாமல் நல்லபடியாய்  பெய்து நாங்கள்  எல்லாரும் வாழ,  மழை பெய்யட்டும்!
 
 

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில்,
மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
 

நாங்களும் மார்கழி நீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய் = மழை பெய்தால் தானே,  ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்! மகிழ்ச்சிவரும்? மார்கழியில்  மகிழ்ந்துநீராடுவோம்   எம் தோழிப்பெண்களே!


ஆழிம‌ழைப்பாட‌லை ம‌ழைவேண்டிபாட‌லாம் என்கிறார்க‌ள்

.


--
 
 

. .

Reply
Forward
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

N. Ganesan

unread,
Dec 21, 2013, 9:01:01 AM12/21/13
to vall...@googlegroups.com, mintamil, Kannabiran Ravi Shankar (KRS), housto...@googlegroups.com


On Thursday, December 19, 2013 4:42:52 AM UTC-8, தேமொழி wrote:
ஊழி என்றால் உலகம் என்ற பொருளும் இருப்பதால் 

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து = என்பது ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதிமனிதனைப் போன்ற கருநிறம் என்ற அறிவியல் கருத்தினைக்  கொண்டதாகவும் பொருள் கொள்ளலாமா ஷைலூ ;-))

தந்தை மகள் உரையாடல் மனதைக் கவர்கிறது, நல்லதோர் கற்பனை.



தேமொழி,

 இந்த அழகான பார்வையை முதலில் எழுதியது மாதவிப்பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர். 2008-ல்:.
2008 மார்கழியில் ரவி எழுதியது பாருங்கள். 

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே - என்று ஏன் ஆண்டாள் (பெரியாழ்வார்?) சொல்கிறார்
என்று இப்பொழுது புரிகிறது. சங்ககாலத்தில் கண்ணன் என்று பலருக்கும் பேர்.
கண்ணன் (< கிருஷ்ணன்), விஷ்ணு (< விள்- என்னும் தமிழ். இருக்குவேதத்தில் சூரியக்கதிர்),
நிறத்தால் அப்போதைய பெருந்தெய்வம் வருணன் கண்ணன் என்று வணங்கப்பட்டுள்ளான்.
க்ருஷ்ணப்ரேமி ஆன ஆண்டாள் தம் திருப்பாவையில் கண்ணன் என்று க்ருஷ்னனைச் சொல்லாமல்
சங்கத் தமிழ்த் தெய்வம் கரிய அணங்கு வருணனைத்தான் சொல்கிறாள். எனவே
சங்கத் தமிழ்மாலை தான்.

நா. கணேசன்
 




 

N. Ganesan

unread,
Dec 23, 2013, 7:11:17 AM12/23/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, tamil_...@googlegroups.com
On Monday, December 23, 2013 1:17:42 AM UTC-8, N. Kannan wrote:
2013/12/23 N. Ganesan <naa.g...@gmail.com>
ஆழிமழைக் கண்ணன் வருணனின் தோற்றம்  (3500 - 3800 ஆண்டுகள் முன்னர்):
Archaeologists of ancient India ask the opinion about this sculpture:

சங்க காலத்ததும், அதற்கு முந்தையதுமான் ’மழுவாள் நெடியோன்’ வருணன் இங்கே
முதலையாகக் காட்டப்படுகிறான். பன்றி என்று பேரா. அஹுஜா போன்றோர் சொல்லுதல் 
பிழையானது. பாண்டிச்சேரி EFEO-விலும், சென்னையிலும் விளக்கி நூலும் அடுத்த ஆண்டு அச்சாகும்.


நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? திருமால் வழிபாடு காலம் கடந்தது என்றுதான் அக்கட்டுரை சுட்டுகிறது. வராக அவதாரம் பற்றி திருவாய்மொழி நிரப்பச் செப்பும். ஆண்டாள் கூட பெருமாளை இதை வைத்துக் கிண்டலடிப்பாள். ஆனால், அது முதலை, அது வருணன் என்று எப்படிச் சொல்கிறீர்கள். புரியவில்லை!

மதுரைக்காஞ்சியின் அடிகளுக்குத் தொடர்ச்சியாக ஆண்டாள் பாசுரம் ஏற்படுகிறது. மதுரைக்காஞ்சி அடிகளில் உள்ள மழுவாள் நெடியோன் பன்றி அல்லன், அது மகரம்.
(அதாவது ஆண்டாள் பாடும் ஆழிமழைக் கண்ணன் வருணன்).

இந்தியாவின் மத்திய அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவில் ப்ரஸல்ஸ், பெல்ஜியம் நகரில் கலைக்கண்காட்சி நடத்துகிறது.
சிந்து நாகரீகத் தொடர்ச்சியாய் வரும் கௌரி கணவன் மகரவிடங்கருக்கு கிடைத்துள்ள அரிய சான்றை எடுத்துச்சென்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சப்தார் அலி என்பவர் கண்டுபிடித்தளித்த மகரமுதலை வருணன் தவறாகப் பன்றி என்று முதலில் பிரக்தாரா இதழில் எழுதினது
சஞ்ய குமார் மஞ்சுல், அர்வின் மஞ்சுல். அது இன்னும் வடக்கே இருக்கிறது என்பதற்கு டி.பி. சர்மா, நாமன் அகுஜா, ... போன்றவர்கள் எழுத்து சான்று.
ஆனால் என் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தபின் இரா. நாகசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, சேசாத்திரி, கா. ராஜன் போன்றோர் இது முதலை தான்
பன்றி அல்ல என அறிவிக்கின்றனர். விரிவாக எழுதிக் கொண்டுள்ளேன். 

This artefact is Post-Harappan sculpture, and NO representation of Pig (or, for that matter, dogs) is found in 6000 seals and tablets in Harappan art. That tells this direct successor is
not pig at all. This Makara gives a great clue to what is found as Anthropomorphic Axes in Copper Hoard Culture in Yamuna-Ganges Plain in 2nd millennium BC,
recorded as Mazhu VaaL Nediyon in Sangam literature.

இந்தப் பழைய இரு கட்டுரைகளும் ஏன் ஹரியானா போஸ்ட்-ஹரப்பன் சிற்பம் மகரம் (பன்றி அல்ல) எனக் காட்டும் என நினைக்கிறேன்.


திருப்பாவை நோன்பே மகரத்தின் மனைவி கௌரி வழிபாடுதான். மார்கழிக்கு அப்புறம் மகர மாதம்: தூய தமிழில் தை (cf. தந்தை, எந்தை, நுந்தை)

விரிவான நூல் 2014-ல்!

Happy New Year!
நா. கணேசன்



கவியரசு கண்ணதாசன் கட்டுரை இது: (அர்த்தமுள்ள இந்துமதம்):
(கவியரசு சேலத்தில் திராவிட இயக்கத்தில் இருந்தபோது ஜலகண்டாபுரம் கண்ணன்
பேரில் கண்ணதாசன் ஆனார். பின்னாளில் கண்ணபிரான்-தாசன் ஆனார்.)


ஆண்டாள் ஒரு வசியக்காரி. உள்ளே நுழைந்தாள் வெளியே வரவே முடியாது. கவியரசு படும்பாடு அக்கட்டுரையில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சொக்கிப்போய் எழுதியிருக்கிறார்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

நா.கண்ணன் 
Reply all
Reply to author
Forward
0 new messages