மதுரைக் காஞ்சியின் இரு பெரும் நியமம்: (1) கூடல் அழகர் கோயில் (இருந்தையூர்) (2) மீனாட்சி கோயில் (பாண்டியன் அரண்மனை).
அண்ணல் கோயில் என்பது பாண்டிய மன்னன் அரண்மனை. மாயோன் கொப்பூழில் மலரும் தாமரையாகச் சிவபெருமான் கோவில் இருந்தது எனச் சங்கப் பாடலில் கருத்து இராது.
பாண்டியன் அரண்மனையில் இருந்த குலதெய்வக் கோயில், மீனாட்சியினது. வஞ்சி மாநகரில் அரண்மனையில் வித்துவக்கோடு பெருமாள் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை எழுதியுள்ளனர். இன்னொன்று: இங்கிலாந்து அரண்மனைகள், ஐரோப்பிய அரண்மனைகளில் உள்ள Chapel போல எனலாம்.
"சங்ககாலத்தில் ‘மழுவாள் நெடியோன்’ நியமத்தை வடகிழக்கிலும், திருமால் நியமத்தை மேற்கெல்லையிலும் கொண்டிருந்த மதுரை *பின்னர்* மழுவேந்திய சிவனுக்குரிய ஆலவாய் என்று பெயர் பெற்ற கோவிலை ஊரின் நடுவிடமாகக் கொண்டு விரிந்துள்ளது. " (Dr. ச. கண்மணி)
ஆம். மழுவாள் நெடியோன் (மதுரைக் காஞ்சி) இருந்த இடம் பொதுவாக சுடலை ஆகும். See the Anthropomorphic Axe sculptures in burial sites with stone circles. I've written in papers. பழய சொக்கநாதர் (ஈசான திசை). பரிபாடலின் காலத்தில் , ஈசான திசையில் இருந்த மழுவாள் நெடியோன், சிவனாகி பாண்டியன் அரண்மனைக்குள் கோயில் ஏற்படாத காலம். மாயோன் கொப்பூழில் அண்ணல் கோயில் = பாண்டியன் அரண்மனை. இப் பரிபாடல் திரட்டுப் பாடல், விஷ்ணு ரூபமாய் அரசன் இருப்பதைப் பாடுகிறது. இது பழைய வடமொழி Concept. The Sanskrit quote "यथा विष्णु तथा राजा" (Yathā Viṣṇu tathā rāja) translates to "As is Vishnu, so is the king" or "The king is like Vishnu". This phrase highlights the divine authority and responsibility attributed to a king in some traditional Indian contexts, drawing parallels to the role and attributes of Vishnu. "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" - நம்மாழ்வார். பரிபாடலும், வேத நெறி வளரும் மதுரையைக் கூறுகிறது.
https://www.muthukamalam.com/essay/general/p226.html"சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்” - பரிபாடல் திரட்டு 7/1-4
என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை. இங்குக் குறிப்பிடும் அண்ணல் என்ற சொல் பாண்டிய மன்னனைக் குறிப்பதாக அனைத்து உரைகாரர்களும் கூறுகின்றனர்." - பேரா. ப. பாண்டியராஜா
http://sangacholai.in/Essays-4.6A.htmlhttps://www.tamilvu.org/library/l1251/html/l1251a15.htmஇப் பரிபாடலின்கண்
எடுத்துக் கூறிய மாயோன் கொப்பூழ் மலர்ந்த தெய்வத்தாமரை சிறப்பும்
நலமும் நிலைக்களனாகப் பண்புபற்றிப் பிறந்த உவமையாம். உவமை
"உயர்ந்ததன் மேற்றே" என்ற விதிப்படி நோக்குங்கால் இதனினும்
உயர்ந்ததோருவமை தேர்தல் அரிதேயாகும். பொதுக்காட்சிக்குத்
திருமாலின் திருவுந்தித் தெய்வத் தாமரையை ஒத்துத் திகழும் அம்
மதுரைமாநகரத்தே நிரலாக அமைந்துள்ள தெருக்கள், அத் தாமரையின்
அகவிதழ்கள் போன்றன என்றும், அத் தெருக்கள் தன்னைச் சூழ
நடுவண் அமைந்துள்ள பாண்டியன் அரண்மனை அத் தெய்வத் தாமரை
மலரின் அகத்தே அமைந்துள்ள அரிய பொகுட்டை ஒக்கும் என்றும், - பொ.வே.சோ.
https://ta.wikisource.org/wiki/பழந்தமிழர்_கட்டடக்_கலையும்_நகரமைப்பும்/மதுரை_நகரம்https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2024/Oct/06/a-lotus-bloomed-in-mayons-cassavahttps://inithal.blogspot.com/2016/11/blog-post_10.html"சங்க இலக்கியத்தில் சங்ககாலப் புலவர்கள் கோயிலையும் கோட்டத்தையும் மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். உயர்ந்த கோபுரங்களுடன் கட்டும் அரண்மனைகளையும் கோயில் எனச் சங்கத்தமிழர் அழைத்ததை பரிபாடலில் உள்ள பரிபாடல் திரட்டு
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”
- (பரிபாடல் திரட்டு 7: 1 - 4)
எனச் சொல்வதால் அறியலாம். மாயவன் ஆன திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூப்போல இருப்பது செல்வம் நிறைந்த மதுரை[சீர் + ஊர் = சீரூர்]. தாமரைப்பூவில் உள்ள இதழ்களைப் போன்றன தெருக்கள்[தெருவம்]. இதழ்களின் இடையே உயர்ந்து பீடம் போல் கொட்டைகளைத் தாங்கி நிற்கும் பொகுட்டு போன்றதே அரசனின்[அண்ணல்] அரண்மனை[கோயில்]. "
பண்டித வித்வான் ச. சாம்பசிவனார் பரிபாடல் பாட்டுக்கு நல்ல விளக்கம் தந்துள்ளார். பார்ப்போம்.
நா. கணேசன்