அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.
\
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சி மூலம் 25 ஆயிரம் டாலர் நிதியுதவியை ஏ.ஆர்.ரஹ்மான் வழங்க, அ.முத்துலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்றுக்கொள்கின்றனர். உடன் பாடகர் ஸ்ரீநிவாஸ்.
சில மாதங்களுக்கு முன்பு, இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கனடா வந்திருந்தார். அப்போது, டொரன்டோ நகரத்து மேயர், ‘கனடாவில் ரஹ்மான் குடியேறவேண்டும்’ என்று மேடையிலேயே அவருக்கு அழைப்பு விடுத்தார். ரஹ்மான் பதில் சொல்லவில்லை. பின்னர் தன் முகநூலில் எழுதும்போது, நகரப் பிதாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ‘தான் தமிழ்நாட்டில் சுற்றத்துடனும், நண்பர்களுடனும், ரசிகர்களுடனும் மகிழ்ச்சியாக வாழ்வதாக’ அறிவித்தார்.
சமீபத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ரஹ்மான் மறுபடியும் டொரன்டோ வந்திருந்தார். கடந்த 21-ம் தேதி பவரேட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். இரவு 8 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி சரியாக 11 மணிக்கு முடிவடைந்தது. ஏறக்குறைய 20 பாடல்களை அவரும், குழுவினரும் பாடினர். ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் பாடியபோது பின் திரையில் பச்சை, வெள்ளை, செம்மஞ்சள் வர்ணங்கள் ஓடிய காட்சி மறக்க முடியாதது.
‘என்னை அப்படி அழைக்காதீர்கள்’
சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜோனிடா காந்தி, பென்னி தயால் ஆகியோர் சிறப்பாகப் பாடினர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ‘ரோஜா’வில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்துக்கு நடுவே 25 ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் பாடல்கள் புதிதாகவே இருந்தன. பார்வையாளர்கள் தங்களை மறந்து ஆடினர்.
‘‘என்னை ‘மோசார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைத்து சின்ன வட்டத்துள் அடைப்பது மட்டுமல்ல, மோசார்ட்டுடன் ஒப்பிடாதீர்கள்’ என்று முன்பு கூறியிருந்த ரஹ்மானை இப்போது விடாப்பிடியாக ‘ஆசியாவின் மோசார்ட்’ என அவரது ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
260 ஆண்டுகளுக்கு முன்பு மோசார்ட் இயற்றிய இசைக்கோவைகள் இன்றும் புத்துயர்வு பெற்று ஒலிக்கின்றன. ரஹ்மானின் பாடல் களிலும் புதுமை குறைவதில்லை. மோசார்ட் சிறு வயதிலேயே இசையமைக்கத் தொடங்கிவிட்டார். ரஹ்மானும் 9 வயதிலேயே தன் முதல் பாடலுக்கு இசை அமைத்துவிட்டார். ‘இனிவரும் 100 ஆண்டுகளில் இவரைப்போல இன்னொருவரைக் காண்பது அரிது’ என்று மோசார்ட் பற்றி இசை வல்லுநர் ஒருவர் கூறினார். அது ரஹ்மானுக்கும் பொருந்தும்.
இசை நிகழ்ச்சியின் முடிவில், இதை ஏற்பாடு செய்த ‘ஆர்யா கனடா’ நிறுவனத்தின் அதிபர் கிஷான் நித்தி, ரஹ்மானை மேடைக்கு அழைத்தார். ரஹ்மான் சார்பில் பேசிய பாடகர் ஸ்ரீநிவாஸ், ஹார்வர்டில் நிறுவப்பட இருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அதற்கு நன்கொடை வழங்கப்போவதாக அறிவித்தார்.
கிஷான் நித்தி, ரஹ்மான், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஆர்யா கனடா நிறுவனத்தின் சார்பில் 25,000 டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) காசோலையை வழங்க, அதை ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் விஜய் ஜானகிராமனும், நானும் சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டோம்.
இந்த நிகழ்ச்சியில் மாறாத வியப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் பற்றியும் கூறவேண்டும். ‘மெர்சல்’ படத்தில் வரும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை ரஹ்மான் பாடியபோது அரங்கமே எழுந்து ஆடியது. மகிழ்ச்சி கரை புரண்டது. ஆனால் ‘உந்தன் தேசத்தின் குரல்’ பாடல் வரிகளை ரஹ்மான் தொடங்கியபோது ஒரு நிமிடத்தில் சபை அப்படியே உருகி மாற்றம் கொண்டது. அரங்கத்தில் இருந்தவர்களில் 90 சதவீதம் பேர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களால் நாட்டைப் பறிகொடுத்த வலியையும் இழப்பையும் உணரமுடியும். அப்படியே நெகிழ்ந்து போயினர்.
டொரன்டோ மேயர் கனடாவுக்கு அழைத்தபோது ரஹ்மான் மறுத்த காரணம் புரிந்தது. அயல்நாடு என்பது விடுதிதானே. சொந்த நாடுபோல வருமா? அவர் தமிழ்நாட்டிலே இருந்து இசையைப் பரப்பட்டும். எங்கே இருந்தால் என்ன? அவர் உலகத்துக்குச் சொந்தமானவர்!
- அ.முத்துலிங்கம்
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்
சீரிய முயற்சிக்கு உதவி செய்துள்ள மாண்புமிகு முதல்வர் பழனிச்சாமி கோவையில் உறவினர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வருகை தந்துள்ளார்.ஹார்வர்ட் பல்கலை முயற்சி பற்றி நன்றிகூறியுள்ளேன்.ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவிஉலகின் புகழ்பெற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சீனம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த வரிசையில் இதுவரை தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லை என்பதை அறிந்த அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.இருக்கைக்கு தேவையான 33 கோடியில் இதுவரை ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர். இதுவரை சுமார் ரூ.21 கோடியை உலகில் உள்ள பலவேறு தமிழ் அமைப்புகளும் , அமெரிக்கவாழ் தமிழர்களும் நிதியாக திரட்டியுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்காய் அமைவது உறுதியாகியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.உலகின் புகழ்பெற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சீனம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த வரிசையில் இதுவரை தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லை என்பதை அறிந்த அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.இருக்கைக்கு தேவையான 33 கோடியில் இதுவரை ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர். இதுவரை சுமார் ரூ.21 கோடியை உலகில் உள்ள பலவேறு தமிழ் அமைப்புகளும் , அமெரிக்கவாழ் தமிழர்களும் நிதியாக திரட்டியுள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்காய் அமைவது உறுதியாகியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.------------------------நா. கணேசன்
படம்: மெர்சல்
வரிகள்: விவேக்
குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
--
பாடல் வரிகள்:-
கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
பாடல்:
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
சரணம்:
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்
நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்
நற்செய்தி. நன்றி சுரேஷ் குமார். இந்த தருணத்தை உலகத்தமிழ்ர்கள் உன்னதமான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இன்னம்பூரான்
--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to houstontamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to housto...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/houstontamil.
For more options, visit https://groups.google.com/d/optout.
http://www.vikatan.com/news/tamilnadu/106106-tamil-chair-likely-to-be-formed-in-harward-university.htmlஅமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில், தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் குமார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.