தமிழ்மணம் ஐந்தாண்டுகள் நிறைவு ...

176 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 25, 2009, 12:15:20 PM8/25/09
to மின்தமிழ், santhav...@googlegroups.com, anb...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com
http://blog.thamizmanam.com/archives/185

‘தமிழ்மணம்’ திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன்
ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில்
தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு
முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும்
திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால்
இயன்றவரை முயற்சி செய்கிறது.

தமிழ்மணத்தை உருவாக்கி முதல் இரண்டாண்டுகள் நடத்திய திரு. காசியும்,
தொடர்ந்து தொழில் நுட்பத்தில் மேம்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி
வரும் தமிழ் மீடியா இண்டர்நேசனல் குழுவினரும் இதை தன்னார்வத்தொண்டாகக்
கருதி நேரத்தையும் பொருளையும் செலவழித்து வருகிறோம். ஏற்கனவே நாங்கள்
சொல்லி வந்துள்ளது போல் தமிழ்ச்சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும்
தங்களுக்குள்ளே மாறுபட்ட கொள்கைகளும், நோக்கங்களும், செயல்பாடுகளூம்
உடையவர்களாக இருந்தாலும் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாகப்
பரிமாறிக்கொள்ளக் கூடிய தளமாக இருக்க வேண்டும் என்று தமிழ்மணம்
கருதுகிறது. இந்த நோக்கத்தில் உறுதியாக இருந்து தொடர்ந்து செயல்படுவோம்
என்று மீண்டும் உறுதியளிக்கிறோம். தொடர்ந்து புரிந்துணர்வுடன் எங்களுடன்
ஒத்துழைத்து தமிழ் வலைப்பதிவுலகினைச் செழுமைப்படுத்தி வரும்
வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

தமிழ்மணம் நிர்வாகம்

-------------


இந்த திரட்டிச் சிட்டத்தை அமைத்த‌
பொள்ளாச்சி காசி ஆறுமுகம் இந்த வார விண்மீன்!
http://tamilmanam.net
அவர் தமிழ்மணத்தின் ஆரம்பகாலத்தை
நினைவுகூர்கிறார்:
http://kasiblogs.blogspot.com/2009/08/blog-post.html

இந்திய மொழிகளில் தமிழ்மணம் முதலாக‌
அமைந்தது என்னும் செய்தி தாங்கள்
அறிந்ததே. இலவசச் சேவையாக வழங்கும்
தமிழ்மணம் வலைத்திரட்டி குமுதம், விகடன், ...
போன்றவைகளுக்கு இணையான வாசகர்களை
இணையத்தில் பெற்று சுமார் 6000 பதிவுகளை
இணக்குகிறது.

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

Ramasamy Gopalakrishnan

unread,
Aug 25, 2009, 1:24:45 PM8/25/09
to housto...@googlegroups.com, மின்தமிழ், santhav...@googlegroups.com, anb...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com
தமிழ்மணத்தின் தரமிக்க தமிழ் சேவையை மனமாரப் பாராட்டுகிறேன்.  இதன் சேவை மேன்மேலும் சிறப்பாகத் தொடர எனது வாழ்த்துக்கள்!
“சிறுதுளிப் பெருவெள்ளம்” என்பதுபோல் ஒவ்வொருவருடைய தமிழ்த் தொண்டும் சேர்ந்தால்தான் நம்தமிழும் தமிழர் வாழ்வும் நலம்பெறும்.
 
தமிழ்மணம் வாழ்க! வளர்க!
 
அன்புடன்
கோபால்


From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: santhav...@googlegroups.com; anb...@googlegroups.com; panb...@googlegroups.com; mutht...@googlegroups.com; pira...@googlegroups.com; thami...@googlegroups.com; tamil_...@googlegroups.com; tamil...@googlegroups.com; housto...@googlegroups.com
Sent: Tuesday, August 25, 2009 11:15:20 AM
Subject: தமிழ்மணம் ஐந்தாண்டுகள் நிறைவு ...
Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages