மறி - A name for Sheep and Deer males:
--------------------------------------
மரை மான்கள், செம்மறி போன்றவற்றின் ஆண்விலங்குகள்
“மறி” என அழைக்கப்படுகின்றன. கரு மறி (male of blackbuck)
இடக்கரத்தில் ஏந்தி, வலக்கரத்தில் பரசு கொண்டு சிவபிரான் இருப்பதாகத்
தமிழ்நாட்டில் பல்லவர், சோழர் சிற்பங்கள், சிலைகள் லட்சக்கணக்கில்
உண்டு. வேதகாலத்தில் பரசு வருணனின் ஆயுதம் சிவனுக்கு பின்னர் மாறியது என்பர்.
கருமான் காடுகளுக்கு சின்னம். காடு திருத்தி வேளாண் நிலங்கள் ஆவதன் சின்னம் மழு (பரசு).
தேவாரத்தில் மறி, மழு ஏந்துவதாகப் பாடல்கள் அனேகம்.
நூறாண்டுகளுக்கு முன்னர் பள்ளி ஆசிரியர் கல்வெட்டில் கண்டுபிடித்த
திரு விடைவாய் என்னும் தலத்தில் சம்பந்தர் தேவாரம்,
“மறியார் கரத்து எந்தை” என்று தொடங்குகிறது. திருவிடைவாசல் கோவில்
போலவே, சென்ற ஆண்டு ராஜேந்திர சோழன் கட்டின மானம்பாடிச்
சிவன்கோவிலையும் இடித்துவிட்டார்கள். திருப்பிக் கட்டும்போது
கல்வெட்டுகள் ஒன்றும் படிக்கும் நிலையில் இருக்காது. பல சிலைகளும் புதுச்சிலையாக
வைத்து, பழஞ்சிலைகள் மார்க்கெட் ஆக வாய்ப்புகள் உள்ளன
என்று அஞ்சுகிறார் தொல்லியல் மூதறிஞர் டாக்டர் ரா. நாகசாமி போன்றோர்.
மறி - மரை (antelope) மான்(deer) ஆடு(sheep) - இவற்றின் ஆண் ஏறு (பெயர்க் காரணம்):
மறித்தல் - என்னும் வினைச்சொல்லுக்கு தடுத்தல், மோதுதல், மேல்கீழாக்குதல், அழித்தல் என்ற பொருள்கள் உள்ளன.
வழி மறித்தல் - மறியல். To control territory and female flock as their own,
the male animals of antelopes, deer and sheep ram against each other.
In the Americas, the Bighorn sheep ram their heads against in the Rocky Mountains.
So, the jeeps capable of driving in rough terrain in the Rockys are named, "Ram".
The Tamil name for these Rams is மறி.
(1)
இரலை (< சிரலை) - கருமான் ஏறு மறித்தல்: (Sparring, fighting Black bucks):
(2) கடமான் ஏறு - Sambur stags sparring
கடமான் ஏறு மறியல் - மடப்பிடி அருகு நோக்க
in America,
(3) புள்ளிமான் (Axis deer, Chital) fight:
Sheep fight - செம் மறிப் போர் - Rams against their heads
மறியுடை ஆயர் மாதர் - கம்பன்
மறி என்ற பெயர் மான், மரை, ஆடு(செம்மறி, sheep) -பெயர்வருதற்கான காரணம்
காட்டும் காணொளிகள் இவை.
மறிதல் என்றால் துள்ளுதல், எறிதல் என்றும் பொருள். மறிகடல் = அலைகளை
துள்ளுகிற, எறிகிற கடல். குதிரைக் குட்டிகள் மறிவன (=துள்ளுவன). எனவே, மறிகாணுதல்
என்றால் குதிரை குட்டி போடுதல். மான், ஆடு, குதிரை இவற்றின் இளமை
(குட்டி) மறி எனப்படும் என்பது தொல்காப்பியம். நன்னூலின் முதலுரையாகிய
மயிலைநாதர் உரையில் கழுதையையும் இவ்வரிசையில் சேர்த்துகிறார்.
மறி என்றால் மான், ஆடு, குதிரை, கழுதை இவற்றின் இளமை (குட்டிகள்) -
இவை துள்ளுகிற காரணத்தால் எனலாம்.
மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே
தொல்காப்பியம் (மரபியல் 1).
மிளா என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு. மற்ற ஊர்களில், கடமான் எனப்படுவது சம்பர் (Sambur or Indian elk).
மிளா- பருத்துத் திரண்ட மான் எனப் பொருள்படும். மேளம் = மத்தளம். மேளா/மேலா - திருவிழா.
மேடு, மிண்டு, மிளை - இவை -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்தாகக் கொண்ட சொற்றொகுதி.
விள்-/விண்ணு/விட்டு/விண்டு என்பது போல. மிள்- மிளை, மிளா, மிளகு : மிண்டு: மேடு, மேள- என மிள்- என்னும் தாதுவேர்
தொடர்புடைய சொற்களை விரிந்து வியாபகம் ஆகிறது.
மிளகில் முள் எங்கும் இல்லை. எனவே, முளகு என்ற சொல்லை சங்க இலக்கியத்தில் காணோம்.
பிடி- என்பது புடி- என்றாதற்போல, மிளகு > முளகு (பேச்சுவழக்கு). மிளை மேட்டுநிலம்.
சைய மலையில் (ஸஹ்யாத்ரி) மழைவாங்கு பிரதேசம் ஆகிய கேரளத்து மிளைகளில் விளைவது
மிளைகம் : மிளகு/மிளகம். (பழைமை : பழமை, ... போல)
சிவபிரானுடன் 3 இடங்களில் முக்கியமாக மான் உண்டு: (1) கிராதனாக மானை வேட்டையாடல்,
கையில் கருமான் (இரலை, க்ருஷ்ணம்ருகம், BlackbucK), (2) அரையிலே புள்ளிமான் தோலர்
(3) விடங்கராய் ஆடையின்றி தாருகாவன ரிஷிபத்னிகளைக் கவர்ந்த பிக்ஷாடநர் கோலத்தில்
புள்ளிமானுக்கு அருகறுத்துவது. வேதாரண்ய தேவாரத்தில் மூன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
மரைக்காடு/மறைக்காடு வேதவனம், மறைவனம் என மொழிபெயர்க்கப்படுகிறது.
தேவாரம் தொடங்கி தலவரலாறுகளில் மரைகள் வழிபாடு செய்யும் கோவிலாக
வேதாரண்யம் சிவன் கோவில் குறிப்பிடப்படுகிறது. இதுபோல், பக்தி இலக்கியத்தில்
குறிப்பிடப்படும் ஊர் திருமரைக்காடு (வேதாரண்யம்) என்பது முக்கியமான செய்தி.
நா. கணேசன்