Re: பாரதியார் உருவாக்கிய புதிய சொற்கள்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 4, 2025, 7:31:24 PMJun 4
to santhav...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
விடுதலை - 14ஆம் நூற். - கந்தர் அலங்காரம் 100.

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
   கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச வெற்பை
      அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
         விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே!

கிரௌஞ்சம் = அன்றில் = red-naped ibis. (கிரௌஞ்சம்/அன்றில் பற்றி நிறையச் சொல்லியுள்ளேன்)

NG

On Wed, Jun 4, 2025 at 1:09 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
https://suddhasanmargham.blogspot.com/2010/09/blog-post_23.html வினைச்சி - வள்ளலார் ஆள்கிறார்.
கற்றவர் சூழ் இத் தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னைப்
பெற்றவன் பேர் வினைச்சி எனைப் பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும்
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயராச் சொல்வராலோ.

On Wed, Jun 4, 2025 at 1:02 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தொண்டச்சி, தொண்டத்தி வழக்கில் இருந்த பழய சொற்கள். பாரதியார் உருவாக்கவில்லை.

அதேபோல் தான், விடுதலை. விடுதல எனத் தெலுங்கிலும் வழங்குவது. பல சான்று காட்டலாம்.

NG

On Tue, Jun 3, 2025 at 11:55 PM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
வணக்கம்,

பாரதியார் உருவாக்கிய புதிய சொற்கள் என்னென்ன என்று சிந்தித்தபோது என் நினைவில் இருந்து வந்தவை இவை: 

1. புரட்சி 
2. பொதுவுடைமை 
3. விடுதலை 
4. தொண்டச்சி 
5. வினைச்சி 
6. செடிநூல் 
7. உறுப்பாளி

இவை தவிர பாரதியார் உருவாக்கிய புதிய சொற்கள் வேறு என்னென்ன என்று குழுமச் சான்றோர்கள் பகிர வேண்டுகிறேன்.

நன்றி,
நிரஞ்சன் பாரதி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAL0k%2BG%2BYgxt4CGcfs1YzmcuSrk%2BvTNiLuKK7Q3fQwYemZ1YnFw%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages