நண்பர்களே,
'கண்கள் இரண்டால்' (படம்: சுப்ரமணியபுரம்) பாட்டு கேட்கும்போது உங்களுக்கு
'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' பாடல் ஞாபகம் வந்ததா? அப்படியானால் உங்களுக்குக்
கர்நாடக சங்கீதம் தெரிந்து இருக்கிறது.
ரீதி கௌளை ராகத்தில் அமைந்த இந்த இரு பாடல்களும் நம் மனதை தொட்டவை. காலம்
மாறினாலும் நம் பராம்பர்யா சங்கீதம் நம்மை விட்டு எங்கும் போகவில்லை என்பதைத்தான்
இது காட்டுகிறது அல்லவா? இந்த ராகம் திரை இசையில் அதிகம் பயன்படுத்தப்
பட்டுள்ளது. கீழ்க்கண்ட எல்லாப் பாடல்களிலும் இந்த ராகம் வெவ்வேறு விகிதங்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
* *
Film songs:
1. Chinna kaNNan azhaikkiraAn -- Kavikkuyil: 1977 - IR, Panju Arunachalam-
Dr. Balamurali K
2. talaiyai kuniyum tAmaraiyE - Oru Odai Nadiyagiradu - IR - Spb, S.
Rajeswari
3. RAman kadai kELungaL -- Sippikkul muthu - 1985- IR - spb, sps
4. AzhagAna rAkshashi - Mudalvan -- 1999 - ARR, Vairamuthu -- SPB, Harini
& GVPrakash)
5. Poonjolai kiliye - Aran - 2006 -- Karthik, Asha Menon -- MD: Joshua
Sridhar
6. Sudum Nilavu - Thambi - 2006- MD: Vidyasagar, Vairamuthu - Harini,
Unni Krishnan
7. Kangal Irandaal Unn Kangal Irandaal -Subramaniapuram -2008 - James
Vasanthan - Belly Raj, Deepa Mariam
8. Mugilinamae Yenadi - Amirtham - feb. 2006 - Bhavadharini
* *
கலக்கல் கதம்பம் போன வார நிகழ்ச்சியில் 'தெரிந்த பாடல், தெரியாத ராகம்'
பகுதியில் விஜயா அவர்கள் இந்த ராகத்தைப் பற்றி விவரித்தார். இந்த
நிகழ்ச்சியின் ஒலி வடிவம் இங்கே (http://kalakkal.fatcow.com/Archives/2009_04_04/TPTR_RithiGowla.mp3) கிடைக்கும்.
ஆரம்பத்தில் இந்த ராகம் பற்றிய சங்கீதக் குறிப்புகளைக் கொடுக்கும் விஜயா அதன் பின்
திரைப் பாடல்களையும் கொடுத்திருப்பது கர்நாடக சங்கீத ரசிகர்கள் மட்டும் அல்லாது
திரை இசை ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருக்கிறது.
கலக்கல் கதம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று மாலை 6
மணிக்கு 1050 AM என்ற அலை வரிசையில் ஹுஸ்டன் வானொலியில் ஒலிபரப்பாகிறது. ஹுஸ்டன்
அல்லாத உலகெங்கும் உள்ள மற்ற தமிழ் நேயர்கள் இதை www .houstontamil .com என்ற
எங்கள் இணைய தளத்தில் கேட்கலாம்.
நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை ma...@houstontamil.com என்ற முகவரிக்கு
அனுப்பவும்.
நன்றி,
கலக்கல் கதம்பம் குழு.