ஆண்டவன் தரும் சோதனை - வாரியார் சுவாமிகள்
-------------------------------------------------------
ஆண்டவனுடைய சோதனை, எவனுக்குக் கிடைக்கின்றதோ, அவன் அருகிலே, இறைவன்
நெருங்குகிறான். சோதனை செய்த மாணவன்தான், மேல் வகுப்புக்குப் போகிறான்.
தட்டி ராவி இழுத்த தங்கம் அணிகலம் ஆகின்றது. அடித்துத் தோய்த்த வேட்டி
வெண்மை ஆகிறது. வளைத்த மூங்கில் பல்லக்கிலே இருக்கிறது. உலகத்திலே சோதனை
எதனால்? நீ உண்மையான பக்தன். அதனாலே ஆண்டவன் உன்னைச் சோதனை செய்து உன்
அருகிலே நெருங்குகிறான். சோதனை நடக்கின்ற பொழுது தைரியமாக
இருக்கவேண்டும்.
AI video - செய்யறிவுக் காணொளி,
https://x.com/naa_ganesan/status/1942347201176559787
~NG