மாங்குடி ~ சங்கப் பெரும்புலவர் ஊர்!

152 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 20, 2015, 6:46:03 PM4/20/15
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, housto...@googlegroups.com, thami...@googlegroups.com

மதுரையிலே தமிழ்ச் சங்கம் திகழ்ந்தது என்பதற்குச் சான்றாக புறப்பாடல் ஒன்றைக் காட்டுவர். 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை (புறம். 72)

மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு சங்கம் நிலவியதற்கு இது நல்ல சான்றாகும். மாங்குடி மருதனார் வாழ்க்கை நிலையாமையை மன்னனுக்கு உணர்த்தக் காஞ்சித் திணையில் பாடியது மதுரைக் காஞ்சி என்கிறார் நச்சினார்க்கினியர். மதுரையை இடம்புரியாகச் சுற்றிக் காண்பிக்கிறார் மாங்குடியார் (நன்றி: பேரா. பாண்டியராசா). கிழக்கே தொடங்கி தென்திசையில் முடிக்கிறார். மதுரைக்காஞ்சியில் சங்க காலச் சமயத்துக்குச் சான்றுகள் பல உள்ளன. 25 ஆண்டுகளாக சுமார் 15 இடங்களில் கிடைக்கும் மகரவிடங்கர் (http://www.vallamai.com/?p=49442) ஒரே கல்லால் ஆன பெரிய சிற்பங்களுக்கு விளக்கம் “மழுவாள் நெடியோன்” என்று மதுரைக் காஞ்சியால் கண்டேன். இந்த மழுவேந்தியை “பரசு ராமேசர்” என குடிமல்லத்தில் காண்கிறோம். குடிமல்லம் விடங்கரை சிவன் என்றுதான் கலைவரலாற்று நிபுணர்கள் குறிப்பிட்டுளர். ஆனால், இந்த விடங்கர்களை வருணன் என்று கொள்ளல் மிகப் பொருந்தும். உதாரணமாக, நெய்தல் நிலத்தின் கைதை என்னும் தாழைசூடி குடிமல்லம் விடங்கர். சிவனுக்கோ தாழை ஆகாது! மேலும், மீன யக்ஷன் என்னும் மகர மீனின் மீது நிற்பவர் அவர். இதையெல்லாம் உணர்த்தும் மதுரைக்காஞ்சி பாடிய பெரும்புலவரின் மாங்குடி எது? - என தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள ஊர் மாங்குடி. அங்கே போயிருக்கிறீர்களா?

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும், மு. பழனியப்பன்

மாங்குடி:

மாங்குடி மருதனார், எஸ்.ரா.
கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள்

நா. கணேசன்
Y3yV5o8
மாங்குடி மருதனார் பாடும் “மழுவாள் நெடியோன்” யார்?
பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வியல் நிறுவனத்து உரை,
Major New Light in the Vedic Night period (2nd Millennium BCE)!

The Copper Hoards of Northen India, Paul Yule, Germany

Anthropomorphic Axes, India:

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!

By  - ஜி.சுந்தரராஜன்

First Published : 16 February 2014 09:01 AM IST


தமிழக வரலாற்றில் மறைந்த நாகரீகங்களும் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, கால வெள்ளத்தில் மறைந்த நகரங்களும் உண்டு. அவ்வகையில் பாண்டிய நாட்டின் பழம் பெருமையை உலகிற்கு உணர்த்திய மண்ணில் புதைந்த மாங்குடி நகரத்திற்கும் தமிழக வரலாற்றில் தனிப்பெரும் இடம் உண்டு.
 மாங்குடியை அறியாதவர்கள் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் என்று கூறினால் எளிதில் அறிந்து கொள்வார்கள். நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோயிலில் இருந்து 20 கி. மீ தொலைவில் ராசபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூரே மாங்குடியாகும். சங்க கால மாங்குடியானது பெருமாள்பட்டி, சோலைசேரி, அருவன்குளம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் தேவியாறு மாங்குடி வழியாகப் பாய்ந்து வளம் சேர்த்தது என்பார்கள்.


 மாங்குடி நகரத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியருமான இல.கணபதிமுருகன் தெரிவித்தது:
 ""தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 2002-03 ஆண்டுகளில் நிகழ்த்திய அகழாய்வின் வாயிலாக மாங்குடியின் பழம் பெருமை உலகிற்குத் தெரிய வந்தது. அகழாய்வில் கி.மு 4000-ஐச் சேர்ந்த எண்ணற்ற நுண் கற்காலக்கருவிகள் (ஙண்ஸ்ரீழ்ர்ப்ண்ற்ட்ண்ஸ்ரீ டங்ழ்ண்ர்க்) கண்டறியப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகைகள், செம்பிலான ஊசிகள், வளையல்கள், இரும்பிலான அம்புமுனை, களிமண் பொம்மைகள், மணிகள், சுட்ட களிமண்ணால் செய்யப்பெற்ற அகல் விளக்குகள், மான்கொம்புகள், தாயக்கட்டை போன்றவை கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் கி.மு 300- கி.பி 300 ஆகும்.


 மாங்குடி ஒட்டியுள்ள சோலைசேரி கிராமத்தில் தேவியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இதனையொட்டி லிங்கத்திரடு (லிங்கத்திடல்) என்றழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் ஆவுடையார் தோட்டம் என்று கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இத்தடுப்பணையில் கரையை ஒட்டி சுமார் ஒரு சதுர கி.மீ பரப்பிற்கு எண்ணற்ற தெய்வ உருவச்சிலைகள், வயிறு பெருத்த பூத கணங்களின் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரிய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.
 நுண்ணிய வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத, குறுகிய முகம் கொண்ட நந்தி சிலையொன்று மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கு அண்மையில் விநாயகரின் சிலை ஒன்று முகம் சிதைந்த நிலையில் உள்ளது. விநாயகர் இருகரங்களை உடையவராகவே, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். விநாயகரின் தும்பிக்கை நீண்டவாறு, வலமாகவும், இடமாகவும் அல்லாமல் தொங்கியவாறு வடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வயல் வெளிக்குள் தரையில் சாய்ந்த நிலையில் காளிதேவியின் சிலை ஒன்றும் காணப்படுகிறது. காளிதேவியின் சிலையானது ஒரு காலினை பீடத்தில் மடக்கியவாறும், மற்றொரு காலை தரையில் ஊன்றியவாறும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
 கோவிலின் கோபுர வேலைப்பாட்டில் காணப்படும் தோள் உறுப்புகளான கர்ணகூடு, பஞ்சரம், சாலை போன்றவை தேவியாற்றுத் தடுப்பணையின் கரையை ஒட்டியே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் வேலைப்பாடுகளையும் அமைப்பினையும் பார்க்கும் போது கி.பி 10-11ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கலைப்பாணியை ஒத்ததாகத் தெரிகிறது.
 மாங்குடி, பெருமாள்பட்டி மற்றும் சோலைசேரி பகுதிகளில் கிணறுகளை ஆழப்படுத்தும் போது, பல இடங்களில் எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தாழியினுள் இறந்தோரின் எலும்புத்துண்டுகள், தவிடு, தானிய வகைகள் நிரம்பிய வட்டில், சிட்டிகை, போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாழியினுள் கிடைத்த நாணயங்களில் முதலாம் ராஜராஜனின் (கி.பி. 985-1013) உருவம் பொறித்த செப்பு நாணயம் குறிப்பிடத்தக்கதாகும்.


 மாங்குடி பெருமாள்பட்டி அய்யனார் கோயில் அருகே தூணில் பொறிக்கப் பெற்ற தமிழ்-கிரந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. கிபி 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் பாண்டியர்களின் நிலைப்படையினைச் சேர்ந்த படை வீரர்களுக்கு விளைநிலமும், வீட்டு வசதியும் செய்து கொடுத்த செய்தி காணப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட தானங்கள் பரிக்கிரகம் (டஹழ்ண்ந்ழ்ஹட்ஹம்) எனப்பட்டன.
 மாங்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்ததாகும், எவ்வாறெனில் பாண்டிய நாடு- சேரநாடு பெருவழியின் இடையில் அமைந்த நகரமாக மாங்குடி திகழ்ந்தது. அரசியல் சிறப்புமிக்க, வணிக முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தினால் மாங்குடி அந்நியரின் படையெடுப்புகளுக்கு உள்ளான பகுதியாகவும் விளங்கியுள்ளது. மாங்குடி மருதனாரை ஆதரித்த பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவன் சேரன், செம்பியன் (சோழன்), திதியன், எழிநி, எருமையூரான் போன்றோரை போரில் தோற்கடித்தான். நெடுஞ்செழியனின் வெற்றியைப் பாடவே மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார். 


 மாங்குடியை அழித்து சோழர்களே அதன் அருகாமையில் சோழசோரி என்ற நகரை நிர்மாணித்திருக்க வேண்டும். தற்போது சோழசேரி, சோலைசேரியாக மருவியுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள சோழபுரமும், சோழர்களின் குடியேற்றப் பகுதியாக இருத்திருக்கலாம். பராமரிப்பின்றி சிதைந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் தேவியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பயன்படுத்தப்பட்டன. கி.பி 18-19 நூற்றாண்டுகளில் தடுப்பணை கட்டப்பட்டிருக்கலாம். எனவே மாங்குடி நகரை பாண்டிய-சோழ ஆதிக்கப் போட்டியில் அழிந்த நகரமாக கருதலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இல.கணபதிமுருகன்.


http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/02/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95/article2059831.ece

N. Ganesan

unread,
Apr 21, 2015, 8:19:14 AM4/21/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham, vallamai


On Tuesday, April 21, 2015 at 4:27:24 AM UTC-7, கோதண்டராமன் wrote:
மாங்குடி என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. சங்ககால நாணயங்கள் கிடைத்ததனால் சங்க காலப் புலவர் மருதனாரின் இடம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மாங்குடி என்று முடிவு கட்டுவது ஆராய்ச்சி முறைக்குப் பொருந்துமா?

 திரு. சு. கோ.,

நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், மிக முக்கியமான சங்ககால ஊர் (இரும்புக்கால நாகரீகம்) பாண்டிநாட்டு மாங்குடி திகழ்ந்துள்ளது.
வெறும் சங்கக் காசுகள் மட்டுமில்லை. There is a mound of Megalithic period, if scientific excavations are carried out, we can find lots more from Sangam epoch.
சோழர்கள் ஊரை அதம் செய்தபோது தாக்கிய ஊராக உள்ளது. சோழசேரி இன்று சோலசேரி ஆகிவிட்டது என்கின்றனர் தொல்லியலாளர்.
இது, காழன் (= கரிய) > காலன், தாழை > தாலி, பழம் > பலம், .... என்பன போல. மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார் பாண்டி நாட்டின் சமய வரலாற்றில் முக்கியச் செய்திகளைச் சொல்கிறார். உதாரணமாக, திபெத்தின் தலாய் லாமாவை அவலோகிதரின் அவதாரம் என்றும், அவர் வாழ்கிற அரண்மனை பொதாலா அரண்மனை என்றும் சொல்கின்றனர். இது பொதியில் மலையில் வாழும் அவலோகிதேவரரைக் குறிப்பது என பௌத்தர்களின் நூல்கள் (உ-ம்: கண்டவியூக சூத்திரம்) கூறுகின்றன. பல்லவர் காலத்தில் தட்சிணாமூர்த்தியை வடிவமைத்த தமிழ்ச் சிற்பிகள் அவலோகிதரையே மாடல் ஆக எடுத்தமையை விளக்கி 15 ஆண்டுகடு முன்னர் கட்டுரை எழுதினேன். அரிமாநோக்கு ஆய்விதழிலும், இன்னுஞ் சில இடங்களிலும் வெளியானது. பொதியில் கடவுளையும், மதுரைப் பாண்டியற்கு காஞ்சித்திணையை அறிவுறுத்த அப்பிரதட்சிணமாக (இடம்புரியாக) மதுரைக்காஞ்சியும் படைத்த பெரும்புலவர் முக்கியமான பாண்டிநாட்டு ஊரான சங்கரன்கோவில் அருகான மாங்குடி என்று தொல்லியலாளர் கருதுவதைத் தவறு எனக் கொள்ள ஏலவில்லை.

-----------------------------------------------

இன்னொரு மாங்குடியும் உண்டு. சோழநாட்டு மாங்குடி. பரிதிமாற் கலைஞர் உறவினர் திரு. ந. சுப்பிரமணியன் உடுமலைப்பேட்டையில் வெகுகாலம் வரலாற்றுப்பேராசிரியராய் வாழந்தவர். அவரது ‘Brahmin in Tamil country' என்ற முக்கியமான நூலில் பிரகச்சரணம் (பெருஞ்செலவு) என்ற வகுப்பார் வரலாற்றை எழுதியுள்ளார். பாரதியாரும் பிருகச்சரணத்தாரே. சி. வி. ராமனின் ஊர் சோணாட்டு மாங்குடி தான்.

ஆனால், அணு அணுவாக பாண்டிநாட்டையும், அதன் வரலாறும், மக்கள் வாழ்வும், சமயங்களும் ((1) ஆய் மன்னனின் பொதியில் மாமலையில் - இந்தியாவின் ஏழு குலபர்வதங்களில் ஒன்று, வடமொழியில் மலயம் என்றாலே பொதியில். (2) மழுவாள் நெடியோன் எனப்படும் மகரவிடங்கர். (வேதத்தில் சிந்து சமவெளிக் கடவுள் வருணன் ஆனவன். பல்லவர் காலத்தில் சிவனாக பரிணாம முகிழ்ச்சி) எல்லாம் எழுதிய மாங்குடி மருதனார் பாண்டிநாட்டார் என்றே கருதுகிறேன். தொல்லியலாளர் காடும் சான்றுகள் அரிதானவை, மேலும் ஆராய்வர்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages