திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
மாப்பிள்ளை பாத மலர்.
உரை:
பெரிய மேரு மலையின் தெய்வ மகளாகிய எங்களுடைய சிவகாமவல்லி எனும் அன்னைக்கு மாப்பிள்ளையாகிய சிவனுடைய திருவடித் தாமரைகள்தாம் எனக்குச் செல்வமும் தெய்வமும் தெளிந்த அமுத மயமான ஞானத்தை உபதேசிக்கும் குருவும் என்னைக் காத்தருளுகின்ற அருளரசுமாகும். எ.று.
மேரு மலையினும் உயர்ந்த மலை உலகில் வேறே இல்லாமையால் அதனைப் “பருவரை” என்கின்றார். அந்த மலைக்குரிய பருவத ராசன் மகளாய்ப் பிறந்து வளர்ந்தமை பற்றி உமாதேவியை, “பருவரையின் தேப்பிள்ளை” என்று சிறப்பிக்கின்றார். தேப்பிள்ளை - தெய்வ மகள்; இனிய மகள் என்றாலும் பொருந்தும், உமாதேவிக்குச் சிவகாமவல்லி என்னும் பெயருண்டு. சிவனையே காதலித்தமையால் அவளுக்குச் சிவகாமவல்லி என்று பெயராயிற்று. மாப்பிள்ளை - கணவன். உலகியல் இன்ப வாழ்வுக்குச் செல்வம் இன்றியமையாதாகையால், “பாத மலர்த் திருவாம்” என்றும், நாளும் வணங்குதற்குரிய தெய்வமாதல் விளங்க, “தெய்வமாம்” என்றும், தெளிந்த அமுத மயமாய் அறிவுக்கு ஞானப் பொருளாய் விளங்குவதால், “தெள்ளமுத ஞானக் குருவாய்” என்றும், துன்பம் வந்து சுடச்சுடத் தாக்குமிடத்து அருளாற்றல் தந்து ஆதரித்தலின் “எனைக் காக்கும் கோவாம்” என்றும் கூறுகின்றார்.
தமிழ்ப் பல்கலையின் முனைவர் பா. ஜம்புலிங்கம் பல அரிய சோணாட்டுப் புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து அழகாக ஆவணஞ்செய்துவருகிறார். அரிய வலைச்சுவடி அவரினது. கொங்குநாட்டு துரை. சுந்தரமவர்களும் நல்ல கல்வெட்டுக்களை வலைச்சுவடியில் பதிவுசெய்கிறார். இன்னும் பலர் முனைந்தால் அழிவின் விளிம்பில் இருப்பன ஒளிப்படங்கள் ஆகும். தமிழின், வரலாற்றின் அரிய செய்திகள் ஆராயப்படும்.தமிழில் தே/தீ என்பன இனிமை என்னும் பொருளுடைய ஓரெழுத்துமொழி ஆகும். தே = இனிய ‘sweet, pleasant'. இந்த ஓரெழுத்துமொழி பற்றி விரிவாகச் சொல்லியுள்ளேன். மீன் என்ற ஈரெழுத்துத் தனிச்சொல்லுக்கும், ஓரெழுத்தில் அமையும் தே என்ற தனித்தாதுவேருக்கும் அவை புணரும்முறைகளால் வேறுபாடு காணலாம்:தே+சாடி = தேச்சாடி, தே+குடம் = தேக்குடம், தே+முரி = தேமுரி, தே+மொழி = தேமொழி, ...இளம்பூரணர் சொல்கிறார் தே ‘இனிமை’யின் பின் -த்த்- சேரும் என.தே + த்த் + இறால் = தேத்திறால்; தே + த்த் + அடை = தேத்தடை; தே + த்த் + ஈ = தேத்தீதே எனுந்தாது -ம் (அ) -ன் விகுதி ஏற்றல் போல் -ல் விகுதியும் ஏற்கிறது போலும்.தேல் + இறால் = தேற்றிறால்/தேத்திறால்; தேல் + அடை = தேற்றடை/தேத்தடை; தேல் +ஈ = தேற்றீ/தேத்தீ என்கபௌத்த சுவட்டைத் தேடி : கிராந்தி
முனைவர் பா. ஜம்புலிங்கம் குழுவினர் கண்டெடுத்த கிராந்தி என்னும் ஊரின் வெளியே கிடக்கும் முகம் சிதைக்கப்பட்ட புத்தர் சிலையை அளித்த நன்கொடையாளி “கிராந்தி தேப்பிள்ளை” என்பவர் ஆவார். அப்பொழுது, இரட்டைச்சுழிக் கொம்பு இல்லை. குறிலைக்குறிக்க ஒற்றைச்சுழிக் கொம்பின்மேல் புள்ளியும் இல்லை. எனவே, தெப்பிள்ளை என்று படிப்பது தவறு, பொருளும் இல்லை. ஆனால், தே என்றால் இனியன் என்ற பொருள் உண்டு. தீயன் என்ற சொல் (= இனிமையானவன், தீங்கனி, தீஞ்சாறு, ...) தமிழின் முதல் கல்வெட்டாகிய ஆகோட்பூசல் கல்வெட்டிலே கிடைத்துள்ளது அல்லவா? எனவே, “கிராந்தி தேப்பிள்ளை” என புத்தர் பீடக் கல்வெட்டைப் படிப்பது சாலப் பொருந்தும். தே+பிள்ளை = தேப்பிள்ளை. இளம்பூரணர் போன்றோர் தரும் பிற உதாரணங்களினால் அறியலாம்.
கிராந்தி தேப்பிள்ளை - முகம் அழிக்கப்பட்ட புத்தர் பீடத்தில்.பா. ஜம்புலிங்கம் கண்டறிந்த கிராந்தி புத்தர் சிலை:
தேப்பிள்ளை என சிவபிரானை வள்ளலார் பாடும் பாடல் :