Re: {தமிழாயம்} தகரம்

172 views
Skip to first unread message

நா. கணேசன்

unread,
Aug 22, 2015, 3:30:11 PM8/22/15
to தமிழாயம், vallamai, mintamil, housto...@googlegroups.com
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


ஆம், புலவர் இரவா. தகரம் - நந்தியும் அல்ல, ஆவாரையும் அல்ல.
அது வேறு பூ. 

சிந்து சமவெளியிலே இதற்கு மிக முக்கியத்துவம் இருந்தது.
அதைப்பற்றி அவ்வாய்வறிஞர்களுக்கு 10 ஆண்டு முன்பு விளக்கினேன்.
தலைக்கு தகரத்தை, அதன் மலர்களை அரைத்து நறுமணத்திற்காகப்
பூசி குளிப்பாட்டுவார்கள். இது இந்தியாவில் 5000 ஆண்டுகளாய் உண்டு.
இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்கள், சிந்து சமவெளியில் கிடைக்கும்
தொல்லியல் சான்றுகள். 

தகரம், தகரை - இத் தாவரப் பெயரால் பெரிய ஊர்கள் இருந்திருக்கின்றன.
இப்பொழுது சற்று பெயர் மாறியுள்ளது.

பிற பின்!
நா. கணேசன்

புறநானூறு - 132

போழ்க என் நாவே! 

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.  
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.  திணை: பாடாண். 
துறை: இயன் மொழி.  

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே! 
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! 
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே. 

 

Sent from Samsung Mobile


-------- Original message --------
From: N D Logasundaram
Date:21/08/2015 5:04 PM (GMT+05:30)
To: thamizayam
Subject: Re: {தமிழாயம்} தகரம்

அன்பு மிகு இராமகி அய்யா 

இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான்


இதிலென்ன தவறு

அறிவுக்கு என்ன வேலி?? 
யாரு ம் அதற்கு  வேலி போட முடியயாதே  ??

GB INFITT ல் தான் 
அங்கிருப்பது இங்குகூடாது 
இங்கிருப்பது அ ங்கு கூடாது 
யாரோ எதற்கோ தேவையானை ஒன்றை
எல்லாவற்றிற்கும் வைத்து குழப்பம்  விளைவிக்கின்றனர் 

நிற்க 

தகரம் பற்றி சங்கநூல்களில்  நிகண்டுகளில் தே டிக்கொடிருக்கின்றென் 
முடிந்ததும் வைக்கின்றேன் அதற்கிடையில் 

தகரா என ஓர் மலையாள திரைப் படம் வந்தது அங்கு பார்த்தேன்
நீங்கள் கேட்கும் பொருள் பற்றி பிடி ஒன்றும் கிடைக்கவில்லை 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 




நூ த லோ சு 
மயிலை 

2015-08-20 18:50 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
இது புதலியல் (botany) பற்றிய ஐயம்.
 
தகரம் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் ஒருசில இடங்களில் வருகிறது. (இது ஈயம் எனும் மாழை பற்றியதல்ல. இந்தக் காலத்தில் Tin என்றே நமக்கெல்லாம் விளங்குகிறது.)
 
இது நந்தியாவட்டையா (Tabernaemontana divaricata or Ervatamia divaricata) ? அன்றி ஆவாரம் பூவா? [ஆவாரம் பூவிலும் இரண்டு வகைகள் தொடர்பு கொண்டிருக்கின்றன. (Cassia Auriculata and Cassia Tora)] இந்தக் குழப்பத்தில் என்னால் முடிவிற்கு வரமுடியவில்லை. இதுவரை கிடைத்த சங்க இலக்கியக் குறிப்புக்கள் எதுவும் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வில்லை.  இரண்டு, மூன்று குறிப்புக்கள் ஒன்றை நோக்கி நகரவைத்தால், இன்னொரு குறிப்பு அதை மறுக்கவைக்கிறது. தடுமாறிக்கொண்டிருக்கிறேன். இவற்றை அடையாளங்காண மருத்துவக் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், உடல்நலக் குறிப்புகள், புதலியற் குறிப்புகள் என ஏதேனும் உண்டா?
 
தகரம் என்பது பொதுவாகத் தலைமயிருக்கு இட்டுக்கொள்ளும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டும் சாந்தல்ல. பூசிக்கொள்ளும் எல்லாவகை paste களுமே சாந்துகள் தான். ஏன் சுவரிற்குப் பூசுவதும் சாந்துதான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து. சாந்து என்ற சொல்லின் பொருண்மையை நாம் உணரவில்லை.)  இந்தக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்து, அதற்குப் பின் பெண்கள் குளிக்கிறார்களே, அதேபோல  சங்ககாலப் பெண்கள்  இந்தத் தகரச்சாந்தைத்  தலையிற் பூசிக்கொண்டு நீராடியிருக்கிறார்கள். (எங்கள் வீட்டிலேயே 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடித்து தலையிற்பூசிக் குளித்திருக்கிறோம். இந்தத் தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெயோடு சேர்த்துக்  காய்ச்சுதல் 2,3 நாட்கள் நடக்கும். எங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் என் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் புட்டிலாய்த் தைலம்போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இந்த மயிர்ச்சாந்து செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளாது போய்விட்டேனோ என்னவோ?)
 
நாட்டுபுறங்களில் மட்டும் தான் இதுபோன்ற செய்திகள் மீந்துகிடக்கின்றன. உங்கள் ஊர்களில் கேட்டுப்பாருங்கள். 50, 100 ஆண்டுகளுக்கு முந்திய நம்முடைய மரபுச்செய்திகள் கூடப் பதிவு செய்யப்படாமலேயிருப்பதால் சங்க இலக்கியச் செய்திகள் அடையாளங்காணப்படாமலே போகின்றன. ஒரு பெரிய இடைவெளியில் நாமிருக்கிறோம். தகரம் எனும் செடி/மரத்தை அடையாளங்காணும் முயற்சியில் இப்போது நானிருக்கிறேன். இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான். ஆனால் இதையெல்லாம் அங்குபேசித் தெளியமுடியாது. பட்டறிவு அப்படித்தான் சொல்கிறது. என்னை அங்கு பேசவிடமாட்டார்கள். அங்கு நான் மட்டுறுத்தப்பட்ட உறுப்பினன். வெறுமே படித்துக் கொண்டிருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 


STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 23, 2015, 10:36:47 AM8/23/15
to மின்தமிழ், vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:



மேலும் ..."தகர இலை" >>> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%882.jpg


 


Botanical Name: Cassia Tora


என்று டாக்டர் சௌந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.

Dr.S.Soundarapandian 

இவர் தாவரங்கள் பற்றி நன்கு தெரிந்த அறிஞராகத் தெரிகிறார்

https://commons.wikimedia.org/wiki/Special:Search/S.Soundarapandian


மற்றொரு தகரை படம்:

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%883.jpg


மேலும் மற்றுமொரு தகரை படம் 

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%881.jpg



இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம்  டி.நகர், சென்னை

13.03888980.228611

மாம்பலம் இரயில்வே நிலையம் அருகில்....

எனத் தெரிகிறது.


***ஆனால் "நறுமணம்"பற்றிய குறிப்புகளைக் காணவில்லை. 

***தகரை என்பதுதான் தகரம் செடியா ... என்பதும் தெரியவில்லை 




இதன் தமிழ்ப் பெயர்: தகரப் புன்னை. வடமொழி தமிழிலிருந்து கடனாகப்பெற்று ப்ர-புன்னதம் என்கிறது.

இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள்
தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

தகரப் புன்னை, தாழை போல மணற்பாங்கான நெய்தல் திணையில் நிறைய வளர்கிறது:
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

தமிழின் தகரப் புன்னை - வடமொழியில் பிர(பெரு)-புன்னதம்

தாவரவிஞ்ஞானப் பெயரை சிங்களப் பேர் என்கிறது விக்கி. சிலோனில் சிங்களர் தமிழிடம் பெற்ற பெயர் இது.


அமெரிக்காவில் இந்தச் செடிக்கு உறவான செடி உண்டு:

---------------------------------------------------------------

தகர்த்தல் - இடித்துப் பொடிசெய்தல் என்ற பொருளில் வரும் தகரம்/தகரை வேறு தாவரம்.
இமயத்தில் விளைவது. சிந்துமக்கள் அணிந்த மயிர்ச்சாந்தம். சங்க இலக்கியத்தில்
இமயத்தில் இருந்து பகர்ச்சிவரும் அன்னம் (  bh goose, செங்கால் அன்னம் - graylag goose)
பற்றிப் பார்த்தோம். மணச்சாந்து தகரை/தகரமும் இமாலயத்தின் விளைபொருளே.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 3:25:53 PM8/25/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
தகரம் என்பதை தகரம் (< தகடு) என்று இலை அல்லது பூக்கள் தகடு போல உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
தகரம் என்னும் எல்லா மரங்களும் இதற்குப் பொருந்துபவை. சிறுதகரை எனப்படும் Cassia Tora அதன் தகடு போன்ற இலையால்
பெயர்பெறுபவை. சிறுதகரையை தகரப்புன்னை என்கிறது தேவாரம். ப்ரபுன்னாடம் என சம்ஸ்கிருதத்தில் தமிழ்ப்பெயர் வருகிறது.
Cassia மரம் என்றாலும், செடி என்றாலும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். சோழ/சோட-மண்டலம் சோரமண்டல் = Coramandel என அழிப்பது
-ட்- > -ர்- ஆவதாற்றான். காடுவெட்டி (பல்லவர் நகர்) > காருவெட்டி/கார்வெட்டி என இன்று ஆந்திராவில். இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள் தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

---------------------

ஆனால், மயிர்ச்சாந்து ஆகப் பயன்படும் இமையத் தாவரம் ஒரு சிறுசெடி. இந்தத் தகரை/தகரம் செந்நிறமாகப் பூப்பவை என்று சங்க இலக்கியம்
பேசுகிறது. தேவாரமும் இமயமலைத்தாவரம் என்கிறது. இங்கே, தகரை/தகரம் < தகர்த்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக்
கொண்டது என இழையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? 

தகரம் என்னும் சொல்லின் வேர்கள் (1) தகடு (2) தகர்த்தல் இருபாலாக இருப்பதுபோலவே,
கதலி என்ற சொல்லுக்கும் இருபாலான வேர்கள் இருப்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
தெலுங்கில் கடலி என்றால் கடல். கடம்பு > கதம்பு ஆவது போல, கடலி > கதலி
என சிறுவாழைப்பழத்தைக் குறிக்கும். ’கதலீபல நானாவித பரிமள கந்த புஷ்பம் சர்ப்பயாமி’
என அர்ச்சகர் சொல்வார் தீபாராதனையின்போது. கோவிலில் கேட்கலாம்.
ஆனால், மகாபாரதத்தில் கதலி என்றால் மான் என வருகிறது. இதனை, பாரதியார்
தம் பாஞ்சாலிசபதத்தில் ஆள்கிறார். கதழி “விரைவுடைய மா” > கதலி என ஆகிஅது இங்கே.
பழம் > பலம் என்று சம்ஸ்கிருதத்தில் ஆகிறது, அதேபோல், கதழி > கதலி.
பென்சில்வேனியா பல்கலை தமிழ்மொழியியல் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் எழுதிய
மடலுக்கும் யானிட்ட மறுமொழி:

On Mon, Aug 24, 2015 at 9:07 PM, Vasu Renganathan <vasuren...@gmail.com> wrote:
Dear Ganesan,

You are really amazing!  You have so much in your repertoire about Tamil language and culture that not many of us have. 

Your information about vEmpattUr vs. vEppattUr is intriguing.  However, your other examples need to be pondered over further to assert whether or not they belong to this group.  As you know, some of us were on offline discussion about it and came up with so many intriguing stories about this NPP > NP vs. PP theory.


Can you send me offline NPP > NP vs. PP theory? Recently wrote about the vEppEri church,
Apparently, one of the oldest photos of Chennai, done in the first decade of the invention of photography,

vEppEri = vEmpu/vEppu + Eri. In Tamil Nadu, there is both vEmpUr as well as vEppUr (just like
there is vEmpattUr & vEppattUr).

On prof. Hart's question of KaDambu (Tam.) vs. kadambu (Sanskrit) flower name (also, a royal house's totem tree),we have to look at the interesting word, கதலி (kadali) & its history. I have written some points before. kaDal is "sea" in Tamil, and it is "kaDali". For example, 2013 film: https://en.wikipedia.org/wiki/Kadal_(2013_film) On the west coast there is a temple town, kadali in Mangalore. Apparently, kadali < kaDali "the sea". In the same town, kadri Manjunath is a famous temple. People all over India visit it, its administrator is a Jain. kadri is obviously a change from kadali (< kaDali). In the East Godavari district also, there is a kadali village
(which also lost its -D- into a -d-). 

Obviously, since bananas were cultivated from South East Asia, kadali "a small banana" has its source word, kaDal "sea". "kadalii phala" in Sanskrit = kaDali pazham of Tamil.

Interestingly, Bharatiyar uses kadali as a kind of deer. He himself has written as கதலி = ஒரு வகை மான். Hariki, years ago wrote about this special use of kadali "a deer" in Bharati's poetry. 
University of Cologne Monier Williams Sanskrit-English Dictionary
(H1B) कदली [L=42878]         f. the plantain tree
(H1B) कदली [L=42879]         f. **a kind of deer** (the hide of which is used as a seat) MBh. Sus3r.

 "அருஞ்சொற்பொருள் தருவதில் ஏற்பட்ட சிக்கல். ‘கதலி’ என்றொரு சொல் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ளது. வாழைப்பழம், காற்றாடி போன்ற பொருள்கள் அங்கே பொருந்திவரவில்லை. பல அகராதிகள், நிகண்டுகள், அறிஞர்கள் பலர் என்று தேடி அலைந்தும் பலன் இல்லை. பாரதியே ‘கதலி’ என்பது ஒருவகை மான் என்று பொருள் குறித்துவைத்திருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. " 

would love to know where does Bharati note this MBh epic word, kadali as a deer. It is interesting that this MBh epic word, kadali is a modification of kadazhi from Dravidian, katazh = speed. just like maa/maan denotes speed for deer originally, and later when horses were introduced by pre-Rgvedic Aryans (whom Parpola calls as Daasyu Aryans) around 1700 BCE possibly from BMAC, Dravidians call the horses as maa. These pre-RV Aryans co-opted with Dravidians and were worshipping "MazhuvaaL NediyOn" (= Anthropomorphic Axe) in North India, and later as huge monumental sculptures in Tamil Nadu around 800 BC (Mottur, Udayarnattam, Sittannavasal, ...) katazh "speed" > katazhi "deer" changes to kadali in MBh, just pazham "ripened fruit" into phala in Sanskrit.

N. Ganesan



Apparently, the west uses PP and the east uses NP for no clear reason.  There have been lots of examples and we enjoyed going over those pairs in our discussion. 

kompu vs. koppu is one such pair. vEmpu vs. vEppu is yet another pair that you have just told us about. 

Regards,
Vasu

P.S. In the context of appellative forms, one should also consider why in modern Tamil we have compound forms like palporu angkaai 'Consumers' market for common commodities', nalvaaḻttukaḷ 'graceful greetings' and so on. I am sure there can be many of these types.  Apparently, these are coined words and we don't know how these appellative roots were picked up by whoever coined them. Also, I enjoyed reading the Kṛṣ-ṇā story narrated by Mr. Radhakrishna Warrier, but not sure ifKṛṣ can be considered as an appellative form though! Tamil is unique in this sense!

On Mon, Aug 24, 2015 at 3:08 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sat, Aug 15, 2015 at 1:39 AM, Jean-Luc Chevillard <jean-luc.chevillard@univ-paris-diderot.fr> wrote:
Dear Rob,

the language used in poetry must originally have had its root in a spoken language, but there was certainly dialectal variation.

If you read the commentary by Iḷampūraṇar to TE415i (see below),
you see that people had the choice between two possibilities, when combining /kuraṅku/ "monkey" and /kāl/ "leg"

They could say either /kuraṅkiṉkāl/ or /kurakkukkāl/.

Those two forms probably belonged originally to two distinc dialects



I saw recently a Tamil inscription on the grave of a Christian Paravar lady
dated to 1603 CE. The place is vEmpARu in the South. But there is also
vEppattUr and vEmpattUr in Tanjore district. I think cilampu and cilappu may
both be present (Cf. cilampu/cilappu < cilai- in CT, so, cilaimpu/cilaippu seems to
be the original) and the Tirumantiram author chooses cilaippu for anklet
since the etukai matches well with the other 3 lines of the verse.
Recently, there is some nice discussion on etukai in Dravidian, see:
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2015-August/041915.html

Other variations of the same word among different dialects can be considered.
For example, for egrets, herons etc., kokku is Tamil, where as kaGka is in IA in general.
While we can understand the reason for koGka > kaGka since the short o
is absent in IA, kokku & koGku denoting "herons" seem to be present in different
Dravidian dialects, in south and north. Similarly, often p- of Tamil is
b- in Telugu, e.g., palli (Tam.) & balli (Tel.) ultimately from the verb, pullu-
"to embrace, hanging .." for the wall lizard. Another word, is poli/pali in Tamil
is bali in Sanskrit, Telugu etc., just like koGka > kaGka. The flower sacred to Murukan is kaTampu,
this word loses the cerebral consonant -D- to a -d-, hence kadamba flower
the totem symbol of West Coast kings of Goa etc., "kadamba" kings (mentioned
in Sangam texts also).
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/2008-August/032064.html

These variations must be considered in constructing Proto-Drav.(PD) words,
for example, if one looks at the kaDambu flower it shows clearly why the
retroflex -D- is integral part when PD folks named the flower.

N. Ganesan

 
 

On Saturday, August 22, 2015 at 1:39:01 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது

தகரை (< தகடு. தகடு போன்ற இலை, பூ. தகடு ஆகத் தட்டி காசுகள் வெளியிட
tin தென்கிழக்கு ஆசியாவில் இருந்து சங்க காலத்தில் இறக்குமதி ஆனது.
அதனால் தான் தகடு > தகரம்.) செடிகளும் உண்டு, மரங்களும் உண்டு,

எல்லாம் cassia தாவரக் குடும்பம்.
 

22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 3:30 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


மரம்

தகரத் தண்ணிழல் என்ன மரம் என்று பார்ப்போம்.

கிரந்தித் தகரை என்னும் செடியையும் பார்ப்போம்.

நா. கணேசன்
 
 
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 27, 2015, 12:45:52 AM8/27/15
to மின்தமிழ், thami...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Saturday, August 22, 2015 at 1:39:01 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது


சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனை
எஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.

மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,
தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),
”அகரு வழை ஞெமை ஆரம் இனைய  தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும். 
தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).

Synonyms: Cassia surattensis = Glaucous%20Cassia
  • Senna sulfurea (as C. arborescens VahlC. enneaphyllaC. glauca Lam.C. petropolitanaC. sulfureaC. surattensis auct. non Burm.f.C. surattensis Burm. f. ssp.glauca (Lam.) K.Larsen & S.S.Larsen)
  • Senna surattensis (as C. fastigiata VahlC. galucaC. suffruiticosaC. suffruticosaC. surattensis Burm. f.)



தண்ணிழல் தரும் தகர மரம்:
தட்டையான, நீண்ட தகடு போல உள்ள காய்கள், தகடு போன்ற இலை: எனவே,
தகரை என அழைக்கலாயினர். சக்கரமர்தம் என்பது ringworm-ஐக் கொல்லுவதால்.
சுஸ்ருத சம்ஹிதை ப்ரபுன்னாடம்/ப்ரபுன்னிடா என்கிறது. தேவாரத்தின்
தகரப்புன்னை என்னும் மரம் இதுவாக இருக்கக்கூடும். புன்னிலத்தில் வளரும் தகரைமரம்.



தகரை/தகர மரம் - படங்கள்:


-----------------------------------------------------------

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் இன்னொரு தகரை/தகர மரம் மத்ய அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி ஆனது. சீமை என்ற பெயர் முன்னொட்டு அதனால் ஆகும். மலையாளத்தில் எப்பொழுதும் இருந்த
தகரை என்னும் பெயரை இதற்கு வைத்தனர்.

Large-leafletted Eglandular Senna

Fabaceae (pea, or legume family) » Senna alata

 

SEN-nuh -- Latin form of Arabic word for a thorny bush

a-LAY-tuh -- winged

 

commonly known as: candle bush, candlesticks, large-leafletted eglandular senna, ringworm shrub • Hindi: एड़गज ergaj, प्रपुन्नाड prapunnad • Kannada: ಸೀಮೆ ಅಗಸೆ sime agase • Malayalam: ആനത്തകര aanattakara, മലന്തകര malamtakara, ശീമ അഗത്തി seema agatti, പുഴുക്കാടിത്തകര puzhukkadittakara •Marathi: शिमई अगसे shimai agase • Sanskrit: एडगजः edagaja, प्रपुनाल prapunal, उरभ्रः urabhrh, उरणक्षकः uranakshaka • Tamil: சீமையகத்தி cimai-y-akatti, வண்டுகொல்லி vantu-kolli •Telugu: అవిచిచెట్టు avicicettu, మెట్టతామర metta-tamara, సీమ అవిసె siima avise, తంటెము tantemu • Urdu: ايڙگج ergaj

 

Native to: tropical South America (the Amazon rainforest); naturalised elsewhere in tropics

இதற்கும் ப்ரபுன்னாடம் என்ற பெயரை ஹிந்தியில் வைத்துள்ளமை காண்க. அடிப்படையில் தமிழ்ப் பெயர் இது.

ஆனைத்தகரை, மலந்தகரை, புழுக்கடித்தகரை என்கிறது மலையாளம். தமிழில் சீமையகத்தி (வெற்றிலைக் கொடி)

கொடிக்கால்காரர் வளர்த்தும் தோப்புகளில் பார்க்கலாம்.


நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 27, 2015, 1:54:55 AM8/27/15
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
இமயமலையில் தகரம் என்னும் மணப்பொருள் விளைவது. அதனால்,
இமையத்தை வில்லாக வளைக்கும் சிவபிரான் என்ன்னும்போது
“தகரம் அணி அருவித் தடமால் வரை சிலையா”  என்கிறது தேவாரம்.
தகரத் தாவரங்கள் அணித்தே இருக்கும் அருவி எனலுமாம்.

தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்கருத்து.

N. Ganesan

unread,
Aug 27, 2015, 11:04:18 AM8/27/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com


On Thursday, August 27, 2015 at 1:10:56 AM UTC-7, தேமொழி wrote:

ஆனால் நறுமணம் கொண்ட சிவப்புமலர் என்று நீங்கள் குறிப்பிட்ட நினைவு??? 

ஆமாம். இமையம் தரும் விளைபொருள் தகரை/தகரம் என்னும் மணப்பொருள் சிவப்பு மலர் கொண்டது:
அது Cassia குடும்பம் அன்று. முற்றிலும் வேறான குடும்பம். அது என்ன?
எவ்வாறு சிந்து சமவெளியில் கிடைக்கிறது? சங்க இலக்கியத்திலிருந்து 17-ஆம் நூற்றாண்டுவரை
தமிழ் இலக்கியத்தில் இந்த மயிர்ச்சாந்து பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
 

அப்படியானால் Cassia renigera  இருக்கவும் வாய்ப்புண்டு 



இந்த தகரம் இந்தியாவில் இருக்கிறதா என தெரியவில்லை. பார்க்கணும்.
ஆனால், இவை நாத்தமடிக்கும் cassia வகைகள். மணப்பொருள் அல்ல.
இவற்றின் பெயரை தகரை/தகரம் < தகடு என்ற சொல்லோடு சொற்பிறப்பு
ஆகப் பார்க்கவேண்டும்.

தகரம் என்பதை தகரம் (< தகடு) என்று இலை அல்லது பூக்கள் தகடு போல உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
தகரம் என்னும் எல்லா மரங்களும் இதற்குப் பொருந்துபவை. சிறுதகரை எனப்படும் Cassia Tora அதன் தகடு போன்ற இலையால்
பெயர்பெறுபவை. சிறுதகரையை தகரப்புன்னை என்கிறது தேவாரம். ப்ரபுன்னாடம் என சம்ஸ்கிருதத்தில் தமிழ்ப்பெயர் வருகிறது.
Cassia மரம் என்றாலும், செடி என்றாலும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். சோழ/சோட-மண்டலம் சோரமண்டல் = Coramandel என அழிப்பது
-ட்- > -ர்- ஆவதாற்றான். காடுவெட்டி (பல்லவர் நகர்) > காருவெட்டி/கார்வெட்டி என இன்று ஆந்திராவில். இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள் தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

-------------------------------

மணப்பொருள் தகரை/தகரம் தகர்த்தல் = இடித்துப் பொடிசெய்தல்,
இமையத் தாவரம் இதன் வேரை இடித்துப் பொடி செய்து மணப்பொருளாகப்
பயன்படுத்தியதால் தகரை/தகரம் என்ற பெயர். இதற்கும் cassia
குடும்ப நாத்தமடிக்கும் செடி/மரங்களுக்கும் பொருள் வேறு.

தகர்த்தல் = இடித்தல், பொடித்தல் (நிகண்டுகள், சென்னை அகராதி).
ஆட்டுக் கிடாய்கள் ஒன்றையொன்று மோதும். வரையாடு ஆகட்டும் 
(In English also, same reason: ram is so called because they are ramming against each other.

Used as a word (not as an initialism)[edit]

Animals[edit]

Military[edit]

Battering ram, a heavy tool used to batter open walls or gates

  • Ramming, a tactic in which a vessel or vehicle runs into another

தகர் விரவு துருவை (மலைபடுகடாம் 414)



---------------------

ஆனால், மயிர்ச்சாந்து ஆகப் பயன்படும் இமையத் தாவரம் ஒரு சிறுசெடி. இந்தத் தகரை/தகரம் செந்நிறமாகப் பூப்பவை என்று சங்க இலக்கியம்
பேசுகிறது. தேவாரமும் இமயமலைத்தாவரம் என்கிறது. இங்கே, தகரை/தகரம் < தகர்த்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக்
கொண்டது என இழையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? 

தகரம் என்னும் சொல்லின் வேர்கள் (1) தகடு (2) தகர்த்தல் இருபாலாக இருப்பதுபோலவே,
கதலி என்ற சொல்லுக்கும் இருபாலான வேர்கள் இருப்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
தெலுங்கில் கடலி என்றால் கடல். கடம்பு > கதம்பு ஆவது போல, கடலி > கதலி
என சிறுவாழைப்பழத்தைக் குறிக்கும். ’கதலீபல நானாவித பரிமள கந்த புஷ்பம் சர்ப்பயாமி’
என அர்ச்சகர் சொல்வார் தீபாராதனையின்போது. கோவிலில் கேட்கலாம்.
ஆனால், மகாபாரதத்தில் கதலி என்றால் மான் என வருகிறது. இதனை, பாரதியார்
தம் பாஞ்சாலிசபதத்தில் ஆள்கிறார். கதழி “விரைவுடைய மா” > கதலி என ஆகிஅது இங்கே.
பழம் > பலம் என்று சம்ஸ்கிருதத்தில் ஆகிறது, அதேபோல், கதழி > கதலி.
பென்சில்வேனியா பல்கலை தமிழ்மொழியியல் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் எழுதிய
மடலுக்கும் யானிட்ட மறுமொழி:

 
Reply all
Reply to author
Forward
0 new messages