விருதை பாரதி: திருவாலவாய நாடார்
/// 1910லேயே
கல்விக்காகத் தன் உடல், பொருள், ஆவி ஈந்த எத்தனையோ கொடை வள்ளல்களில் ஒருவர் எங்கள் “விருதை பாரதி”
திரு.திருவாலவாய நாடார் அவர்கள்.
வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் வாழ்ந்த காலம் அது. அடுப்பூதும் பெண்ணிற்கு கல்வி எதற்கு? என்று எகத்தாளம் பேசிய எத்தர்கள் நிரம்பிய காலம் அது. மாட்டுத் தொழுவத்திலும், காட்டு வேலையிலும் பெண்டிரின் பெருமைகளை சிறுமையாக்கிய கொடுங்காலமது.
மனிதருள் மாணிக்கமாம் திரு.திருவாலவாய நாடார் அவர்கள் “பெண்களே நாட்டின் கண்கள்” என்றுணர்ந்து, பெண்கள் கல்வி கற்றால் நாடே வளம் பெறும் என்பதை வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வாதிட்டபோது சாணி உருண்டையால் அடி வாங்க நேர்ந்தது. பெண்கள் படிக்க வேண்டும் என்ற வாசக அட்டையை தன் நெஞ்சிலும், முதுகிலும் தொங்க விட்டுக் கொண்டு வீதியில் நடந்து சென்றார். இதற்கு அவர் பெற்ற பரிசு, கேலியும் ஏளனமும்.
அன்னாரின் கடுமையான முயற்சிக்குப் பின் தன் மனைவி மங்கம்மாள் வாழ்ந்த இடத்திலேயே பள்ளியமைக்க விரும்பி, தன் வீட்டையே கொடுத்த கொடையாளர். மங்காவின் மச்சி வீடு என்ற பெயரே மருவி இப்பொழுது “மாங்கா மச்சி” என்று அழைக்கப்படுகிறது.
பாக்கு வியாபாரத்திலே கிடைத்த பங்கை, பள்ளிக் கட்டிட நிதிக்கு அளித்தார். பள்ளி கட்டிடப் பணிக்கு வீதியில் கிடக்கின்ற கல்லையும், மண்ணையும் தன் தோளில் சுமந்து பணி செய்தார். தன் முயற்சியின் வெற்றியினால் 1910ம் ஆண்டு பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடம் அமைத்தார். 1மற்றும்2ம் வகுப்புகள் கொண்ட “இந்து நாடார் பெண் பாடசாலையை” ஆரம்பித்தார்.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆல விருட்சமாய், என்றும் அழியாப் புகழ் பெற்று, நூறு ஆண்டுகளைக் கடந்து, விருதைப் பெண்களின் திறமையை உலகிற்குப் பறை சாற்றி வருகிறது. ///
இணைப்பு கீழே
பள்ளியில் எங்கள் தலைமை ஆசிரியை திருமதி ஜெயலட்சுமி எங்களிடம் சாதிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும்; எங்களுக்குத் திசை காட்டி வழிப்படுத்துவதற்கும்; இந்த வரலாறைப் பல முறை கூறி இருக்கிறார்.
சக