சாமிக்கல்

64 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 4, 2016, 9:25:36 AM2/4/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, ponvenk...@gmail.com, dorai sundaram
அருண்குமார் பங்கஜ் என்பவர் அரிய வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய சாமிக்கல் என்று கல்வெட்டுக் குறிப்பிடும் நடுகல்லை வெளியிட்டுள்ளார்.

இக் கல்வெட்டு படியெடுக்கப்பட்டு அதன் வாசகம் பதிப்பிக்கப்பட்டிருக்கவேண்டும் எந்த நூலில், அல்லது ‘ஆவணம்’ இதழிலா எனத் தெரிந்தால்
மகிழ்ச்சி. இதன் வாசகத்தை திரு. சேசாத்திரி அளித்துள்ளார். இருவாய் அல்லது இருவாச்சி என்னும் கூட்டத்தாரின் தொளுவை/தொறுவை (= ஆநிரை) கொள்வதற்காகச் சென்று பட்ட ஒருவனைச் சாமியாகப் பூசிக்கும் சாமிக்கல். சாமி < ஸ்வாமி என்பது தெளிவு.

சேசாத்திரி அவர்களின் இழையிலே பல செய்திகள் உள்ளன:
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"
எனப் பாடம் கொடுத்துள்ளார். இது அச்சாகியிருக்கலாம். தினமணி, தினமலர் முதலிய பத்திரிகைகளிலும்
சேதி வந்திருக்கும். தேடினால் கிட்டும். தெரிந்தோர்ர் சொன்னால் இதன் ஸ்கான் பெற முயல்வோம்.

இருவாய் (அ) இருவாச்சி என்பது ஹார்ன்பில் என்னும் பறவை. பல பறவைகளை கோத்திரப் பெயர்களாகக் கொண்ட
குலங்கள் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்தனர். அவ்ற்றில் இருவாய் குருவிக் குலத்தார் ஆநிரை கொள்ளப் பூசல்
செய்து இறந்துபட்டானுக்கு எழுப்பிய நடுகல்.  வை (=வய்) என்றால் கூர்மை. இதனால் வசி/வாசி/வாய் என்ற பெயர்கள்
adze-axeக்கு உண்டு. வய் (தொல்காப்பியத்தில் உள்ள சொல். இதனால் வழங்கும் சம்ஸ்கிருத சொற்கள் பற்றியும்,
சிந்து வரலாற்றில் வெளிச்சமாகும் சில ஏடுகள் பற்றியும் இவ்விழையில் சொல்கிறேன். வசிபு என்றால் பிளந்துகொண்டு
செல்வது எனப்பொருள். மின்னல் வசிபு காரிருள் என்னும் பொருளில் சங்க இலக்கிய வரிகள்.

சாமிக்கல் - மக்கள் பேச்சுவழக்கில் உள்ள சொல். இதற்கு அருமையான வட்டெழுத்துச் சான்று இந்தச் சாமிக்கல்.

இருவாய்ச்சி பறவை பெயரும், அக் கூட்டத்தாரும் (இதுபோல் பறவை பெயர் கொண்ட கூட்டத்தார் பற்றி
இவ்விழையில் எழுதுவேன்), சாமிக்கல் என்ற சொல்லாட்சியும் அருமை. இருவாய்ச்சி/இருவாட்சி என்னும்
Belle of India jasminum elongata முல்லைக்கு ஏன் பெயர் ஏற்பட்டது என்றும் பின்னர் பார்ப்போம்.

--------------------------------

சாமிக்கல் என்னும் கை வெட்டுப்பட்டான் கல்

“தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின்படி, சேவூரில் புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014-இல் வைக்கப்பட்ட நடுகல். கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக் கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது:

         இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே அமைந்த பழங்கால நடுகல் சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலத்ததாகும். வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை மட்டும் முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.




--------------------------------

சாமிக்கல்லும் படிக்கல்லும்:

துன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்

 ஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை கொண்டு வந்தான். ஒருகல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படிகல்லாகவும் செய்து முடித்தான். கோயில்கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவதுகேட்ட
சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான்தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தைகேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரேமலையில் தான் பிறந்தோம்..ஒரேசிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகிசெய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்து விட்டான். உன்னை அனைவரும் கைஎடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறிமிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்த சாமிக்கல் ' உன் நிலைக்கு நீயேதான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன்மீது அடித்தார். நீ வலியை தாங்கமுடியாமல் கதறினாய். உன்மீது எங்கு உளிபட்டாலும் உன்னால் அந்தவலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியேவைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும்போது அந்த வலியை நான் பொருத்து கொண்டேன்..தலை, கை, கால் என எல்லாபகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக் கொண்டேன். ஆகையால் நான் ஒருசிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என கூறிய உடன்தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே...நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக் கொள்கிறார்களோ, அவர்களே எதிர் காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்..

Esakki amman save trust kunjaluvilai ஆல் வெளியிடப்பட்டது




N. Ganesan

unread,
Feb 5, 2016, 6:46:08 AM2/5/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
அருண்குமார் பங்கஜ் என்பவர் அரிய வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய சாமிக்கல் என்று கல்வெட்டுக் குறிப்பிடும் நடுகல்லை வெளியிட்டுள்ளார்.

"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"

தடயம் - தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விழுப்புரம் சி.வீரரரகவன், மங்கையர்க்கரசி நூலில் வெளியிடப்பட்டுள்ள சாமிக்கல் கல்வெட்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 5, 2016, 11:03:49 AM2/5/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, dorai sundaram, ponvenk...@gmail.com, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
இருவாய்/இருவாச்சி எனப்படும் பறவை பற்றிப் பின்னர் பார்ப்போம். முதலில், இருவாய்ச்சி/இருவாய் என்று முல்லைமலரின் ஜாதிகளில் ஒன்றுக்கான பழம்பெயருக்கான காரணத்தை அறியலாம். அப்பொழுது இருவாய்க் குருவியின் பெயர்க்காரணம் விளங்கும். இருவாச்சி (இருவாய்ச்சி/இருவாய்) - முல்லை மலர்களில் ஓர் இனம்.

 வை (=வய்) என்றால் கூர்மை. இதனால் வசி/வாசி/வாய் என்ற பெயர்கள் adze-axeக்கு உண்டு. வய் (= வை)தொல்காப்பியத்தில் உள்ள சொல். வை n. Sharpness, keenness, point; வையே கூர்மை. (தொல். சொல். 387.) வையிலை நெடுவேல் (இளம்பூரணர் உரை மேற்கோள்). வை பழங்காலத்தில் வய் என வழங்கியது. கண்/காண் போல, வய்/வாய் ஒரேபொருளில் வரும். வேப்பங்காய் போல காசுகள் இருப்பதைக் குறுந்தொகையும், கொங்குநாட்டில் சங்ககால வெள்ளிக் காசுகளும் இருப்பதை தமிழாசிரியர், கணியர் போளுவாம்பட்டி ஐ. இராமசாமி எனக்கு காட்டி விளக்க்கியுள்ளனர். காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி.

இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:
மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.
அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.

ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.)  இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.



























பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 5, 2016, 1:50:02 PM2/5/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, ponvenk...@gmail.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Friday, February 5, 2016 at 8:22:11 AM UTC-8, pbalakrishnan1 wrote:
>பேச்சு வழக்கில் வாச்சாத்து என்பர். 
> - அரிமா இளங்கண்ணன் 

நன்றி, கவிஞர் அரிமா இளங்கண்ணன் அவர்களே. இதன் இன்னொரு பெயர் கணிச்சி. கணித்தல் = கூர்முனையால் துளைத்தல்.
எனவே, கணிகர் = கூர்மையான எழுத்தாணியால் எழுதுவோர். இந்திய பாஷைகளில் வழங்கும் கர்ணீகர், குலகர்ணி என்பதெல்லாம் இந்தக் கணித்தல் எனும் தாதுவேரில் பிறக்கும் பெயர்ச்சொற்கள். கர்ணீகரில் ஜெயங்கொண்டார், வள்ளலார், அ. கந்தசாமிப்பிள்ளை, ஔவை துரைசாமிப்பிள்ளை, ... எனப் பெரும்புலவர்கள் உண்டு.

சங்க இலக்கியத்தில் வசி எனுஞ்சொல் வினையாகவும், பெயராகவும் வழங்குதலான் இதிலிருந்து வசி/வாசி வடசொல் ஆகியுளது என உறுதிபெறச் சொல்லலாம். வடக்கே, வஶி/வாஶி என ஆகிறது. சிந்து நாகரீகத்தில் இந்த வசி/வாசி பற்றி எழுதிய அறிஞர் கட்டுரையும், அப்போது அவருக்கு எழுதிய மறுமொழியும் அனுப்புகிறேன்.

அன்புடன்
நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 5, 2016, 9:52:44 PM2/5/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, ponvenk...@gmail.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி. பை(பய்) = பசுமை/பச்சை. பைந்தமிழ் = பசிய தமிழ். பய் : பயிர்; பய்>  பாசி, துய் > தூசி, மய் > மாசு; வய் > வாசி. 

இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:
மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.
அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.

ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.)  இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.











































இருவாச்சி/இருவாட்சி என்னும் முல்லை இனம்: இருவாச்சி ஆயுதத்துடன் முல்லைப்பூவின் இதழை ஒப்பிடுக.

’Belle of India" Jasmine:

 






















இருவாய்/இருவாசி என்னும் ஆயுதம் போல் இருப்பதால் இருவாய்ச்சி/இருவாட்சி (முல்லை).

மௌவல் - மனைமல்லிகை:
மௌவல் - மனைமல்லிகை ‘Jasminum Sessiflorum'

நாளை, மயிலை என்று சங்க இலக்கியம், சிலம்பு கூறும் முல்லை இனத்தின்
தாவரவியல் பெயர் பார்ப்போம். கல்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில்
எழுத்தராய்ப் பணிபுரிந்தவர். ‘மயிலைக்காளை’ கதை எழுதினார்.
மயிலைக்காளை என்றால் என்ன? - என அறிந்தால் மயிலை என்னும்
முல்லை இனத்தை இனங்காண்டல் எளிது.

N. Ganesan

unread,
Feb 6, 2016, 8:19:23 AM2/6/16
to வல்லமை, mintamil, Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Saturday, February 6, 2016 at 1:11:19 AM UTC-8, ruthraa e.paramasivan wrote:
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

கர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்
காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.

கண்டபேரண்டம் என்பது ஒரு கற்பனைப் பறவை. சுமேரியாவில் தொடங்கியது.  Bactria-Margiana Archaeological Complex https://en.wikipedia.org/wiki/Bactria%E2%80%93Margiana_Archaeological_Complex
வழியாக சிந்து சமவெளிக்கு, அதன் முடிவில் வருவது. சரபம் என்னும் வடிவை அடக்கிய கண்டபேரண்ட பக்ஷி என்னும்
புராணங்கள் எழுந்துள்ளன.

-----------------------

ஆனால், இருவாச்சி/இருவாய் என்னும் பறவை யினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகுதி.
மேற்குத்தொடர்ச்சி மலை என்னும் சஹ்யாத்ரியை எல்லையாகக் கொண்ட கேரளாவின்
மாநிலப் பறவை இந்த இருவாய்/இருவாய்ச்சி. இருபுறமும் கூர்மையான வாய்/வய் கொண்ட
adze-axe-னினால் பெயர் பெறும் பறவை இது. முந்தைய மடலில் இருவாச்சி எனும் முல்லை ஜாதியின்
கூர்மையான நுனி கொண்ட பூவிதழ்களைக் காட்டியுள்ளேன். இருவாச்சி/இருவாய் ஆய்தமும்,
இருவாச்சி முல்லையும் ஒப்பிட்டால் புரிந்துகொள்ளலாம்.

அடுத்து, இருவாச்சி குருவியை - ஹார்ன்பில்லை - குலச்சின்னமாகக் கொண்ட வேட்டுவர் பற்றி
விளக்க சாகாடை (காடை), பனங்காடை குருவிகளை குலச் சின்னங்களாகக் கொண்ட வெள்ளாளர்
பற்றி குறிப்பிடுகிறேன்.

ஒரு வினா:
பஃறுளி - பறுளி ஆறு என்கின்றனர் குமரி மாவட்டத்தில். அஃது - அது, இஃது - இது.
பல் (தந்தம்) கொண்ட, யானையோடு விலங்கியலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் தொடர்பிருந்த விலங்கு பஃறி = பன்னி/பன்றி. பல்+தி = பஃறி, பன்னி/பன்றியிலும்
உள்ள சொல் பல் (=தந்தம்). சலாகை என்னும் மூத்த ஒருத்தலில் தந்தம் உண்டு பஃறிக்கு.
அதுதான் வராக அவதாரம். சில்/சிறு > சின்னம் “icon", அஃது, இஃது, உஃது, பஃறி, பஃறுளி (=பல் துளி)
... போல சில் + ந (n-pratya) = சிஃனம் என வடமொழியில் உள்ள தமிழ்ச்சொல்லா?
பஃறி/பஃனி = பன்னி என ஆகிவிட்டது. சிஃநம் = சின்னம், தமிழின் ஆய்தம் இன்னும்
வடமொழி வைத்துள்ளதோ?

चिह्नcihnan.impression
चिह्नcihnan.mark
चिह्नcihnan.tag  [ computer ]
चिह्नcihnan.sign
चिह्नcihnan.symbol
“@” चिह्न“@” cihnan.at sign - symbol '@'  [ computer ]

நா. கணேசன்
 

அன்புடன் ருத்ரா


N. Ganesan

unread,
Feb 6, 2016, 8:29:48 AM2/6/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com


On Saturday, February 6, 2016 at 5:19:21 AM UTC-8, N. Ganesan wrote:


On Saturday, February 6, 2016 at 1:11:19 AM UTC-8, ruthraa e.paramasivan wrote:
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

கர்நாடகாவில் அரசாங்க சின்னமாய் அந்த "கண்ட பேரண்ட பட்சி"யாய்
காட்சிப்படுகிறதே அந்த "இருவாய்"க்குருவியின் சின்னம் தான் அது என்றால் நம் தமிழ் தொன்மையில் தான் கன்னட மொழி மரபு இருந்திருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு.


கண்டபேரண்டம் = இருதலை ஓருயிர்ப் புள் (சங்க இஅக்கியத்தில்) - கல்பநாபக்ஷி.

ஆனால்,
இருவாய்/இருவாய்ச்சி = வாழும் ஹார்ன்பில்ஸ். பெயரிலும் இருதலை இல்லை ஹார்ன்பில்சுக்கு என அவதானிக்கவும்.
இருவாய் என்னும் இருவாசி என்னும் 2 வாய்கள் கொண்ட மண்வெட்டும் ஆயுத்தால் பெயர் அளித்தனர் பண்டைத் தமிழர்.
இருவாட்சி/இருவாச்சி/இருவாசி/இருவாய்.முல்லை இனம், ஹாஐன்பில்ஸ், adze axe கூர்மையான pointed tip to make dents
கொண்டவை.

N. Ganesan

unread,
Feb 6, 2016, 1:10:48 PM2/6/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
விழுப்புரம் வீரராகவன் - மங்கையர்க்கரசி பதிப்பித்துள்ள நடுகல் கல்வெட்டு:
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"

இந்த நடுகல்லில் உள்ள செய்தி:
கடைவெண்மலைக்கோடு என்னும் இடத்து வேட்டுவர்கள்,
இருவாய் என்னும் ஹார்ன்பில் புள்ளின் பெயரைக் குலச்சின்னமாய்க் கொண்டவர்களின்
ஆநிரை கவரச்சென்றபோது இறந்துபட்டவனுக்கு எழுப்பிய நடுகல் என்பதே,

புள்ளின் பெயர்கொண்ட குலத்தவர்கள் ஆரியம் தலையெடுக்காத காலத்தே தமிழகத்தில்
பலர் உண்டு. இவ்வகை இயற்கைப் பொருட்களைச் சின்னக்களாகக் கொண்ட
மக்களை ஹவாயி தீவுகள், அமெரிக்க செவ்விந்தியர் இனங்களிலும் மிகுதியும்
காணலாம்.

கீரன் தமிழின் பழைய அந்தணர்கள். சங்கறுப்பவர்கள். 
“சங்கறுப்ப தெங்கள்குலம் சஙரனார்க்கு ஏதுகுலம்”
”சங்கதனைக் கீர்கீர் என்று அறுக்கும் நற்கீரனோ” சிவபிரான்!
சங்குப்பூச்சியை வாளரத்தால் துமிக்கும் போது ஏற்படும் ஓசை: “கீருகீரு”.
கீர்கீர் என்னும் அனுகரண ஒலிக்குறிப்புச்சொல்லால் பிறப்பது கீரன் என்ற பெயர்.
சென்னைத் தமிழில் மெர்சல் விருசல்/விர்சல் < விருவிரு எனல் - ஒரு ideophone:

காங்கயம் கீரனூரில் மச்சினன்மார்கள் பலர் சேர்ந்து முழுக்க
கல் திருப்பணியாக சிவனுக்கு கோயில் கட்டிவருகின்றனர்.
நன்கொடை கேட்டு மாப்பிள்ளைமார் எனக்கு அனுப்பிய
சில கீரனூர்க் காடைகளின் கோயிலை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

கீரனூர்க் காடை - குலகுரு சிவாச்சார்யார்:
செல்: 95005 58414 

முகவரி:
V. S. கிருஷ்ணசாமி சேனாபதி கொடுமுடி பண்டித குருசுவாமிகள்,
சரவணா நகர்,
சிவன்மலை,
காங்கயம் - 638701
திருப்பூர் மாவட்டம்.

15 ஆண்டு முன்னர் ஒரு தலபுராண நூல். எலெக்ட்ரீசியன் அக் கோயிலார்.
திருவூடல் உற்சவம் பற்றிய வசனம். ஆனால், உருப்பிறழ்ந்து அச்சிட்டுள்ளனர்.
நல்ல ஏடு கிடைத்தால் அரிய ஆவணம்.

நா. கணேசன்

கீரனூர் அம்மன் கோயில் - திருப்பணியில் முன்னேற்றம் பார்க்கலாம்,



N. Ganesan

unread,
Feb 6, 2016, 6:43:30 PM2/6/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, dorai sundaram
விழுப்புரம் வீரராகவன் - மங்கையர்க்கரசி பதிப்பித்துள்ள நடுகல் கல்வெட்டு:
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"

இந்த நடுகல்லில் உள்ள செய்தி:
கடைவெண்மலைக்கோடு என்னும் இடத்து வேட்டுவர்கள்,
இருவாய் என்னும் ஹார்ன்பில் புள்ளின் பெயரைக் குலச்சின்னமாய்க் கொண்டவர்களின்
ஆநிரை கவரச்சென்றபோது இறந்துபட்டவனுக்கு எழுப்பிய நடுகல் என்பதே,

 கச்சிரா(ய)பாளையம் வேட்டுவர் கல்வெட்டில் “இருவாய்” என்னும் ஹார்ன்பில் புட்குலத்தார்
பற்றி அறிய வேட்டுவர்களைக் கேட்கவேணும். கரூரில் வரலாற்றுப் பேரா. இராஜசேகர தங்கமணி
இருக்கிறார். அவரது மக்கள் அமெரிக்காவில். பேராசியரிடம் பேசலாம். ஊருக்கு அடுத்த மாதம் வருவார்.

ஒப்பீட்டுக்கு, கொங்குநாட்டு வேளாண் தொழிலரில் சாகாடை, பனங்காடை கூட்டத்தாரைக் குறிப்பிடலாம்.
சாகாடை (அ) காடை: https://en.wikipedia.org/wiki/Common_quail
பனங்காடை: மரத்தில் வாழ்வது. https://en.wikipedia.org/wiki/Indian_roller

விரிவான செய்திகள் அறிய, ஒரு வலைச்சுவடி:
கோவை துரை சுந்தரம் பாசூர் மடத்தில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து எழுதவேண்டும்.
ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில் அச்சாகியிருக்க வாய்ப்புகள் உண்டு.

செப்பேடுகளை புலவர் செ. இராசு அண்ணன் வெளியிட்டார்கள். அதனைத் தான்
இங்கே படிக்கிறீர்கள்:

எண்ணாயிரம் என்ற ஊரில் ஸ்ரீவைஷ்ணவ பிராமண குலத்தில் பிறந்து,
சீரங்கத்தில் மடைப்பள்ளியில் பரிசாரகராய் பணிபுரிந்து, ஆனைக்கா தாசியிடம் உறவாடி, 
பின்னர் கொங்குநாடு போந்து, பாசூர் மட தீக்ஷிதர்கள் பரிந்துரையின் பேரில் நிலக்கொடை பெற்று
வாழ்ந்தவர் காளமேகம். இன்றும் அவர் வாழ்ந்த ஊர் காளமங்கலம்
என விளங்குகிறது. காளமேகமங்கலம் சுருங்கிக் காளமங்கலம் ஆகிவிட்டது.
கற்றான்காணியாக அளித்த நிவந்தம். மங்கலம் என்பது பிராமணர்களுக்கு
அளித்த நிலக்கொடை: சதுர்வேதிமங்கலம், .... போன்றன. காளமேகம்,
பாசூர் மடம் தொடர்புகளை திருச்செங்கோடு அஷ்டாவதானி முத்துசாமிக்
கோனாரவர்கள் “கொங்குநாடு” என்னும் நூலில் ஒரு நூற்றாண்டுமுன்னர்க்
குறிப்பிட்டுள்ளார்கள். தமிழின் மிகப் பெரிய satirist பாசூர் வந்தவரலாறு.
அங்கே அவர் எழுதிய சித்திரமடல் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர் சுவடி, ம. பெ. தூரன் அவர்கள் வழியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் அச்சிட்டது. யாராவது அதனை பிடிஎப் ஆக்கி அளிக்கலாம்.

நா. கணேசன்

காளமேகப் புலவர் சரிதத்தில் சில ஏடுகள்:



N. Ganesan

unread,
Feb 7, 2016, 11:43:53 AM2/7/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, doraisu...@gmail.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, ponvenk...@gmail.com, Santhavasantham, thangam r, anantha krishnan, abiba...@gmail.com, Asko Parpola, George Hart

காய்: காசு. இன்னொன்று: மை (மய்) - மய் - மசி (ink) வருகிறது அல்லவா. மய் > மசி/மாசு. மாசு ‘கறுப்பான blemish'. துய் (மலரில் உள்ள பொடி) > தூசு. வய் - வசி/வாசி என ஆகிறது. தேங்காய் மட்டையை உரிக்கும் வசி. பை(பய்) = பசுமை/பச்சை. பைந்தமிழ் = பசிய தமிழ். பய் : பயிர்; பய்>  பாசி, துய் > தூசி, மய் > மாசு; வய் > வாசி. முய்-/மொய்- நெருங்குதல். எனவே, கலியாணங்களில் முய் வைத்தல் - நெருக்கடிக்கு உறவு/நட்புக்கு உதவிப்பணம்.
முய்- > முசு (முசுவு) : Busy ஆக இருக்கிறான் என்பதற்கு வழங்கும் பழமையான கொங்கு வழக்கு (பார்க்க: பழமைபேசி வலைச்சுவடி).

இருவாசி/இருவாய்ச்சி: சிந்து சமவெளியில் கிடைக்கும் ஆயுதம்:
மரங்களின் உயரத்தில் வாழும் இருவாய்/இருவாச்சி பறவைகள் அவற்றின் அலகால் பெயர் பெறுபவை.
அதேபோல், முல்லைச் சாதிகளில் இருவாய்/இருவாட்சி/இருவாட்சி அதன் நீண்ட இதழின் கூர்மையான முனையால் பெயர்பெறுபவை (Belle of India - jasminum elongata). முல்லை வகைக்கும், ஹார்ன்பில் பறவைக்கும் பெயர்க்காரணம் விளங்க தமிழர் இருவாச்சி என வழங்கிய ஆயுதத்தைக் காண்க.

ஒருபுறம் மாத்திரம் கூர்நுனி இருப்பின் வசி/வாசி/வாச்சி. இருபுறமும் கூர்மையாக இருப்பது இருவாய்/இருவாய்ச்சி (வாய்/வய் - கூர்மை. ;வய்யே கூர்மை என்பது தொல்காப்பியம்.)  இருவாச்சி படமும், இருவாச்சி முல்லைப் பூவிதழும், இருவாய்/இருவாச்சி (ஹார்ன்பில்) அலகும் ஒப்பிட்டால் பண்டைத் தமிழர் பெயர் கொடுத்த திறனைப் புரிந்துகொள்ளமுடியும். வய்யே கூர்மை என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் வசிதல் - துளைத்தல், பிளத்தல், வளைத்தல் என்ற பொருள்கொண்ட வினைச்சொல் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம். தோய்த்தல் என்னும் நொதிப்பது என்ற பொருளுடைய வினைச்சொல் தோசை என வருகிறது. அதேபோல், வை(வய்) > வசி/வாசி. இது தமிழினின்றும் வடமொழிக்குச் சென்ற த்ராவிடச்சொல்.











































adze-axe படம் மேலே. இதன் தொல்லியல் வரலாற்றை -
தமிழ் வடமொழிக்குத் தரும் பெயரை ஆராய்வோம்.
முல்லைப்பூ ஜாதிகளில் இந்தக் கணிச்சியால் பெயர்பெறுவது
இருவாச்சி மலர். மிக அழகானது, நறுமணம் மிக்கது.
”Belle of India" jasmine - இருவாச்சி/இருவாய்/இருவாட்சி (முல்லை இனம்),
இருவாட்சி (”Belle of India" jasmine) சமூலத்தை (root) பாலில் அரைத்து பாலில் கலந்து சாப்பிட கண் பார்வை அதிகரிக்கும். இருவாட்சி iruvāṭci n. <இரண்டு+வாய். (MTL)
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை (11-ஆந் திருமுறை):
"புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய"

அதேபோல, adze-axe போன்ற அலகினால் ஹார்ன்பில்ஸ் புள்ளும் அதே பெயர் அடைந்துள்ளது:
இருவாய்/இருவாச்சி (Hornbill) பறவைகள்:
http://www.hornbills.in/   (எல்லாத் தகவல்களும் உள்ள வலைதளம்)

சில இருவாய் இனங்களில் அலகின் மேல் புடைக்கும்
சொண்டு (Casque) இல்லை:  கேரளாவின் மாகாணப்புள்ளான மலபார் இருவாய் புள்ளுக்கு
சொண்டு இல்லை. https://en.wikipedia.org/wiki/Malabar_grey_hornbill 
ஆனால், மற்ற இனங்களுக்கு புடைப்பாக உள்ள சொண்டு உண்டு.
சொண்டு என்றால் உதடு, எனவே இருவாய்ப் புள்ளுக்கு சொண்டுக்குருவி
எனப்பெயரும் உண்டு. மலைமொங்கான், இரட்டைச் சொண்டன்,
தெலுங்கில் கொம்முக்குருவி (= கொம்புக்குருவி), ஆங்கிலத்திலும்
அலகின் மேல் உள்ள Casque கொம்பு (ஹார்ன்). கொம்பு சூடிய
சொண்டின் மேல் இருப்பதால் கொம்முக்குருவி என்பர் தெலுங்கர்.

பொள்ளாச்சி வால்பாறையில் மலை இருவாச்சி:

சொண்டில்லா இருவாய்/இருவாச்சி
Malabar hornbill - State bird of Kerala
Ocyceros griseus -India-6-4c.jpg

சொண்டுள்ள இருவாய்ப் புள்
Great Hornbill of the Western Ghats.
Photographed at Valparai, Pollachi. Observe the Casque on its beak (it is called சொண்டு in Tamil):
A large brightly-colored bird perched in a tree

These great treasures of Wildlife are dying out in India at an alarming rate.
I discovered the role of Gharial in Linga development in Indian religion in Indus seals to
Early Iron Age in Tamil Nadu (Anthropomorphic Axe sculptures at Mottur, Udayarnaththam, Siddhannavasal, etc.,
See 16th Word Sanskrit Conference Proceedings held in Bangkok, Thailand, 2015).

கல்பட்டார் கட்டுரை:
எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருவாய் (புள்) கண்காட்சி:

பல மரங்கள் மேலைத்தொடர்ச்சி மலையில் வாழ
இருவாய் பறவைகள் தாம் காரணம். மரங்களும்,
இந்த அரிய பறவைகளும் அழிந்துவருகின்றன,
காடுவெட்டிகளால்.


மழைக்காடுகளின் மரணம்:

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages