மாண்ட- மாண்பு, மாட்சி------------------
மாண்ட- என்ற சொல் மாண்பு, மாட்சி என்ற பொருளிலேயே பொ.யு. 1000 (First Millennium) வரை இருப்பதைக் காண்கிறேன். மா- (மாம்பழம். அறுத்தால் பொன்னின் நிறம்). மாழை - பொன். மாழை ஒண்கண். மாழை ஒண்கண்ணி, மாவகிர்க் கண்ணி, வடுவகிர்க் கண்ணி - பார்வதி அம்பாள். மாழை - மாடை : ஒரு பொற்காசு.
மாழ்-/மாண்-/மாட்சி. An intrinsic rule of retroflexion in Dravidian languages, showing the source of Retroflexion in Sanskrit. Here is an example I wrote yesterday, ciLukku-/ciDukku/ciNukku-
https://x.com/naa_ganesan/status/2029284040302370848மாண்ட- இறத்தல் என்ற பொருளில் சங்க நூல்களில் உண்டா?
------------------------
மாள்- : இறத்தல்/செத்தல். சாவு < சாய்தல். சவம் > ஶவம் (ஸம்ஸ்கிருதம்), இது தமிழ்ச் சொல் என்பர் சம்ஸ்கிருதப் பேராசிரியன்மார்.
DEDR 4831 Ta. māḷ (māḷv-, māṇṭ-) to die, perish, be exhausted, expended or finished; māṭṭu (māṭṭi-) to kill, destroy, remove, cause to disappear; māṇṭār the dead; maṭku (maṭki-) to be dim, deprived of lustre, glory, or brilliance, lose strength, be destroyed. Ka. māṇ to stop, cease, subside, be laid aside, be got rid of, be checked or repressed, desist from, cease from, give over; māḷ to cease, etc. Tu. māṇāvuni, mānāvuni to lessen, decrease, abate. Te. mālu to be spoiled, be destroyed, be removed; mālucu to stop, set aside, remove; malugu to be extinguished, (K. also) be reduced, diminish (as hunger), (lamp) goes down due to lack of oil; malupu to extinguish, put out, destroy; (K.) malãgu to cease, stop (as births and deaths), (sins) to diminish; (K.) malãpu to remove, extinguish; manũgu, (K. also) manuvu to die. Kuwi (F.) mṛakhali to obliterate, wipe out; (Ṭ.) maṇk- to erase; (Isr.) mṇeṅg- (-it-) to die out, be destroyed; mṇek- (-h-) to destroy completely, erase. DED 3958.
மாய்-தல் > மா(ய்)ழ்- மாழ்குதல் மாண்டார் (செத்தார்). இப் பொருள் பெரும்பான்மை இரண்டாம் ஆயிரத்தில் (Second millennium) ஆகியுள்ளது. சீ- (Palm tree like palmyrah palm, coconut palm, date palm etc.,)
ஒப்பு: சீ(ய்)ழ்- சீழம் > ஈழம் "கள்ளு".
DEDR 4830 Ta. mār̤ku (mār̤ki-) to be bewildered, fascinated, be spoiled or lost, grow lazy; mār̤ā (-pp-, -nt-) to be fascinated, be confused, bewildered, fade, become dim. Ma. mār̤kuka to languish, grow faint, sleep, die; mār̤kāta unfailing, unremitting; mār̤kal, mār̤ca faintness, dullness, laziness. Cf. 4750 Ta. mar̤uku. DED 3957.
மாள்-/மா(ய்)ழ்- என்னும் வினைச்சொல் தரும் மாண்டார் "செத்தார்" பிரபல ஆட்சி கொள்வது இரண்டாமாயிரத்தில் எனத் தெரிகிறது.
என் வினாவல்:மாண்ட- இறத்தல்/சாதல் என்ற பொருளில் சங்க நூல்களில், 18 கீழ்க்கணக்கில், ஐம்பெரும் காப்பியங்களில், பக்தி நூல்களில் (தேவாரம், திருமுறை, திவ்வியப் பிரபந்தம்) உண்டா?
மறுமொழிக்கு நன்றியுடையேன்,
நா. கணேசன்