அணுக்கு/அணுங்கு என்னும் தமிழ் வினைச்சொல் தருவது அணு என்ற Atom என்பதற்கு வடமொழியில் பயன்படும் சொல். உ-ம்: இந்தியாவின் அணுசக்தி கமிஷன். அணுக்கும் தொழிலால் அணங்கு எனச் சங்க கால பேய்/தெய்வ சக்திக்குப் பெயர் (Power to afflict, aNangu theory of Tamil society, as discussed by Hart, Dubianski, ...)
Waterfall என்பது நீர்வீழ்ச்சி எனவும். அணுங்கு/அழுங்கு என்னும் anteater (pangolin) >> எறும்புதின்னி என்றும் முழிபெயர்ந்தது அல்லவா? அதுபோலத் தான், கழுதைப்புலி << ’bastard tiger' என்ற சொல்.
கடுவாய் (Hyena; hyaena hyaena):
பாலூட்டிகளிலே பற்களின் அழுத்தம் 800 கிலோகிராம் செலுத்தும் தன்மை உள்ளவை ஹைனா என்னும் கடுவாய் விலங்குகள் தாம். 1100 psi (pounds per square inch) pressure are exerted to break the bones of dead animals' carcasses. எனவே, கழுதைப்புலிகளுக்குப் பழம்பெயர் கடுவாய் என்பதாகும். இதனைத் தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம். Hyena கடைவாய்ப் பற்கள் மிக வலிமை வாய்ந்தன. எனவே, மற்ற விலங்குகள் விட்டுச் செல்லும் மாமிசத்தை, முக்கியமாக, எலும்புகளைக் கடித்து உடைத்துத் தின்னும். http://facstaff.susqu.edu/p/persons/hyena.htm இக் கடுவாய் விலங்குகளின் பின்புறத்தில் (anal glands) ஒரு துர்நாற்றப் பசை சுரக்கும். இதனை, கடித்துண்ணும் அழுகும் தசை (carrion, carcasses), பிண மாமிசம், ... இவற்றோடு சேர்த்து மாமிச முடைநாற்றம் வீசும் விலங்குகள் என இக் கடுவாய்களைக் குறிப்பிடுவர்.
வேளாண் தொழிலில் ஆடு மாடுகள் முக்கியம். அவற்றைப் பட்டிகளில் புகுந்து அடித்துக்கொல்வதும், குறைநிலங்களில் கன்றுகாலிகள் மேயும்போது கொல்லும் இயல்பினவாக கடுவாய் விலங்கு இருந்தன. எனவே, நாராசம் போன்ற கூரான ஈட்டியை எறிந்து உழவர்கள் கொல்வது உண்டு. இதனைத் தமிழ்ப் பழமொழியாக நம் இலக்கியங்களில் காண்கிறோம். இங்கேயும் தீநாய் என்று கடுவாய் அழைக்கப்படுகிறது. விவசாயிகளின் இந்த செய்கையைக் கண்ட பிரிட்டிஷார், போலோ பந்தாடல் (கம்பன்) போல, குதிரை ஊர்ந்து கூரீட்டியால் கடுவாய்களைக் கொல்லும் வேட்டையாடலைத் தொடர்ந்தனர்.
மணிமேகலைக் காப்பியத்தில் இடுகாட்டில் கடகம் சூடிய பிணந்தின்னும் தீநாய் என இக் கடுவாய் விலங்குகளைச் சீத்தலைச் சாத்தனார் பாடியுள்ளார்.
தீக்காலம் tī-k-kālam , n. < id. +. Evil times; கேடுவிளைவிக்குங் காலம். தீக்காலி tī-k-kāli , n. < id. + கால்¹. 1. Woman believed to bring misfortune to a family by her arrival; தன்வரவால் குடிகேடு விளைப்பவளாகக் கருதப்படுபவள். தீக்கடன், தீக்கதி, ... போலத் தீநாய் என்பது இழவு, பிணம், பிண என்பு தின்னல் போன்றவற்றால் ஏற்பட்ட பெயர். இது பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.
ஒரோவழி, புலியை நரி என அழைக்கும் வழக்கம் மலையாளிகளிடம் காண்கிறோம். இது தீநாயின் (striped hyena) உறவுடைய இனம் புலி எனக் கருதியதால் தான். தீநாய்களுக்கு அடுத்த படியாக தாடைவிசை (jaw pressure) செலுத்தும் விலங்கு புலி ஆகும். அதனையும், கேரளாவில் கடுவாய் (கடுவா) என்பதுண்டு. சுமார் 1960 வாக்கில் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய ‘கடுவாய் வளைவு’ சிறுகதையைக் கேட்டுப் பாருங்கள்: https://youtu.be/6d3XH6sk5pU இதில், கேரள வழக்காகிய கடுவா = புலி போல உள்ளது.
மேலும், சுடலை மயானங்களிலும், இடுகாட்டு புதைகுழிகளிலும் பிணங்களை தோண்டி எடுத்து எலும்புகளைக் கடித்துத் தின்னும் கடுவாய் விலங்குகள் ஹைனாக்கள். எனவே, கழுதைப்புலி என்னும் தவறான பயன்பாடு கழுது + அம் + புலி = கழுதப்புலி என்னும் சொல் எனக் கொள்ள இடமுண்டு.
கழுது kaḻutu , n. 1. Demon; பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633). In Africa, Masai tribe leave their dead to be eaten by hyenas.
கடுவாய் (hyena) :: தீநாய் எனப் பெயர் ஏற்பட்ட காரணம் (உ-ம்: மணிமேகலை, பௌத்த காவியத்தில்),
இந்தியாவில், வரித் தீநாய் (striped hyena) மட்டும் தான் வாழ்கின்றன. வரித் தீநாயும், பொறித் தீநாய் (அ) புள்ளித் தீநாய் (spotted hyena) ஆப்பிரிக்காவிலே உண்டு.
Though attacks on live humans are rare, striped hyenas will scavenge on
human corpses. In Turkey, stones are placed on graves to stop hyenas
digging the bodies out. In World War I, the Turks imposed conscription (safar barlek) on mount Lebanon; people escaping from the conscription fled north, where many died and were subsequently eaten by hyenas.[47]
தீநாய்களின் தொன்மங்களைப் பதிவு செய்வதில் மணிமேகலைக் காவியத்திற்கு உலக இலக்கியங்களில் முக்கிய இடம் உண்டு. இந்த வாரத்தில் நிகழ்ந்த முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பைச் சொல்லவேண்டும். 50,000 வருடங்களுக்கு முன், நியாண்டர்தால் மனிதர்களை வேட்டையாடி, அல்லது பிணங்களை வைத்த குகைகளில் தீநாய்கள் என்புகளைத் தின்றன. அவற்றின் எச்சங்கள் கிடைத்துள்ளன என்பது மிகப்பெரிய தொல்லியல் கண்டுபிடிப்பு.
பிற பின்!
நா. கணேசன்