Robot Car Controlled by Android Mobile a Hemmathagama Student

1 view
Skip to first unread message

Rushdi Hadhi

unread,
Jul 10, 2013, 6:16:09 AM7/10/13
to seed-fo...@googlegroups.com, hm...@googlegroups.com


Android தொலைபேசி மூலம் இயங்கும் ரோபோகார், மாவனல்லை மாணவன் கண்டுபிடிப்பு - www.mawanellanews.com
By admin on July 10, 2013
01

வேகமாக முன்னேறிவரும் உலகின் தொழில்நுட்பங்களை கையடக்கத்துக்கு கொண்டுவரும் தொழில்நுட்பம் எம் அனைவரையும் வியப்படையச்செய்கிறது.

அவ்வகையில் Android தொலைபேசி மூலம் இயங்கக்கூடிய ரோபோகார் ஒன்றைக் கண்டுபிடுத்துள்ளார் மாவனல்லை ஹெம்மாதகமயைச் சேர்ந்த 18 வயதான முஹம்மத் ஜஸ்லி ஹாதி என்பவர். ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரியின் பழையமாணவரான இவர் தற்போது university of Coventry இல் electrical and electronic engineering பட்டப்படிப்பினை மேற்கொண்டுவருகிறார். இவர் கேகாலை ஸ்ரீ லங்கா டெலிகாம் இன் முகாமையாலர்களில் ஒருவராக பணி புரியும் அல் ஹாஜ் அப்துல் ஹாதி அவர்களதும், ஹெம்மாதகம அல்அஸ்ஹர் கல்லூரியின் ஆசிரியையாக கடமையாற்றிய ஜனாபா ஸரீஹா பதுர்தீன் அவர்களதும் கனிஷ்ட புதல்வர் ஆவார்.

AVR Micro controllers ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் Bluetooth தொழில்நுட்பம் மூலம் தொலைபேசியினூடாக கட்டுப்படுத்தப்படுகிறது. Micro controllers ஆனது C Language மூலம் இயக்கப்படுகையில், Java மூலம் Android Application வடிவமைக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் இவ்வாறான ஒரு பாராட்டத்தக்க கண்டுபிடிப்பின் மூலம் மாவனல்லை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த ஜஸ்லி ஹாதியை மாவனல்லை மக்கள் சார்பாக நாம் பாராட்டுவதோடு அவருடைய மேற்படிப்பில் மேலும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு வாழ்த்துகிறோம். வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்…!!!

News: M J Aashik Ahamad

Reply all
Reply to author
Forward
0 new messages