BHAGAVAD RAMANUJA 1000TH BIRTHDAY YEAR

1 view
Skip to first unread message

Kannan Bargavan

unread,
Aug 23, 2016, 12:23:20 PM8/23/16
to hinduism-a-broad-view
Inline image 1



இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன் இணையடிப்போ

தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற்பாத மென்றுங்

கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத்

திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே.

பதவுரை

இடம் கொண்ட கீர்த்தி

பூமியெங்கும் வியாபித்த கீர்த்தியையுடையரான

மழிசைக்கு இறைவன்

திருமழிசைப் பிரானாடைய

இணை அடி போது

உபயபாதாரவிந்தங்கள்

அடங்கும்

குடிகொண்டிருக்கப் பெற்ற

இதயத்து

திருவுள்ளத்தை யுடையரான

இராமாநுசன்

எம்பெருமானாடைய

அம் பொன் பாதம் என்றும்

மிகவும் அழகிய திருவடிகளை

என்றும்

எக்காலத்திலும்

கடம் கொண்டு இறைஞ் சும் திரு

இதுவே நமக்கு ஸ்வரூப மென்கிற புத்தியோ டே ஆச்ரயிக்கையாகிற செல்வத்தை யுடையரான

முனிவர்க்கு அன்றி

மஹான்களுக்குத் தவிர மற்றவர்களுக்கு

காதல் செய்யா

அன்பு பூண்டிராக

திடங் கொண்ட ஞானியாக்கே

மிக்க உறுதியையுடையரான ஞானிகளுக்குத் தான்

அடியேன் அன்பு செய்வது

அடியேன் பக்தனாயிருப்பேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகமெங்கும் பரவின புகழையுடையரான திருமழிசைப்பிரானாடைய பாதாரவிந்தங்கள் அடங்கியிருக்கப்பெற்ற திருவுள்ளத்தை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை ஸ்வரூப ப்ராப்தத்வ புத்தியோடே அநவரதம் ஆச்ரயிக்கின்ற மஹாபாகவதர்கட்குத் தவிர வேறொருவர்க்கும் விதேயப்படாத மாஞானிகளுக்கே அடியேன் அன்பனாயிருப்பன் என்கிறார் இப்பாட்டால், ‘ஸ்ரீராமாநுஜ பக்த பக்தன் அடியேன், என்றாராயிற்று.

கடங் கொண்டு - கடமையாகக்கொண்டு


Reply all
Reply to author
Forward
0 new messages