VAISHNAVA MEET AT SRIRANGAM. Courtsy: Vijayaraghavan krishnan

20 views
Skip to first unread message

Kannan Bargavan

unread,
Oct 16, 2016, 2:22:51 AM10/16/16
to astro...@rediffmail.com
Inline image 1



கடந்த 14 .10.2016 முதல் இன்று 16.10.2016 வரை ஸ்ரீரங்கம் கோரத மூலையில் ஒரு பெரிய பந்தலிட்டு ஆந்திரா விஜயவாடா தலைமைஇடமாக கொண்ட திரிதண்டி நாராயண மடாதிபதி சின்ன ஜீயர் சுவாமிகள் , வைணவ ஆச்சார்யார்கள் பலரை கூட்டிவித்து அவர்களுக்கு மரியாதை செய்விக்கும் மாநாட்டை நடத்தி வருகிறார்.

இது ராமனுஜரின் அவதார 1000 வது ஆண்டு கொண்டாட்டங்களில் ஒரு பகுதி. 

வைணவ (விசிஷ்டாத்வைதம்) சன்யாசிகள் மூன்று குச்சிகளை ஒன்றாக கட்டி அதை தாங்கி செல்வர்.. இதைதான் திரிதண்டி என்று அழைப்பர்.. மற்ற சன்யாசிகள் ஒரே ஒரு குச்சியை தாங்கி இருப்பார் .

இதற்கு பல காரணங்கள் கூறினாலும் "Prasthanatrayi" ராமானுஜ சித்தாத்தங்கள் உபநிஷத், பகவான் கிருஷ்ணர் அருளிய கீதை, வேதங்களில் சாரங்கலான பிரும்மசூத்திரங்கள் .. ஆகிய மூன்று நூல்களை ஆதாரமாக கொண்டதால் என்பதை காட்டவே என நான் நினைக்கிறேன்!! 

எந்த ஒரு சித்தாந்தமோ கொள்கையோ அதன் வழித்தோன்றல்களோ பல நூற்றாண்டுகள் கடந்து பல்வேறு மக்களுக்கு செல்ல வேண்டும் என்றால், அதை எடுத்து செல்ல கால மற்றும் பலவித மாறுதல்களை கண்டு எடுத்து செல்ல ஒரு ஜனாநாயக, பறந்து விரிந்த பல மனிதர்கள் கொண்ட ஒரு சபை இருக்க வேண்டும்.. 

நமது சனாதன மதம் இறைவழிபாட்டு முறை சார்ந்தது அல்ல ( வணங்கும் இறைவன் பெயர் மற்றும் அவனது குணங்களை கொண்டது அல்ல)

நமக்கும் நம்மை படைத்த இறைவனுக்கும் உண்டான உறவை விளக்கும் சிதாந்தாங்களாக, பல பிரிவுகள் கொண்டது நமது சனாதன தர்மம்.

நாராயணனை முழுமுதலாக கொண்ட சனாதன தர்மத்தில் ராமானுஜர் "விசிஷ்டாத்வைதம்" (Vishishtadvaita) என்கிற சித்தாதந்தை நெறிபடுத்தினார்.. ஆம் அவர் காலத்திற்கு முன்பே நமது நாட்டில் பல சித்தாதங்கள் இருந்தான... அதில் இவர் விசிஷ்டாத்வைதை நெறி படுத்தி இந்த காலத்திற்கு எதுவாக அவற்றை நடைமுறைபடுத்தினார்.

இவைகளை மக்களிடம் கொண்டு செல்ல ராமானுஜர் சந்நியாசி மடங்களை நிறுவவில்லை!! தனது சிஷ்யர்களை அழைத்து ..

"திருவரங்கம் எழுந்தருளி 74 திருவாழி திருச்சங்கம் பிரதிட்டித்து அவர்களுக்கு 74 திருநாமங்கள் இட்டு அழகிய சிங்கரை திருவாராதனமாக கற்பித்து" என்பதாக ஒரு பழைய புத்தகத்தில் கண்ட படி..

வைணவர்களின் முக்கிய சடங்கான திருவாழி சங்கு முத்திரை இடும் அதிகாரம் கொண்ட சபை என்பதாக இதற்க்கு இந்த பெயர் 

வட தமிழகத்தில் மிக ப்ரிமாண்ட எரியான வீரநாராயண எரி (அதாங்க குழாய் புகழ் வீராணம் எரி) 74 மதகுகள் கொண்டது .. அதை தனது சிறுவயதில் கண்டு வளர்ந்த ராமானுஜர் .. தனது சித்தாந்தமும் இப்படி 74 சீடர்களால் , மதகுகள் போல பல்கி பெருக இந்த எண்ணிக்கையை தேர்ந்தெடுத்தாக சொல்லுவார்கள்

இவர்கள் பெரும்பாமையினர் குடும்பஸ்தர்கள் .. இவர்கள் வம்சாவளியினர் ராமானுஜர் இட்ட கட்டளையான வைணவம் வளர்க்கும் பணியை தனக்கு கீழ் தங்களை அண்டி இருக்கும் சிறு குழுவான சிஷ்யர்களுக்கு எடுத்து சொல்லி வந்தனர்..

A nice way decentralisation .. no single top leader .. 74 family men will spread across the landscape .. will surely expand according to the population expansion .. a high management thought for taking the theory across to any future time .. with highly flexible way..

எங்கள் ஆச்சாரியன் திருமாளிகை பெயர் (ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்மாசனாதிபதிகள், திருவாழி திருச்சங்கத்தில் ஒருவர்) "பிள்ளைலோகம்" 

தற்போது எங்கள் ஆச்சாரியன் திருவேங்கடாசாரியர் சுவாமி B.A தமிழ் பட்டம் பெற்று தினமணி பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்..

இவரின் குமரார் ராமனுஜ சித்தாந்த வழித்தோன்றல் ..ஆச்சாரியனாக இருப்பினும் ... " இதுக்காகவே பிறவி எடுத்து வருகிறார்கள் " என்று பாமர சொல் போல் .. நிறைய வைணவ சித்தாந்த விசயங்கள் அறிந்தவர்.. 

தினமும் நானும் இவரும் பல சித்தாதங்கள் பற்றி பேசிக்கொண்டு இருப்போம்.. பல பழைய புத்தகங்களில் இது சொல்லி இருக்கு என்பது மாறி பல தகவல் சொல்லி அசத்துவார்.. 

Ramanujan Pillailokam..... ஒரு MBA பட்டதாரி .. இன்றைய நவீன உலக நியதி காரணமாக ... TCS இல் Team Leader பணியில் இருக்கிறார்.. 

இவைகள் போல பலரை நம்மிடம் அடையாளம் காட்டிய ராமனுஜரின் 1000 ஆண்டில் இவர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா இன்று ஸ்ரீரங்கத்தில் நிறைவு பெறுகிறது...

1000 ஆண்டுகளுக்கு முன்பே சித்தாந்த விசயங்களை கொண்டு செல்பவன் மக்களின் மக்களாக கலந்தது இருக்க வேண்டும் (சாமியார் எப்படி குடும்பிக்கு இறை வழிபாட்டு முறையை சொல்லி குடுக்க முடியும் என்பதாக!!) அவன் மாறி வாழ்பவனே அவனுக்கு வழி காட்ட முடியும் என்பதான ... மிக சிறந்த முறையை காட்டிய ராமானுஜனை போற்றுவோம் ..

அடியேன் ராமானுஜ தாசன் ..

விஜயராகவன் கிருஷ்ணன்


Reply all
Reply to author
Forward
0 new messages