Fwd: சுமங்கலிப் பிரார்த்தனை

299 views
Skip to first unread message

Kannan Bargavan

unread,
Apr 5, 2014, 11:49:37 PM4/5/14
to arunaagiri67, Aishwarya Vijay, Archana Balaji, ar1918, Akila Ramakrishnan, hinduism-a-broad-view, b.p. Srinidhi, bhavani1963, Booma Rengarajan, Madhavan D, Desikan S, gayuv, Govind Cande, gopu_ramaswamy, SANTHANA GOPALAN N, Thiagarajan Hariharan, hemashyam, hemar_5p, SRINIVASAN IYAR, subramaiya Iyar, Jambunathan R, jkann...@yahoo.co.in, NAMAGIRI KRISHNA, shiv kumar, swaminathan krishnamurthy, l pattabhiraman, lakshmi2210, mahalakshmi.ravichandran, Meera Rajan, Vijaya Manohar, N SEETHARAMAN, Pasupathy Subramanian, Priya S, rsvasan1948, Sundararajan Thirumalai, suresh_rajagopal17, Vasantha Srinivasan, Ganghadharan VAS, vivek subramanian, subramanian s, Srinivasan R


---------- Forwarded message ----------
From: Raman K <kram...@gmail.com>
Date: Mon, Mar 31, 2014 at 10:14 AM
Subject: சுமங்கலிப் பிரார்த்தனை
To:


Boxbe This message is eligible for Automatic Cleanup! (kram...@gmail.com) Add cleanup rule | More info






சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது சுமங்கலி பூஜை.  ஒரு சில குடும்பங்களில் இது செய்வதில்லை.  அவரவர் வீட்டு வழக்கமாகவே இது இருந்து வருகிறது.  பெரும்பாலான பாலக்காட்டுத் தமிழர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்றாலும் அவர்களிலும் ஒரு சில குடும்பங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது அந்த அந்தக் குடும்பத்தில் இறந்து போன சுமங்கலிகளை நினைவு கூர்ந்து செய்யப்படும். இன்னும் சில குடும்பங்களில் வருடா வருடம் அந்த சுமங்கலி இறந்த திதியன்று செய்யப்படும் சிராத்தத்தின் மறுநாள் யாரேனும் ஒரு சுமங்கலியையோ அல்லது வீட்டில் கல்யாணம் ஆன பெண் இருந்தாலோ அழைத்துச் சாப்பாடு போட்டுப் புடைவை வைத்துக் கொடுப்பார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.  இந்த சுமங்கலிப் பிரார்த்தனையில் சாப்பிட்டவர்கள் அன்றிரவு விரதமாக இருக்க வேண்டும் என்பார்கள்.  பெரும்பாலானவர்கள் இதை இப்போது கடைப்பிடிப்பதில்லை.   கல்யாணப் பெண்டுகளில் அப்படி ஒன்று இல்லை. ஆனால் திருமணங்கள் நடப்பதற்கு முன்னால் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனையின் போது குறிப்பிட்ட வம்சத்தில் உள்ள முன்னோர்களில் சுமங்கலியாக இறந்த பெண்கள் மட்டுமில்லாமல், திருமணமே நடைபெறாமல் இறந்த கன்னிப் பெண்கள், சிறு பெண் குழந்தைகள் என அனைவரின் பெயர்களையும் தலைமுறை வாரியாக எழுதி வைத்துக் கொண்டு அன்று அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வழிபாடுகள் செய்வது வழக்கம்.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும். அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்.  இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள்.  இரண்டு புடைவைகள் வைப்பார்கள்.  சில வீடுகளில் ஒரே இலை தான்.  ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.  இந்தப் பூவாடைப் பொண்டுகள் என்பது இந்தக்காலத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.  என்றாலும் எங்கள் நண்பர் ஒருவர் வீட்டில் நடந்து வந்தது. எண்பதுகள் வரையிலும் நடந்ததை அறிவேன்.

 இது எப்படி எனில் ஒரு வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்மணியைச் சிதையில் வைத்து எரிக்கையில் கட்டி இருந்த புடைவை இடுப்புக்கீழ் பாகம் முழங்கால் வரை எரியாது இருக்குமாம். இது எல்லா சுமங்கலியாக இறந்த பெண்களுக்கும் நடப்பது இல்லை.  மிகச் சிலருக்கு மட்டுமே இப்படிப் புடைவை எரியாமல் இருக்குமாம். அதை அந்தச் சமயம் அவர்கள் மடிசாராகக் கட்டி இருந்தால் அந்த பாகம் எரியாமல் இருக்குமாம். அப்படி எரியாமல் இருக்கும் புடைவையின் பாகத்தை மறுநாள் பால் ஊற்றச் செல்கையில் பார்த்து எடுத்து ஒரு பானையில் போட்டுக் கொண்டு வருவார்களாம்.

அதை வீட்டில் தனியாக ஒரு இடத்தில் வைத்து வழிபட்டு வருவார்கள் என்றும் சில குடும்பங்களில் வழிவழியாக இது தொடர்ந்து வரும் என்றும் சொல்கின்றனர். இவர்கள் இறந்த திதியன்று சிராத்தம் முடிந்ததும் மறுநாள் மிகவும் ஆசாரமாக சமையல், மற்ற ஏற்பாடுகள் செய்து, அதே போல் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவருக்குப் புடைவை வைத்துக் கொடுப்பார்களாம். அதை வாங்கிக் கொள்கிறவர்கள் ஆசாரம் கடைப்பிடிக்கிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமாம். வீட்டில் உள்ளவர்களும் மிகவும் கவனமாகவே ஆசாரம் குறையாமல் எல்லாம் செய்வார்களாம். இது என் சிநேகிதி சொல்லிக் கேட்டது.  அவரின் மாமியார் கர்ப்பப் பை கான்சரில் இறந்தவரின் மடிசார் எரியவில்லையாம்.

இது அறுபதுகளின் கடைசியில் நடந்திருக்கிறது.  தோழி எனக்குச் சொன்னது எண்பதுகளில். ஆனால் அவர்கள் அண்ணன், தம்பி மூவர் சேர்ந்து இருக்கையில் தான் நடத்த வேண்டும் என்பதால் எப்படி நடத்துவார்கள் என்பதை நேரில் பார்த்ததில்லை.  வேறொரு குடும்பம், இவங்க அம்பத்தூரிலேயே இருந்தார்கள்.  இவங்க குடும்பத்தில் சுமங்கலிப் பிரார்த்தனையில் ஒன்பது பேர் கட்டாயம் இருக்கணும்.  அதில் ஏழு சுமங்கலிகள், ஒரு விதவை, ஒரு பிரமசாரிப் பையர்.  இதை அதிசயப் பொண்டுகள் என்று சொல்கின்றனர்.  ஆனால் சாப்பாடு விஷயத்தில் சமரசம் செய்து கொள்கின்றனர்.

நான் பார்த்த திருமணத்தில் திருமணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் இவர்கள் ஒன்பது பேரையும் முதலில் வரிசையாக உட்கார்த்தி வைத்து சமையல்காரர்கள் சமைத்த சாப்ப்பாடையே போட்டுச் சாப்பிடச் சொல்லிப் பின்னர் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்தார்கள். இதே போல் குஜராத்தியர் ஒருத்தரின் சதாபிஷேஹத்திலும் நடந்தது.  இதற்கு அவர்கள் கூறிய கர்ணபரம்பரைக் கதை.  ஏழு பிள்ளைகளைப் பெற்ற தாய் ஒருத்தி தன் ஏழு மருமகள்களையும் வேலை வாங்கிக் கொண்டு சாப்பாடு போடாமல் கண்டிப்பாக இருந்தாளாம்.  அவள் ஒருநாள் வெளியே சென்றிருக்கையில் மருமகள் அனைவரும் கூடி மாமியாருக்குத் தெரியாமல் நல்ல சாப்பாடு சமைத்துச் சாப்பிடும் வேளையில் மாமியார் வந்துவிட என்ன செய்வது எனப் புரியாமல் மருமகள்கள் பூஜை அறையில் அம்பிகையைப் பிரார்த்திக்க மாமியார் கண்ணெதிரே ஏழு பேரும் அம்மனோடு ஐக்கியம் அடைந்ததார்கள் எனச் சொல்லப் படுகிறது.  ஆகவே இதற்கு ஆசாரம் பார்க்க ேண்டாம் என்றும் நல்ல சாப்பாடு சாப்பிட நினைத்த மருமகள்களை நினைத்துக் கல்யாணச் சாப்பாடைப் போடுகிறார்கள் என்றும் கூறினார்கள்.  மேலும் அவர்களில் எவரும் சாஸ்திரோக்தமாக அல்லது சம்பிரதாயமாக மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ளவில்லை. விதவையை அழைப்பது அந்த மாமியாரை நினைத்து என நினைக்கிறேன். பிரமசாரி எதற்கு என்பது அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை.

ஆனால் பொதுவாக சுமங்கலிப் பிரார்த்தனை என்றால் சாமான்கள் கூட வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பதைப் பயன்படுத்த மாட்டார்கள். தனியாகத் தான் வாங்குவது வழக்கம். சிராத்தம் அன்று எவ்வளவு சிரத்தையுடன் செய்கின்றார்களோ அதற்குச் சற்றும் குறையாமல் நடக்கும். 

ஆனால் சமையல் மட்டும் சிராத்த சமையலாக இல்லாமல் தேங்காய், துவரம் பருப்பு, மிளகாய், தனியா சேர்த்துச் செய்வார்கள்.  ஆனால் பொடியெல்லாம் வீட்டில் இருக்கும் பொடிவகைகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.  சில வீடுகளில் காய்களைக் கூட முதல் நாளே நறுக்கி வைக்கக் கூடாது.  சுமங்கலிப் பிரார்த்தனை அன்றுதான் நறுக்க வேண்டும். அதோடு பாயசம் இனிப்புப் போன்றவற்றில் வெல்லமே சேர்ப்பார்கள்.  சர்க்கரை சேர்க்க மாட்டார்கள். காய்களும் முட்டைக்கோஸ், பீன்ஸ், காரட், முள்ளங்கி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களைத் தவிர்த்துவிடுவார்கள்.  கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, கொத்தவரை, பறங்கி, பூஷணி போன்ற நாட்டுக்காய்களே சேர்க்கப்படும். பாகற்காய் கசப்புச் சுவை என்பதால் சுமங்கலிப் பிரார்த்தனையில் சேர்ப்பதில்லை. வாழை, மா, பலா போன்ற முக்கனிகளும் அந்த அந்தப் பருவத்தை ஒட்டிச் சேர்ப்பதுண்டு.

சமையலில் அரிசியோடு தேங்காய் சேர்த்த  பாயசம், அல்லது பருப்புப் பாயசம், தயிர்ப்பச்சடி, மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்க் கறி அல்லது பொடிமாஸ், ஒரு பருப்பு உசிலி, ஒரு கூட்டு, கலந்த சாதம், சேனை வறுவல், வடை, அதிரசம் அல்லது போளி அல்லது சுய்யம்/சுகியம்/சுய்யன் அல்லது சொஜ்ஜி அப்பம், அன்று புதிதாகப் போடப்பட்ட ஊறுகாய் அல்லது தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல், கலந்த சாதம் ஒன்று, பருப்பு, நெய், பிட்லை, மோர்க்குழம்பு, ரசம், மோர் ஆகியன இடம் பெறும்.  

எங்கள் புகுந்த வீட்டில் அன்றைய தினம் கறி வகைகளே செய்யக் கூடாது. எல்லாக் காய்களிலும் கூட்டு வகைகள் தான் செய்ய வேண்டும். தனிக்கூட்டு என்றதொரு புளிக்கலவையைச் செய்து வைத்துக் கொண்டு, காய்களை வேக வைத்து அதில் தனித்தனியாகப் போட்டுக் கலக்க வேண்டும்.  ஆகவே பிட்லை இருக்காது.  மோர்க்குழம்பு மட்டுமே.  இந்தத் தனிக்கூட்டு செய்முறையை என்னுடைய சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கத்தில் காணலாம்.  சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும்.  மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது.

சுமங்கலி பூஜை - Sumangali Poojai -  Book in Tamil




















  
வகை
:
எழுத்தாளர்
:
பதிப்பகம்
:
ISBN
:
9788183683760
Pages
:
128
பதிப்பு
:
1
Published Year
:
விலை
:
ரூ.95



In Stock , Delivered in 2-3 business days


இப்புத்தகத்தை பற்றி


* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.

* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.

* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி.

* காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

* 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது!


--
Posted By Treasure to பகிர்ந்து கொள்வோம்!! at 3/29/2014 03:49:00 PM



--
You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thatha_patty...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


Reply all
Reply to author
Forward
0 new messages