இங்குள்ள
அக்ரஹாரத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சக்ரவாகேஸ்வரர் ஆலயம் மட்டுமே
எஞ்சியிருக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் முஸ்லிம்
அல்லாதவர்கள் நடமாட முடியாதாம்.
திருவாரூர்
அருகே உள்ள கொடிக்கால்பாளையத்திலும், அடியக்கமங்கலத்திலும் அக்ரஹாரங்கள்
அடியோடு மாறிவிட்டன. இங்குள்ள மசூதிகள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய
குளங்கள் உள்ளன. இந்தக் குளங்களே அங்கு கோயில் இருந்தது என்பதற்கான
சாட்சி. அடியக்கமங்கலத்தில் பாப்பாரக் குளம் என்று அழைக்கப்படும்
குளத்தையொட்டி மிகப்பெரிய மசூதி உள்ளது. இங்கு ஒரு அக்ரஹாரம்
இருந்திருக்கிறது. அந்த அக்ரஹார ஹிந்துக்கள் பயன்படுத்தி வந்த குளமே
பாப்பாரக் குளம் என்று அடியக்கமங்கலத்தில் கட்டிட வேலை செய்யும் ஒருவர்
நம்மிடம் கூறினார். மயிலாடுதுறை அருகிலுள்ள நீடூரில் நிலைமை படுமோசம்.
இங்கு அக்ரஹாரத்திலுள்ள எல்லா வீடுகளையும் முஸ்லிம்கள் வாங்கி விட்டனர்.
அக்ரஹாரத்தின் முகப்பில் உள்ள பெருமாள் கோயில் இடிந்து போய் கிடக்கிறது.
இந்தப் பெருமாள் கோயில் குளத்தை முஸ்லிம்கள் மதரஸா குளம் என்று
அழைக்கிறார்கள்.
தங்களது
முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை பார்ப்பதற்கு இப்போது யாராவது வருகிறார்களா?'
என்று நீடூரில் ஒருவரிடம் கேட்டோம். "பலர் அதுபோல வருகிறார்கள். பலரால்
தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டைக் காண முடிவதில்லை. தங்கள் வீட்டைக்
கண்டுபிடித்த சிலரும் அங்கு முஸ்லிம்கள் வசிப்பதை வேதனையோடு
பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். சமீபத்தில் மும்பையிலிருந்து வந்த ஒருவர்
அக்ரஹாரம் முஸ்லிம்மயமாகி இருப்பதைப் பார்த்துவிட்டு இந்த குளக்கரையில்
உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்" என்றார் அந்தப் பெரியவர். இதைச்
சொல்லும்போது அவரின் கண்கள் கலங்கியது. அக்ரஹாரங்கள் எல்லாம் இன்று
அரேபியாவாக மாறிக் கொண்டிருக்கின்றன. வேத மந்திரங்கள் ஒலித்த
அக்ரஹாரங்களில் அரபி வசனங்கள் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது
மனம் வலிக்கத்தான் செய்கிறது.