ஷவ்வால் 2 வியாழக்கிழமை (8.8.2013) இலங்கை கிண்ணியாவில் பெருநாள் - இலங்கை கிண்ணியா பிறை நடந்தது என்ன? -

42 views
Skip to first unread message

Hijri Committee

unread,
Aug 14, 2013, 6:04:55 AM8/14/13
to hijri...@googlegroups.com

ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கை!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிண்ணியா கிளை இன்று வியாழக்கிழமை கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்ததற்கான நியாயங்கள்.

1. நோன்பு 29இல் 07.08.2013 இல் பிறை பார்க்கும் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளியும் விடுத்ததற்கிணங்க கிண்ணியாவில் பிறையை கண்ட மக்கள் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழுப் பொறுப்பாளர் ஏ.எஸ். ஜாபிர் நளீமியிடம் தெரிவித்தனர். இதற்கிணங்க தேசிய பிறைக்குழுச் செயலாளர் அப்துல் அஸீஸ் மௌலவியை கொழும்பு பெரியபள்ளியில் தொடர்பு கொண்டு பி.ப. 6.58 மணியளவில் விடயத்தை தெளிவுபடுத்தினார். இதில் அவர் பிறை கண்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கலந்துரையாடவும், சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பெரியாற்றுமுனையில் பிறை கண்டவர்களுடனான இந்தச் சம்பவத்தை பிறைக்குழு ஏற்கவில்லை.

2. இதன் பின் இன்னும் பல இடங்களில் பிறைகண்ட பொதுமக்கள் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையை நாடினர். இவர்களில் ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி எம்.ஏ.எம். றியாஸ் மற்றும் மஹல்லாவாசிகள் 10 பேரும் கண்டதாக குறிப்பிட்டார்கள்.

3. இவ்வாறு இன்னும் பல இடங்களில் பிறை கண்ட 25க்கு மேற்பட்ட கிண்ணியா பிரதேச மக்கள் பிறைக் குழுவிற்கு அறிவித்தனர்.

4.இந்நேரத்தில் பெரியாற்றுமுனையில் பிறைகண்ட பொதுமக்களைப் பேட்டிகாணுவதற்காக மேமன் சங்கத்தின் 2 (இரண்டு) பேர் சமூகம் தந்ததை நளீமி ஜாபிர் உறுதிப்படுத்தினார். மக்களுடன் தமிழில் உரையாடிய இவர்கள் பிறைக்குழுவிற்கு அறிவிக்கும்போது மேமன் (பாய்) மொழியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். இது மக்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

5. ஆனால், மேமன் சங்கத்தில் இருந்து வருகை தந்தவர்கள் முக்கிய சாட்சியான றியாஸ் மௌலவியிடம் தகவல் பெறாமலும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையை சந்திக்காமலும் உடனடியாக கிண்ணியாவை விட்டு வெளியேறி விட்டதை பின்னர் அறிந்தோம்.

6. இதன் பின்னர் பிறைகண்டதாக உறுதிப்படுத்தி ஐந்து பேரின் பெயரும் தொலைபேசி இலக்கம், வயது போன்ற தகவல்களும் பிறைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. அவர்களும் இவர்களுடன் போனில் உறையாடினர். இதன் மூலம் நல்ல முடிவு ஒன்றுவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரவு 9.00 மணிக்குப் பிறகு பெருநாள் இல்லை என்ற எதிர்பாராத முடிவு அறிவிக்கப்பட்டது.

7. இதன் பின்னர் ஊர் பிரமுகர்கள், தஃவா பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க உலமா சபை தனது அலுவலகத்தில் உடனடியாக ஒன்றுகூடலை நடத்தியது.

8. முக்கியமாக பிறை கண்ட சாட்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மௌலவி ஹஸன் அஸ்ஹரி அவர்கள் நேரடியாக கொண்டுவந்து உறுதிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்று சபை முன்னிலையில் அவர்கள் தாங்கள் பிறைகண்டதை உறுதிப்படுத்தி சத்தியம் செய்வதற்கும் தயார் என எல்லோரும் உறுதியாக கூறினர்.

9. பிறை விடயத்தில் சபையோர் அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டதன் பின் பெருநாள் என தீர்மானிக்கப்பட்டது. எமது ஊரில் நாம் பெருநாளைக் கொண்டாட கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒப்பமும் பெறப்பட்டது.

10. இதன் பின் இந்த முடிவு தொடர்பான அறிக்கை அந்த இரவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு தொலை நகல்  (Fax) அனுப்பப்பட்டது.

11. இவ்வறிக்கையில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை கிளையின் தலைவர் ஜனாப் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் (நளீமி) மற்றும் தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) ஆகியோர் ஒப்பமிட்டனர். இந்த முடிவுகள் அனைத்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜனாப் ஏ.ஆர்.எம். நஸார் மௌலவி அவர்களின் முன்னிலையில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-21-47/2500-2013-08-08-16-42-46.html




ரிஸ்வி முப்தியின் உரைக்கு - கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் பூரண விளக்கம்!!!
 

ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.

கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் 08.08.2013 (வியாழன்) பி.ப 04.00 மணி அளவில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையில் கூடி இது தொடர்பாக கலந்துரையாடியதன் மூலம் எடுக்கப்பட்ட விடயங்களை பொதுமக்களுக்கு கீழ்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகின்றது.

1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை 07.08.2013 (புதன் மாலை) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பிறை பார்க்கும்படி பொதுமக்களை வேண்டியதுடன், அதுகுறித்த தகவல்களை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை ஊடகங்கள் வாயிலாகவும், குறுந்தகவல்கள் மூலமாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், மேமன் சமுகத்தைச் சேர்ந்த பிறைக்குழுவையும் கிண்ணியா போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் கிண்ணியாவில் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அறிவித்ததைத் தொடர்ந்து வானசாஸ்திர திணைக்களத்தின் கருத்தின்படி 07.08.2013 புதனன்று பிறை தென்பட சாத்தியமில்லை எனக் கூறியுள்ளமை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தாக அமைந்துள்ளது. ஷவ்வால் தலைப்பிறை பார்hக்கும்படி மாநாட்டைக் கூட்டியவர்களே, அதே தினத்தில் பிறை தென்படாது என்று மறுத்துரைப்பது ஒன்றுக்கொன்று நேர் மாறான கருத்தாகக் காணப்படுகின்றது.

2. கிண்ணியாவில் நோன்புப் பொருநாள் கொண்டாடுவதென கிண்ணியா உலமா சபை எடுத்த தீர்மானத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ஒப்பமிடவில்லை எனவும், போலியான ஒப்பமிடப்பட்டுள்ளது எனவும் றிஸ்வி முப்தி அவர்கள் தனது விளக்கவுரையின் போது குறிப்பிட்டார். உண்மையில், குறித்த அக்கடிதத்தில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) அவர்களே கையொப்பமிட்டிருந்தார். இவர், முன்னாள் தலைவராகவிருந்த மௌலவி ஏ.ஆர். நஸார் (பலாஹி) அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதன் பின்னர், அவருக்குப் பதிலாக 2013 பெப்ரவரியிலிருந்து நஸார் மௌலவியின் உடன்பாட்டுடனேயே தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவுக்கிணங்கவே நியமிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. இது கிண்ணியா மக்கள் நன்கறிந்த விடயமாகும். இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் இவ்விடயத்தை அறியாதிருக்கிறார் என்பது ஆச்சரியமே.

3. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட குழு, கிண்ணியாவில் பிறை கண்ட மஸ்ஜிதுல் அஸ்ஹர் பேஷ் இமாம் றியாஸ் மௌலவி அவர்களிடமிருந்து இது குறித்து விசாரிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனினும், அவர் அக்குழுவினரின் வாகனத்திலேயே நீண்ட நேரமாக இருந்துள்ளார். ஆனால், குறித்த பிரதேசத்தில் பிறை கண்ட இன்னும் சிலரை விசாரித்த (மேமன் சமூகத்தைச் சேர்;ந்த) அக்குழுவினர் தமிழ் மொழியில் விசாரித்தபோதும், அதனை கொழும்புக்கு அறிவிக்கும்போது மேமன் மொழியிலேயே பேசியுள்ளனர். இது, கருத்துக்களை முன்வைத்த மக்களுக்கு, அவர்கள் என்ன கருத்தை கொழும்புக்கு எத்தி வைக்கிறார்கள் என்பதைப் புரிய முடியாது செய்துவிட்டது.

4. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் ஏ.ஆர். நஸார் மௌலவி அவர்கள் தனது உயர் கல்விக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். அவர் அவ்வாறு சென்றதிலிருந்து இன்றுவரைக்கும் அவர் தலைமைப் பொறுப்பை மீளப் பொறுப்பேற்கவில்லை என்பதும் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கது. அதன் காரணமாகவே தற்போதைய தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் (நளீமி) அவர்களும், தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) அவர்களும் கையொப்பமிட்டிருந்தனர். நிலைமை இவ்வாறிருக்க, இதுகுறித்த மேலதிக விளக்கங்கள் எதனையும் பெறாது அ.இ.ஜ. உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு விடுத்த பிறை தொடர்பான விளக்கத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் கிண்ணியா உலமா சபையின் தலைவரையும் செயலாளரையும், கிண்ணியா மக்களையும் கவலையடையச் செய்வதாகவும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

5. ஷவ்வால் பிறை தொடர்பான அ.இ.ஜ. உலமாவின் தீர்மானத்தின் பின் கிண்ணியா ஜமஇய்யதுல் உலமா எடுத்த ஏகோபித்த தீர்மானத்தை விமர்சிக்கும்போது அ.இ.ஜ.உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கடந்த சுனாமியின்போது கிண்ணியா, மூதூர் மக்களுக்கு, தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டினார். உலமா சபையின் தேசியத் தலைவர் ஒருவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு கஷ்ட நிலையின்போது செய்த ஒரு மனிதாபிமான உதவியை சொல்லிக்காட்டுவது எவ்விதத்தில் நியாயமாகப்படுகிறது? இலங்கை முஸ்லிம்களால் கண்ணியமாக மதிக்கப்படுகின்ற தேசியத் தலைவர் ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்தை எமது மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது மனவருத்தத்திற்குரியது.

6. 08.08.2013 (வியாழக்கிழமை) அன்றைய தினம் கிண்ணியா மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது தொடர்பாக தனது பத்வாவை வெளியிடும்போது, இன்று நோன்பை விட்டவர்கள் அதனை இன்னுமொரு தினத்தில் கழா செய்ய வேண்டுமென்றும், இன்று நோன்பு நோற்றவர்கள் நன்மாராயம் பெற்றவர்கள்என்றும் குறிப்பிட்டிருந்தார். தமது சொந்த மண்ணில் பிறை கண்ட மக்கள் பெருநாளைக் கொண்டாடுவது எவ்விதத்தில் தவறாகும். எந்த அளவுகோலை வைத்து குறித்த பத்வாவை அவர் அம்மக்களுக்கு முன்வைத்தார்? இரண்டாம் நபர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து இவருக்கு பத்வாவை வழங்க முடியுமானால், பிறையை கண்ணால் கண்டவர்கள் இஜ்திஹாத் அடிப்படையில் தீர்மானம் எடுத்து, பெருநாளைக் கொண்டாடியது எவ்விதத்;தில் தவறாகும். இந்நிலையில், அவர் இலங்கைவாழ் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்த பத்வாவுக்கு என்ன பெறுமானம் இருக்கிறது? இதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

7. கிண்ணியாவில் பிறை தொடர்பாக யாரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து கண்டிக்கத்தக்கது. ஏனெனில், கிண்ணியாவில் பிறை கண்டது தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ். ஜாபிர் (நளீமி) அவர்கள் உரிய முறையில், உரிய நேரத்தில் அ.இ.ஜ. உலமாவிடம் தகவல்களை வழங்கியுள்ளார். (இவர் கிண்ணியா ஜாவாப் பள்ளிவாயலின் தலைவராகவும், பாடசாலை ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்நிலையில், கிண்ணியாவில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வமாக தகவல் சொல்லப்படவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கருத்தை கேள்வியுற்ற கிண்ணியா உலமா சபை இரவு 09:00 மணியளவில் தஃவா அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பிறை கண்டவர்கள், அரசியல்வாதிகள் என பலருடன் ஒன்றுகூடி, பிறை கண்டதை மீண்டும் ஊர்ஜிதம் செய்து எடுத்த கருத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இரவு 09:30 மணியின் பின்னர் மீள அறிவித்தபோது, பிறை தொடர்பாக தீர்மானம் எடுக்க ஒன்றுகூடிய உலமா சபையினர் கலைந்து சென்றுவிட்டதாக அங்கிருந்து பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளனர். இதன் பின்னரே, கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடுவதென கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை ஏகமனதாகத் தீர்மானமெடுத்து பொதுமக்களுக்கு அறிவித்தது.

8. அ.இ.ஜ. உலமாவினால் கிண்ணியாவுக்கு அனுப்பப்பட்ட மேமன் சமூகத்தவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்கள் நம்பக்கூடியதாக இருந்ததாகக் குறிப்பிடும் தேசியத் தலைவர், கிண்ணியாவில் பிறை கண்ட அத்தனை பேரினதும் கருத்துக்களைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயமானது? தமது கண்களால் பிறை கண்டவர்களின் உண்மைக் கருத்துக்களை மறுதலித்து, விசாரிக்க வந்தவர்களின் கருத்தை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொள்வதிலுள்ள உள்நோக்கம்தான் என்ன???

9. தேசியத் தலைவரின் கூற்றில் மாலை 06:23 இற்கு கிழக்குப் பிராந்தியத்தில் பிறை காண முடியும் என குறிப்பிட்டிருந்தார். இப்பிறையானது சுமார் 14/15 நிமிடங்களுக்கு நிலைக்கும் என குறிப்பிட்டதன் பிரகாரம் அன்று மாலை 06:30 மணியளவில் கிண்ணியாவின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டுள்ளமை ஊர்மக்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கிண்ணியா உலமா சபையின் பிறைக் குழுவினர் விசாரித்து உறுதிப்படுத்திய பின் அன்று பிற்பகல் 06.58 இற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வறிவிப்பு காலம் தாழ்த்திய தகவல் என தேசியத் தலைவர் தனதுரையில் குறிப்பிட்டது எந்தளவு பொருத்தமானது?

 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

கிண்ணியா கிளை

http://ilangaimuslim.blogspot.in/2013/08/blog-post_9.html



அது போலியான கடிதம் அல்ல!! கிண்ணியா ஜம்மியத்துல் உலமா VIDEO) பொய்யை இட்டுக்கட்டும் ரிஸ்வி முப்தி


http://youtu.be/C3ld3gVsuao

Hijri Committee

unread,
Aug 15, 2013, 7:53:34 AM8/15/13
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

கிண்ணியா பிறை சம்மந்தமாக ரிஸ்வி முப்தியின்  உரை கீழே உள்ள இணைப்பில் சென்று கேட்கவும்.


2013/8/14 Hijri Committee <hijrico...@gmail.com>
--
--
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
 
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
 
To post to this group, send email to HIJRI...@googlegroups.com
 
To unsubscribe from this group, send email to
HIJRIINDIA+...@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "HIJRI COMMITTEE / TAMIL" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to HIJRIINDIA+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
For More Information about Hijri Era based Universal Unified Moon Calendar Subject Visit our Websites and Google groups

For Tamil:         www.mooncalendar.in
For English:      www.hijricalendar.com
For Malayalam: www.hijracalendar.in

Also Joint our Google Group:
For Tamil:           hijri...@googlegroups.com
For English:       hijrico...@googlegroups.com
For Malayalam:   hijri-c...@googlegroups.com
For Urdu:            hi...@googlegroups.com    

Hijri Committee

unread,
Aug 15, 2013, 8:45:23 AM8/15/13
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ரிஸ்வி முப்தியின் உரைக்கு இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) இன் பதில் கீழ்கண்ட இணைப்பில் உள்ளது.


2013/8/15 Hijri Committee <hijrico...@gmail.com>

Hijri Committee

unread,
Aug 15, 2013, 4:11:29 PM8/15/13
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கிண்ணியா பிறை பிரச்சினையைப்பற்றி முபாரக் மதனியின் விமர்சனம் இணையத்தளத்தில் இருந்து  பதிவிறக்கம் செய்யப்பட்டது.

http://kattankudi.info/2013/08/14/6203

ஹிஜரி 1434 (2013) ஷவ்வால் பிறையின் சர்ச்சையும் விளக்கமும் : ML முபாரக் மதனி


ML MUBARAK MATHANIஜும்ஆ உரை  ML. முபாரக் மதனி

-  பி.எம்.எம்.எ. காதர் -

அல்லாஹ் ஜெல்லஸானவுதஆலாவுடைய பேரருழால் புனிதமிகு ரமழான் மாதத்திலே நோன்பு நோற்று இரவு வணக்கங்களிலே ஈடுபட்டு அல் குர்ஆன் அதிகமாக ஓதி திக்ர் செய்து தஃவாவையும் இஸ்திஹ்பாரையும் அதிகப்படுத்தி அல்குர்ஆனோடு நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி தான தர்மங்களை அதிகமாகச் செய்து தக்வா என்ற அந்த உயர்பண்பை பெற்ற நிலையில் நாம் எல்லோரும் இந்த வெள்ளிக்கிழமை தினத்திலே இருந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ரமழான் நம்மில் ஏற்படுத்திய மாற்றங்கள் நம்முடைய வாழ்விலே தொடர்ந்தும் பிரதி பலிக்க வேண்டும் என்பதை முதலிலே நினைவுபடுத்திக் கொள்கின்றேன் நபி (ஸல்) சொன்னார்கள் அமல்களிலே அல்லாஹ்வுக்கு விருப்பமான அமல் தொடர்ச்சியாக செய்யப்படக்கூடிய அமல்தான் அது சொற்பமாக இருந்தாலும் சரியே என்று அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்கள் எனவே ரமழானில் நாம் செய்த அமல்கள் தொடர்ந்தும் நம்முடைவாழ்வில் நீடிக்க வேண்டும் என்கின்ற விடயத்தை நாம் மனதிலே கொள்ள வேண்டும்.

அதே நேரத்திலே அன்புள்ள சகோதரர்களே சவ்வால் பிறை பார்க்கிற விசயத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கலும் சர்ச்சையும் ஏற்பட்டதை நாம் எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக சர்வதேச ரீதியிலே முஸ்லிம் சமுதாயத்தை கருவறுப்பதற்கான மிக நுணுக்கமான சதித் திட்டங்களெல்லாம் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளையில் குறிப்பாக நம்முடைய இந்த இலங்கை நாட்டிலும் நமக்கு எதிராக வெளிப்படையாக பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமை என்பது மிக அவதானமாக நோக்கப்படக்கூடிய இந்த சந்தர்பத்தில் ஷவ்வால் பிறை தொடர்பான சர்ச்சை முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளத்திலே இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளங்களிலே ஒருவிதமான குழப்பத்தையும் நிம்மதியற்ற நிலைமையையும் ஏற்படுத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம்.

அன்புள்ள சகோததரர்களே, பிறையில் வேறுபட்ட கருத்துக்கள் தோன்றி பெருநாட்கள் இரண்டாக அமைவது என்பது முஸ்லிம் சமுதாயம் பிளவு பட்டு விட்டது என்பதற்கான ஒரு அடையாளம் அல்ல என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நிறையப்பேர் இதையிட்டு முஸ்லிம் சமுதாயம் இரண்டாகப் பிரிந்து விட்டது முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இரத்த ஆறு ஓட்டப்படப்போகிறது என்பதுபோன்று மீடியாக்களிலும் கடைத்தெருக்களிலும் சந்திகளிலும் பேசித்திரிவதைப் பார்க்கிறோம்.

நிச்சமாக இந்தக் கருத்துவேறுபாடு பிறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்பது முஸ்லிம் சமுதாயத்தை பிழவுபடுத்துகின்ற ஒன்று கிடையாது என்பதை ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக ஆலிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். இது இஜ்திஹாத்தோடு தொடர்புபட்ட ஒரு விடயம் இதிலும் சிறுபாண்மையினராக வாழக்கூடிய நம்மத்தியிலே இஜ்திஹாத்தோடு தொடர்புபட்ட ஒரு விடயம் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இதற்கு முன்னரும் நம்முடைய நாட்டிலே பல பெருநாட்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன சர்வதேசப் பிறையை அங்கீகரிக்கிற மக்கள் ஒரு நாள் முன்னராக நோன்பு நோற்கிறார்கள் பெருநாளும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இதையிட்டு முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்டுவிட்டது எனறு யாரும் சொன்னது கிடையாது.

சர்வதேசப் பிறையை அங்கிகரிக்கிற சகோதரர்களும் சர்வதேசப் பிறையை அங்கிகரிக்காத சகோதரர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். பிறைவேறுபட்டுவிட்டது என்பதற்காக வேண்டி அவர்கள் தங்கள் மத்தியிலே அடித்துக் கொண்டதும் கிடையாது அதே நேரத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிலும் இதே கருத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் ஒரே குழுவிலேயே இருக்கின்றார்கள் பத்வாக்குழுவிலே உள்ளவர்களிலும் சர்வதேசப் பிறையை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் இதேபோன்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் 26 பேரைக் கொண்ட அந்த மகாசபையிலுள்ளவர்களிடமும் இந்தக் கருத்துள்ளவர்கள் இருக்கிறார்கள் அதனால் பிறையில் ஏற்படுகின்ற கருத்துவேறுபாடு என்பது சமுதாயத்தில் ஏற்படுகின்ற கருத்து வேறுபாடு என்று வேண்டுமென்று திட்டமிட்டு பிரிப்பதற்காக செய்யப்படுகின்ற பிரச்சாரம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே போன்று இந்தப் பிறைக்குழுவொன்று இருக்கிறது இலங்கையிலே இந்தப் பிறைக் குழுவிலே நுஜ்ஜும் கணக்கில் பிறை பார்க்கிறவர் இருக்கிறார்கள். நுஜ்ஜும் கணக்கில் பிறைபார்த்து அகில இலங்கை ஜம்மியத்தல் உலமா சபைக்கு கட்டுப்படாமல் பெருநாள் கொண்டாடுபவர்களும் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

அதேபோன்று ஹிதாபுல் பலகி என்கின்ற கணிப்பீட்டு முறையில் பிறைபார்க்கின்றவர்களும் பிறைக் குழுவிலே இருக்கின்றார்கள் இதற்காக பிறைக்குழு பிரிந்து விட்டது என்று யாரும் சொல்வது கிடையாது அன்புள்ள சகோதரர்களே இந்தக் கருத்தை தெளிவாக நீங்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டதால் சமுதாயம் பிழவுபட்டு விட்டது சமுதாதயத்தில் யுத்தம் மூண்டுவிட்டது. சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்கக முடியாத நிலை உருவாகிவிட்டது என்பது போன்ற ஒரு கருத்து உருவாக்கப்பட்டிருப்பது என்னைப் பொறுத்தமட்டில் திட்டமிட்டு பிரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சாரம் என்பதை நான் இந்த இடத்தில் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அடுத்ததாக அன்புள்ள சகோதரர்களே நேற்று வியாழக்கிழமை இலங்கையிலே ஒருசில சகோதரரர்கள் பொருநாளைக் கொண்டாடினார்கள். இன்று வெள்ளிக்கிழமை ஒரு சில ககோதரர்கள் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள், இந்த இரண்டு பெருநாட்களும் உருவாகுவதற்கு என்ன காரணம் எனக் கோட்டால் பிறைக்குழு ஒரு தீர்க்கமான முடிவை உரிய நேரத்தில் அறிவிக்க தவறியதுதான் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிறைக்குழு 4 மணியிலிருந்து கூடியிருக்கிறது 7 மணிக்கு அவர்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஏன் அவர்கள் 7.30 மணிக்கு அந்தத் தகவலை அறிவித்திருக்க முடியாது 10 மணிவரையும் அவர்கள் இந்தத் தகவலை அறிவிப்பதற்கு தாமதித்தது என்பது முஸ்லிம் சமுதாயத்தில் மிகப் பெரும் கேள்விக் குறியை உருவாக்கிவிட்டது.

இந்த இடைவெளிக்குள் பல எஸ்.எம்.எஸ் கள் பல செய்திகள் பரப்பப்பட்டுவிட்டன. உடனே எங்கு பிறைபார்த்ததாக சொல்லப்பட்டதோ அதாவது கிண்ணியாவில் பிறை பார்த்தாக செல்லப்பட்டு அங்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அங்குள்ள ஜம்மியதுல் உலமாவைச் சேர்ந்தவர்கள் பிறைபார்த்தது உறுதி என்கின்ற தகவலை இலங்கை முழுக்க பரப்புகிறார்கள். பிறையைப் பார்த்தவர்கள் பிறை பார்க்கப்பட்ட செய்தி உண்மையானது என்பதை இலங்கை முழுக்க அவர்கள் ஆதார பூர்வமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் பிறையில் ஏற்பட்ட இழுபறிக்கு மிகமுக்கியமான காரணம் என்பதை நாம்புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் முழுக்க முழுக்க தவறு செய்தது பிறைக் குழுதான் என்பதை பிறைக்குழு மானசீகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே பொதுவாக பிறையுடைய விசயத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் ஹிஜ்ரி 6ம் நூற்றாண்டு வரைக்கும் இரண்டுவிதமான கருத்துக்கள்தான் இருந்து வந்தது. ஒன்று சர்வதேசப் பிறை, மற்றயது ஒவ்வொரு நாட்டுக்குரிய அல்லது பிரதேசத்திற்குரிய பிறை. ஹிஜ்ரி 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு கணிப்பீடு என்ற ஒரு கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பரவி வந்து இன்று அந்தக் கருத்தும் பலம் பெற்று வருகிறது என்பதை நாம் அறிகிறோம்.

இதிலே சர்வதேசப் பிறை, உள்நாட்டுப்பிறை என்று சொல்லக் கூடிய இவை இரண்டையும் பொறுத்த வரையில் இவற்றுக்குச் சாதகமான உலமாக்கள் இமாம்கள் இருக்கிறார்கள். இரண்டு கருத்தையும் சர்வதேசப்பிறை வழிகேடு என்று யாரும் சொல்லமுடியாது. லோகல் பிறை வழிகேடு என்றும் யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் இரண்டு சாராரும் ஹதீஸ்களை முன்வைத்துத்தான் இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறார்காள். இது இஜ்திஹாத்தோடு தொடர்புடையது அந்த வகையிலே அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவைப் பொறுத்தவரையில் நம்முடைய நாட்டில் பிறைகண்டுதான் நோன்பு நோற்க வேண்டும் நம்முடைய நாட்டில் பிறை கண்டுதான் பெருநான் கொண்டாட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றது. அதே கருத்தைத்தான் நாமும் கொண்டிருக்கிறோம்.

லோகல் பிறையை அடிப்பைடையாக வைத்து நோன்பு நோற்கவேண்டும் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதை நாம் சரி கண்டிருக்கின்றோம். இந்த அடிப்படையிலே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவோடு சேர்ந்த ஒரு பிறை கமிட்டி இருக்கிறது அந்த பிறை கமிட்டி நோன்பு என்று அறிவிக்கிற நேரத்தில் நாம் நோன்பு நோற்கிறோம் பெருநாள் என்று அறிவிக்கிற போது நாம் பெருநாள் கொண்டாடுகிறோம் இந்த நேரங்களில் தனிநபர்களுடைய சாட்சியங்களில் நாம் தங்கியிருப்பதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது தனிநபர்கள் யாராவது பிறை பார்த்து அவர்கள் குழுவாகச் சேர்ந்து உதாரணமாக கிண்ணியாவிலே இம்முறை தொடர்புகொண்டு கேட்டவகையில் 19 பேருக்கும் அதிகமானவர்கள் பிறை பார்த்ததாக தகவல் சொல்லியிருக்கிறார்கள். இந்த 19 பேரும் சேர்ந்து ஒரு நோட்டிஸ் அடித்து அல்லது மீடியாவுக்கு வந்து நாங்கள் 19 பேரும் பிறை பார்த்திருக்கிறோம் என்று சொல்லியிருந்தால் நிச்சமாக நாம் பெருநாள் கொண்டாடியிருக்க மாட்டோம், தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் ஏன் பெருநாள் கொண்டாடினோம் என்றால் அந்த 19 பேரில் 6 பேரை கிண்ணியா ஜம்மியதுல் உலமா அழைத்து விசாரிக்கிறது. அந்த 6 பேரில் ஜாயல் அஸ்ஹர் என்று சொல்லக்கூடிய மஸ்ஜிதுடைய இமாம் றியாஸ் மௌலவி என்று சொல்லக் கூடியவரும் அதே போன்று ஒரு பொறியியலாளரும் இன்னும் அந்த இடத்திலிருந்த பலரும் பார்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு பேரும் அந்த ஆறு பேரில் பிரதானமானவர்கள்.

உங்களுக்குத் தெரியும் ரமழானுடைய பிறையை ஒருவர் பார்த்துச் சொன்னால் போதுமானது ஷவ்வாலுடைய பிறையை இரண்டு பேர் பார்த்துச் சொல்ல வேண்டும். இரண்டு பேருக்குப் பதிலாக 6 பேர் அங்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அவர்கள் உறுதி செய்கிறார்கள், ஆறு பேரும் சத்தியம் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். பிறை பார்த்தவர் அஸ்அது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் அஸ்அது அன்னமுஹம்மதர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமா சொல்லியிருந்தால் போதும். சத்தியம் செய்து சொல்ல வேண்டும் என்ற அவசியமே கிடையாது. இருந்தாலும் கூட அந்த ஆறு பேரும் சத்தியம் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.

கிண்ணியா பிறைக் குழுவின் தலைவர் ஜாபிர் மதனி என்று சொல்லக் கூடிய மௌலவி அவர்களை அழைத்து விசாரித்து தகவலை பிறைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறார். 5 பேருடை பெயர்களையும் அவர்களுடைய தொலைபேசி இலக்கங்கங்களையும் குறிப்பு அனுப்பிவிட்டு தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெருநாள் என்று பிறைக் குழு அறிவிக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிக் காத்துக்கொண்டிருக்கிற போதுதான் இரவு 9 மணியளவில் பெருநாள் இல்லை என்கிற அதிர்ச்சியான் செய்தி. எப்படி அறிவிக்கிறார்கள் என்றால் ஏகோபித்த முஸ்லிம் விஞ்ஞானிகளின் கருத்துப்படி இன்று பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படமாட்டாது என்கிற காரணத்தினாலும் சாட்சிகளை விசாரித்த போது அந்த சாட்சிகள் தெளிவாக எங்களுக்கு பதில் சொல்லவில்லை என்கிற காரணத்தினாலும் ரமழானை 30 ஆக ஆக்கி வெள்ளிக்கிழமை முஸ்லிம்களை பெருநாள் கொண்டாட நாம் கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவித்தல் விடுக்கிறார்கள்.

அன்புள்ள சகோதரர்களே ஏழுமணிக்கு இந்த செய்தி கொடுக்கப்பட்டு விட்டது, 7 மணிக்கு கொடுக்கப்பட்ட செய்தியை 10 மணிவரையும் ஏன் தாமதப்படுத்த வேண்டும், இது முதலாவது கேள்வி. இரண்டாவது முக்கிய அம்சம் என்ன வெண்றால் 10 மணிவரை தாமதப்படுத்திய இவர்கள் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் 4 மணிக்கே கூடிவிட்டார்கள். அதே நேரத்திலே கிழக்கு மாகாணத்திலுள்ள பத்வாக்குழு செயலாளருக்கு ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக கொழும்புக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. எற்கனவே நமக்கு அறிவித்திருந்தார்கள் பத்திரிகை பார்ப்பவருக்கு ரேடியோ கேட்பவர்களுக்கு நினைவிருக்கும் புதன்கிழமை ஷவ்வால் பிறையை கண்டால் தொலைபேசி நம்பரைக் குறிப்பிட்டு இதற்கு அறிவியுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள். சொல்லிவிட்டு எப்படிச் சொல்கிறார்கள் முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஏகோபித்த கருத்துப்படி இன்று புதன்கிழமை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரியாது எனவே ரமழானை 30 ஆக்குங்கள் என்றும் சொல்கிறார்கள் என்ன சகோதரர்களே இது?

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைமைத்துவம் இன்று எமக்குத் தேவை இதற்கு வேறு கருத்துக் கிடையாது. முஸ்லிம் சமுதாயத்தின் குரல் வளையில் இன்று பொது பல சேன போன்ற அமைப்புக்கள் கத்தியை வைத்திருக்கின்றது என்பதும் உண்மை. மகியங்கணையிலே நமது பள்ளிவாயல் மூடப்பட்டது பள்ளி இல்லை என்று திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பதும் உண்மை. முஸ்லிம்களுக்கெதிரக கடுமையான சதித்திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருப்பதும் உண்மை. இந்த நேரத்தில் நாம் எல்லோரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்பது நமக்கு ஒரு முஸ்லிம் தலைவர் இல்லை என்பதுதான். அரசியல்வாதிகள் அந்த நேரத்தில் ஏதாவது சத்தம் போடுகிறார்கள் அதற்குப்பிறகு அவர்களிடம் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும், காத்திரமான செயற்பாடுகள் அவர்களிடத்தில் காண முடியவில்லை.

இந்த நேரத்தில் ஜம்மியதுல் உலமா நாம் பலப்படுத்தப்படவேண்டிய தலைமைத்துவம் ஜம்மியதுல் உலமாவின் தலைமையின் கீழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த மேடையிலே நாம் ஹுத்பா ஓதியிருக்கிறோம். ஜம்மியதுல் உலமாவுடய வழிகாட்டுதல் தாண்டி சமுதாய பிரச்சினைகளில் செயற்படாதீர்கள் என்று ஜம்மியதுல் உலமா சபையை வலியுறுத்தி நாம் பல முறை பேசியிருக்கிறோம். நம்முடைய பல சகோதரர்களும் பல மேடைகளில் இந்தக் கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் சொல்லுகிறோம் ஜம்மியதுல் உலமாவுடைய தலைமைத்துவம் தேவை அதையும் தாண்டி தேசிய சூரா கௌன்சில் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் நாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு ஒத்துழைப்புக்கொடுக்கவேண்டும் என்று மக்களை அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தலைமைத்துவம் வேண்டும் என்பது வேறு, அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவைப் பொறுத்தவரையில் இன்று இலங்கை முஸ்லிம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு கிடையாது என்ற அடிப்படையான கருத்தை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை இலங்கையிலுள்ள எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, குறிப்பாக சரியா கௌன்சில் என்ற ஒன்றை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபைக்கு எதிராகவே உருவாக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பல சூபிகள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் குர்ஆன் சுன்னா சிந்தனையுள்ள ஒருசிலர்களை தவிர ஆனேகமானவர்கள் அகில இலங்கை ஜம்மியாவுடன் சேர்ந்துதான் செயற்பட வேண்டும் என்பதிலே மிகக் கவனமாக இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இன்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது போன்று அனைத்து அதிகாரமும் படைத்த ஒரு நிறைவேற்று சபை கிடையாது. இது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைவருக்கும் தெரியும், அதன் நிறைவேற்றுக் குழு 26 பேருக்கும் தெரியும், பத்வாக் குழு 35 பேருக்கும் தெரியும், இது முதலிலே இங்கு பதிவு செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஒரு பத்வாவை வெளியிடும் அந்த பத்வாவை இந்த முஸ்லிம் உம்மத் எடுத்து நடக்கவில்லை என்றால் அதற்கெதிராக என்ன நடவடிக்கை எடுக்கிற உரிமை, அதிகாரம் இந்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு இருக்கிறது என்று கேட்கிறேன்.

இப்போது தலைவராக இருக்கின்ற அஷ்ஷெய்க றிஸ்வி முப்தி அவர்கள் தலைவராக வருவதற்கு முன்னிருந்த அஷ்ஷெய்க் முபாறக் அவர்களும் அந்த நேரத்திலிருந்த அஷ்ஷெய்க றியாழ் கபூரி அவர்களும் ஒரு பத்வா வெளியிட்டார்கள் கூட்டு துஆ ஓதுவது பர்ழான தொழுகைகளுக்குப் பிறகு நபி வழி கிடையாது ஜனாஸாக்களை சுமந்து செல்கிற போது ஸஹாதா சொல்லிக்கொண்டு செல்வது கூடாது என்று பத்தவா கொடுத்தார்கள் இந்த பத்வாக்களை எத்தனை பேர் எடுத்து நடந்தார்கள் எடுத்து நடாக்காதவர்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டி முக்கியமான விடயமாகும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பலப்படுத்த வேண்டிய அமைப்பு அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடைய தலைமைத்துவம் இன்று நமக்குத் தேவை.

அதற்காக வேண்டி அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை ஒரு மஹ்தமா JU,M இனுடைய ஸ்தானத்திற்குக் கொண்டு செல்வது நம்முடைய தெளிவில்லா தன்மையினால் ஏற்பட்டிருக்கின்ற நிலை இது ஒன்று அடுத்தது அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவிற்கிடையிலே ஒற்றுமையில்லை இது சொல்லித்தான் ஆக வேண்டும் இதை சொல்லாமல் விட்டால் மக்கள் எந்தளவுக்கென்றால் இன்று ஒரு சகோதரரர் நேற்று பெருநாள் கொண்டாடியவர்கள் இஸ்லாத்திலே இல்லை என்கிற அளவுக்குப் பேசியிருக்கிறார் இப்படி அவர்கள் பேசும் போது நாம் சில உண்மைகளை சொன்னால் அதை விமர்சிக்கிறார்கள் ஆச்சரியத்தைப் பாருங்கள் நேற்று பெருநாள் கொண்டாடியவர்கள் இஸ்லாத்திலே இல்லை என்று நம்முடைய ஊர் பள்ளியிலே பேசியிருக்கிறார் பெருநாள் ஹுத்பாவில் அப்படி அவர் பேசியிருக்கின்ற போது அவரைப்பற்றி யாரும் பேசமாட்டார்கள் அவருக்கெதிராக எந்தக் குரலும் கொடுக்க மாட்டார்கள் அவரை விமர்சிக்க மாட்டார்கள் ஆனால் நாம் உண்மைகளைச் சொன்னால் இவர் ஏன் இதைப் பேச வேண்டும் இவர் ஏன் இதைச் சொல்ல வேண்டும் இவர் ஊரைக் குழப்புகிறவர் இவர் சமுதாயத்தைக் குழப்புகிறவர் அல்லது இந்தக் கூட்டம் இப்படித்தான் என்று விமர்சனம் செய்கிறார்கள் எதை மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதை அல்லாஹ்தான் அறிவான் எனவேதான் இந்த உண்மையைச் சொல்கிறோம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவைப் பொறுத்தவரையில் அதிலுள்ளவர்கள் ஒன்றுபட்டவர்கள் கிடையாது தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஒரு இளைக்குமாக குறிப்பாக நான் ஏற்கனவே சொன்னது போன்று நமக்கு ஒரு தலைமைத்துவம் தேவை என்பதற்காக வேண்டி அதனோடு சேர்ந்து இயங்க முற்படுகிறார்களே தவிர அதில் ஒற்றுமை கிடையாது ஏன் நேற்று புதன்கிழமை இரவு 9 மனிக்கு அறிவிக்கிறார்கள் வியாழக்கிழமை நோன்பு நோருங்கள் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பத்வாக் குழு 35 பேர் என்று நேற்றைய உரையில் அதன் தலைவர் குறிப்பிட்டார் அவர்களில் பலர் நீங்கள் தேவையென்றால் யார் யாரென்று கேட்டால் அவர்களுடை பெயர், விலாசம் தொலைபேசி இலக்கம் மின்னஞ்ஞல் முகவரி எல்லாமே தருவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் அவர்களில் பலர் நேற்று நோன்பு நோற்கவில்லை பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிறைவேற்றுக் குழு என்று சொல்லக்கூடிய அந்த 26 பேரில் நேற்று மிகமுக்கியமான பதவியிலுள்ளவர்கள் தேவையென்றால் தனிப்பட்ட முறையிலே கேழுங்கள் ஒரு சர்வதேச மீடியாக்களில் செல்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பெயர்களை நான் இங்கு குறிப்படாமல் பேசுகின்றேன் முக்கியமான பதவியில் உள்ளவர்கள் பலரும் நேற்று நோன்பு நோற்கவில்லை சிலர் பெருநாள் கொண்டாடினார்கள் சிலர் நேற்று நோன்பு நோற்காமல் இன்று பெருநாள் கொண்டாடினார்கள் முஸ்லிம்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அங்கு ஏதோ இருக்கிறது நீங்கள் குழம்பிப்போக வேண்டிய அவசியமில்லை நீங்கள் யாராவது இன்று பெருநாள் கொண்டாடியிருந்தால் இன்ஸாஹ் அல்லாஹ் உங்களுடைய பெருநாள் ஏற்றுக் கொள்ளப்படும் உங்களில் யாராவது நேற்று பெருநாள் கொண்டாடியிருந்தால் உங்களுடைய பெருநாளும் ஏற்றுக்கொள்ளப்படும் உங்களுக்கு முடிந்தது அவ்வளவுதான் உங்களால் யாராவது ஆலிம்களை நம்பத்தான் முடியும் உங்களால் நேரடியாக குர்ஆனை ஹதீஸகளை ஆய்வு செய்யவோ ஹதீஸ்களில் இது ஸஹீஹா? ழயீபா? இந்த ஹதீஸ் சொல்லுகின்ற கருத்து ஆகுமானதா ஆகததா என்கின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லை எனவே இவர்கள் சரியாக குர்ஆனைச் சொல்வார்கள் சரியாக ஹதீஸைச் சொல்வார்கள் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட அந்த அறிவித்தலுக்கு ஏற்ப பெருநாள் கொண்டாடியிருந்தால் இன்ஸாஹ் அல்லாஹ் உங்களுடைய பெருநாள் 100 வீதம் சரியானது எந்த சந்தேகமும் இல்லை அதே நேரத்திலே அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அவர்கள்தான் நல்லவர்கள் அவர்கள் சொல்வதுதான் உண்மை என்ற நோக்கில் நேற்று நோன்பு நோற்று இன்று பெருநாள் கொண்டாடியிருந்தால் அவர்களும் சரியையே செய்திருக்கிறார்கள் அவர்களுக்கும் அல்லாஹ்விடத்தில் நிறைவான கூலி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆனால் அங்கே ஏதோ இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே தீர்மானம் அறிவிக்கிற நிலையில் சில சிக்கல்கள் இருக்கின்றன உண்மையிலேயே அதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் கிண்ணியாவிலே பிறை பார்த்திருக்கிறார்கள் பிறை பார்த்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது ஒழுங்கான முறையில்தான் சொல்லப்பட்டிருக்கிறது மீடியாக்களிலே வந்து சொல்லும் போது அவர்கள் தலைகீழாக மாற்றிச் சொல்கிறார்கள் அதிலும் நாம் பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் மாற்றிச் சொல்கிறார்கள் அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது இன்று நீங்கள் இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள் அங்கே கிண்ணியாவில் ஜம்மியதுல் உலமாத் தலைவர்  அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) அவர்கள் பேசுகிறார்கள் என்ன நடந்தது ஏது நடந்தது 3 நிமிட clip அதிலே மிகச் சுருக்கமாக அவர் சொல்கிறார் ஆனால் நேற்று ரேடியோவிலே மீண்டும் மீண்டும் வேண்டுமென்று முஸ்லிம் சமுதாயத்தை பிளவு படுத்தவேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் சண்டையை மூட்டிவிடவேண்டும் என்பதற்காக சிலமோசமான மீடியாக்கள் வேண்டுமென்று திரும்பத் திரும்ப அதை போட்டுக் கொண்டிருந்தது அந்த உரை பற்றி பின்னால் சொல்லுவேன் சில செய்திகளை அந்த உரையிலே குறிப்பிடப்பட்டது போன்று அங்கே எந்த மோசடிகளும் நடக்கவில்லை அங்கே ஜம்மியதுல் உலமா என்ற பெயரில் பொய் சத்தியம் இடப்பட்டது என்பதை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் video clip  இலே வந்து தெளிவாக கூறுகிறார் அங்கே உள்ளது என்னவென்றால் கிண்ணியாவிலே ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க நசார் என்று சொல்லக்கூடியவர் இவர் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளராக இருக்கக் கூடியவர் இவர் மேற்படிப்பை செய்வதற்காக வேண்டி சூடானுக்கு சென்றிருக்கின்றார் சூடானுக்குச் சென்றவர் எப்படி தலைவராக இருக்கமுடியும் இவர் சூடான் செல்லும் போது அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) அவர்களை தலைவராக ஆக்கிவிட்டுச் சென்றார்கள் அந்த அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) அவர்களின் தலைமையில்தான் பிறை சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்திலே அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) தலைமை தாங்கும் போது அஷ்ஷெய்க் நசார் அவர்களும் வந்து இரண்டு மூன்று நாட்கள் இவர் சொல்லுகிறார் அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) சொல்லுகிறார் ஷெக் நசார் அவர்களுடைய தலைமையிலேயே கூட்டத்தை நடத்துவோம் என்றதற்கு அவர் உங்களுடைய தலைமையிலேயே நடத்துவோம் என்று சொன்னார் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) கூட்டத்தை நடாத்துகிறார் நடாத்தி அவர்கள் எடுத்த தீர்மானத்தை ஹிதாயதுல்லாஹ் (நழீமி) அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள் அவரோடு சேர்த்து அங்கிருந்த செயலாளர் மதனி ஒருவர் அவரும் உறுதிப்படுத்தி கையொப்பமிட்டு அனுப்புகிறார்கள் டெலிபோனில் பேசியிருக்கிறார்கள் செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள் எல்லாம் சொன்ன பிறகும் அவர்கள் பொய்க்கைச்சாத்திட்டார்கள் என்று ஏன் சொல்ல வேண்டும் இது நீங்கள் சிந்திக்க வேண்டிய மிகமுக்கியமான விடயமாகும்.

கையொப்பமிடாமல் அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் (நழீமி) இந்தச் செய்தியை சொல்லியிருந்தால் நம்பக் கூடாதா அவர் மோசமான ஒருவரா நல்லவர் நம்பகமானவர் கிண்ணியாவில் இருக்கின்றவரை விசாரித்துப் பார்த்தால் அவரைப் பற்றித் தெரியும் நமக்கு அறிமுகமான ஒரு சகோதரர் நமக்கு மிக நெருக்கமானவர் மிகப்பேணுதலான ஒரு நல்ல மனிதர் இவர் call பண்ணி பிறை Committee  க்கு விடயத்தை சொன்னாலே போதுமானது அப்படியிருந்தும் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்ததை உலமாக்களையே கேவலப்படுத்தக்கூடி விதத்தில் கிண்ணியா உலமா சபையை ஒரு மோசடியான சபைபோன்று மீடியாவில் வந்து சொல்வது என்பது ஒரு தலைவருக்கு எந்த வகையிலும் பொருத்தமானது இல்லை என்பதை கண்ணியத்திற்குரிய தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். அந்த நேரத்திலே கையொப்பமிடும் போது அஷ்ஷெய்க் நசார் அவர்களின் அங்கிகாரத்தோடுதான் இடப்பட்டது.

அதேபோன்று நம்முடைய தலைவர் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் மேல்மன் சங்கத்தைச்சேர்ந்த கோதரரர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக ஏனென்றால் உடனடியாக கிண்ணியாவுக்குச் சென்று அவர்கள் விசாரித்து எங்களுக்கு தகவல் கொடுத்தார்கள் அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே மேல்மன் சங்க சகோதரர்கள் யார் உலமாக்களா இவர்கள் சென்று விசாரித்து தகவல் கொடுத்தார்களாம் அந்தத் தகவல் அவர்களுக்கு முக்கியமான தகவல் இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹிராஜிஊன் நன்றாக சிந்தியுங்கள் நடுநிலையோடு சிந்தியுங்கள் இங்கு பேசுகின்ற என்னைப் பார்த்துக் கொண்டு என்னிலுள்ள சில காழ்புணர்வுகளை வைத்துக்கொண்டு செய்திகளை திரிவுபடுத்த முயற்சி செய்யாமல் சொல்லப்படக்கூடிய செய்திகளின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற மேன்மன்சங்கச் சகோதரரர்கள் உலமாக்களா? முதலாவது கேள்வி இரண்டாவது கேள்வி இவர்கள் சென்று யாரை விசாரித்திருக்க வேண்டும் ஹிதாயத்துல்லாஹ் நளீமியும் இஸ்ஹாக் மதனியும் கையொப்பமிட்ட கடிதம் பொய் ஆனால் மேன்மன்சங்கச் சகோதரரர்கள் விசாரித்துச் சொன்னது உண்மை இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹிராஜிஊன் மேன்மன்சங்கச் சகோதரரர்கள் இரண்டுபேர் சென்றது உண்மை அங்கு சென்றவர்கள் யாரை விசாரித்திருக்க வேண்டும் ஜம்மியதுல் உலமாவுக்கு உடனே சென்றிருக்க வேண்டும் அங்குள்ள தலைவரை சந்தித்திருக்க வேண்டும் அல்லது குழுவை கூட்டி விசாரித்திருக்க வேண்டும் அல்லது பிறை கண்டதாகச் சொன்ன றியாஸ் மௌலவியை சந்தித்திருக்க வேண்டும் அல்லது அந்த குறிப்பிட்ட எஹிரியனை சந்தித்திருக்க வேண்டும் இதைச் செய்யவில்லை அவர்கள் இரண்டு பேர் வந்தார்கள் கிண்ணியாவிலுள்ள சில மக்களைச் சந்தித்தார்கள் அந்தமக்களிடத்தில் விசாரித்தார்கள் அங்கிருந்து கொண்டு கொழும்புக்குப் பேசுகிறார்கள் அந்தமக்கள் முன்னிலையிலிருந்து பேசும் போது ஏன் ஆங்கிலத்தில் பேசியிருக்க முடியாது ஏன் அந்த மக்களுக்கு முன்னாலிருந்து தமிழில் பேச முடியாது மேன்மன்சங்க மக்கள் எந்த மொழியில் பேசுவார்களோ அந்த மொழியில்தான் கிண்ணியாவிலிருந்து அங்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள் இதுவும் நாம் சிந்திக்க வேண்டிய மிகமுக்கியமான விடயமாகும் அதே போன்று அன்புள்ள சகோதரர்களே கிண்ணியா ஜம்மியதுல் உலமா பிறை கண்டதில் நூற்றுக்கு நூறுவீதம் தெளிவாக இருந்தது நூற்றுக்கு நூறுவீதம் அவர்களுக்குத் தெளிவு 2 பேர் சாட்சி சொன்னால் போதும் ஆறு பேர் வந்து சொன்னார்கள் 10 இற்கு மேற்பட்டவர்கள் call பண்ணிச் சொன்னார்கள் இந்தச் செய்தியை அறிவித்து விட்டு காத்துக்கொண்டிருந்த ஜம்மியதுல் உலமா நல்லமுடிவு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்படியான ஒரு அதிர்ச்சியான முடிவு கிடைத்ததும் அவர்கள் கொழும்போடு தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் முடியவில்லை ஏன் அந்தத் தகவல் கிடைத்து நான் இங்கிருந்து கொண்டு பறகஹதெனிவில் இருக்கக்கூடிய சகோதரர் இஸ்மாயில் ஸலபியோடு தொடர்புகொண்டு அவரோடு றிஸ்வி முப்தி மிக நெருக்கமானவர் உடனே சொல்கிறேன் றிஸ்வி முப்தி அவர்களோடு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு விசயத்தைக் கேழுங்கள் தெளிவு படுத்துங்கள் நமக்குத் தெளிவு கிடைத்து விட்டால் ஒரு நல்ல முடிவை எடுத்து விடலாம் நேரடியாக அவர் விளக்கத்தை விளங்கப்படுத்திவிட்டால் நாம் அழகான ஒரு முடிவை எடுத்துவிடலாம் எனவே தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்ன போது அதற்கு அவர் சொன்னார் நான் பலமுறை முயற்சிக்கிறேன் ஆனால் அவரை அடைய முடியவில்லை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கௌரவத்திற்குரிய செயலாளர் அஷ்ஷெய்க் முபாறக் மதனி அவர்களோடு தொடர்பை ஏற்படுத்துகிறேன் அவர் கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை அவரிடம் கேட்டேன் ஷெக் பிறை காணப்பட்ட செய்தியை சகோதரர்கள் சொல்கிறார்கள் நீங்கள் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார் ஷெக் நானும் உங்களைப் போன்றுதான் நான் பிறைக் கூட்டத்திற்குச் செல்வதில்லை எனக்குக்கிடைத்த தகவல்களை அங்கு கொடுத்துவிட்டேன் நீங்கள் முடியுமென்றால் பிறைக்குழுவிற்குப் பொறுப்பாகவிருக்கின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கொழும்பிலே வசித்துக் கொண்டிருக்கின்ற அஸீஸ் மௌலவிக்கு call பண்ணிப்பாருங்கள் என்று கூறினார் அந்தநேரத்தில் நம்முடைய பல சகோதரர்கள் எனக்குப் பக்கத்தில் இருந்தார்கள் அஸீஸ் மௌலவியோடு தொடர்பை ஏற்படுத்தியபோது ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட இலக்கம் தவறானது மீண்டும் முபாரக் ஹஸ்றத்தோடு தொடர்புகொண்டு சரியான இலக்கத்தை எடுத்து தொடர்பை ஏற்படுத்தினால்  Ringபோகிறது பதிலில்லை ஒரு கட்டத்தில் தொலைபேசியை எடுத்தார் பேசவில்லை மீண்டும் பிறை committe உடைய Land phone இற்கு பலமுறை முயற்சி செய்தோம் தூக்கித்தூக்கி கீழே வைத்தார்கள் கடைசியில் ஒரேயடியாக றிசீவரை தூக்கி கீழே வைத்து விட்டார்கள்.

பொறுப்பு வாய்ந்த ஒரு உம்மத்தை ஒற்றுமைப்படுத்தக் கூடிய பிறைக் குழு இவ்வாறு நடந்து கொள்வதென்பது நமக்கு நடந்து கொண்டால் பறவாயில்லை நாம் யாரும் கிடையாது ஒரு தனிநபர் ஆனால் கிண்ணியா ஜம்மியதுல் உலமா தொடர்பு கொள்ளும்போது அதற்கு பதிலளிக்கவேண்டும் அங்கு இடம்பெறவில்லையென்றால் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்ற சந்தேகத்தை அது நமக்கு ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? கண்மூடித்தனமாக நாம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பின்பற்றுவதற்கும் பிறைக்குழுவைப் பின்பற்றுவதற்கும் பிறைக்குழு என்ன இமாமத்தா பிறைக்குழு என்ன கலீபத்தா அதற்கு நாம் பையத் செய்து கொடுத்திருக்கிறோமா? சில சகோதரர்கள் அறியாமையனால் பேசுகிறார்கள் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட வேண்டும் நாம் பள்ளிவாசலுக்கு தலமைத்துவம் வைத்திருக்கிறோம் அதேபோன்று சங்கங்களுக்கு தலமைத்துவம் வைத்திருக்கிறோம் இதுபோன்ற ஒரு தலமைத்துவம்தான் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினுடைய தலமைத்துவமும் பிறைக்குழுவினுடைய தலமைத்துவமும் அவர்களுக்கு கட்டுப்படவில்லை என்பதற்காக காபிர்களாகி விடுவதோ வழிகெட்டுவிடுவதோ இல்லை அப்படியென்றால் எல்லோரும் எல்லா விசயத்திலும் கட்டுப்பட வேண்டும் நான் திரும்பத்திரும்ப அனுபவப்பட்ட உதாரணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் எல்லோரும் கூட்டு துஆவை விடவேண்டும். அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றால் கூட்டு துஆவை எல்லோரும் விடவேண்டும் ஏனென்றால் அவர்கள் பத்வாக் கொடுத்திருக்கிறார்கள் கூட்டு துஆ என்பது இஸ்லாத்தில் இல்லை என்று ரஸுல் (ஸல்) அவர்களோ ஸஹாபாக்களோ அந்தக் கூட்டுதுஆவை செய்யவில்லை என்று பத்வாக் கொடுத்திருக்கிறார்கள் எனவே எல்லோரும் விட வேண்டும். அவர்களுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் கிடையாது குறிப்பாக நபி (ஸல்) சொன்னார்கள் படைத்தவனுக்கு மாறுசெய்கிற விடயத்தில் படைப்பினங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றார்கள் அன்புள்ள சகோதரர்களே ரஸுல் (ஸல்) சொன்னார்கள் பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள் என்று மக்கள் பெருநாள் கொண்டாடக்கூடிய தினம் பெருநாளாகும் மக்கள் நோன்பு நோற்கக் கூடிய தினம் நோன்பாகும் என்கிற ஒரு ஹதீஸ் வருகிறது ஆனால் இந்த ஹதீசோடு ஒப்பிடுகிற போது அது தரத்தில் குறைந்தது சில ஹதீஸ்கலை அறிஞர்கள் அந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூடக் குறிப்பிடுகிறார்கள் இது ஒரு புறமிருக்க பிறையைப்பார்த்தாக ஒரு நிறுவனம் அதுவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஒரு கிளை அந்தக் கிளையில் அங்கம் வகிக்கிற 200இற்கும் அதிகமான உலமாக்கள் மீனவர்களோ அல்லது விவசாயிகளோ அல்லது பசாரிலே ஆட்டோ ஓடுபவர்களது சங்கமோ கிடையாது அதுவும் உலமாக்களுடைய சங்கம்தான் எப்படி ஷெக் றிஸ்வி முப்தி ஒரு ஆலிமாக இருக்கிறாரோ அதே போன்று ஹிதாயதுல்லாஹ் நளீமியும் ஒரு ஆலிம் எப்படி ஷெக் முபாரக் மதனி ஜம்மியதுல் உலமாவின் செயலாளராக இருக்கக்கூடியவர் ஒரு ஆலிமாக இருக்கிறாரோ அவ்வாறே இஸ்ஸாக் மதனியும் ஒரு ஆலிம் எனவே ஆலிம்களின் ஒரு சங்கம் உறுதிப்படுத்தியிருக்கிற போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா எங்களுக்கு ஒழுங்காக தெளிவுபடுத்துவதற்கு தொடர்பைத்தராத போது நாம் என்ன முடிவு எடுப்பது அவர்கள் பிறை கண்டது உண்மை, தெளிவு என்று சொல்கிறார்கள் நாம் அவர்களுக்குக் கட்டுப்படுகிறோம் மீண்டும் சொல்கிறோம் சகோதரர்களே இந்த சாட்சிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பிறைகண்டிருக்கிறோம் என்று மீடியாக்களில் தோன்றி அறிவித்திருந்தாலும் நாம் பெருநாள் கொண்டாடியிருக்க மாட்டோம் இதற்கு ஆதாரம் சிலவருடங்களுக்கு முன்னால் அக்கரைபற்றிலே சில சகோதரர்கள் பிறை கண்டதாக சொன்னார்கள் பெரிய பரபரப்பு நாம் தொழுகைக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து காத்துக்கொண்டிருக்கிறோம் செய்திவரவில்லை ஆனால் சாட்சிகள் எங்களோடு பேசுகிறார்கள் நான் நேரடியாக சாட்சிகளோடு பேசினேன் ஆனால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அவர்களை விசாரித்துக்கொண்டிருந்தது அம்பாரை ஜம்மியதுல் உலமா அவர்களை விசாரித்துக்கொண்டிருந்தது விசாரித்து 3 மணியளவில் தீர்வு எடுக்கிறார்கள் நாளை நோன்புதான் பெருநாள் இல்லை என்று நாங்கள் பெருநாள் கொண்டாடவில்லை ஏனென்றால் இப்படி தனினபர்களுடைய தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டுச் சென்றால் பெருநாட்கள் நிறைந்து விடும் ஒரு நிறுவனம் முடிவெடுக்கின்ற போது அதனோடு சேர்ந்து செல்கின்ற போதுதான் ஆக்கபூர்வமான முடிவு வரும் எனவே அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஒரு கிளையாக இருக்கக்கூடிய கிண்ணியா ஜம்மியதுல் உலமா முடிவெடுத்தது அவர்கள் நூறு வீதம் தெளிவோடு இருந்தார்கள் இப்போதும் தெளிவோடு இருக்கிறார்கள் இணையத்தளங்களிலெல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள் இன்ஷாஹ் அல்லாஹ் அவர்களின் அறித்தலின்படி நாளை தேசிய மீடியாக்களிலெல்லாம் இந்த செய்தி வெளிவரும் இதைவைத்துத்தான் நேற்று (08.08.2013) பெருநாள் கொண்டாடப்பட்டது. முஸ்லிம் விஞ்ஞானிகள் ஏகோபித்து நேற்று புதன் கிழமை பிறை காணமுடியாது என்று சொன்னார்கள் எனவே கண்ட பிறை பொய் 14 அல்லது 16 நிமிடங்கள்தான் அந்தப்பிறை இருக்கும் தகவல்வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று சொன்னார்கள் தகவல் தாமதமாகச் செல்லவில்லை 7 மணிக்குள் தகவல் சென்று விட்டது பிறைபார்த்தவர்கள் 6.35 இற்கும் 6.39இற்குமிடையில் பிறைபார்த்திருக்கிறார்கள் இதில் அன்புள்ள சகோதரர்களே முஸ்லிம் விஞ்ஞானிகள் எல்லோரும் சேர்ந்து பிறைபார்க்க முடியாது என்று சொன்னால் நாம் பிறைபார்க்கக் கூடாதா நாம் விஞ்ஞானத்தை எப்போது கண்டவர்கள் நான் இப்போது உட்கார்ந்து அஸ்டனோமியைப் பற்றிப் பேசினால் உங்களுக்கு என்ன புரியும் அஸ்டனோமியில் வானசாஸ்திரத்தின் அடிப்படையில் பார்த்தால் 29 நாள் பூரணமாக வராது 28 நாளும் சில மணஷிநேரங்களும் சில நமிடங்களும்தான் வரும் 30 நாட்களும் பூரணமாக வருவதில்லை இதையெல்லாம் பேசிமுடித்தால் கடைசியில் எல்லாமே மறந்துவிடும் விஞ்ஞானம் என்பது மெயின் கோட் கிடையாது.

ரஸுல் (ஸல்) அவர்களிடம் நாட்டுப்புறத்து அறபிகள் வந்து சொன்னபோதும் நீ எப்படிப்பார்த்தாய் வானத்துக்கு மேல் பார்த்தாயா பூமிக்கு கீழ்பார்த்தாயா மரத்திற்கு இடையில் பார்த்தாயா வட்டமாக இருந்ததா இதுவெல்லாம் கேட்கவில்லை அவர்களுடைய ஈமானும் இவர்களுடைய ஈமானும் என்று பேசினால் மீண்டும் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டி நேரிடும். நீதிமன்றத்திற்குச் சென்று இரண்டு பேருடைய சாட்சியும் எப்படி இருந்தது விபச்சாரத்தில் 4 பேருடைய சாட்சியை எப்படி ஏற்பது என்கின்ற பல கேள்விகள் தொடற்சியாக வந்து கொண்டே இருக்கும் தேவையில்லாத சங்கடங்களை நாம் உருவாக்கவேண்டிய அவசியம் கிடையாது விஞ்ஞான ரீதியில் பார்க்க முடியாது என்பது ஒருபக்கம் உண்மையாக இருந்தாலும். சுனாமி அடித்த புதிதிலே சொன்னார்கள் நம்முடைய நாட்டில் பூமி அதிர்ச்சியே வராது என்று சொன்னார்கள் பூகோளவியலாளர்கள் சொன்னார்கள் நமக்கு பூமி அதிர்ச்சியோ வருவதற்கோ சுனாமி வருவதற்கோ வாய்ப்பில்லை என்று சொன்னார்கள் ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து கொண்டு வருகிறது. விஞ்ஞானம் அப்படித்தான். விஞ்ஞானம் சொல்லக்கூடிய பல தரவுகள் பல சந்தர்ப்பங்களிலே மாறிக்கொண்டிருக்கிறது இதை நம்பிச் சென்ற பல ஏமாந்திருக்கின்றார்கள் விஞ்ஞான தரவுகளை நம்பி மார்க்கத்தை அதற்கேற்றாற்போல் வளைக்க முற்பட்ட பலர் பல சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் எனவே அங்கே பார்த்த பிறை என்பது உண்மையானது அதை பொய்ப்பிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

அதே நேரத்திலே அன்புள்ள சகோதரர்களே கடந்த வருடம் எமக்கொரு புத்தகம் வந்தது தபாலிலே சர்ச்சையைக் கிழப்பியுள்ள நோன்புப் பெருநாள் தீர்மானம் என்று இதை சிறிலங்கா ஷரிஆ கௌன்சில் வெளியிட்டிருக்கிறது 2012 ஹிஜ்ரி 1433 இந்தப் புத்தகத்திலே 4 பேருடைய கட்டுரை இருக்கிறது ஒன்று பிறைக்குழுத்தலைவர் மௌலவி ஏ. டபிள்யு. எம். றியாழ் பாரி அவர்களுடைய அறிக்கை இரண்டாவது வன்மையாகக் கண்டிக்கிறேன் ஏ.எல்.எம். ரிழா அல் மஹ்தூமி மூன்றாவதாக முறைகேடான பிறைத் தீர்மானம் மௌலவி எம்.பி.எம் இஸாக் சத்தாஹி ஷவ்வால் பிறை நிலாவின் அக்கினி மௌலவி ஏ.எல்.எம். மஸீன் அல் மஹ்தூமி என்ற 4 பேருடை பெயரையும் சுமந்ததாக இந்தக் கட்டுரை எனக்கு வந்ததது நிறை மௌலவிமாருக்கும் இந்தப் புத்தகம் சென்றிருக்கும் என நினைக்கிறேன் இந்தப் புத்தகத்திலே பிறைக்குழுத்தலைவர் மௌலவி ஏ. டபிள்யு. எம். றியாழ் பாரி அவர்களுடைய அறிக்கையைப் பாருங்கள் (18.08.2012) அன்று பிறைக் கூட்டம் வழமைபோல் எனது தலைமையிலேயே நடைபெற்றது பெரிய பள்ளியில் வளமையான இப்தார் நிகழ்வும் அன்று நடைபெற்றது அதில் துஆவை மாத்திரம் ஓதிவிட்டு பிறைக் குழுவிற்கு வந்தோம் ஒன்றுக்கொன்று முறன்பாடாக சாட்சி கூறி பிறை விடயத்தில் முன்னய காலங்களைப் போல் தொலைபேசிஅழைப்புகள் வர ஆரம்பித்தன இதன் நம்பகத்தன்மை எவ்வளவு என்பதை அறிந்து விட்டேன் ஆனால் ஒரேயொரு தைரியம் மாத்திரம் இருந்தது எவளவு பொய் சாட்சியங்கள் வந்தபோதிலும் ACJU,CGM உலமாக்கள் ஒன்று கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் படி நாளை நோன்புதான் இம்முறை ரமழான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படும் என்பதை மாத்திரம் உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் நான் கனவிலும் நினைக்காத விதம் கிண்ணியாவின் தீர்மானத்திற்கு நேர்மாற்றமாக மௌலவி றிஸ்வி முப்தி அவர்கள் தன்னிச்சையாக நாளை பெருநாள் என்பதில் உறுதியாக இருந்தார். என்ன மனதுடன் இந்தக் கூட்டத்திற்கு வந்தாரோ தெரியவில்லை நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை ஜம்மியாவும் நாங்களும் எடுத்த தீர்மானத்திற்கு நேர்மாற்றமான நிலை வந்தது ஆனாலும் நாளை நோன்பு என்பதிலே திட்டமாக இருந்தேன் ஜம்மியாவின் தலைவரையோ அவர் சார்பானவரையோ கட்டுப்படுத்தும் அமைப்பில் சபை இல்லை என்று உணர்ந்த நான் வானொலிக்கு குரல்கொடுக்கவோ கையொப்பமிடவோ இல்லை சபையை விட்டு நானும் இன்னும் சில உலமாக்களும் வெளிநடப்புச் செய்தோம் இத்தீர்மானங்களை கவனிக்கும் போது எதிர்காலங்களில் சர்வதேசப் பிறைக்குத்தான் அழுத்தம் கொடுக்கப்படுமோ என்று அச்சமடைகிறேன் என அவருடை அறிக்கையில் குறிப்பிடுகின்றார் இரண்டாவதாக வன்மையாக கண்டிக்கிறேன் என்ற அறிக்கை ஏ.எல்.எம். ரிழா அல் மஹ்தூமி ஹஸனி அவர்களால் வெளியிடப்படுகிறது இரண்டாவது பந்தியில் குறிப்பிடுகிறார் 2006 ஆம் ஆண்டு பல உலமாக்கள் ஒன்று கூடி பிறைத்தீர்மானம் எடுக்கும் போது இஸ்லாமிய வானியல் அறிஞர்கள் இன்று பிறைகாணமுடியாது என்று தீர்மானிப்பதாயின் அப்பிறை கண்ட சாட்சிகள் தட்டப்பட்டு இப்பிறையை பாரமெடுக்க முடியாது என்று கூறிவிட்டு ஜம்மியாவின் தீர்மானத்திற்கு மாற்றமாக தலைவர் எடுத்த தீர்மானத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் விளங்குகிறதா? சென்ற வருடம் பிறைபார்க்க முடியாது என்று விஞ்ஞானிகள் சொன்ன அந்த நாளில்தான் கண்ணியத்திற்குரிய றிஸ்வி முப்தி அவர்கள் பெருநாள் என்று அறிவித்தார்கள் என்பதை மௌலவி முக்தாஸ் ரிழா மக்தூமி ஹஸனி அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள் சென்றவருடம் அப்படித் தீர்மானம் எடுக்க முடிந்தவர்களால் ஏன் இந்தவருடம் எடுக்க முடியவில்லை என்ற பல கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன இதனால்தான் நாங்கள் பெருநாள் கொண்டாடினோம் சும்மா எடுத்த எடுப்பில் முஸ்லிம் சமுதாயத்தை குழப்புவதற்காக பெருநாள் கொண்டாடவில்லை அல்லாஹ்வுக்குப் பயந்து கொண்டாடினோம் ஷவ்வால் பிறை எங்களுக்கு உறுதியான பிறகு அந்த நாளில் நோன்பு நோற்பது ஹறாம் என்பதினால் பெருநாளுக்கு அழைப்பு விடுத்தோம் எங்களுக்கு ஹறாம் என்று தெரிந்ததன் பிறகு முஸ்லிம் சமுதாயத்தை இந்த ஹறாத்தைசெய்வதற்கு விடுவோமாக இருந்தால் எங்களோடு சேர்ந்து இந்த முஸ்லிம் சமுதாயமும் அழிய வேண்டிய நிலை வரும் என்ற பயத்தினால் இந்த அறிக்கையை விட்டோம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும் ஜம்மியதுல் உலமா அவர்கள் வகுத்த அந்த 5 உசவையசயை வில் அவர்கள் சென்றவருடமும் உறுதியாக இருந்திருந்தால் நாம் சற்று யோசித்திருக்கலாம் அதுமட்டுமல்ல ஜம்மியதுல் உலமாசபையிலுள்ள பத்வாக் குழுவின் ஒரு உறுப்பினர்தான் சகோதரர் இஸ்மாயில் சலபி அவர்கள் இவர் தொடர்புகொள்ளும் போது ஏன் றிஸ்வி முப்தியால் பதில் சொல்ல முடியாது சிந்திக்க வேண்டும் ஏதோ ஒர் சிக்கல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது நான் நினைக்கிறேன் இது எனது தனப்பட்ட கருத்து இவர்களுடைய அழுத்தம் ஒரு காரணமாக இருக்கும் பிறைக்குழுவால் சென்றமுறை இந்தப் புத்தகத்தை வெளியட்டதென்பது ஜம்மியதுல் உலமாவுக்கு மிகப்பெரும் தலையிடியாக இருந்தது பிறைக் குழு என்பது இவர்கள் சொல்வது போன்று ஒரு இஜ்மாவான ஒரு குழு கிடையாது இவர்கள் அந்த இடத்தில் ஒரு இழுபறியோடு கூடுகிறார்கள் என்னுடைய பிறையா? உன்னுடைய பிறையா? என்னுடைய முடிவா? உன்னுடைய முடிவா என்று அதிலே இஹ்லாஸான மக்களும் இருக்கின்றார்கள் அல்லாஹ்வுக்குப் பயந்த மக்களும் இருக்கின்றார்கள் அதையும் நாம் மறுக்கவில்லை எனவே ஏதோ ஒரு அழுத்தத்தின் மத்தியில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் இதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.

முஸ்லிம் விஞ்ஞானிகள் ஏகோபித்து புதன்கிழமை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரியாது என்று சொன்னால் இதை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா 4 மணிக்கு அந்த இடத்தில் கூடி முஸ்லிம் விஞ்ஞானிகளிடத்தில் கேட்பார்களாக இருந்தால் இப்படியொரு தலைமைத்துவம் நமக்குத் தேவையா? இஸ்லாமிய சகோதரர்களே பிறை எப்போது பிறக்கும் எப்போது தோன்றும் என்ற வானவியல் ரீதியான விடயங்களை விஞ்ஞானிகள் ஏற்கனவே சொல்லிவிடுவார்கள் அவர்களுடைய அந்த விஞ்ஞான கணிப்பீட்டினடிப்படையில் பிறை எப்போது பிறக்கும், எந்த இடத்தில் பிறக்கும், எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்ற முழு துல்லியமான விடயங்களையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள் அவர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தால் நீங்கள் ஏன் ரேடியோவிலும் பத்திரிகைனகளிலும் புதன்கிழமை ஷவ்வால் பிறையைப் பாருங்கள் கண்டவர்கள் எங்களுக்கு அறிவித்தல் தாருங்கள் என்று சொல்லிவிட்டு போய் உட்கார வேண்டும் நீங்கள் பக்கசார்பாக சிந்திக்கக் கூடாது இங்கு பெருநாள் கொண்டாடியவர்கள் குர்ஆன் சுன்னாவில் மிகவும் உறுதியாக இருக்கிறவர்கள் எனவே அவர்களுக்கு எதிர்பானவர்கள் நாம் இப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்காதீர்கள் அல்லாவுக்காக யோசியுங்கள் நம்மிடத்தில் ஏன்பிறைபார்கன்கச் சொல்லவேண்டும் நிச்சயமாக நம்முடைய வெற்றுக்கண்களுக்குப் பிறை தெரியாது பிறைதெரியாது எனும்போது ஏன் பார்க்கச் சொல்லவேண்டும் நீங்கள் சொல்லும் போது நிதாணமாக இருக்கவில்லையா? அல்லது நீங்கள் கொடுத்த அறிக்கையை ஏற்றுக்கொண்டவர்கள் பிழையாக வெளியிட்டார்களா அப்படி பிழையாக வெளியிட்டால் அதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமல்லவா அதுவும் செய்யவில்லை எனவே ஒரு சிக்கல் இருக்கிறது என்பது விளங்குகிறது.

அடுத்ததாக கண்ணியத்திற்குரிய அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் நேற்று ரேடியோவிலே பேசும் போது இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களுடை ஒரு பத்வாவை ஆதாரம் காட்டித்தான் பேசினார்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் காட்டவில்லை இந்த அறிஞருடைய கருத்தை ஆதாரம் காட்டித்தான் பேசினார் 10 பேர் பிறை பார்த்தாலும் ஹாகிம் (நீதிபதி) ஏற்றுக்கொள்ள மறுத்தால் 10 பேஷருடைய சாட்சிகளும் நிராகரிக்கப்படும் அந்தப் 10பேரும் யாரிடமும் சொல்லக் கூடாது அந்தப் 10 பேரும் விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு பெருநாள் கொண்டாடலாம் என்று இமாம் இப்னு தைமியா (ரஹ்) சொன்ன பத்வாவை ஆதாரம் காட்டித்தான் பேசினார் இலங்கையிலுள்ள பலர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை அவரை நிறையப்பேர் வழிகேடன் வழிகெடுத்தவன் என்று சொல்வார்கள் ஆனால் நாங்கள் மிக மிக மிக மதிக்கிற ஒரு அறிஞர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் தௌஹீத் சிந்தனைகளின் முன்னோடிகளில் மிக முக்கியமாகத் திகழ்பவர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் இந்த இப்னு தைமியாவை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக வேண்டி நீங்கள் அருடைய உரையை மீண்டும் நன்றாக எடுத்துப் பாருங்கள் அவர் 2, 3 நிமிடங்கள் இமாம் இப்னு தைமியா (ரஹ்) ஐப்பற்றிப் பேசுகிறார் அவரிடம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் நான் இப்னு தைமியாவை அதிகம் நேசிப்பவன் எனது உஸ்தாத் மார்களிடத்தில் அதிகம் அவரை சொல்வேன் அல்லாமா நாங்கள் இமாம் என்றுதான் சொல்லுவோம் அவர் அல்லாமா என்று சொல்கிறார் அல்லாமா என்றால் மிக அறிந்த ஞானி என்பது அர்த்தம் அல்லாமா இப்னு தைமியா என்றுவிட்டு அந்த பத்வாவைச் சொல்கிறார். இஸ்லாமியச் சகோதரர்களே இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் இந்த பத்வாவை ஒரு சிறுபாண்மைச் சமுதாயத்திடத்தில் சொல்லவில்லை இந்த பத்வாவை அவர்கள் சொன்னது கிலாபத்துள்ள ஒரு சமுதாயத்திலிருந்து கொண்டு அதிகாரம் படைத்த ஒருதலைமைத்துவத்துக்குள் இருந்து கொண்டு சொன்ன செய்தி அது. இது ஒன்று இரண்டாவதாக அந்தப்பத்வாவை ஏற்றுக்கொள்வோம் இமாம் இப்னு தைமியா (ரஹ்) கொடுத்த பத்வா இது மட்டும்தானா அவர் குறிப்பிட்ட செய்தி அவருடைய 26 வது volume இல் வருகிறது உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடுகிறேன் தஸ்பீஹ் தொழுகை பித்அத் என்று மிகத்தெளிவாக பதாவா இப்னு தைமியாவில் குறிப்பிட்டிருக்கிறார் ஆகவே இந்த பத்வாக்களையெல்லாம் பேச வேண்டுமல்லவா இங்கே பிறையுடைய விசயத்தில் இமாம் இப்னு தைமியா (ரஹ்) உடைய பத்வா சதகமாக வருகிறது என்பதற்காக இமாம் இப்னு தைமியா (ரஹ்) உடைய பத்வாவை வைத்து இப்படிச் சொல்வதாக இருந்தால் இதையும் இவ்ராறான பத்வாக்கள் கூட்டு துஆ பித்அத் என்பது இமாம் இப்னு தைமியாவுடைய பத்வா எனவே அன்புள்ள சகோதரர்களே இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களுடைய பத்வா வழங்கப்பட்ட சந்ததி அவர் இருந்த கிலாபத்தின் பின்னணியில் என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்ததாக Nஷக் றிஸ்வி முப்தி அவர்கள் சமுதாயத்தில் குளப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கடையசியாக பேசிய விசயம்தான் எல்லோரையும் புண்படுத்திய விசயம் அடிக்கடி சொல்லுகிறார் நான் ஒற்றுமையை விரும்புகிறவன் நான் சமுதாயம் பிளவுபடுவதை விரும்பாதவன் என்று திரும்பத்திரும்ப சொல்லக்கூடிய இவர் இஸ்லாமிய ஷரீஆவின் நிழலில் அழகாக சொல்லியிருக்கலாம் அவர் ஓரிடத்திலே அழகாகச் சொல்லுகிறார் அதாவது ஆரம்பத்திலே பேசிக்கொண்டு வரும்போது நடுநிலை என்று நினைக்கிறேன் இஜ்திஹாத்தைப் பற்றிச் சொல்கிறார் இஜ்திஹாத் செய்கிறவர் இஜ்திஹாத் செய்து சரியான முடிவு எடுத்தால் அவருக்கு இரண்டு கூலிகள் தவறான முடிவை எடுத்தால் அவருக்கு ஒரு கூலி என்று பனு குறைரா சம்பவத்தையும் சுருக்கமாக பேசுகிறார் அது புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்கிரந்தங்களில் வரக் கூடிய ஒரு விரிவான சம்பவம் அந்த சம்பவத்தில் ரஸுல் (ஸல்) அவர்கள் பனுகுறைரா என்ற இடத்திற்கு சில ஸஹாபாக்களை அனுப்புகிறார்கள் அப்படி அவர்களை அனுப்பும் போது அவர்களிடம் சொல்லியனுப்புகிறார்கள் பனுகுறைராவிலன்றி அஸரை நீங்கள் தொழவேண்டாம் என்று சொல்லுகிறார்கள் மக்கள் போகிறார்கள் வழியிலே அஸருடைய நேரம் வருகிறது ஒரு சாரார் அவ்விடத்திலே தொழுதார்கள் இன்னொரு சாரார் ரஸுல் (ஸல்;) சொன்னதற்கிணங்க பனுகுறைராவை சென்றடைந்து தொழுதார்கள் இதில் ஒன்று தப்புத்தானே ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் விடயத்தை சொல்கிறார்கள் அதற்கு ரஸுல் (ஸல்) அவர்கள் இரண்டுபேரையும் சரிகண்டார்கள் ஆகவே இங்கு ஷெக் றிஸ்வி முப்தி என்ன சொல்லியிருக்கவேண்டும் என்றால் இன்று இஜ்திஹாதின் அடிப்படையில் நோன்பை விட்டுவிட்டு நீங்கள் பெருநாள் கொண்டாடுவீர்களானால் உங்களுக்கு அல்லாஹ் கூலியைத் தருவான் என்னுடைய கருத்தின்படி அது தவறானது ஆனால் நீங்கள் தொழுகையை மீட்டவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை சில இடங்களிலே நம்முடைய சகோதரர்கள் வெறும் உணர்ச்சிகளுக்கும் அல்லாஹ்வுக்கு பயமில்லாத நிலையிலும் இருப்பதனால் இதை ஒலிபெருக்கியில் போட்டுவிட்டு அவர்கள் நோன்பை கழா செய்ய வேண்டும் தௌபா செய்ய வேண்டும் என்கிற போது பட்டாசு கொழுத்துகிறார்கள் என்றால் இதற்கு யார் பொறுப்பு இந்தப் பட்டாசு கொழுத்துவது இரண்டு சமுதாயத்தைப் பிரிக்குமா இரண்டு பெருநாள் கொண்டாடுவது சமுதாயத்தைப் பிரிக்குமா சகோதரர்களே நன்றாகச் சிந்திக்க வேண்டும் தலைமைத்துவம் பொறுப்போடு செயல்பட வேண்டும் இந்த பத்வாவை  ஷெக் றிஸ்வி முப்தி கொடுத்திருந்தால் நான் ஒற்றுமையை நேசிக்கக் கூடியவன் என்ற அந்தக் கருத்தில் அவர் தெளிவானவர் உறுதியானவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த விசயத்தில் தெளிவாக ஆணித்தரமாக சொல்கிறேன் சகோதரர் கண்ணியத்திற்குரிய நமது ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அவர்கள் இன்ஸாஹ் அல்லாஹ் தொடர்ந்தும் தலைவராக இருக்கவேண்டும் அவரிடத்தில் நிறைய நல்ல பண்புகள் இருக்கின்றன இப்படியான பண்புகளை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பத்வா கொடுத்தது மிக மிக மிக தவறானது அவர் மீண்டும் ஒரு முறை மீடியாவிலே வந்து இதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லது அவர் இமாம இப்னு தைமியாவினுடைய எல்லாப் பண்புகளையும் அந்த ஸ்தானத்திலிருந்து வெளியிடவேண்டும் என இந்த இடத்திலே ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இறுதியாக கண்ணியத்திற்குரிய சகோதரர்களே அல்லாஹவின் நல்லடியார்களே இன்று முஸ்லிம் சமுதாயத்தின் குரல்வளையை நெருக்குவதற்காக வேண்டி யூத சக்திகள் மிகத்திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன எகிப்பதில் அல்லாஹ்வின் உதவியின் நீண்டகாலமாக இருந்துவந்த அனியாயத்திற்கு ஒருமுடிவுகட்டுவதற்கு முஸ்லிம்கள் புறப்பட்டார்கள் அல்லாஹ்வின் உதவியினால் டாக்டர் முஹமட் முர்சி அவர்களை ஆட்சித்தலைவராக கொண்டுவந்து சிலமாற்றங்களைச் செய்து கொண்டுவந்த வேளையிலே அங்கே இந்த பேரின வாதிகள் அல்லது காலணித்துவ சிந்தனையுள்ளவர்கள் அல்லது இல்மானிகள் முஸ்லிம் எதிரிகள் எல்லோரும் சேர்ந்து எந்தவிதமான நியாயமும் இல்லாமல் டாக்டர் முஹமட் முர்சி அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்த்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா பலஸ்தீனத்திலுள்ள கமாஸ் உடன் இவர் தொடர்பு வைத்திருக்கிறார் என்று சொன்னார்கள். அதுமாத்திரமல்ல நூற்றுக்கணக்கான எகிப்திய மக்கள் இப்புனிதமிகு ரமழானிலே படுகொலை செய்யப்பட்டார்கள். இது போக கடந்த இரண்டு வருடங்களாக சிரியாவிலே பஸ்ஸாருள் அசத் என்ற லஹன்னதுல்லாஹி அலை இவனுக்கு நியாயமான தண்டனை கொடுக்கப்படவேண்டும் அவனை அழித்து அல்லாஹ் முஸ்லிம்களுடைய உள்ளங்களை குளிர்ச்சியடையச் செய்யவேண்டும் அவன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்களை நோன்பு காலம் என்று பாராமல் படுகொலை செய்து கொண்டு வருகிறான் இவ்வாறு உலகம் முழுக்க முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டம் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நமது நாட்டிலே பொது பல சேன என்ற அமைப்பு பின்னணியிலே பல பலமான சக்திகளை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமுதாயத்தைக் கருவறுப்பதற்காக இரவுபகலாக பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்வரக்கூடிய துல்ஹஜ் மாதத்திலே உழுஹியாவுடைய பிரச்சினையை மிகக் கடுமையாக நாம் சந்திகக் வேண்டியிருக்கிறது. எனவே அன்புள்ள சகோதரர்களே வியாழக்கிழமை பெருநாள் எடுத்தவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு நிறைவான கூலியைத்தருவான் எனவே நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள் உங்களை சில உலமாக்கள் வழிநடாத்தித்தான் பெருநாள் கொண்டாட வைத்தார்கள் எனவே மறுமையிலே அல்லாஹ் உங்களிடம் கேட்டால் இந்ந இந்ந உலமா சொல்லித்தான் யா அல்லாஹ் நீ குர்ஆனிலே சொல்கிறாய் உங்களுக்கு தெரியாதவற்றை தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் இவர்களை நம்பி கேட்டோம், இவர்கள் சொன்னதை செய்தோம் என்று அல்லாஹ்விடத்தில் சொல்லுங்கள். எங்களிடம் அல்லாஹ் கேட்டால் நீ சொல்லியிருக்கிறாய் பிறையைக் கண்டு நோன்பு நோருங்கள் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள் அந்த அடிப்படையில் எங்களுக்கு ஆட்சியும் கிடையாது ஆட்சிக்கு நிகரான தலமைத்துவமும் கிடையாது எனவே இந்த அடிப்படையில் இந்தப் பெருநாளைக் கொண்டாடச் சொன்னோம் என்று நாங்களும் சொல்லுவோம் இரண்டுபேரையும் அல்லாஹ் மன்னித்து விடுவான்.

இந்தவகையில் வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்களது பார்வையில் வியாழன் நோன்பு நோற்பது ஹறாமாகும் அந்தநிலையில்தான் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் ஆனால் யாரெல்லாம் வியாழக்கிழமை நோன்பு நோற்றார்களோ அவர்களை தொல்லைப்படுத்தி சமுதாயத்தைப் பிழவுபடுத்த வேண்டாம் என முஸ்லிம் உம்மத்தை நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறேன். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்காக இந்த நல்ல நாட்களிலே பிரார்த்தனை செய்யுங்கள் முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட துஆச் செய்யுங்கள் முஸ்லிம் தலைவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து செயற்பட துஆச் செய்யுங்கள் முஸ்லிம் தலைவர்களுக்கும் உலமாக்களுக்கும் வெளியிலிருந்து வரும் அழுத்தங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க துஆச் செய்யுங்கள் வீணாக நீங்கள் சர்ச்சபை;பட்டுக்கொண்டு இரண்டு பெருநாட்கள் என்பது நம்முடைய சமுதாயத்திற்கு புதியவிடயம் கிடையாது நம்முடைய சமுதாயம் 3 பெருநாட்களை இந்த இலங்கை நாட்டிலே கொண்டாடிக்கொண்டு வருகிறது சர்வதேசம் என்று ஒரு குழுவும். உள்நாடு என்று இன்னொரு குழுவும்இ நுஜும் கணக்கு என்று இன்னொரு குழுவும் பெருநாள் கொண்டாடிக்கொண்டு வருகிறது இந்த 3 குழுவும் பெருநாள் கொண்டாடும் போது ஜம்மியதுல் உலமா வந்து சர்வதேச பிறையடிப்படையில் பெருநாள் கொண்டாடுபவர்கள் பாவம் செய்து விட்டார்கள் தவ்பா செய்ய வேண்டும் என்று இவர்கள் மீடியாக்களில் வந்து கூறவில்லை நுஜும் கணக்கில் பெருநாள் கொண்டாடுபவர்கள் நிச்சமாக வழிகேட்டில் இருக்கிறார்கள் ஆனால் இந்த ஜம்மியதுல் உலமா அவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் தவ்பா செய்ய வேண்டும் என்று இவர்கள் மீடியாக்களில் வந்து கூறவில்லை ஆனால் நேற்றுமாத்திரம் இவ்வாறு பேசியது என்பதும் ஒரு பின்னணியிலும் ஒரு அழுத்தத்திலும் நடைபெற்ற ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் எனவே அந்தப் பேச்சை மீண்டும் மீண்டும் போட்டு முஸ்லிம் சமுதாயத்தில் பிரச்சினைகளையும் குளப்பங்களையும் ஏற்படுத்தாமல் பெருநாள் முடிந்துவிட்டது ஒவ்வொருவரும் அவருடைய இஜ்திஹாதினுடைய அடிப்படையில் பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள் ஒருவர் இஸ்திஹாத் செய்து சரியான முடிவை எடுத்தால் அவருக்கு இரண்டு கூலிகள் ஒருவர் இஸ்திஹாத் செய்து தவறான முடிவை எடுத்தால் அவருக்கு ஒரு கூலி இருக்கிறது என்ற ஹதீஸின் அடிப்படையில் நாம் எல்லோரும் செயற்பட வேண்டும் நான் இங்கு சொன்ன செய்திகளை நிதானமாவும் நடுநிலையாகவும் உள்வாங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் எந்த நோக்கத்தில் பேசினேனோ அதை அந்த றப்பு அறிந்தவனாக இருக்கிறான் எனவே நம் அனைவருடைய உள்ளங்களிலும் அல்லாஹ் ஒரு நல்ல தெளிவைத் தரவேண்ம் என்று துஆச் செய்து முடிக்கிறேன்.

Hijri Committee

unread,
Aug 15, 2013, 4:42:40 PM8/15/13
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

கடந்த 08.08.2013 அன்று பிற்பகல் 01.00 மணி அளவில் அ.இ.ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆ.ஐ.ஆ றிஸ்வி முப்தி அவர்கள் வானொலி முஸ்லிம் சேவையில் விஷேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தியமை அனைவரும் அறிந்ததே!

இச்சொற்பொழிவில் பிறை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகளைகளையும், தாம் சந்திக்கும் சவால்களையும் விலாவாரியாக அவர் விளக்கியிருந்தார்.

அவர் ஆற்றிய உரையை நாம் துல்லியமாக செவிமடுத்தோம். அப்போது அவ்வுரையிலிருந்து பல நியாயமான சந்தேகங்களும், பலத்த ஆட்சேபனைகளும் எமக்குள் எழுந்தன.

பிறை விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா சபை எவ்வளவு அசட்டுத்தனமாகச் செயல்படுகின்றது எனும் பேருண்மையை இவரின் உரையிலிருந்தே நாம் தெரிந்து கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக முன்வைப்பதே இப்பிரசுரத்தின் நோக்கமாகும். சிந்தனை உள்ளவர்களுக்கு இப்பிரசுரம் பயன் அளிக்குமென நாம் நம்புகிறோம். மார்க்க விவகாரத்தில் அலட்சியப் போக்கைக் கடைபிடிப்போருக்கும், வீண், வெட்டுப் பேச்சுக்களில் ஈடுபடுவோருக்கும், யார் என்ன சொன்னாலும் தனது இயக்கம் சொல்வது மட்டுமே சரி என நம்பும் பிடிவாதக்காரர்களுக்கும் இப்பிரசுரம் பயன் அளிக்கமாட்டாது என்பதைக் கூறிக் கொண்டு விடயத்திற்குள் நுழைவோம்.

மௌலவி றிஸ்வி முப்தி முஸ்லிம் சேவையில் கராராக உரையாற்ற என்ன காரணம்?

கடந்த 07.08.2013 (புதன்கிழமை) அன்று அ.இ.ஜ.உ சபை ‘ரமழான் தலைப்பிறை பார்த்தல்’ எனும் சுலோகத்துடன் ஒரு அறிவிப்பை மீடியாக்களில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில்…
‘இன்று (07.08.2013) மஃரிப் தொழுகை நேரமாகிய 06.32 மணி முதல் புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையை பார்க்கும் படியும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 011-5234044, 011-2432110, 011-2434651, 071-4817380, ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அறியத்தருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிறது’

எனக் கூறப்பட்டிருந்தது. ஜம்இய்யதுல் உலமாவின் இந்த வேண்டுகேளுக்கு அமைய அன்றைய தினம் நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் பிறை பார்க்கத் துவங்கினர். வல்ல இறைவனின் பேரருளால் கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி, காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடங்களில் நம்பகமான சுமார் 20 முஸ்லிம்கள் பிறை கண்டனர்.

இத்தகவலை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு முறையாக அறிவித்தும் அ.இ.ஜ.உ சபை ‘இருபது நம்பகமானவர்களின் சாட்சியங்களை’ ஏற்க மறுத்ததால் கிண்ணியாவில் முஸ்லிம்கள் தனித்துவமாக பெருநாள் அனுஷ்டித்தனர்.

அ.இ.ஜ.உ சபையின் இந்த மட்டகரமான போக்கு, இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. பொதுவாழ்வில் உள்ள அதிகமானோர் ஜம்இய்யாவின் இப்போக்கை விமர்சிக்க ஆரம்பித்தனர். சமூக வலையத்தளங்களிலும், இணையதளங்களிலும் துறை சார்ந்தோர் தூற்ற ஆரம்பித்த போதுதான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி M.I.M. றிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு ‘தன்னிலை விளக்கம்’ கொடுக்க முன் வந்தார்.

45 நிமிடமும் 44 செக்கனும் அமையப் பெற்ற அவரது உரையை இங்கு நாம் ஒவ்வொன்றாக அலசுவோம்.

றிஸ்வி முப்தி கூறியவை: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு அனுப்பும் வேளையில் ‘முஆதே! அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியுடைய வழிகாட்டலும் இல்லாத நேரத்தில் எந்த முறையில் நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று கேட்ட போது,

ஹஸ்ரத் முஆத் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ் தந்த இந்த புத்தியை நான் பயன்படுத்தி தீர்மானம் எடுப்பேன்’ எனக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பெருதும் சந்தோஷப்பட்டார்கள்.

நமது பதில்: மௌலவி றிஸ்வி முப்தி கூறும் இந்த ஹதீஸ் உண்மையான ஹதீஸ் அல்ல. இச்செய்திக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் எச்சம்பந்தமுமில்லை. இதனை நாம் சுயமாகக் கூறவில்லை. நாமும், மௌலவி றிஸ்வி முப்தி அவர்களும் பெரிதும் போற்றும் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் ‘இச்செய்தியை ஆதாரபூர்வமான செய்தி அல்ல’ என்று தனது ‘தாரீஹுல் கபீர்’ எனும் நூலில் தகுந்த காரணத்துடன் விளக்குகின்றார்கள். (பார்க்க: தாரீஹுல் கபீர் 02ம் பாகம், 136ம் பக்கம்)

இன்னும் சொல்லப் போனால் இச்செய்தியில் ‘ஹாரித்’ எனும் மர்ம மனிதன் இடம் பெறுகிறான். இதனையும் நாம் சுயமாகக் கூறவில்லை. நாமும், மௌலவி றிஸ்வி முப்தி அவர்களும் பெரிதும் போற்றும் மற்றுமொரு இமாமான ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் தனது ‘தக்ரீப்’ எனும் நூலில் ‘ஹாரித் மர்ம மனிதன்’ எனக் கூறுகின்றார்கள். (பார்க்க: தக்ரீப் 01ம் பாகம், 147ம் பக்கம்)

இந்த ஹாரிதைப் பொருத்தமட்டில் அவர் எப்போது பிறந்தார்? எங்கு எப்படி வாழ்ந்தார்? எப்போது மறைந்தார்? எனும் எக்குறிப்புகளும் வரலாற்று நூற்களில் இல்லை. இவ்வாறான இனந்தெரியான நபர்கள், ஹதீஸ் என்ற பெயரில் எதையாவது அறிவித்தால் ஹதீஸ்கலை வல்லுனர்கள் அச்செய்தியை ஏற்க மாட்டார்கள் என்பது மத்ரஸாக்களில் ஓதும் மாணவர்கள் உட்பட அனைத்து ஆலிம்களும் அறிந்த விடயம்தான். அதன் காரணமாகத்தான் இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் இச்செய்தியின் இருதியில் ‘இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் முறிவுற்றதாகும்’ எனக் கூறி, இது உண்மையான ஹதீஸ் அல்ல என்பதை நிரூபித்தார்கள். (பார்க்க: ஸுனனுத் திர்மிதீ 1328)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! ஆலிம் பெருந்தகைகளே!

பல்லாயிரக்கணக்கான உலமாக்களுக்குத் தலைவராகத் திகழும் ஒரு முப்தி இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தியை நபியின் பெயரால் துணிந்து சொல்லலாமா? ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆவலுடன் செவியேற்றும் ஒரு வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றும் ஒரு தலைவருக்கு தான் சொல்லும் ஹதீஸ் உண்மையானதா? போலியானதா? என ஆய்வு செய்து கொள்ளக் கூட அவகாசம் இல்லையா? இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு இந்நாட்டு முஸ்லிம்களை எப்படி வழிநடாத்துவது? சிந்தியுங்கள்!

தனது உரையின் துவக்கத்திலேயே நபியின் பெயரால் தவறான செய்தியை சொல்லி விட்டு கடந்த 08.08.2013 (வியாழக்கிழமை) அன்று ஜம்இய்யதுல் உலமா பெருநாளை அனுஷ்டிக்காமைக்கான காரணத்தை விளக்குகிறார்.

றிஸ்வி முப்தி கூறியவை: 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06ம் திகதி, ரன்முத்து ஹோட்டலில் அ.இ.ஜ.உ சபை பிறை விவகாரத்தில் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியது. ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றிய தீர்மானங்கள்.

01. உள்நாட்டில் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.

02. பூமியிலிருந்தே தலைப்பிறையை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டும்.

03. ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது சாத்தியமற்றதென நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து, வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாகக் கொள்ளப்படும்.

04. பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ, பெருநாள் கொண்டாடுவதற்கோ,பிறரைத் தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயல்படும் அனுமதியைப் பெறுவர்.

(இத்தீர்மானங்களை வாசித்த பின் றிஸ்வி முப்தி அவர்கள் பின்வருமாறு விளக்கம் கூறினார்.)

‘இன்று (08.08.2013) வியாழக்கிழமை ஜம்இய்யதுல் உலமா பெருநாள் எடுக்காமைக்கு அடிப்படைக் காரணம் மூன்றாவது தீர்மானம்தான். அதாவது இன்று (08.08.2013) வியாழக்கிழமை இலங்கையில் வெற்றுக் கண்களுக்கு பிறை புலப்படுவது சாத்தியமற்றதென நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளார்கள். அதனால்தான் நாம் கிண்ணியா சாட்சியங்களை ஏற்க மறுத்துள்ளோம்.

நமது பதில்: இவர்களது மூன்றாவது தீர்மானத்திலிருந்து சில கேள்விகள் எழுந்துள்ளன.

கேள்வி 01: றிஸ்வி முப்தி சொல்வது போன்று கடந்த புதன்கிழமை (07.08.2013) அன்று வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படமாட்டாது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் கூறியிருந்தால் எதற்காக இந்நாட்டு மக்களை ஜம்இய்யதுல் உலமா ‘தலைப் பிறை’ பார்க்கச் சொன்னது? ஜம்இய்யதுல் உலமா சொன்னதன் காரணமாகத்தானே கிண்ணியா முஸ்லிம்கள் உட்பட அதிகமானோர் தலைப் பிறையைத் தேடினார்கள்? அப்படியென்றால் பிறையைப் பார்க்குமாறு நீங்களே மக்களைப் பணித்து விட்டு, மக்கள் பிறை பார்த்து சாட்சி கூறினால் அதனை ஏற்க மறுப்பீர்களா? இது சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

கேள்வி 02: றிஸ்வி முப்தி சொல்வது போன்று கடந்த புதன்கிழமை (07.08.2013) அன்று வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படமாட்டாது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் கூறியிருந்தால் அவர்கள் பற்றிய விபரங்களை ஏன் ஜம்இய்யதுல் உலமா இன்னும் வெளியிடவில்லை? யார் அந்த முஸ்லிம் விஞ்ஞானிகள்? 07.08.2013 அன்று இலங்கையில் வெற்றுக் கண்களுக்குப் பிறை தென்படமாட்டாது என எங்கு கூறியுள்ளார்கள்? அவர்கள் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் எங்கே? அது பற்றிய இணையதள இணைப்புக்கள் எங்கே?

கேள்வி 03: றிஸ்வி முப்தி சொல்வது போன்று நம்பகமான, முஸ்லிமான வானியல் அறிஞர்கள் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படாது என அறிவித்த நாளில், நம்பகமான எத்தனை முஸ்லிம்கள் பிறை கண்டதாக சாட்சி கூறினாலும் அதனை ஏற்க இயலாது எனத் தீர்மானம் எடுப்பதற்கு என்ன குர்ஆன் வசனம் என்ன ஹதீஸ் ஆதாரம்? (இந்நிலைப்பாட்டிற்கான ஆதாரத்தை தனது சொற்பொழிவை முடிக்கும் வரை முப்தி சொல்லவே இல்லை)

கேள்வி 04: ஒருவர் தனது வெற்றுக் கண்களால் பிறையைக் கண்டு விட்டு சாட்சியம் அளிப்பதானது நிஜமானது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இன்னுமொருவர், பிறையை நேரடியாகக் காணாமல் சில எடுகோள்களை வைத்து ‘இன்று பிறை தென்படமாட்டாது’ என கருத்துத் தெரிவிப்பது ஊகமானது என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நிஜமானதை ஊகத்தைக் கொண்டு மறுக்கலாமா? அதாவது நெற்றிக் கண்களால் பிறை கண்டவர்கள் கூறும் தகவலை, ஊகித்துக் கூறும் விஞ்ஞானிக்காக மறுக்கலாமா? இது அறிவுபூர்வமானதா?

கேள்வி 05: இதுவரை வானவியல் அறிஞர்கள் வானியலைப் பற்றிக் கூறிய அனைத்து எதிர் கூறல்களும் ஒன்று கூட பிசகாமல் துல்லியமாக உலகில் நடந்தேறியுள்ளன என்று ஜம்இய்யதுல் உலமா நற்சான்று அளிக்குமா?

கேள்வி 06: இன்றைய வானவியல் துறையில் முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் பங்களிப்பே அதிகம் உள்ளதை நாம் நன்கறிவோம். இந்நிலையில் ‘முஸ்லிமான வானியல் அறிஞர்கள்’ என ஜம்இய்யதுல் உலமா கருதுவர்களின் ஆய்வுத் தராதரம் என்ன? விபரம் சொல்வார்களா? ‘முஸ்லிமான வானியல் அறிஞர்கள்’ என ஜம்இய்யதுல் உலமா கூறும் அறிஞர்கள், மாற்று மத வானியல் அறிஞர்களைச் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களா? இல்லை சுயமாக ஆராய்ச்சி செய்பவர்களா? ஜம்இய்யதுல் உலமாவின் முஸ்லிம் வானியல் அறிஞர்கள், மாற்று மத வானியல் அறிஞர்களைச் சார்ந்து ஆய்வுத் தகவல்களை வெளியிட நேர்ந்தால் அப்போது நாம் என்ன செய்வது?

அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இப்பிரசுரத்தின் ஊடாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கும், முன்வைத்த விமர்சனங்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொருப்புடன் பதில் கூற வேண்டும். கூறுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். பிறை விவகாரத்தில் குளறுபடிகள் செய்வதென்பது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் பிறைக் குழுவினரின் பக்க சார்பு நடவடிக்கைகளை மக்களுக்கு நாம் விளக்கியுள்ளோம். இந்நாட்டில் ஜம்இய்யதுல் உலமா சபை, பிறை விவகாரத்தில் நடந்து கொண்ட கசப்பான அனுபவங்கள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றை மாத்திரம் குறிப்பிடுகிறோம்.

இலங்கையில் காணப்பட்ட (உள்நாட்டுப்பிறையை) அடிப்படையாகக் கொண்டு 2005ம் ஆண்டு மாத்திரம் இந்நாட்டில் மூன்று நாட்களாக மக்கள் பெரு நாள் கொண்டாடினர். 02.11.2005ல் உள்நாட்டுப் பிறையை சரிகண்ட ஒரு சாராரும், 03.11.2005ல் அதே உள்நாட்டுப் பிறையை சரிகண்ட பிரிதொரு சாராரும், 04.11.2005ல் உள்நாட்டுப் பிறையை சரிகண்ட மற்றுமொரு சாராரும் பெருநாளைக் கொண்டாடினர். ஆக: ஒரு பெருநாள் மூன்று தினங்களில் ஒரு கருத்துடைய சாராரால் கொண்டாடப்பட்டுள்ளது!

இம்முறை கிண்ணியாவில் பிறை கண்டு சாட்சியமளித்த நம்பகமான இருபது பிறை சாட்சியங்களை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மறுத்தமை எவ்வளவு பாரதூரமானதென்பதை அறிய பின்வரும் ஆதாரபூர்வமான நபிமொழிகளை கூர்ந்து கவனியுங்கள்!

நபிமொழி 01- மக்கள் எல்லோரும் பிறை பார்க்க முயன்றார்கள். நான் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘நான் பிறையை பார்த்தேன்’ என்று கூறினேன். அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்- 2342, தாரமி- 1691, இப்னு ஹிப்பான்- 3447, ஹாகிம்- 1541, பைஹகி- 2593)

நபிமொழி 02- ‘ரமழானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்க குழம்பினார்கள். (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராமவாசிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள். பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத்- 2339, அஹ்மத்- 18844)

நபிமொழி 03- ‘அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் முப்பதாம் நாள் சுபஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறி, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: தாரகுத்னி-04)

நபிமொழி 04- ‘மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள். அப்போது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத்- 1159, நஸாயீ- 1557, பைஹகீ- 7987, தாரகுத்னி- 14, அஹ்மத்- 20579)

வெளியீடு: தேசிய தவ்ஹீத் ஜமாஅத் 296, மீன்பிடி இலாகா வீதி புதிய காத்தான்குடி


2013/8/16 Hijri Committee <hijrico...@gmail.com>
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கிண்ணியா பிறை விவகாரம்

பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன, திருத்தம் வேண்டும்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் -
http://kattankudi.info/2013/08/13/6102#comment-763

சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து A4  தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய ’வியாழன் நோன்பா..?பெருநாளா..?’ என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.

எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக்கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும், தற்போது களத்தில் காணுகின்ற, கேட்கின்ற செய்திகள் ’எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை’ என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே,வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.

ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.

உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், ‘உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்’ என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். ’விசாரணை செய்ய என்ன இருக்கிறது?என்னைப்பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?’ என்றார்கள்.

பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.., இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.

மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப்பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.

ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?, நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!

29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.

சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?

சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா,கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா?அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.

இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட ’ஃபாஸிக்’ கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது,அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத்தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார்25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.

இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.

சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில ’பாஸிக்’கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள்,விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித்துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா? கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது?கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?

அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக,பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம்,சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.

பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

சுனாமியின் போது கிழக்கு மாகாணத்துக்கு உதவி செய்தோம் என்பதை இது போன்றதோர் சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்டுவது மேலும் அவர்களை மனம் நோகச் செய்திருக்கிறது. அந்த உதவிக்குக் கைம்மாறாக முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரமொன்றை விட்டுக்கொடுக்கக் கோருவது போலல்லவா இந்த சமயத்தில் அதனை நினைவுகூறுவது அமையும். இதனை அந்த மக்கள் என்ன மனநிலையுடன் பார்ப்பார்கள்? நாளை எங்களுக்கு உதவி செய்யும் நிலையை அவர்களால் அல்லாஹ் ஏற்படுத்தினால்…?!

மூன்றாவது தவறு: ரமழானில் முஸ்லிம் சமூகம் பெற்ற பயிற்சி நாவடக்கம், புலனடக்கம் அனைத்தும் ரமழான் முடிந்த கையோடு சின்னாபின்னமாகிவிட்டது. ஷைத்தான்கள் கட்டவிழ்த்து விடப்படுவது போல அடக்கிவைக்கப்பட்டிருந்த நாவுகளும், புலன்களும் அவிழ்த்துவிடப்பட்டன. பேஸ்புக்கும், இன்டர்நெட்டும்  இதற்குச் சான்றுகள். அதுமட்டுமல்ல வீதியில் கண்டவர்கள், கதைப்பவர்கள் அனைவரின் வாயிலும் இந்தக்கதை தவிர வேறு கதை இல்லை. கிரான்பாஸ் பிரச்சினை இடைநடுவே குறுக்கிட்டதால் பேச்சு கொஞ்சம் திசை திரும்பியதே தவிர இந்தப்பிரச்சினையின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்குச் சான்றாக அண்மையில் ஓதப்பட்ட குத்பாக்களைப் பார்க்கிறோம்.  ஏசாதீர்கள்,விமர்சிக்காதீர்கள், உலமாக்கள் கண்ணியமானவர்கள், நபிமார்களின் வாரிசுகள் என்றெல்லாம் உலமாக்களைப் புகழ்ந்து கூறும் குத்பாக்கள் திட்டமிடப்பட்டோ திட்டமிடப்படாமலோ நாடளாவிய ரீதியில் நடைபெறுவதைப் பார்க்கிறோம். சும்மா இருந்த வாய்களை திறந்துவிடாதிருந்தால் இத்தகைய குத்பாக்கள் ஓதவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா. திறந்துவிட்டதன் பின் திகைப்பதில் என்ன புண்ணியம் இருக்கிறது. இப்போது மூடவைப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எந்தளவுக்கெனில் சில இடங்களில் ஓதப்பட்ட குத்பாக்கள் தலைவர்களை தவறுகளே செய்யாத ’மஃஸும்’கள் போல் போற்றிப் புகழ்வதாக இருந்தன. இத்தகைய குத்பாக்கள் தலைவர்கள் மீது மேலும் வெறுப்பை அதிகரிக்கவே வழி செய்யும்.

கொழும்புப் பெரிய பள்ளிவாசலின் சுவர்களுக்கு மத்தியில் கதைத்து முடிக்க வேண்டிய பிறைக்கதையை சந்திவரை இழுத்து வந்து ஊரூராக நாரவைத்த பின் சந்திசிரிக்காமல் கதைகளை நிறுத்துவதென்பது சுலபமான காரியமா? இத்தகைய கதைகள் உருவாகாமல் பெரிய பள்ளிவாசலுடனேயே முடித்துக்கொள்ளத் தெரியாத தலைவர்களைத்தான் பிறை விவகாரம் சமூகத்திற்குக் காட்டிக் கொடுத்திருக்கின்றது.

மக்கள் பிறைக்கதையை எங்களுக்குத் தாருங்கள் நாங்கள் கதைக்கிறோம் என்று கேட்டு வாங்கவில்லை. அவர்களுக்கு அது அவசியமுமில்லை. எப்போது தலைவர்கள் சமூகத்தை சீண்டாமல் குழப்பாமல் வழிநடாத்தும் தீர்மானங்களை எடுத்தார்களோ அப்போது சமூகம் இந்தக் கதைகளை அளந்துகொண்டிருக்கவில்லை. இத்தகைய கதைகளை கதைப்பதற்கு கால்நீட்டி முதுகுசாய்த்து காத்திருக்கும் சமூகமல்ல இது. கதைக்க வைத்ததனால் தான் சமூகம் கதைக்கவும் விமர்சிக்கவும் துவங்கியது. இது பக்குவமாகக் கதைக்கும் சமூகமல்ல. தேவையில்லாத ஒரு கதைக்கு வழிசெய்துவிட்டால் சமூகம் கண், மண் தெரியாமல் பேச ஆரம்பித்துவிடுமென்பதை சமூகத்தின் தலைவர்கள் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும். சமூகம் வாயைத்திறந்துவிடாமல் பாதுகாக்கும் பக்குவமான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும்.

இவைதவிர வேறுபல தவறுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. பிறை தெரியாத நாளில் பிறை தீர்மானிக்கும் மாநாட்டைக் கூட்டி பிறைபார்க்குமாறு மக்களைக் கோரியமை. பிறை தீர்மானிக்கும் வரையறைகள் பற்றிய விளக்கங்களை சமூகத்துக்கு முன்கூட்டியே வழங்காமை. தவறுகளைத் தம்பக்கம் வைத்துக் கொண்டு சமூகத்தைத் தவ்பா செய்யுமாறு கூறியமை,கடுமையாக உணர்ச்சிவசப்பட்டமை.

ஏன் இவற்றையெல்லாம் நினைவு படுத்துகிறீர்கள்?, இவைகள் இப்போது பேச வேண்டிய விடயங்களா? நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க இருப்பதைப் பார்ப்போம். இதோ கிரான்பாஸில் இனவாதிகள் தாக்குதல் நடாத்துகிறார்கள். நாம் எங்களுக்குள் சர்ச்சை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டிய நேரமா இது என்று தற்போதைய சூழ்நிலையில் சிலர் கேட்கத்தான் செய்வார்கள்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஆபத்து அதிகமான பிரச்சினை வெளிப்பிரச்சினை அல்ல. உள்பிரச்சினை தான். உள்பிரச்சினைகளிலும் மிக ஆபத்தான பிரச்சினை சமூகத்தை சரியான திசையில் வழிநடாத்த முடியாத தீர்மானங்களை எடுக்கும் தலைவர்களது பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டுவிட்டால் ஏனைய பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்தைப்பொறுத்தவரை பாரதூரமானவைகள் அல்ல. சமூகத்தின் மீது உண்மையான கவலை, அன்பு கொண்டவர்கள் இந்த விடயத்தை ஒரு சிறிய பிர்ச்சினையாகக் கருதமாட்டார்கள். அவர்களுக்கு அதன் பாரதூரம் நன்கு புரியும். சமூகத்திற்கு எதை எப்போது சொல்லவேண்டும் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் வருகின்ற ஆத்திரத்தில் இன்று ஒன்றை சொல்லிவிட்டு நாளை அதை நியாயப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் சமூகம் குறிபார்த்துச் சுடும் பலகை போன்றதாகும். அம்பு குறிதவறி பிழையான இடத்தில் தைத்தாலும் சரி, சரியான இடத்தில் தைத்தாலும் சரி அவர்களுக்குப் பலகை பற்றிக் கவலை இல்லை. பிழையாகத்தைத்த அம்பை எடுத்து மீண்டும் குறிபார்த்து எறிந்து பலகுவதே அவர்களது வேலை.

சமூகத்தை இப்படி குறிபார்த்துச் சுடும் பலகையாக்க முடியாது. அதனை மார்க்கத்திலும் உலகத்திலும் சரியான வழிநடாத்தல்களுக்குட்படுத்துகின்ற சிறந்த தலைவர்கள் தான் இன்றைய அடிப்படைத் தேவையும் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சினையுமாகும். இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்கு தலைமை வழங்க அறிவிலும் நிதானத்திலும் சமூக உறவிலும் பரந்த மனப்பான்மையிலும் அரவணைப்பிலும் சிறப்பாக முன்னின்று உழைப்பதற்கு தகுதியான ஒருவராக நான் கண்ணியமிக்க யூசுஃப் முஃப்தி அவர்களைக் காண்கின்றேன். அவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன், இப்படி ஒரு மாற்றம் தேவை என்பதற்கு இன்னும் பல நியாயங்கள் இருக்கின்றன, அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. பிறை விவகாரத்துடன் தொடர்பான நியாயங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

நாங்கள் இயக்கங்களையும் மனிதர்களையும் மதிப்பவர்கள், எனினும் எமக்கு சிறந்த சமூகமும் சீரிய தலைமைத்துவமுமே முக்கியமாகும், அந்த வகையில் எழுதுகின்ற எழுத்தே இது. தனிப்பட்ட ரீதியில் ஒருவருடன் உள்ள வெறுப்பை வெளிப்படுத்துவற்காக எழுதப்பட்ட ஆக்கமல்ல இது.

அவ்வாறான ஷைத்தானிய உணர்வுகளை ஷைத்தான் தூண்டவே செய்வான், அதற்கு இடம் கொடாமல் உமர் (ரழி) அவர்களிடம் இருந்தது போன்ற ஓர் எண்ணத்தை வெளியிடவே இதனை எழுதியுள்ளேன். உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ’அபூ ஹுதைபாவின் அடிமை ஸாலிம் உயிரோடிருந்தால் நான் அவரை அடுத்த கலீபாவாக நியமித்திருப்பேன்’.

இந்தக் கூற்றினால் உஸ்மான் (ரழி), அலீ (ரழி), தல்ஹா (ரழி), அப்துர் ரஹ்மான் (ரழி) போன்ற பெரும் நபித்தோழர்கள் இழிவுபடுத்தப்படவில்லை. மாறாக பொருத்தமானவர் பற்றிய ஓர் அறிவிப்பே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் எனது முன்மொழிவை சமூகத்தின் முன்னால் வைக்கின்றேன். இது ஜமாஅதே இஸ்லாமியின் கருத்தல்ல, ஜமாஅதே இஸ்லாமியின் மஜ்லிஸுஸ் ஷூறா கலந்தாலோசித்து எடுத்த முடிவுமல்ல. சமூகம், சமூக அமைப்புகள் இயக்கங்கள் மனிதர்கள் நிலைவரங்கள் நடப்புக்கள் பற்றிய எனது தனிப்பட்ட அவதானத்திலிருந்து நான் பெற்ற முடிவாகும். என்னைப் பொருத்த மட்டில் இது ஒரு முடிவு, சமூகத்துக்கு இது ஓர் ஆலோசனை, இயக்கங்களுக்கு இது ஒரு பணிவான வேண்டுகோள். இங்கு பெயர் குறிப்பிட்ட குறிப்பிடாத தனி மனிதர்களிடம் இந்தக் கருத்தை முன்வைப்பதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். எனினும் எனது சமூகம் பற்றிய மனநிலையில் இப்படி ஒரு கருத்தை தற்போதைய நிலையில் என்னால் எழுதாமல் முன்வைக்காமல் இருக்க முடியாது, இது எனது உள்ளத்தின் இயல்பானதொரு வெளிப்பாடாகும். என்னையும் உங்களையும் அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன்.


வியாழன் பெருநாளா...? நோன்பா...?


வியாழன் பெருநாளா...? நோன்பா...? முக்கால் நாளாக முஸ்லிம் சமுகம் கேட்டு ஓய்ந்த கேள்வி இது. புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை விடையின்றித் தவித்த இக்கேள்விக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி முற்றுப்புள்ளி வைக்கிறார். அது ஒரு அருமையான விளக்கம். அந்த விளக்கத்தில் ஒரே ஒரு கேள்வியையும் ஒரு பத்வாவையும் தவிர அனைத்துக்கும் தெளிவான விடை இருந்தது. அவற்றை பின்னர் பார்போம்.

 

புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் முக்கால் நாள் முஸ்லிம் சமுகம் குட்டை குழம்பிய கதையாகியது. இதே போன்றதொரு பெருநாள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பும் சமூகத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தப் பெருநாள் இறுதியாக ஸஹர் நேரத்தில் அறிவிக்கப்பட்டது, திடுதிப்பாக வந்த அந்தப் பெருநாளை முஸ்லிம் சமூகம் வெகு 'விமர்சனத்துடன்' கொண்டாடியது. அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் இன்னும் எனது நினைவை விட்டு அகலவில்லை.

'ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்' என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக...

இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது, அதனை நடைமுறைப்படுத்துங்கள் என குழம்பிப் போயிருப்பவர்களுக்கு நான் கூற முற்பட்டால் இரவு முழுவதும் தொலைபேசி விவாதம் நடாத்த வேண்டி வந்திருக்கும். தற்செயலாக ஜம்இய்யதுல் உலமா விரும்பாத ஒரு வார்த்தை எனது நாவிலிருந்து  வெளிப்பட்டு விட்டாலோ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவை விமர்சிக்கின்றது என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விழைபவர்களும் இல்லாது போக மாட்டார்கள்.

எனவே குழம்பிய சமூகத்தை உரியவர்களே கையாளட்டும் என்ற நோக்கில் நான் தொலைபேசி  இயக்கத்தை நிறுத்தி விட்டேன். பேசுவதின் மூலம் வருகின்ற தொல்லைகளை விட அமைதியாக இருப்பது குறித்து வரும் விமர்சனம் பாதிப்புக் குறைந்தது என்ற கணிப்போடு...

இருப்பினும் பெருநாளா? நோன்பா? என்ற குழப்பத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு யார் காரணம்?

பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.

சமூகம் ஹலால் விடயத்தில் கட்டுப்பாடாக நடந்து கொண்டது யாவரும் அறிந்ததே. மிகச்சிலர் ஹலால் விடயத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை வெளிக்காட்டி சமூகத்தைப் பிளவுபடுத்த முயலவில்லை.

எனினும் பிறை விடயத்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்ததையே பார்க்கிறோம். அவ்வாறாயின் ஏன் அது நடந்தது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஹலால் இனவாதிகளால் வீசப்பட்ட ஒரு கணை. அதன் பாதிப்பை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனும் உணர்ந்திருந்தான். எனவே பொறுப்பாளர்கள் விவகாரத்தை கையாளுமட்டும் சமூகம் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது. அதுமட்டுமல்ல, ஹலால் விவகாரம் ஒரு நாளோடு முடிவடைவதல்ல. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் இருப்போடு தொடர்பானதொரு பாரிய விவகாரமாகும். அதில் சமூகத்தரப்பினர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கவோ தாம் நினைத்தவாறு செயற்படவோ முன்வரவில்லை.

பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா? பெருநாள் கொண்டாடுவது ஹராமா? என்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்' என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?

சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். மூன்று வகையில் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். அந்த மூன்றுக்கும் உரிய கவனத்தைக் கொடுக்காமல் கட்டுப்படும் தன்மையை சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மாற்றமாக, தலைமைத்துவமிருக்கிறது எனவே கட்டுப்படுங்கள். அந்தத் தலைமைத்துவம் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கட்டுப்படுவது கடமையே என்று கூறி சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை.

ஒரு சமூகம் பின்வரும் மூன்று நிலைகளில் ஒரு தலைமைக்குக் கட்டுப்படலாம்.

1.அதிகாரம்

2.பக்தி சிரத்தை

3.விளக்கம்

அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லை, யாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.

பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும், ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும். இதன் போது கட்டுப்படுபவர்கள் தலைவர் சரியா? பிழையா? என்று கூடப்பார்க்க மாட்டார்கள். எங்களது தலைவர் சொல்லிவிட்டார். எனவே அது சரியாகத்தானிருக்கும் என்பதே இத்தகையவர்களது நம்பிக்கை.

விளக்கம்: ஒன்றைக் குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் விளங்கிக்கட்டுப்படுவதை இது குறிக்கும். தெளிவானதொரு விளக்கம் கிடைக்கின்ற போது சமூகத்தில் இந்த வகையான கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. இத்தகைய கட்டுப்பாட்டையே தலைமைத்துவங்கள் பெரிதும் வரவேற்க வேண்டும். தமது அதிகாரத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது தம்மீது சந்தேகம் கொள்ளாமல் கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற வகையான கட்டுப்பாட்டையோ இஸ்லாமியத் தலைவர்கள் மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.

தெளிவான மார்க்க விளக்கத்தினூடாகவும் தர்க்கரீதியான விஞ்ஞான விளக்கங்களினூடாகவும் சமூகத்தை அறிவூட்டி கட்டுப்பட வைப்பதே கட்டுப்பாடுகளில் சிறந்தது. தலைவர் வஹி அறிவிக்கப்படும் ஒரு நபியாக இருந்தால் பக்தி சிரத்தையோடு அவருக்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறுமில்லை. தலைவர் ஆட்சியதிகாரத்தைக் கொண்டவராக இருந்தால்; அதிகாரத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டுமில்லாத நிலையில் தலைவர்கள் தெளிவான விளக்கங்களை மக்கள் முன் வைத்து சமூகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே சிறந்தது.

பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...

விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.

வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.

தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.

அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.

ஜம்இய்யதுல் உலமா தலைவரின் விளக்கம் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டேன். அது சமூகத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,

'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'

சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.

http://www.usthazhajjulakbar.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/170-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE


2013/8/16 Hijri Committee <hijrico...@gmail.com>
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
...

[Message clipped]  

Hijri Committee

unread,
Aug 15, 2013, 4:25:55 PM8/15/13
to hijri...@googlegroups.com
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.


2013/8/16 Hijri Committee <hijrico...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages