படி படியாக பிறைகள் பற்றி விளக்க ஒரு முயற்சி!!!!

4 views
Skip to first unread message

Sabeer Ali

unread,
Oct 24, 2013, 5:12:08 AM10/24/13
to HIJRI...@googlegroups.com
படி படியாக பிறைகள் பற்றி விளக்க ஒரு முயற்சி!!!!

விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு யா அல்லாஹ் உன்னிடத்தில் பாதுகாவல் தேடி கொண்டு,
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு முன்னாள், அல் குர்’ஆனின் 16:98, 2:128, 16:125, 20:114 ஆகிய வசனங்களை நாம் அனைவரும் நியாபகபடுத்தி கொள்வோம் இன் ஷா அல்லாஹ்.

ஒரு விஷயத்தில் விடை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அந்த ஆய்வு செய்ய அல்லாஹ்விடத்தில் அனுமதி இருக்கா, அந்த ஆய்விற்கான விடையை நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா என்பதை முதலில் பார்க்க வேண்டும். இதை முதலில் தெரிந்து கொண்டால், நம்முடைய நேரமும், பொருளாதாரமும் வீன்விரயம் ஆவதிலிருந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் இன் ஷா அல்லாஹ்.

இதை உதாரணத்தோடு சொல்வதென்றால்,
அல் குர்’ஆன் - 7:187
"யுகமுடிவு நேரம் எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

இங்கு கியாம நாள் எப்பொழுது வரும் என்று நம்மால் அறிந்து கொள்ளமுடியாது என்கிறான். இது போன்று கியாம நாளை பற்றி மட்டும் இல்லாமல் இன்னும் இது போன்ற சில விஷயங்களை கூறி, அதை நம்மால் ஆய்வு செய்து அறிந்துகொள்ள முடியாது என்று பல வசனங்களில் சொல்லி காண்பிக்கிறான்.

இங்கு நாம் எவ்வளவுதான் பல கோடி ருபாய் செலவு செய்து, பல ஆய்வாளர்களையும், கணினிகளையும் வைத்து பல ஆண்டுகள் செலவு செய்தாலும் அந்த கியாம நாள் வரும் வரை, அது எப்பொழுது வரும் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது, என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும், அதுதான் அல்லாஹ் மீது நாம் வைக்கின்ற உறுதியான நம்பிக்கை..! இது இல்லாமல் ஆய்வில் இறங்கினால் பொருளாதாரமும், நேரமும் தான் வீணாகுமே தவிர நமக்கு விடை கிடைக்காது.

அதே சமயத்தில் ஒரு விஷயத்தை ஆய்வு செய்வதற்கு அல்லாஹ்விடத்தில் அனுமதி இருக்கு, அதற்கான விடையை நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்று அல்லாஹ் கூறிவிட்டால், அதில் நம்முடைய பொருளாதாரத்தையும், அறிவையும், நேரத்தையும் செலவு செய்தால் அது வீண் விரயத்தில் போய் சேராது. ஒரு சில நேரத்தில் அதற்கான விடையை உடனே தெரிந்து கொள்ள முடியும், அல்லது ஒரு சில மாதங்களில் தெரிந்து கொள்ள முடியும், அல்லது ஒரு சில வருடங்களில் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் கண்டிப்பாக நம்மால் அதற்கான விடையை அறிந்து கொள்ள முடியும் இன் ஷா அல்லாஹ், ஏன் என்றால் இங்கு அல்லாஹ், நம்மால் முடியும் என்று சொல்லிவிட்டான்.

அதற்கு உதாரணமாக.,
அல் குர்’ஆன் - 55:33
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

இங்கு மேலே உள்ள குர்’ஆன் வசனத்தில் நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் விண்வெளி பயணம் செய்வது எப்படி என்று ஆய்வு செய்து அங்கு செல்வதற்கு நமக்கு அனுமதி இருக்கு மேலும் அது நம்மால் முடியும் என்பதை அறிந்து கொண்டோம்.

தற்பொழுது அதை ஆய்வு செய்து அதற்கான விடையும் கண்டுபிடித்து விண்வெளி பயணம் சாத்தியம் என்று சொல்லி அதை செய்தும் காண்பித்து விட்டார்கள்.

நாம் இப்போது தலைப்புக்கு போவோம். இங்கு நாம் பிறையின் வடிவங்களை ஆய்வு செய்து எதிர் வரும் மாதங்களுக்கு எத்தனை நாள் என்று தெரிந்து கொள்ள அனுமதி இருக்கா, இல்லையா என்பதையும், மேலும் அதற்கான விடையை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா, முடியாதா என்பதை பற்றியும் அல்லாஹ் நமக்கு என்ன சொல்கிறான் என்பதை பார்ப்போம்.

அல் குர்’ஆன் - 10:05
அவன்தான் சூரியனைச் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

அல் குர்’ஆன் - 17:12
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கிடச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.

அல் குர்’ஆன் - 32:05
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

அல் குர்’ஆன் - 22:47
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

அல் குர்’ஆன் - 06:96
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

இங்கு மேலே கூறப்பட்டுள்ள குர்’ஆன் வசனங்களை சற்று நிதானமாக படித்து இதன் மூலம், பிறைகளை பற்றி ஆய்வு செய்ய நமக்கு அனுமதி இறுக்கா? என்பதையும், அதன் மூலம் எதிர் வரும் வருடங்களை கணக்கிட்டு நம்மால் நாட்காட்டி அமைக்க முடியுமா என்பதை பற்றி சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.

தொடரும் இன் ஷா அல்லாஹ்…

இதை படித்து விட்டு, கருத்துக்கள் தெரிவிக்கவோ, கேள்விகள் கேட்கவோ விரும்பினால் நான் மேலே குறிபிட்டுள்ள விஷயத்திலிருந்து மட்டும் கேளுங்கள். மேலும் கேட்கும்போது அல் குர்’ஆன் 16:125 வசனத்தை நியாபகப்படுத்தி கொள்வோம்.

Reply all
Reply to author
Forward
0 new messages