மனித குல காலண்டர் (Tamil) Manida Kula Calendar

70 views
Skip to first unread message

HIJRI COMMITTEE OF INDIA HCI

unread,
Dec 8, 2011, 12:26:41 AM12/8/11
to hijriindia
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........

அன்பான சகோதர சகோதரிகளே!

இஸ்லாமிய சமுதாயம், மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத சமுதாயங்கள், சந்திரனை அடிப்படையாக கொண்டு தங்களுடைய நாட்காட்டியை அமைத்துக்கொள்வதில் பல குழப்பமான நிலைபாடுகளை எடுத்துள்ளதால், பல குழப்பங்கள் உலகில் ஏற்பட்டு வருவதை நாம் தற்போது பார்க்க முடிகின்றது. 

நாட்காட்டி என்றாலே அது கிறிஸ்தவர்களுடையது மட்டும் தான் அதை தவிர சரியான எந்த நாட்காட்டியும் உலகில் கிடையாது என்று மக்களெல்லாம் நினைத்து வாழ்ந்து வரும் நிலையையும் நாம் பார்த்து வருகின்றோம்.

இந்நிலையில் உலகிற்கு தெளிவான குழப்பமற்ற நாட்காட்டி முறையை அறிமுகப்படு்த்தியதே இஸ்லாம் தான், என்ற மறைந்து கிடந்த உண்மையை மீண்டும் சமுதாயத்திற்கு மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற இந்திய ஹிஜ்ரி கமிட்டி, இஸ்லாம் கூறும் நாட்காட்டி முறைகள் பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்ததின் விளைவாக ஒரு புத்தகத்தை வெளியிட்டது. 

இந்த புத்தகத்தை விரும்பு வெறுப்பு இல்லாமல், நீங்களும் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வு செய்து எங்களுக்கு அதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை மீண்டும் ஆய்வு செய்து நாம் உலகிற்கு தெளிவான ஒரு இஸ்லாமிய நாட்காட்டி முறையை சொல்லி கொடுக்க உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகளுக்கு பதில் அனுப்பும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளும்

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Manida_Kula_Calendar_V_01.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages