இன்று செவ்வாய்கிழமை (6.8.2013) சவூதி அரேபியா உச்சநீதிமன்றம் பிறையை தேடும்படி தன் நாட்டு மக்களுக்கு கட்டளையிட்டுள்ளது. சவூதி அரேபியா ஹிஜ்ரி 1434 ரமழான் மாதத்தை துவங்கியது புதன்கிழமையாகும் (10.7.2013). அவ்வடிப்படையில் இன்று செவ்வாய்கிழமை (6.8.2013) சவூதி அரேபியா மக்களுக்கு அதாவது 1434 ரமளானின் 28 வது நாளாகும்.
இவ்வறிப்பை கண்ட சர்வதேச சவூதி பிறை நிலைபாட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனென்றால், ஹிஜ்ரி கமிட்டியினர் செவ்வாய்கிழமை நோன்பு ஆரம்பித்ததை குறை கூறி திரிந்தவர்களுக்கு, தன்னுடைய எஜமான் சவூதி இவ்வாறு கட்டளையிட்டதை ஜீரணிக்கவே முடியாமல் திணறிவருகின்றனர்.
எது எப்படியோ பிறருடைய ஆய்வுகளை ஆய்வு செய்யாமலேயே தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களுக்கு இது போன்ற செய்திகள் ஒரு படிப்பினையாக அமையவேண்டும் என்பதே ஹிஜ்ரி கமிட்டியினரின் எதிர்பார்ப்பு.