பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட காலங்களில் உள்ள, வருடங்கள் மாதங்கள் நாட்கள் ஆகியவற்றை நாம் துல்லியமாக கணக்கிட்டு வருடங்களையும், மாதங்களையும், முக்கிய நாட்களையும் முன்கூட்டியே அறிந்து இவ்வுலகில், துல்லியமாக செயல்பட அல்குர்ஆனிலும், தூதருடைய நடைமுறையிலும் அடுக்கடுக்கான பல ஆதாரங்களை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான் என்பதை நாம் நமது பிரச்சாரங்கள் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
நாட்காட்டி விஷயத்தில், அல்லாஹ்வின் அத்தாட்சிகளை சிந்தித்து அறிந்த காலத்திலிருந்து, நாம் அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை கணக்கிட்டு பின்பற்றி வருகின்றோம். நாம் பின்பற்றிய சத்தியத்தை பிறரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக அதைப்பற்றிய தெளிவை மக்கள் மன்றத்தில் நம்மால் முடிந்த அளவு செய்து பிரச்சாரமும் செய்து வருகின்றோம்.
ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக வருட நாட்காட்டியை பல வருடங்களாக அச்சிட்டு வெளியிட்டு வருகின்றோம். அந்த அடிப்படையில் 3000 வருடத்திற்கான மென்பொருளையும் உருவாக்கி மக்கள் மன்றத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நமது இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம்.
தற்போது மென்பொருளை உபயோகிக்க தெரியாத மக்களுக்காக ஹிஜ்ரி 1429 ஆவது வருடம் முதல் ஹிஜ்ரி 1440 ஆவது வருடம் வரை அச்செடுத்துக் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இம்மடலுடன் கோப்புகளை இணைத்துள்ளோம்.
இந்த கோப்புகளை நமது இணையத்தளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையிலும் பதிவேற்றம் செய்யவும் இருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ்.
அல்லாஹ்வின் சந்திர நாட்காட்டியை பின்பற்றி வாழும் சமுதாயமாக நம் அனைவரையும் ஆக்கிவைப்பானாக.
இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி.
--