தகவலுக்கு நன்றி: http://www.moonsighting.com/1434muh.html
எனவே சங்கமம் நிகழும் நாளான சந்திர மாதத்தின் கடைசி நாளில் மட்டுமே சந்திரனை புறக்கண்களால் பார்க்க முடியாது. முதல் நாளில் புறக்கண்களால் பிறையை பார்க்க முடியும் என ஹிஜ்ரி கமிட்டி கூறி வரும் சத்தியத்தை அல்லாஹ்வும் உண்மைப்படுத்திவிட்டான். சுப்ஹானல்லாஹ்.
எனவே சங்கமம் நிகழும் போது சர்வதேச கோட்டில் புதன்கிழமை 14 ஆம் தேதி காலை பத்துமணியாக இருந்தவர்களுக்கும் செவ்வாய்கிழமை (13.11.2012) அன்று பிறை தெரியாத நாளாகவே இருந்தது. எனவே அவர்களும் புதன்கிழமை ஃபஜ்ர் ஹிஜ்ரி 1434 வருடத்தின் முதல் நாளை ஆரம்பித்தே ஆகவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. அதைத்தான் அல்லாஹ் 2:189 வசனத்தில் கீழ்கண்டவாறு தெளிவுபடுத்துகின்றான்.
பிறைகள் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். " அவை மக்களுக்கும், ஹஜ்ஜிற்கும் தேதிகளை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன" என (நபியே) நீர் கூறும். வசிக்கும் இடங்களுக்குள் அவற்றின் பின்புறமாக வருவதில் புண்ணியமில்லை. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே புண்ணியவான். எனவே, வசிக்கும் இடங்களுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்! இன்னும் நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 2:189)
மேலும் நாம் கூறியதாக ஒரு செய்தியையும் அந்த பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
// சர்வதேச தேதி கோட்டில் ஃபஜ்ர் முதல் தேதி மாறுகிறது என்பதை சொன்னவர்கள் இப்போழுது சர்வதேச தேதி கோட்டில் உள்ளவர்கள் ஃபஜ்ர் கடந்து சுமார் 5 மணி நேரம் ஆன பிறகு அவர்கள் தேதியும் நாளையும் மாற்ற வேண்டும் என கூறுகின்றார்கள். இது எந்த வகையில் நியாமாக இருக்கும். சிந்திக்கவும் // எஸ். கமாலுத்தின் மதனியின் அல்ஜன்னத் மாதஇதழ் மின்அஞ்சல் முகவரியிலிருந்து.
மேலே குறிப்பிட்ட செய்தியை, எங்கே யாருக்கு பதில் அளிக்கும் போது ஹிஜ்ரி கமிட்டி கூறியது என்பதை ஆதாரத்துடன் எடுத்து இங்கே பதிந்தால், அதன் பின் நம்முடைய பதிலை பதிவோம் இன்ஷாஅல்லாஹ்.
அதே போல் 18:00 UT உலக நேரத்திற்கு பின் சங்கமம் (நியூ மூன்) நிகழ்ந்தால் நமது ஹிஜ்ரி கமிட்டியின் கணக்கு தவறு என்றும் அதற்கு முன் உலகில் சங்கமம் நிகழ்ந்தால் சரியென்றும் கூறுபவர்கள், அவர்கள் நாட்காட்டியை எவ்வாறு கணக்கிட்டு வருகின்றார்கள் என்பதை இங்கே பதிவிட்டு அவர்களுடைய பிறை நிலைபாட்டையும் மக்கள் மன்றத்தில் விளக்கினால், மேற்கொண்டு நமது வாதப்பிரதிவாதங்கள் இங்கே தொடரும் இன்ஷாஅல்லாஹ்.
இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி
3 முஹர்ரம் 1434 (வெள்ளிக்கிழமை )