" துஆ "

18 views
Skip to first unread message

ode...@yahoo.com

unread,
Apr 29, 2011, 11:40:12 PM4/29/11
to தமிழ் இஸ்லாம்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது
கீழ்க்காணும்
துஆவைக் கூறுவார்கள்.

ஆதாரம்: நஸயீ 5391, 5444


பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல
அவ்
அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்:


அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்,
வழி
தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்,
மூடனாகாமலும், (பிறரை)
மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


சபையை முடிக்கும் போது


ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில்
நடந்த
தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)
கூறினார்கள்.


ஆதாரம்: திர்மிதீ 3355


ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா
அன்(த்)த
அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.

இதன் பொருள் :


இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்
தவிர
யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.

ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ
அதூபு(இ)
இலை(க்)க.

இதன் பொருள் வருமாறு:

இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத்
தேடுகிறேன்.
உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம்: நஸயீ 1327


பள்ளிவாசலுக்குள் நுழையும் போது


அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :


இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம்
1165


பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க


இதன் பொருள் :

இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1165


சாப்பிடும் போதும், பருகும் போதும்


பி(இ)ஸ்மில்லாஹ்


அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5376, 5378


பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்


சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்


பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி


எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: திர்மிதீ 1781


சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்


அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர
மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா

இதன் பொருள் :


தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது
அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல.
நன்றி மறக்கப்படுவதுமன்று. அது
தேவையற்றதுமல்ல.

ஆதாரம்: புகாரி 5858


அல்லது

அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா
மக்பூ(எ)ர்


இதன் பொருள் :


உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள்
மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.

ஆதாரம்: புகாரி 5459


அல்லது


அல்ஹம்து லில்லாஹ்


என்று கூறலாம்.

ஆதாரம்: முஸ்லிம் 4915


உணவளித்தவருக்காக


அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும்
வர்ஹம்ஹும்.

இதன் பொருள் :


இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்)
செய்வாயாக.
இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்


பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா
ரஸக்தனா

இதன் பொருள் :


அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக!
எங்களுக்கு
நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396


அல்லது


பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ்
ஷை(த்)தான
மாரஸக்(த்)தனா

இதன் பொருள் :


அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக.
எனக்கு நீ
வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

ஆதாரம்: புகாரி 5165, 3283


எல்லா நிலையிலும் கூற வேண்டியவை


பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும்
போதும்,
ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்

பி(இ)ஸ்மில்லாஹ்


எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3280, 5623


கோபம் ஏற்படும் போது


அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் :


ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 3282


அல்லது


அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.


என்று கூறலாம்.

ஆதாரம்: புகாரி 6115


தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்


அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.


எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 3276 ...


Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages