அல்லாஹ்விடமே நேரடியாகக் கேளுங்கள்!
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்
நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால்
அழைப்பவரின் அழைப் பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி
பெறுவதற் காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 2:186)
உங்களுடைய இறைவன் கூறுகிறான். நீங்கள் என்னையே அழைத்துப்
பிரார்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்த்த னைக்குப் பதிலளிப்பேன்.
நிச்சயமாக என்னை வணங்கு வதை விட்டும் பெருமையடிப்பவர்கள் இழிவடைந்தவர்
களாய் நரகில்புகுவார்கள். (அல்குர்ஆன் 40:60)
அல்லாஹ்வைத் தவிர பிறரிடம் கையேந்தி
விடாதீர்கள்!
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து,
அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக
ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை)
எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிக்க
குறைவேயாகும். (அல்குர்ஆன் 27:62)
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி
செய்யவோ, தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவோ, சக்தி
பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197)
ஒருங்கிணைந்த மனதுடன், பணிவாகப் பிரார்த்தியுங்கள்!
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும்
பிரார்த்தனை செய்யுங்கள் -வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன்
நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:55)
பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில்
குழப்பம் உண்டாக்காதீர்கள் அச்சத்தோடும் ஆசை யோடும் அவனை
பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு
மிகசமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்துவிடாதீர்கள்!
தனக்குத் தானே அநீதம் இழைத்துக் கொண்ட எனது அடியார்களே! நீங்கள்
அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரு போதும் நிராசை ஆகிவிட வேண்டாம்.
நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவனாக உள்ளான் என்று
(நபியே) நீர் கூறுவீராக!. (அல்குர்ஆன் 39:53)
"வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை
கொள்வர்" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார். (அல்குர்ஆன் 15:56)
பிரார்த்தனையும் ஒரு வணக்கமே!
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும்.
என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள்
இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி,
நூல்:அபூதாவூத், திர்மிதி)
முறையான பிரார்த்தனை ஒருபோதும் வீண்போகாது!
நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கோடை யாளன். அவனுடைய
அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை
வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்:
ஸல்மான் அல்ஃபாரிஸி-ரலி, நூல்: அபூதாவூத், திர்மிதி)
ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப்
பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும்
ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.
1) அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான்.
2) மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான்.
3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்
என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான்
என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்:
ஹாகிம்)
பாவமானதைக் கேட்காதீர்கள்!
இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும்
அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும்
உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்:
அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல்: ஹாகிம்)
நிதானமாகப் பிரார்த்தியுங்கள்!
உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள்
பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக்
கொள்ளும் நேரமாக அது இருப்பின் - உங்களுக்கே எதிரான- அந்தப்
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் -ரலி, நூல் : முஸ்லிம்)
வலியுறுத்திக் கேளுங்கள்!
உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக்
கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்கவேண்டாம். ஏனெனில்
அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர் : அனஸ் -ரலி,
நூல் : புகாரீ)
அவசரப்படாதீர்கள்!
நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன்
அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள்
பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி,
நூல்: புகாரீ, முஸ்லிம்)
by
Abdul
hakkeem .R
Blog
: The
Message Of ISLAM
IF YOU
WANT TO FOLLOW THIS BLOG : Click Here
Google
group : Tamil ISLAM
IF YOU
WANT TO SUBSCRIBE THIS GROUP : Click Here