Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

தாவூத் நபி வரலாறு

3,538 views
Skip to first unread message

hakeem

unread,
Mar 9, 2011, 3:40:01 PM3/9/11
to தமிழ் இஸ்லாம்

தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை)

(கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் )

4:163 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும்
நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும்,
இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும்
(அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும்,
யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்.
இன்னும் தாவூதுக்கு ஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு
அறிவான் நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம்
மேன்மையாக்கியிருக்றோம் இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்)
கொடுத்தோம்.

தாவூத் நபிக்கு இனிமையான குரல் ..

புஹாரி எண் 5048

அபூ மூஸா(ரலி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ
மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த
(சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என
என்னிடம் கூறினார்கள்.

தாவூத் நபிக்கு இறைவேதத்தை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது.

புஹாரி எண் 3417

நபி(ஸல்) அவர்கள் கூறினார்
தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது
லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார்
செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும்
வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார்.
தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.
அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து
இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

புஹாரி எண் 4713

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள்
தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்)
சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இப்ராஹிம் இஷ்காக் யாகுப் வழிதோன்றல்

6:84 நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்)
கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில்செலுத்தினோம்
இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது,
ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன்ஆகியோரையும் நேர்வழியில்
செலுத்தினோம் இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

புகாரி எண்:3421

முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
நான், 'ஸாத்' (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா
செய்வீர்களா?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது
அவர்கள், 'மேலும், இப்ராஹீமுடைய வழித் தோன்றல்களான தாவூத், சுலைமான்,
அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு...
(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள்.
அவர்களின் வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்" என்னும் (திருக்குர்ஆன்
06:84-90) திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, 'உங்கள் நபி(ஸல்)
அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படி
கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்" என்று கூறினார்கள்.

புஹாரி எண் 4807

அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்
நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், 'ஸாத்' அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய)
சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் இப்னு
அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா
செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என்று கேட்டேன். அதற்கு அன்னார்,
'மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்' என்று
தொடங்கி, '(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால்
நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும்
பின்பற்றுங்கள்...' என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய)
வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, 'எவரைப்
பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ
அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபி
தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் ('ஸாத்'
அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜாப்' எனும்
சொல்லுக்கு 'வியப்புக்குரியது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கித்து' எனும்
சொல்லுக்கு (பொதுவாக) 'ஏடு' என்று பொருள். ஆனால், இங்கு
'நற்செயல்களின் பதிவேடு' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்ஸத்' எனும்
சொல்லுக்கு 'ஆணவம் கொண்டவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்மில்லத்துல்
ஆம்ரா' (வேறு சமுதாயம்) எனும் சொல், குறையுயர் சமுதாயத்தைக்
குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'இக்திலாக்' எனும் சொல்லுக்குப் 'பொய்'
என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஸ்பாப்' எனும்
சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுன்த்' (படையினர்)
எனும் சொல் குறையுயரைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலாயிகல்
அஹ்ஸாப்' (அந்தக் கூட்டத்தினர்) என்பது முந்தைய தலைமுறையினரைக்
குறிக்கும்.

(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபவாக்' (தாமதித்தல்)
எனும் சொல்லுக்கு '(உலகின் பால்) திரும்புதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்த கஃத்னாஹும்
சிக்ரிய்யா' (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன்
கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ராப்' எனும்
சொல்லுக்கு 'வயதொத்தவர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்அய்த்' எனும்
சொல்லுக்கு 'வணக்க வழிபாட்டில் செயலாற்றல்' என்றும், 'அல் அப்ஸார்'
எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை' என்றும்
பொருள்.

மூஸா நபிக்கு பிறகு இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்

2:246 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர்
கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம் "நாங்கள் அல்லாஹ்வின்பாதையில்
போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர்,
"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல்
இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார் அதற்கவர்கள் "எங்கள் மக்களையும்,
எங்கள் வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின்
பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக்
கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ
அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக்காட்டித்
திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.

2:247 அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு
அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்அதற்கு) அவர்கள், "எங்கள்
மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட
நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும்
கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள் அதற்கவர், "நிச்சயமாகஅல்லாஹ்
உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும்,
அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்குஅதிகமாக வழங்கியுள்ளான் -
அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும்
அல்லாஹ் விசாலமானகொடையுடைய)வன் (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று
கூறினார்.

2:248 இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய
அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத்பேழை) வரும் அதில்
உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை)
இருக்கும் இன்னும், மூஸாவின்சந்ததியினரும் ஹாரூனின் சந்ததியினரும்
விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள்
(வானவர்கள்) சுமந்துவருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக
இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார். (

2:249 பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் "நிச்சயமாக அல்லாஹ்
உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்யார் அதிலிருந்து (நீர்)
அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர் தவிர, ஒரு சிறங்கைத்
தண்ணீர் தவிர யார் அதில் நின்றும்அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக
அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத்
தவிரபெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர்
தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு
சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன்
படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்குவலுவில்லை" என்று
கூறிவிட்டனர் ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி
கொண்டிருந்தோர், "எத்தனையோசிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை
அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும்
அல்லாஹ்பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள். ( (

2:250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க)
அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத்
தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள்
மீது (நாங்கள்வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை
செய்த)னர்.

தாவூத் நபி ஜாலுதை கொன்றார்

2:251 இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு
ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள். தாவூது ஜாலூத்தைக்கொன்றார். அல்லாஹ்
(தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான். தான்
விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக்கற்பித்தான் (இவ்விதமாக)அல்லாஹ்
மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்)
மற்றொருகூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.)
ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீதுபெருங்கருணையுடையோனாக
இருக்கிறான்.

தாவூத் நபியின் மகன் சுலைமான்

38:30 இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம் சிறப்பான
(நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.

27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார் "மனிதர்களே!
பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும்,
நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்
நிச்சயமாக இதுதெளிவான அருள் கொடையாகும்.

34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும்,
(தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்தமுடியா பெரும்
பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி
செய்யுங்கள். மேலும் என் அடியார்களில்நின்றும் நன்றி செலுத்துவோர்
சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).

அல்லாஹ் இரும்பை வசப்படுத்தி கொடுத்தான்

21:80 இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான
கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தோம் - எனவே
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?

34:11 "வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை
பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர்
செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்" (என்றும் சொன்னோம்.)

34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை
வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை)
நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்
என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

அல்லாஹ் மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்தி கொடுத்தான்

34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை
வழங்கினோம் "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை)
நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்
என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

38:18 நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் மாலை
வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன்சேர்ந்து (நம்மைத் துதித்து)
தஸ்பீஹு செய்தன.

38:19 மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்)
அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.

21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க
வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும்
கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும்
வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன -
இவற்றை யெல்லாம் நாமே செய்தோம். ( (

ஆட்சியை கொடுத்தான்

38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும்
அவருக்கு ஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.

அறிவையும் சொல்லாற்றலையும் கொடுத்தான்

38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும்
அவருக்கு ஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.

21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க
வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும்
கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும்
வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன -
இவற்றை யெல்லாம் நாமே செய்தோம். ( (

27:15 தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக்
கொடுத்தோம் அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும்அல்லாஹ்வுக்கே உரியது
அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை
மேன்மையாக்கினான்" என்றுகூறினார்கள்.

தாவூத் நபியின் வீரம்

புஹாரி எண் 1979

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?' என்று
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். நபி(ஸல்)
அவர்கள், 'அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே
போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்!
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்!
(மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு
நோற்பதாகும்!" என்றார்கள். அதற்கு 'நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு)
சக்தி உள்ளவன்" என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால்
தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள்
நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும்
மாட்டார்கள்!" என்று கூறினார்கள்.

புஹாரி எண் 3419

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் இரவில் நின்று
வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே"
என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உண்மைதான்!)" என்றேன். அவர்கள், 'நீங்கள்
அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து
விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு
நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்... அல்லது காலமெல்லாம்
நோன்பு நோற்றதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நான், 'எனக்கு (இதை
வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்" என்று
சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், தாவூத்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்
நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில்
பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்" என்று
கூறினார்கள்.

புஹாரி எண் 1977

புஹாரி எண் 3419

தாவுத் நபி உழைத்து உண்டார்

புஹாரி எண் 2072

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண
முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே
இருந்தனர்."
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 2073

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"
"தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3417

புஹாரி எண் 4713

தாவூத் நபியின் தொழுகை

புஹாரி எண் 1131

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின்
தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை)
அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு
இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி
நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள்
நோன்பைவிட்டு விடுவார்கள்'.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3420

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு
நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம்
உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.
அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று
கூறினார்கள்.

தாவூது நபியின் நோன்பு

புகாரி எண்:1978

’ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!’ என்று நபி(ஸல்)
அவர்கள் என்னிடம் கூறினார்கள். இதைவிட நான் அதிகம்சக்தி பெற்றுள்ளேன்
என்று கூறியபோது முடிவாக ஒரு நாள் நோன்பு நோற்று ஒருநாள் விட்டு
விடுவீராக, என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு
அம்ர்(ரலி) )


புகாரி எண்:1979
மற்றொரு ஹதீஸில் ‘தாவூது நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாளை
விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்’

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடவேமாட்டார்கள் எனச் சொல்லுமளவிற்கு அதிகமாக
நோன்பும் வைத்துள்ளார்கள். அதைப்போல நோன்புநோற்க மாட்டார்கள் என்று
கூறுமளவுக்கு நோன்பை விட்டுமிருக்கிறார்கள். என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்
அறிவிக்கும் ஹதீஸ்புகாரி.

புஹாரி எண் 1974

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'உம்முடைய விருந்தினருக்குச் செய்ய
வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய
கடமைகள் உமக்கு இருக்கின்றன!" என்றார்கள். 'தாவூத் நபி(ஸல்) அவர்களின்
நோன்பு எவ்வாறு இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
'வருடத்தில் பாதி நாள்கள்!" என்றார்கள்.

புஹாரி எண் 1975

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு
நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!" என்று
கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள்
'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில
நாள்கள்)விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்!
ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம்
கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச்
செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய
வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள்
நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர்
செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து
மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு
நோற்றதாக அமையும்!" என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்
கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர்
அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!" என்று கூறினேன். அதற்கு
நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர்
நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!" என்றார்கள். தாவூத்
நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!"
என்றார்கள்.

புஹாரி எண் 1977
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்)
அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க
வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள்
என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா
என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு
நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே,
நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று
வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய
வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய
குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!"
என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!" என்று கூறினேன்.
நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!" என்றார்கள்.
'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள்
நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில்
எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த
(வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!"
என்றேன்.

புஹாரி எண் 1980

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள்
என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை
எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும்
அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. 'ஒவ்வொரு மாதமும் மூன்று
நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (இதை விட அதிகமாக நோற்க
அனுமதியுங்கள்!)" என்றேன். அவர்கள் 'ஐந்து நாள்கள்!" என்றார்கள்.
'இறைத்தூதர் அவர்களே!" என்றேன். 'ஒன்பது நாள்கள்!" என்றேன். ஒன்பது
நாள்கள்!" என்றார்கள். பிறகு, 'தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பும்
இல்லை; அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள்
நோன்பு நோற்பீராக!" என்றார்கள்.

புஹாரி எண் 1131

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின்
தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை)
அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு
இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி
நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள்
நோன்பைவிட்டு விடுவார்கள்'.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3418

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
"அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று
இரவில் நின்று வணங்குவேன்" என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்)
அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம்,
'நீங்கள் தான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில்
நோன்பு நோற்று இரவில் நின்று கேட்டார்கள். 'நான் அப்படிச் சொல்லத்
தான் செய்தேன்" என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'உங்களால்
அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை
விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள்.
மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு
அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம்
முழுவதும் நோன்பு வைத்ததாகும்" என்று கூறினார்கள். நான், 'இதை விட அதிக
நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!" என்று
கூறினேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று
இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். நான், 'அதை
விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று
சொன்னேன். அதற்கு அவர்கள், 'அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று
ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின்
நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். நான், 'அதை
விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!" என்று
சொன்னேன். அதற்கு அவர்கள், 'அதை விடச் சிறந்ததேயில்லை" என்று
கூறினார்கள்.

புஹாரி எண் 3419

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீங்கள் இரவில் நின்று
வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே"
என்று கேட்டார்கள். நான், 'ஆம் (உண்மைதான்!)" என்றேன். அவர்கள், 'நீங்கள்
அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து
விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு
நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்... அல்லது காலமெல்லாம்
நோன்பு நோற்றதைப் போன்றதாகும்" என்று கூறினார்கள். நான், 'எனக்கு (இதை
வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்" என்று
சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், தாவூத்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்
நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில்
பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்" என்று
கூறினார்கள்.

புஹாரி எண் 3420

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு
நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம்
உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.
அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று
கூறினார்கள்.

தாவூத் நபி அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பதற்குரிய ஆதார ஹதீஸ் எண்கள் :

புஹாரி : 1976, 1979, 5052, 6134, 6277,

தாவூத் நபி பாதி இரவு தூங்குவார்கள்

புஹாரி எண் 1131

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின்
தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை)
அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு
இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி
நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள்
நோன்பைவிட்டு விடுவார்கள்'.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3420

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு
நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம்
உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.
அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று
கூறினார்கள்.

மூன்றில் ஒரு பங்கு எழுந்து நின்று தொழுவார்கள்

புஹாரி எண் 1131

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின்
தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை)
அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு
இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி
நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள்
நோன்பைவிட்டு விடுவார்கள்'.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

புஹாரி எண் 3420

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு
நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான
தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம்
உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.
அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்" என்று
கூறினார்கள்.

தாவூத் நபியின் தீர்ப்பு

38:26 (நாம் அவரிடம் கூறினோம்) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில்
பின்தோன்றலாக ஆக்கினோம் ஆகவே மனிதர்களிடையேசத்தியத்தைக் கொண்டு
(நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும் அன்றியும், அனோ இச்சையைப் பின்
பற்றாதீர் (ஏனெனில் அது) உம்மைஅல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து
விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ,
அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக
மிகக்கொடிய வேதனையுண்டு.

21:78 இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை
நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள்இரவில் இறங்கி மேய்ந்த போது,
அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை
நாம் கவனித்துக்கொண்டிருந்தோம்.

21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க
வைத்தோம் மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும்
கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும்
வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன -
இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

38:21 அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது
இறைவணக்கத்திற்காக அதை;திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி -

38:22 தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார்
அப்போது அவர்கள் கூறினார்கள் "பயப்படாதீர்! நாங்களிருவரும்வழக்காளிகள்
எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்
எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்)
தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!"

38:23 (அவர்களில் ஒருவர் கூறினார்) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்
இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர்
ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச்
சொல்லி, வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்."

38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து
விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து
விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர்
சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள்
செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள்
"நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய
இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.

38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும்,
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய
இருப்பிடமும் உண்டு.

புகாரி எண்: 3427

மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தாவூத் - அலை - அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர்.
அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில்
ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், 'உன்
மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூற, மற்றொருத்தி அவளிடம்,
'உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது" என்று கூறினாள். எனவே, இருவரும்
(தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக்
கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத்
தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு)
அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்)
சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள்,
'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே
(மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு)
விடுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது இளையவள், 'அவ்வாறு
செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்"
என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் 'அந்தக்
குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு)
'சிக்கீன்' என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா
என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்" என்று
கூறுகிறார்கள்

இரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும்
குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய்
ஒன்று! தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒரு குழந்தையை அது
கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக்
காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும்
சற்று நேரத்தில் அதன் உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப்
பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை
ஓநாய் தூக்கிச் சென்று விட்டதே!’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள்.
அவளோ, ‘என்ன கொடுமை இது? உன் குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது
என் பிள்ளையல்லவா?’ என்று குமுறினாள்.

விவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள்
வழக்கை விசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக
இருந்தவருக்கே அந்த குழந்தை சொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள்.
அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண் வெளியே வந்து அங்கே
நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டாள்.

வழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு
விளங்கிக் கொண்ட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக்
கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே
தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் இக்குழந்தையை இரு
கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களே
பார்க்கலாம்!

தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம்
வைத்திருந்த பெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே
சொன்னாள், ‘அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக! வேண்டாம், தயவு செய்து
அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின் பிள்ளைதான். அதை அவளிடமே
கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான் அலைஹி வஸல்லம்
அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்!’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)

தாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம்! தம்
கண் முன்னால் தான் ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று
சொன்னவுடனேயே உண்மைத்தாய் பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக
குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள். இதைத்தான் நபி
ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.

நீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள்
தேவைப்படுகின்றன. இல்லையெனில் நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது
அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையான ஆதாரங்களின்
அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களோ
அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி
நுட்பத்தினாலும் பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை
வழங்கி விட்டார்கள்.

ஹதீஸ் ஆதார நூல்கள் :

சுனன் நசையி 5307, 5308, 5309

முஸ்னத் அஹ்மத் 7931, 8124


தாவூத் நபியின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்தான்

38:24 (அதற்கு தாவூது) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து
விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து
விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர்
சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள்
செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே" என்று கூறினார் இதற்குள்
"நிச்சயமாக நாமேஅவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய
இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.

38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும்,
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய
இருப்பிடமும் உண்டு.

தாவூத் நபியால் சபிகபட்டவர்கள்

5:78 இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது,
மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால்சபிக்கப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு
மீறி நடந்து கொண்டும்இருந்தார்கள்.

அல்லாஹ்வை நோக்குபவரகா இருந்தார்.

38:17 இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும்,
வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர்
(எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.

nasar navas

unread,
Mar 10, 2011, 9:03:23 AM3/10/11
to hakk...@googlegroups.com
Assalam Alaikum (varah)
Dear brother Hakeem,Thank you very much  for send me Haddis....carry on
Let me know your cel#
MAA ASSALAM......

2011/3/9 hakeem <hakk...@gmail.com>

--
You received this message from Google
Groups "தமிழ் இஸ்லாம்"
To post to this group, send email to hakk...@googlegroups.com

visit our website : http://www.hakkem.blogspot.com

visit group : http://groups.google.com/group/hakkeemr



--


 

 

 என்றும் அன்புடன்

 

Muhammad Nasar Navas

Kuwait 





Reply all
Reply to author
Forward
0 new messages