Newcastle பல்கலைக்கழக, northeastern England ஐச் சேர்ந்த விஞ்ஞானி John
Burn அவர்கள் இக்கருத்தை தம் ஆய்வின் மூலம் முன்வைத்துள்ளார். கடந்த
வருடம் மேற்கொள்ளப்பபட்ட ஆய்வொன்றின் முடிவில் தினமும் 75 milligrams
அஸ்பிரின் உள்ளெடுப்பவர்களில் எந்த வகைப்புற்றுநோயாலும் இறப்பவர்கள்
வீதம் மூன்றிலொரு பங்காக குறைவடைவதாக கூறப்பட்டது.
Burn's குழுவினர் தினமும் 600 milligrams அஸ்பிரின் மாத்திரைகளை வழங்கி
மேற்கொண்ட ஆய்வில் முற்சொன்ன ஆய்வின் முடிவை உறுதிப்படுத்துவது போல குடற்
புற்றுநோயிலிருந்து கணிசமான பாதுகாப்பை அஸ்பிரின் மாத்திரை வழங்குவது
கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இம்மாத்திரைகளை உள்ளெடுக்க முதல் தகுதியான ஒரு வைத்திய நிபுணரின்
ஆலோசனை பெறப்படுதல் அவசியம் எனவும் Burn தெரிவித்துள்ளார். இவ் ஆய்வை
உறுதிப்படுத்த மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளவேணடி உள்ளதாகவும் எப்
பொறிமுறையினால் இப்பாதுகாப்பு பெறப்படுகிறது என்பது இன்னும் தெளிவற்ற
நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read more: http://pc-park.blogspot.com/2011/10/blog-post_28.html#ixzz1ckjW8XoC