எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்
25.11.2011/ கார்த்திகை-09.
நாள்-867/ வெள்ளிக்கிழமை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்
(International Day for the Elimination of Violence against Women)
ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு
வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.
உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு
உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு
காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச
மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச
தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு
தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு
சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த நாளுக்கான கவியரசு கண்ணதாசன் பாடல்>>>
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
நெருப்பாவேன் தீண்டாதே...
போதைக்கும் நீதியுண்டு
தாய் தங்கை பேதமுண்டு
ஆசைக்கும் எல்லையுண்டு
ஆண்மைக்கும் தர்மம் உண்டு!
பார்வை பொல்லாதது
பாவம் பொல்லாதது
சொல்லும் வார்த்தை உன்னைக் கொல்லும்
கோபம் பொல்லாதது
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
காமத்தில் கண்கள் கெட்டால்
ஞானியின் பேரும் முட்டாள்
மோகத்தில் பிறரைத் தொட்டால்
உன் தாயே நேர்மை கெட்டாள்!
பெண்ணென்று சொல்வதே
தெய்வங்கள் ஆவது
தெய்வம் உன்னைத்தேடும் இங்கு
கற்பு மாறாதது!
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
படம்: புன்னகை
பாடல் வரிகள்: கவியரசர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவியரசு மின்னஞ்சல்>9698890108